பாஷை திரள் கூட்டமான வணக்கத்தாரைக் கூட்டிச்சேர்க்கிறது
கடவுள் கொடுத்த சுத்தமான பாஷை கிறிஸ்தவ ஐக்கியத்துக்கு ஒரு சக்தியாக இருக்கிறது. அதற்கான அத்தாட்சி 1990, ஜூலை 24 முதல் 27 வரையாக மேற்கு பெர்லினில் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில் ஆஜராயிருந்த அனைவருக்கும் தெளிவாக இருந்தது, ஏனென்றால் 64 வித்தியாசமான தேசங்களிலிருந்து வந்த சாட்சிகள் அங்கு இருந்தனர்.
1989, கோடையில் போலந்தில் “தேவ பக்தி” மாவட்டமாநாடுகள் நடத்தப்பட்ட போது, ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் ரஷ்யாவிலும் செக்கோஸ்லவாக்கியாவிலுமிருந்தும் வந்திருந்தனர், ஆனால் கிழக்கு ஜெர்மனியிலிருந்து 30,000 பிரதிநிதிகள் மேற்கு பெர்லினிலுள்ள ஒலிம்பியா அரங்கத்தில் சாட்சிகளோடு கூடிவந்தனர். பொதுவாக வியாழன் முதல் ஞாயிறு வரையாக உலகிலுள்ள மற்ற பாகங்களில் நூற்றுக்கணக்கானவை நடத்தப்படுவது போலவே மாநாடு நடத்தப்பட்டது.
செவ்வாய் அன்று அக்கிராசினர் வரவேற்பு உரையில், 1919 முதற்கொண்டு, சுத்தமான பாஷையை பேசுவதில் முன்னேறுவற்கு யெகோவாவின் சாட்சிகளுக்கு உதவி செய்வதில் மாநாடுகள் வகித்திருக்கும் பங்கை எடுத்துரைத்தார். அதேவிதமாகவே இந்த மாநாடு ஆஜராயிருக்கும் அனைவருக்கும் சுத்தமான பாஷையை பேசுவதற்குரிய தங்கள் திறமையை மேம்படுத்தவும் அதன்படி வாழவும் உதவி செய்யும். தங்களுடைய சிகையலங்காரத்தாலும் நடத்தையாலுமே யெகோவாவின் மக்கள் சுத்தமான பாஷையை பேசுவதில் தாங்கள் செய்திருக்கும் முன்னேற்றத்தை விளங்கப்பண்ணுவதை அவர் பிரதிநிதிகளுக்கு நினைப்பூட்டினார்.
“எல்லா ஜாதிகளுக்கும் ஒரு சுத்தமான பாஷை”
மாநாட்டின் முக்கிய பேச்சு மேற்கூறப்பட்ட பொருளை உயர்த்திக் காண்பித்தது பொருத்தமாகவே இருந்தது. அது செப்பனியா 3:9-ஐ அடிப்படையாக கொண்டிருந்தது. இங்கே கடவுள் கொடுத்த வாக்கு: “அப்பொழுது ஜனங்களெல்லாரும் யெகோவாவுடைய (NW) நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்,” சுத்தமான பாஷை, கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் உட்படுத்துகிறது. யெகோவா மாத்திரமே இதை அவருடைய பரிசுத் ஆவியின் மூலமாக அருள முடியும். சத்தியத்தின் பேரிலுள்ள அன்பே, எல்லா ஒழுக்க அசுத்தத்திலிருந்தும் விடுபட்டதாக இருக்கும் சுத்தமான பாஷையை கற்றறிவதற்கு உள்நோக்கமாக இருக்க வேண்டும்.
மேலுமாக சுத்தமான பாஷையைப் பேசுவது வெறுமென குறிப்பிட்ட ஒரு சொல் அட்டவணையை பயன்படுத்தும் ஒரு காரியமாக இல்லை. மாறாக, நம்முடைய வாழ்க்கை முறை, நம்முடைய உதடுகளிலிருந்து வருகின்றவற்றோடு இசைவாக இருத்தல் வேண்டும். உண்மையில், நம்முடைய குரலின் தொனி, முக பாவனை மற்றும் சைகைகளும்கூட முக்கியமாக இருக்கின்றன, ஏனென்றால் நாம் உள்ளே என்னவாக இருக்கிறோம் என்பதை அவை பிரதிபலிக்கின்றன. விரிவாகிக் கொண்டு போகும் சுத்தமான பாஷையோடு இணையாக முன்னேறிச் செல்ல நாம் ஒரு நிலவரமான படிப்பு திட்டத்தைக் கொண்டிருந்து, எல்லா சபை கூட்டங்களிலும் ஆஜராயிருக்க வேண்டும்.
சுத்தமான பாஷையைக் கற்றுக்கொள்ளுதல்
செவ்வாய் பிற்பகலின் ஒரு பேச்சு அழுத்திக் காண்பித்தது போலவே, சுத்தமான பாஷையை கற்றுக்கொள்வது, “அடிப்படையிலிருந்து முதிர்ச்சிக்கு முன்னேறுதலை” அர்த்தப்படுத்துகிறது. நாம் ஆவிக்குரிய வகையில் முதிர்ச்சி அடைவதற்கு வளர்ச்சி இன்றியமையாததாகும். அது, ஆவிக்குரிய முன்னேற்றத்துக்காக இருக்கும் எல்லா ஏற்பாடுகளையும் அனுகூலப்படுத்திக் கொண்டு பைபிள் நியமங்களை தினந்தோறும் பொருத்துவதை அர்த்தப்படுத்துகிறது.
சுத்தமான பாஷையில் தேர்ந்தவர்களாவதற்கு, “நாம் யெகோவாவால் கற்பிக்கப்பட” வேண்டும். இதுவே வியாழன் காலை தொடர் பேச்சின் தலைப்பாக இருந்தது. முதல் பேச்சாளர், இது எவ்விதமாக ‘இயேசுவின் முன்மாதிரியால் காண்பிக்கப்பட்டது’ என்பதை விளக்கினார், இயேசு யெகோவாவால் கற்பிக்கப்பட்டார் என்பது அவருடைய வார்த்தைகள் மற்றும் செயல்களில் தெளிவாக தெரிந்தது. ஆகவே அவர் எவ்விதமாக கற்பித்தார் என்பதில் அவரை நாம் பின்பற்ற விரும்புகிறோம். இயேசு எப்போதும் தம்முடைய பிதாவின் சித்தத்துக்கு தம்மை கீழ்ப்படுத்தியது போலவே, நாமும் செய்யவேண்டும்.
அடுத்த பேச்சாளர், யெகோவா எவ்விதமாக கூட்டங்கள் மற்றும் அசெம்பிளிகள் மூலமாக கற்பிக்கிறார் என்பதை காண்பித்தார். நாம் எல்லா ஐந்து சபை கூட்டங்களிலிருந்தும் பயனடைகிறோம், அவைகளில் எதையும் நாம் அசட்டை செய்யக்கூடாது. ஒவ்வொரு கூட்டமும் நம்முடைய ஆவிக்குரிய முன்னேற்றத்துக்கு இன்றியமையாதது. யெகோவா நம்முடைய வட்டார அசெம்பிளி, மாவட்ட மாநாடு மற்றும் விசேஷித்த அசெம்ளி தின நிகழ்ச்சி நிரல்களின் மூலமாகவும்கூட நமக்கு கற்பிக்கிறார், இவை கற்றுக்கொள்ளும் காரியங்களை கடைபிடிக்க வேண்டும்.
இந்தத் தொடர்பேச்சை தொடர்ந்து “தனிப்பட்ட படிப்புக்காகத் தியாகம் செய்தல்” என்ற பேச்சு கொடுக்கப்பட்டது. அதற்காக நேரத்தை கண்டுபிடிக்க, குறைந்த முக்கியத்துவமுள்ள காரியங்களிலிருந்து நேரத்தை வாங்கும்படியாக எபேசியர் 5:15, 16-லுள்ள புத்திமதியை நாம் பின்பற்ற வேண்டும்.
நாம் சுத்தமான பாஷையை கற்றுக்கொள்வதில் நியாயமான ஓர் இலக்கு ஒப்புக்கொடுத்தலும் முழுக்காட்டுதலுமாகும். “சுத்தமான பாஷையை கற்றுக்கொள்வோரின் முழுக்காட்டுதல்” என்ற பேச்சில் இந்த உண்மை உயர்த்திக் காண்பிக்கப்பட்டது. இந்தப் பாஷை அநேகரை ஒப்புக்கொடுத்தலுக்கும் முழுக்காட்டுதலுக்கும் வழிநடத்தி வருகிறது. என்றபோதிலும், அதற்குப்பின், ஒருவர் நற்செய்தியை வைராக்கியமாக பிரசங்கித்தல், புதிய ஆள்தன்மையை தரித்துக்கொள்ளுதல், உலகிலிருந்து பிரிந்திருத்தல் மூலமாக இயேசுவின் மாதிரியை தொடர்ந்து பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
பலமான ஆவிக்குரிய உணவு
மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள், தீர்க்கதரிசன நாடகங்களின் நிறைவேற்றத்தின் அடிப்படையில் அமைந்த பலமான ஆவிக்குரிய உணவை பெற்றுக்கொள்வதிலும்கூட மனமகிழ்சியடைந்தனர். வியாழன் பிற்பகல், இரண்டு பேச்சுகள், எசேக்கியேல் தீர்க்கதரிசனத்திலிருந்து எடுக்கப்பட்ட பொருள்களை அடிப்படையாக கொண்டிருந்தனர். “யெகோவாவின் பரம இரதம் முன்செல்லுகிறது” என்ற முதல் பேச்சு பிரமாண்டமான, மகிமையான. பயபக்தியை தோற்றுவிக்கும் பரம ஊர்தி மின்னல் வேகத்தில் முன்செல்வதை விவரித்தது, அது யெகோவாவின் பரலோக அமைப்புக்குப் படமாக இருக்கிறது. நம்முடைய நோக்கங்களை நிறைவேற்ற இதை பயன்படுத்தி ஒவ்வொரு அசைவையும் கடவுள் அன்பாக வழிநடத்தி செல்லும் கருத்தில் கடவுள் இதை ஓட்டிச் செல்கிறார். எசேக்கியேல் குறிப்பாக 1919 முதற்கொண்டு ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோருக்கு படமாக இருக்கிறான். விசேஷமாக 1935 முதற்கொண்டு “திரள் கூட்டம்” இவர்களைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது-வெளிப்படுத்துதல் 7:9.
அதை பின்தொடர்ந்து பேச்சின் தலைப்பு “காணக்கூடிய அமைப்புடன் தொடர்ந்து அடியெடுத்துச் செல்லுங்கள்.” கடவுளுடைய காணக்கூடிய அமைப்பு அவருடைய பரம இரதம் போன்ற அமைப்புடன் தொடர்ந்து அடியெடுத்து சென்றுகொண்டிருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. எசேக்கியேல் செய்தது போல யெகோவாவின் ஊழியர்கள் இன்று அக்கறையின்மை, பரிகாசம் அல்லது துன்புறுத்தல் மத்தியிலும் தங்கள் தீர்க்கதரிசன வேலையை கீழ்ப்படிதலுடன் தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டும். தொடர்ந்து அடியெடுத்துச் செல்லுதல், இப்பொழுது அநேக ஆசீர்வாதங்களுக்கும் வேகமாக நெருங்கி வந்துகொண்டிருக்கும் கடவுளுடைய புதிய உலகில் நித்திய ஜீவனுக்கும் வழிநடத்துகிறது.
வெள்ளிக்கிழமை காலையில், ஏசாயா அதிகாரம் 28-ன் அடிப்படையில் கொடுக்கப்பட்ட மூன்று பேச்சுக்களின் மூலமாக கூட பலமான ஆவிக்குரிய உணவு அளிக்கப்பட்டது. இவற்றில் முதல் பேச்சு, பூர்வ இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஆவிக்குரிய உணவு அளிக்கப்பட்டது. இவற்றில் முதல் பேச்சு, பூர்வ இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஆவிக்குரிய குடிவெறியர்கள், கிறிஸ்தவமண்டல ஆவிக்குரிய குடிவெறியர்களுக்குப் படமாக இருந்தனர் என்பதை சக்திவாய்ந்த வார்த்தைகளில் காண்பித்தது. முன்னது யெகோவாவின் பாதகமான நீயாயந்தீர்ப்பை அனுபவித்ததுபோலவே கிறிஸ்தவமண்டலமும் அனுபவிக்கும்.
“அவர்களுடைய அடைக்கலம்—ஒரு பொய்!” என்ற தலைப்புடைய அடுத்த பேச்சு கடுமையான எச்சரிப்பைக் கொண்டிருந்தது: பூர்வ யூதா எகிப்தை நம்பியிருந்தது வீணான அடைக்கலமாக நிரூபித்ததுபோலவே நம்முடைய நாளில் அரசியல் அதிகாரங்களோடு கிறிஸ்தவ மண்டலத்தின் நட்பும் இருக்கும். ஏசாயா 28-அதிகாரத்தின் பேரில் கொடுக்கப்பட்ட “யெகோவாவின் அபூர்வமான செயலைக்குறித்து தொடர்ந்து எச்சரியுங்கள்” என்ற தலைப்புள்ள மூன்றாவது பேச்சு கடவுளுடைய ஜனங்களிடமாக பேசப்பட்டது. யெகோவா கிறிஸ்தவ கிறிஸ்தவமண்டலத்துக்குச் செய்யப்போவது சரியாகவே அபூர்வமானதாக அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அவளுக்கு அது முற்றிலும் எதிர்பாராத ஒன்றாக வரும். இன்று, அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் சிறிய தொகுதிக்கும் நாற்பது லட்சத்துக்கும் மேற்பட்ட “வேறே ஆடு”களுக்கும் யெகோவா மகிமையின் கிரீடமாக இருக்கிறார். (யோவான் 10:16) பேச்சாளர் கிளர்ச்சியூட்டும் இந்த வார்த்தைகளுடன் பேச்சை முடித்தார்: “நம்முடைய வைராக்கியமும், திடதீர்மானமும், பற்றுமாறாமையும் நம்முடைய கடவுளாகிய யெகோவாவின் நித்திய புகழ்ச்சிக்கு உதவட்டும்!
சுத்தமான பாஷை பேசுவது சகோதர சிநேகத்தை காண்பிப்பதை அர்த்தப்படுத்துகிறது
“திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்தில் அவர்களை கவனிப்”பதையும் அர்த்தப்படுத்துகிறது என்பது புதன்கிழமை பிற்பகல் மாநாட்டுக்கு வந்திருந்தவர்களின் மனதில் பதிய வைக்கப்பட்டது. தகப்பனில்லாத பையன்கள் தனிப்பட்ட பயிற்றுவிப்பின் மூலமாக உதவப்படலாம். விதவைகளுக்கு உற்சாகமளிக்கும் தயவான வார்த்தைகளின் மூலமாக நாம் கரிசனையைக் காண்பிக்கலாம். நம்முடைய கிறிஸ்தவ நடவடிக்கைகளிலும் சமூக கூட்டுறவுகளிலும் அவர்களைச் சேர்த்துக் கொள்வதன் மூலமும் அவர்கள் பாத்திரமுள்ளவர்களாகவும் உண்மையில் தேவையிலுள்ளவர்களாகவும் இருப்பார்களேயானால் அவர்களுக்கு பொருளாதார உதவியை அளிப்பதன் மூலமும் இதைச் செய்யலாம். இந்தக் காரியங்கள் எவ்வாறு செய்யப்பட்டு வருகின்றன என்பதை பேட்டிகள் காண்பித்தன.
வியாழக்கிழமை பிற்பகல், மற்றொரு இருதயத்துக்கு அனலூட்டும் பேச்சு, “கிறிஸ்தவர்கள் எவ்வாறு ஒருவரிலொருவர் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள்” என்பதை காண்பித்தது. யெகோவாவின் சாட்சிகள் விசேஷமாக புயல்காற்றுகள் போன்ற பேரழிவுகள் அல்லது பூமியதிர்ச்சி ஏற்படுகையில் அதிகாரிகளுக்கு எழுத வேண்டிய அவசியம் ஏற்படுகையில் அல்லது உள்ளூர் தேவைகள் இருக்கையில் ஒருவரிலொருவர் அக்கறையுள்ளவர்களாக இருப்பதில் ஒரு நேர்த்தியான பதிவைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனித அபூரணத்தின் காரணமாக பிரச்னைகள் எழுகையில், நாம் மத்தேயு 5:23, 24 மற்றும் 18:15-17-லுள்ள இயேசுவின் புத்திமதியில் உட்பட்டிருக்கும் நியமத்தை பின்பற்ற வேண்டும். விசேஷமாக சகோதரர்களுக்கிடையே வியாபார ஏற்பாடுகளுக்கு வருகையில், வேலைக்கு அமர்த்துகிறவரோ வேலைசெய்பவரோ ஆவிக்குரிய உறவை சுயநலத்துக்கு அனுகூலப்படுத்திக் கொள்ளாதபடிக்கு பரஸ்பர மரியாதையும் கவனமும் தேவைப்படுகிறது.
சுத்தமான பாஷையைப் பேசுவது நம்முடைய நடத்தைக் குறித்து விழிப்புடன் இருப்பதை அர்த்தப்படுத்துகிறது
நம்முடைய நடத்தையைக் குறித்து விழிப்புடன் இருப்பதன் அவசியம் திரும்ப வலியுறுத்தப்பட்டது. ஆக, செவ்வாய் பிற்பகல் முதல் பேச்சாளர் “தேவனுடைய வார்த்தையைக் கேட்டலும் கைக்கொள்ளுதலும்” என்ற பொருளின் பேரில் பேசினார். நாம் மாநாடுகளுக்கு வருவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன என்பதாக அவர் காண்பித்தார்: திருத்தமான அறிவை எடுத்துக் கொள்வதற்கும் அந்த அறிவின் பேரில் செயல்பட தூண்டப்படுவதற்கும்.
புதன்கிழமை காலை முதல் பேச்சு, “கிறிஸ்து அக்கிரமத்தை வெறுத்தார்—நீங்கள் அப்படிச் செய்கிறீர்களா?” என்ற ஊடுருவும் கேள்வியை முன் வைத்தது, நீதியை நேசிப்பது மட்டும் போதுமானதல்ல. ஒரு நல்மனசாட்சியை கொண்டிருப்பதற்கும், அவருடைய நாமத்தின்பேரில் நிந்தையைக் கொண்டுவருவதை தவிர்ப்பதற்கும், அக்கிரமத்தின் கனிகளை—அழிவையும் மரணத்தையும்—அறுவடை செய்வதை தவிர்ப்பதற்கும் நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும்.
அந்தப் பொருளோடு நெருங்கிய விதமாக தொடர்புடைய அடுத்த பேச்சின் தலைப்பு, “உலகக் கற்பனைப் போக்குகளை விலக்குங்கள், ராஜ்ய மெய்களைப் பின்பற்றுங்கள்” என்பதாகும். சாத்தானும், ஏவாளும், வீழ்ந்துபோன எல்லா தூதர்களும் அவர்களுக்கு அழிவுண்டாக்கும் கற்பனை போக்குகளை பின்பற்றினார்கள். பொருளாதார கனவுகளை அல்லது முறைகேடான காதல் விவகாரங்களோடு சம்பந்தப்பட்ட கனவுகளைக் கொண்ட உலகக் கற்பனைப் போக்குகள் மோசமான தவறுகளை இழைப்பதிலும் அவ்விதமாக இல்லாவிட்டால் ஏமாற்றத்திலும் விளைவடையும். இந்தக் கற்பனை போக்குகளை எதிர்த்து தடைசெய்ய நாம் படிப்பு, ஜெபம், கூட்டங்களில் ஆஜராதல் மற்றும் பொது ஊழியத்தின் மூலமாக ராஜ்ய மெய்மைகளைப் பின்பற்ற வேண்டும்.
நேர்மையான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கு, புதன் கிழமை பிற்பகல் “கிறிஸ்தவர்களே—உங்கள் வருவாய்க்குள் வாழுங்கள்” என்ற பேச்சில் கொடுக்கப்பட்ட புத்திமதிக்கும் கூட செவிசாய்க்க வேண்டும். இதைச் செய்ய தவறுவது. சரீரப்பிரகாரமாயும் ஆவிக்குரிய பிரகாரமாயும் தீங்கிழைக்கும் பாதிப்புகளை நிச்சயமாகவே கொண்டுவரும். அனாவசியமாக கடன்படாமலிருப்பதன் மூலம், நடைமுறைக்கு ஏற்ற ஒரு வரவு செலவு திட்டத்தை தயாரித்து, பின்னர் அதற்குள்விடாது உறுதியுடன் இருப்பதன் மூலமும் ஒருவருடைய தன்னலமான விருப்பங்களை தடைசெய்வதே ஞானமான போக்காகும். எல்லா சமயங்களிலும் நாம் தேவபக்தியை வளர்த்துக் கொள்வது அவசியமாகும். போதுமென்கிற மனதுடனே கூட இது மிகுந்த ஆதாயமாகும்.—1 தீமோத்தேயு 6:6-8
நம்முடைய கூட்டுறவுகளைக் குறித்து முன்னெச்சரிக்கையாக இருப்பதன் முக்கியத்துவம், “உங்களுடைய நண்பர்கள் யெகோவாவின் நண்பர்களாக இருக்கிறார்களா? என்ற செவ்வாய் கிழமை பேச்சில் உயர்த்திக் காண்பிக்கப்பட்டது. நம்முடைய நண்பர்கள், கிறிஸ்துவைப் போன்ற ஆள்தன்மையை தரித்தவர்களும் பிரசங்க வேலையில் வைராக்கியமுள்ளவர்களுமாக இருக்க வேண்டும். உலகப் பிரகாரமான நண்பர்கள் கடவுளின் நண்பர்களாக இல்லை. நமக்கே தீங்கிழைத்துக் கொள்ளாமல் நாம் அவர்களோடு கூடி குலாவ முடியாது. சபையினுள்ளேயுங்கூட நம்முடைய கூட்டுறவுகள் உண்மையில் கட்டியெழுப்புவதாக இருக்க வேண்டுமென்றால், நாம் தேர்ந்தெடுக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
நடத்தை சம்பந்தமாக மேல் சொல்லப்பட்ட புத்திமதி நவீன நாளைய நாடகத்தின் மூலமாக விளக்கமாக வற்புறுத்திக் கூறப்பட்டது. அதன் தலைப்பு. “பிசாசின் தந்திரமான செயல்களை எதிர்த்து மேற்கொள்ளுதல்.
குடும்பங்களுக்கு சுத்தமான பாஷை புத்திமதி
புதன் கிழமை பேச்சு, “பெற்றோர்களே—உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுங்கள்!” மிகவும் தேவைப்பட்டதாக இருந்தது. பெற்றோர்கள் தாமே கடவுளுடைய சித்தத்தை அறிந்தவர்களாய், அதை தங்களால் இயன்ற வரை திறமையாக செய்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தங்கள் பிள்ளைகளின் மனதிலும்கூட கடவுளுடைய வார்த்தையை ஆழமாக பதிய வைக்க வேண்டும். மேலுமாக, வெறுமென பிள்ளைகளை கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்துக்கும் அழைத்துச் செல்வது போதுமானதாக இல்லை. அவர்கள் யெகோவாவை நேசிக்கவும். தெய்வீக காரியங்களைச் செய்வதிலிருக்கும் நடைமுறையான ஞானத்தைக் காணவும் கற்பிக்கப்பட வேண்டும்.
“குடும்பம் நம் நாட்களில்” என்பது அடுத்து வந்த தொடர்பேச்சாகும். குடும்பத்தை ஆரம்பித்து வைத்தவர் கடவுள் என்பதை முதல் பேச்சாளர் காண்பித்தார். தகப்பன்மார்கள் ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி நன்றாக விளக்குகிறவர்களாக இருக்கவேண்டும். தாய்மார்கள் நல்ல குடும்ப நிர்வாகிகளாக இருக்க வேண்டும், பிள்ளைகள் தங்கள் பெற்றோரோடு ஒத்துழைப்பதன் மூலம் யெகோவாவுக்கு மரியாதை காண்பிக்க வேண்டும்.
அடுத்து வந்த பேச்சாளர், குடும்பம் “எதிரிகளின் தாக்குதலின் கீழ் உள்ளது” என்பதைக் காண்பித்தார். பொருளாதார அழுத்தங்கள் உயிர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கின்றன. வேலை செய்யும் இடங்கள் தவறு செய்வதற்கு சோதனைகள் நிறைந்தவையாக இருக்கின்றன, செய்தி சாதன அளிப்புகளில் வன்முறை, முறைகேடான பாலுறவு மற்றும் பொருளாதாரக் கவர்ச்சி பரவலாக காணப்படுகிறது. போதனை சிறுபிராயத்தில் ஆரம்பிக்கப்பட வேண்டும். உலகப்பிரகாரமான செல்வாக்குகளை மேற்கொள்ள ஊக்கமான முயற்சி தேவையாக இருக்கிறது. உவாட்ச் டவர் சொஸையிட்டியினால் அளிக்கப்படும் தேவராஜ்ய கருவிகள் நல்ல விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும்.
குடும்பம் “புதிய உலகத்துக்குள் செல்ல அதன் பாதுகாப்பு” என்ற அடுத்த பேச்சு, பெற்றோருக்கிருக்கும் முக்கியமான உத்தரவாதத்தை மேலுமாக வலியுறுத்தியது. பிள்ளைகளை பயிற்றுவிப்பது அதிகமான உள்ளார்வத்தோடு செய்யப்படவேண்டும். குடும்ப பைபிள் படிப்புகள் பற்றியும், என்ன படிக்க வேண்டும் என்பது பற்றியும் நேர்த்தியான நேர்த்தியான புத்திமதி கொடுக்கப்பட்டது. அனைத்தும் பிள்ளைகளின் இருதயத்தை சென்றெட்டும் நோக்கத்தோடு செய்யப்படுகிறது. அப்போது மாத்திரமே பெற்றோரும் பிள்ளைகளும் ஒரு குடும்பமாக புதிய உலகிற்குள் பாதுகாக்கப்பட நம்பிக்கையாயிருக்கலாம்.
“பிரிந்திருக்கும் குடும்பத்தினுள் சமாளித்தல்” என்ற பேச்சு, அநேக சாட்சிகள் தங்களைக் காணும் அந்தக் குடும்ப நிலைக்கு நேர்த்தியான புத்திமதியை அளித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளிலிருப்பவர்கள், அவிசுவாசியான துணைவரோடு நேரத்தை செலவழித்து. ஒரு கிறிஸ்தவ துணைக்கு தேவைப்படும் அனைத்து தகுதிகளும் உங்களுக்கிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் மூப்பர்களிடமிருந்து அல்லது பிரிந்திருக்கும் குடும்பங்களிலுள்ள மற்றவர்களிடமிருந்து உதவியை பெற்றுக்கொள்ளலாம்.
மற்றவர்களிடம் சுத்தமான பாஷையைப் பேசுதல்
மிகப் பொருத்தமாகவே, மற்றவர்களிடம் சுத்தமான பாஷையை கற்பிப்பதற்கு நாம் சந்தர்ப்பங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு அதிகமான கவனம் செலுத்தப்பட்டது. இவ்விதமாக புதன்கிழமை காலை மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் “உங்கள் அரிய நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள்” பேச்சைக் கேட்டார்கள். அதைச் செய்வதற்கு மத்தேயு 6:33-ற்கு இசைவாக, முந்துரிமைப் பெற வேண்டியவைகளை நிர்ணயிக்க வேண்டும். அது சொல்வதாவது “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்.” தனிப்பட்ட பைபிள் படிப்புக்காக நேரத்தை ஒதுக்குவதை, எல்லா கூட்டங்களிலும் ஆஜராயிருத்தலை, வெளி ஊழியத்தில் ஒழுங்காக இருத்தலை உட்படுத்தும். இன்பம் தரும் வேலைகளாக இருப்பினும் குறைந்த முக்கியத்துவமுள்ளவற்றிலிருந்து நாம் நேரத்தை வாங்குவதை இது தேவைப்படுத்துகிறது. பேட்டிகள் பல, சிலர் எவ்விதமாக செய்துகொண்டிருக்கின்றனர் என்பதைக் காண்பித்தது.
நாம் யெகோவாவின் சாட்சிகள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. வியாழக்கிழமை பிற்பகல், “சுத்தமான பாஷையை எல்லாச் சமயங்களிலும் தொடர்ந்து பேசிக்கொண்டிருங்கள்” என்ற பொருளின் பேரில் அநேக நடிப்புகள் அந்தக் குறிப்பைத்தானே மனதில் பதிய வைத்தன. தெரு ஊழியத்திலும், தொலைபேசி பயன்படுத்தியும் இது எவ்விதமாக செய்யப்படலாம் என்பதை இந்த நடிப்புகள் காண்பித்தன. யெகோவாவிடமும் நம்முடைய அயலாரிடமும் நமக்கிருக்கும் தன்னலமற்ற அன்பு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுத்தமான பாஷையை பேசுவதற்கு நம்மைத் தூண்டிடும்.
இந்தப் பொருளோடு நெருங்கிய விதமாக தொடர்புடைய அடுத்த பேச்சு, “சாக்குப் போக்கு சொல்லாதவர்களுக்கு ஆசீர்வாதங்கள்” ஆகும். கிறிஸ்தவ மண்டலத்துக்கு நேர் எதிர்மாறாக, யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய போதிக்கும் அமைப்பு காணப்படுகிறது. தனிப்பட்டவர்களாக, அதிகாரப்பூர்வமான எதிர்ப்பு, பரவலாக இருக்கும் அக்கறையின்மை மற்றும் பொருளாதார பிரச்னைகள் போன்ற எல்லா அழுத்தங்களாயும் தாங்கி நிற்க வேண்டும். வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் அடிப்படையில் இருந்த நடிப்புகள் இந்த அழுத்தங்கள் எவ்விதமாக மேற்கொள்ளப்படலாம் என்பதைக் காண்பித்தன.
மேலுமாக வைராக்கியமாக பிரசங்கித்தலை ஊக்குவிப்பதாக இருந்தது கடவுளுடைய சித்தத்தை வைராக்கியத்தோடு செய்தல் என்ற பைபிள் நாடகமாகும். யெகூ எவ்விதமாக யெகோவாவின் நாமத்துக்காக வைராக்கியத்தைக் காண்பித்தான் என்பதையும் அதேப் போன்ற தைரியத்தையும் கடவுளுடைய வேலைக்கு வைராக்கியத்தையும் நாம் காண்பிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் அது காண்பித்தது.
மாநாடு வெளியீடுகள்
மாநாட்டின் போது ஆங்கிலத்திலும் ஜெர்மன்மொழியிலும் இரண்டு குறிப்பிடத்தக்க வெளியீடுகள் இருந்தன. இந்தப் பிரசுரங்களில் முதலாவது, “இரத்தத்தினால் உங்கள் ஜீவனைப் பாதுகாத்தல்—எப்படி?” என்ற தலைப்புடைய பேச்சின் தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. பேச்சாளர் இரத்தமேற்றுதலோடு சம்பந்தப்பட்ட அபாயங்களைக் குறித்து முதலில் பேசினார். இரத்த இழப்பை ஈடு செய்வதில் இரத்தத்திற்கு அநேக மாற்றீடுகள் இருப்பதை அவர் சுட்டிக் காண்பித்தார். ஆனால் யெகோவாவின் சாட்சிகள் இரத்தத்திலிருந்து விலகி இருப்பதற்கு கரணம் அது ஆரோக்கியமற்றது என்பதால் அல்ல, ஆனால் அது கடவுளுக்கு விலைமதிப்புள்ளது என்பதாலேயே. உண்மையில் உயிரைக் காப்பதாக இருக்கும் இரத்தம் இயேசு கிறிஸ்துவின் மீட்பின் இரத்தமாகும். முடிவாக, பேச்சாளர், உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்? என்ற 32-பக்க புரோஷூரை திறந்து காட்டுவதன் மூலம், செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இரண்டாவது மதிப்புள்ள வெளியீடு, “ஜனங்களே, யெகோவாவைத் தேடுங்கள்” பேச்சின் சம்பந்தமாக வெளியிடப்பட்டது. மொத்தத்தில் பார்த்தால் மக்கள் கடவுளை தேடிக்கொண்டில்லை. அநேக வித்தியாசமான மதங்கள் இருப்பது, மனிதன் கடவுளுக்காக தேடுவது எத்தனை தவறான வழியில் சென்றிருக்கிறது என்பதைக் காண்பிக்கிறது, ஏனென்றால் அவன் கடவுளுடைய அசட்டை செய்துவிட்டிருக்கிறான். ஆண்டுதோறும் நம்முடைய ஞாபகார்த்த அறிக்கைகளில் காண்கிறபடி, லட்சக்கணக்கானோர் யெகோவாவுக்காக தங்கள் நிலைநிற்கையை எடுக்க உதவப்படுவது அவசியமாகும், ஏசாயா 55:6, 7, யெகோவா உண்மையில் அன்பும் இரக்கமுள்ளவராகவும் “மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்” என்று காண்பிக்கிறது. யெகோவாவை ஒருமனப்பட்டு சேவிப்பதில் நம்மை சோர்ந்து கொள்வதற்கு மற்றவர்களுக்கு உதவிசெய்யும் பொருட்டு அவருடைய சாட்சிகளாக, நமக்கு சுத்தமான பாஷை கொடுக்கப்பட்டிருக்கிறது.
இன்று, மக்கள் தொகையின் மொத்தமான இடப்பெயர்ச்சியின் காரணமாக யெகோவாவின் மக்கள் ஒரு சவாலை எதிர்படுகிறார்கள். இதன் விளைவாக, நம்முடைய பிராந்தியத்தில் எல்லாவிதமான மதங்களைச் சேர்ந்த ஜனங்களும் இருக்கக்கூடும். இந்துக்கள், புத்த மதத்தினர், ஷிண்டோ மதத்தினர் இன்னும் அநேக மற்ற மதங்களிலுள்ள ஆட்களுக்கு நாம் உதவும் பொருட்டு சங்கம் கடவுளுக்காக மனிதவர்க்கம் தேடுதல் என்ற நேர்த்தியான 384-பக்க புத்தகத்தை அளித்திருக்கிறது. கிறிஸ்தவமண்டலத்துக்கு வெளியே முக்கிய மதங்களின் அடிப்படை போதகங்களை அது அதிகாரப்பூர்வமாக அளிக்கிறது. ஆனால் கிறிஸ்தவமண்டலத்தினுள்ளே பொய்மத பதிவின் சுவடுகளைத் தேடி கண்டுபிடித்திருக்கிறது. மிகப் பல மதங்களைச் சேர்ந்தவர்களோடு பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு இந்தப் புத்தகம் வழியைத் திறக்கக்கூடும்.
பொதுப் பேச்சும் முடிவான குறிப்புகளும்
“சுத்தமான பாஷையினால் ஐக்கியப்படுங்கள்” என்பதே வெள்ளிக்கிழமை பொது பேச்சின் தலைப்பாக இருந்தது. மூவாயிரம் வித்தியாசமான மொழிகள் இப்பொழுது ஐக்கியத்துக்கு தடையாக செயல்பட்ட போதிலும் சுத்தமான பாஷை பேராற்றல் வாய்ந்த ஐக்கியப்படுத்தும் சக்தியாக இருப்பதை பேச்சாளர் காண்பித்தார். பாபிலோனிய பிழைகளுக்கு எதிராக இது யெகோவாவின் சாட்சிகளை பாதுகாத்திருக்கிறது, உயிர மற்றும் இரத்தத்தின் புனித தன்மைக்கு மரியாதை காண்பிக்க அவர்களுக்கு கற்பித்திருக்கிறது. ஆவிக்குரிய வகையிலும் சரீரப்பிரகாரமாயும் அவர்களுக்கு பிரயோஜனமாயிருக்கும் பைபிள் நியமங்களின்படி வாழ அவர்களுக்கு உதவியிருக்கிறது. சுத்தமான பாஷையை கற்றுக்கொள்வதுபற்றியும் பேசுவது பற்றியும் அனைவரும் அக்கறையுள்ளவர்களாக இருப்பது அவசியமாகும். ஏனென்றால் அவ்விதமாகச் செய்பவர்கள் மாத்திரமே அர்மகெதோனை தப்பிப்பிழைப்பர் செப்பனியா 2:1-3-லுள்ள புத்திமதிக்கு செவி சாய்ப்பதில் வீணாக்க நேரம் இல்லை.
“ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருப்பதன்” அவசியத்தைக் குறித்து சில நேர்த்தியான புத்திமதிகளுக்குப் பிறகு, “சுத்தமான பாஷைக்குப் பொருந்தியவாறு நடத்தல்” என்ற பொருளின் அடிப்படையில் முடிவான குறிப்புகள் இடம் பெற்றிருந்தன. சுத்தமான பாஷைக்குப் பொருந்தியவாறு இப்பொழுது நடக்கிறவர்களின் எண்ணிக்கை உண்மையில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த மாநாடுகளுக்கு வருகை தந்தவர்கள் சுத்தம், ஒழுங்கு, அமைப்பு சம்பந்தப்பட்ட ஒத்திசைவு மூலமாக சுத்தமான பாஷைக்கு மரியாதை காண்பித்தனர். அச்சடிக்கப்பட்ட புதிய வெளியீடுகள் சுத்தமான பாஷையை அதிக திறம்பட்டவிதமாக பரப்புவதற்கு எல்லா யெகோவாவின் சாட்சிகளுக்கும் உதவி செய்யும்.
மாநாட்டில் கடைசி பேச்சாளர் சகிப்புத்தன்மைக்கான அவசியத்தை அனைவருக்கும் நினைப்பூட்டினார். இந்த மாநாட்டின் விளைவாக, முன்னோக்கிச் செல்ல தங்கள் தீர்மானத்தில் அனைவரும் பலப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். பின்னர் அவர் இந்த வார்த்தைகளோடு முடித்தார்: “நம்முடைய அன்புள்ள பரலோகத் தகப்பனாகிய யெகோவா தேவனை இப்பொழுதும் என்றென்றுமாகவும் மகிமைப்படுத்தும் பொருட்டு, கடவுளால் கொடுக்கப்பட்ட சுத்தமான பாஷைக்கு ஏற்ப நாம் தொடர்ந்து நடந்து கொண்டிருப்போமாக!” (W91/1/15)
[பக்கம் 14-ன் பெட்டி]
மேற்கு பெர்லின் மாநாட்டிற்கு வருகைதந்தவர்களின் உச்ச எண்ணிக்கை 44,532, மற்றும் 1,018 பேர் முழுக்காட்டுதல் பெற்றனர். முழுக்காட்டுதல் பெறுகிறவர்கள் ஒலிம்பியா அரங்கத்திலிருந்து முழுக்காட்டுதலுக்குச் செல்ல 19 நிமிடங்கள் எடுத்தது. இந்தச் சமயத்தில் கூடிவந்தவர்கள் தொடர்ச்சியாகக் கைத்தட்டிக்ககொண்டிருந்தனர். ஆங்கிலம் பேசும் பிரதிநிதிகளுக்காக ஒரு விசேஷ பிரிவு இருந்தது. இவர்களில் ஏறக்குறைய 6,000 பேர் முழு நிகழ்ச்சிநிரலையும் தங்களுடைய மொழியில் கேட்க முடிந்தது இந்த மாநாட்டிற்கு போலந்திலிருந்து 4,500 பேர் வந்திருந்தனர்; இவர்களுடைய நன்மைக்காக இரண்டு நாட்களுக்கு மத்தியான வேளையில் ஆளும் குழு அங்கத்தினர் சுருக்கமான பேச்சுகளைக் கொடுத்தனர்.
[பக்கம் 23-ன் படங்கள்]
1. ஒலிம்பியா அரங்கம், மேற்கு பெர்லின்.
2. அச்சடிக்கப்பட்ட மாநாட்டு நிகழ்ச்சி நிரல்.
3. கிழக்கு ஜெர்மனியிலிருந்து இருநூறு பேருந்துகள் பிரதிநிதிகளைக் கொண்டுவந்தன.
4. அச்சடிக்கப்பட்ட வெளியீடுகளைப் பெறுவதில் போலந்து பிரதிநிதிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
5. மலர் ஜோடனைகள் காட்சிக்கு ஒளியூட்டியது
6. மேற்கு பெர்லின் நிகழ்ச்சி நிரலில் A. D. ஷ்ரோடர், ஆளும் அங்கத்தினரில் ஒருவர்.