பொரூண்டியில்—துன்புறுத்தல் மதச் சுயாதீனத்தின் காக்கப்படாத ஒரு வாக்குறுதி!
அநேக மேற்கத்திய நாடுகளில் மதச் சுயாதீனம் சாதாரண காரியமாக எண்ணப்படுகிறது. ஆகிலும், ஆப்பிரிக்க நாடாகிய பொரூண்டியில் நடக்கும் மதத் துன்புறுத்தல் இத்தகைய சுயாதீனம் எவ்வளவு வலுவற்ற இயல்புடையதாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. எந்த ஜனத் தொகுதியின் அடிப்படை மனித உரிமையும் மதிக்கப்படாமல் அவர்கள் கொடுமைப்படுத்தப்படுகையில்,மீறப்படுகையில், மற்ற எவருடைய உரிமைகளும் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஆகையால் பொரூண்டியில் நடந்துகொண்டிருப்பதை எங்களுடைய வாசகர் ஆராய்ந்து பார்க்கும்படி நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம்.
பிப்ரவரி 16, 1989 அன்று ஆப்பிரிக்க நாடாகிய பொரூண்டியின் மீது இருண்ட சகாப்தத்தின் நிழல் விழக் கண்டது. அன்றையத் தினம் பொரூண்டி குடியாட்சியின் ஜனாதிபதி பியேர் புயோயா பிரதேசங்களின் கவர்னர்களுடன் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டம் துவங்க இருக்கையில், பயங்கர மத துன்புறுத்தல் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக எங்கும் துவங்கப்பட்டது. ஆண்கள், பெண்கள், பிள்ளைகளுங்கூட சட்டப்படியல்லாத கைதுசெய்தலுக்கும், அடித்தலுக்கும், சித்திரவதைக்கும் பட்டினியாய் கிடத்தலுக்கும் ஆளானார்கள்.
இத்தகைய கொடுமைகள் நம் நாளில் இந்தச் சகாப்தத்தில் நடக்கக்கூடும் என்பதுதானே வெட்கக்கேடானதாக இருக்கிறது. ஆகிலும், பொரூண்டி கிறிஸ்தவர்களை துன்புறுத்துவதானது குறிப்பாக வெறுக்கத்தக்கதாக இருக்கிறது. ஏன்? ஏனெனில் மதச் சுயாதீனத்தின் வாக்குறுதி மீறப்படுவதை, நம்பிக்கை துரோகம் செய்வதை இது குறிக்கிறது.
அரசாங்கத்தின் நம்பிக்கை துரோகம்
குளிர்ந்த, மகிழ்வளிக்கிற ஒரு சீதோஷ்ண நிலையை இம் மலைப்பிரதேசம் அனுபவித்த போதிலும், பொரூண்டி ஆப்பிரிக்காவில், நிலநடுக்கோட்டிற்கு சற்று தெற்கில் தூரமுனையில் உள்ளது. (வரைபடத்தைக் காணவும்.) ஆகஸ்ட் 1988-ல் அது செய்தித்தாள்களின் தலையங்கங்களில் இடம்பெற்றதுவரை உலகமெங்கும் வெகு சிலரே அப்பேர்ப்பட்ட ஓர் இடம் இருப்பதை அறிந்திருந்தனர். அச்சமயம் அதன் இரண்டு பெரிய மரபு தொகுதிகளுக்கிடையே, டூட்சி மற்றும் ஹுட்டு தொகுதிகளுக்கிடையே, இரத்தப் போராட்டம் துவங்கியது. இது பொரூண்டியைப் பற்றி அநேகருடைய மனதில் அவ்வளவு நல்ல அபிப்பிராயத்தை உண்டுபண்ணவில்லை.
எனினும், முன்னேற்றமடைந்து கொண்டிருக்கும் இந்த நாட்டைப் பற்றி சொல்லக்கூடிய அநேக நல்ல காரியங்கள் இருக்கின்றன. அதன் மக்கள் சுறுசுறுப்புள்ளவர்கள் கஷ்டப்பட்டு உழைப்பவர்கள். தி நியு யார்க் டைம்ஸ் மாகஜீன் கொண்டுள்ள ஒரு கட்டுரையில் “அங்கு விஜயம் செய்பவருக்குத் தென்படக்கூடிய பற்பல விதங்களில், பொரூண்டி எவ்வளவு ஏழ்மையாக இருந்தபோதிலும், அதன் மக்கள் உழைப்பவர்கள். உலக நிதியின் உள்நாட்டு பிரதிநிதியாகிய மாரிஸ் கெர்வாயிஸ் “மிக உயர்ந்த சாதனையுள்ள ஒரு நாடு” என்பதாக அதை அழைக்கிறார்.”
எனினும், பொரூண்டியின் மத சம்பந்த நிலை, இந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் அபிப்பிராயத்தை ஆபத்துக்குள்ளாக்குகிறது. அதன் சுமார் 80 சதவிகிதத்தினர் கிறிஸ்தவர்களென உரிமை பாராட்டுகிறார்கள், பெரும்பான்மையர் ரோமன் கத்தோலிக்க மதத்தினர். ஆகிலும், அந்நாட்டில் அரசியல் ஆட்சியாளர் மதச்சம்பந்த சகிப்புத்தன்மையை காட்டாமல் அதிக கவலையுண்டாக்கும் மாதிரியை வைத்திருக்கின்றனர். அக்டோபர் 16, 1985-ல் தி கிறிஸ்டியன் சென்ச்சுரி பின்வருமாறு அறிவித்தது: “கடந்த ஆண்டில் பொரூண்டியின் அரசாங்கம் சர்ச் நீடித்திருப்பதைத் தடைசெய்யும் எண்ணத்துடன் தொடர்ச்சியான பல நடவடிக்கைகளை தொடுத்திருக்கிறது . . . பொது மற்றும் தனிப்பட்ட வழிபாடு, ஜெபம் செய்தல் ஆகியவற்றிற்கான உரிமை பெரியளவில் தடைசெய்யப்பட்டிருக்கிறது. சில மதத் தொகுதிகளின் சர்ச்சுகள் யாவும் . . . மூடப்பட்டு, செயற்படாதபடி தடையுத்தரவு போடப்பட்டிருக்கிறது; . . . டஜன் கணக்கில் கிறிஸ்தவர்கள் சிறையிலிடப்பட்டிருக்கின்றனர், சிலர் சித்திரவதை செய்யப்பட்டனர் . . . இவையெல்லாம் அவர்கள் மதத்தை அப்பியாசிக்க தங்கள் உரிமையை பயனாட்சி செய்ததன் காரணமாக.”
ஆகையால், செப்டம்பர் 1987-ல் ஒரு புதிய அரசாங்கம், ஜனாதிபதி பியேர் புயோயாவின் கீழ் பொரூண்டியில் பதவிக்கு வந்தபோது, பெரும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டது. புதிய ஜனாதிபதி தன் ஜனங்களுக்கு மதச் சுயாதீனத்தை வாக்களித்தார், மேலும் தன் வார்த்தையின்படி செய்ய உடனடியாக நடவடிக்கைகளை எடுத்தார். ஐ.மா.-வின் மாநில அரசாங்க அலுவலகம் அறிவித்தபடி: “அவருடைய ஆட்சியின் முதல் ஆண்டில், ஜனாதிபதி பியேர் புயோயா ஸ்தாபிக்கப்பட்ட மதங்கள் விஷயத்தில் பொரூண்டியின் அரசியல் செயல்முறையில் பெரும் மாற்றங்களைச் செய்தார். [முந்தின] ஆட்சியின் கீழ் மதச் சுயாதீனத்தின்பேரில் போடப்பட்ட தடையை நீக்கினார். புயோயா மதச் சிறைவாதிகளை விடுதலைச் செய்தார்; மூடப்பட்ட சர்ச்சுகளைத் திறந்தார்; பறிக்கப்பட்ட சர்ச் உடைமைகள் யாவற்றையும் திரும்பக் கொடுத்தார்.” இத்தகைய அறிவூட்டப்பட்ட செயல்நடத்தை ஜனாதிபதி புயோயாவுக்கு உலகமெங்குமுள்ள சுயாதீனத்தை நேசிக்கும் மக்களின் பெரும் கனத்தை சம்பாதித்தது.
அப்படியானால், சமீபத்தில் ஏன் யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே தனியாக பிரித்தெடுக்கப்பட்டு மதத் துன்புறுத்தலின் குறிக்கோளாக்கப்பட்டிருக்கின்றனர்?
யெகோவாவின் சாட்சிகள்—அங்கீகாரம் பெறுதலுக்கு போராட்டம்
கடந்த பல பத்தாண்டுகளாக, கத்தோலிக்க சர்ச்சானது, “ஒரு பலத்த பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பாக உருவாகியிருக்கிறது” என்பதாக தி நியு யார்க் டைம்ஸ் கூறியது. இந்நாட்டின் பிரிட்டிஷ் ஆட்சியின் நாட்களில், சர்ச்சானது “நாட்டை சொல்லர்த்தமாக ஆட்சிசெய்ய” அனுமதிக்கப்பட்டது, ஏனெனில் அது, “சுகாதாரமும் கல்வியும் அளிப்பதில் ஒரு முக்கிய பங்கை வகித்தது.” ஆகையால் அங்கீகரிக்கப்பட்ட மதத்தால் அரசாங்கம் பயமுறுத்தப்பட்டதாக ஏன் உணர்ந்தது என்பது ஆச்சரியமூட்டுவதாய் இல்லை.
ஆகிலும், 1963-ல் யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய பொது பிரசங்க வேலையை பொரூண்டியில் துவங்கியபோது, அவர்கள் அரசியல் விவகாரங்களில் தலையிட எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தியை,” பிரசங்கிப்பதற்கு மட்டுமே அவர்கள் தங்களுடைய வேலையை கட்டுப்படுத்திக்கொண்டார்கள். (மத்தேயு 24:14, NW) மெய்க் கிறிஸ்தவர்கள் “இவ்வுலகத்தின் பாகமாக” இருக்கக்கூடாது என்று பைபிள் சொல்வதன் காரணமாக, யெகோவாவின் சாட்சிகள், அரசியல் காரியங்களில் தலையிடாமல், நடுநிலைமையை வகித்தார்கள், இது உலகமெங்குமே சாட்சிகள் எடுக்கும் நிலைநிற்கையாக இருக்கிறது.—யோவான் 17:16.
சாட்சிகள் மனச்சான்றுதலுக்கு ஏற்ப அரசியல் கட்சிகளுடன் சேருவதிலிருந்தும் அரசியல் போராட்ட ஊக்கொலிகளை கத்துவதிலிருந்தும் பின்வாங்கினார்கள். இந்த நடுநிலைமை பங்கை அரசாங்கங்கள் தேசப்பற்று இல்லாமைக்கும் அல்லது ராஜதுரோகம் என்றுங்குங்கூட தப்பெண்ணங் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. உலகமெங்குமே யெகோவாவின் சாட்சிகள் நல்நடத்தைக்கும், சட்டத்துக்குக் கீழ்ப்படிதலுள்ள பிரஜைகளாக இருப்பதற்கும் அறியப்பட்டிருக்கிறார்கள். உலகப்பிரகாரமான அரசாங்கங்களுக்குக் “கீழ்ப்பட்டிருக்கும்படி” பைபிள் கூறும் கட்டளையை அவர்கள் கவலையோடு ஏற்கின்றனர். (ரோமர் 13:1) கொடிகள் போன்ற அரசியல் சின்னங்களை வணங்குவதிலிருந்து அல்லது எவ்வகையிலும் அவற்றிற்கு வணக்கத்திற்குரிய பயபக்தியைக் காட்டுவதிலிருந்து அவர்கள் விலகியிருந்தாலும், அச்சின்னங்களை அவர்கள் அவமரியாதையுடன் கையாளுவதில்லை.—யாத்திராகமம் 20:4, 5.
1975-ல் யெகோவாவின் சாட்சிகள் அரசாங்கம் தங்களுடைய வேலையை சட்டப்படி அங்கீகரிக்கும்படி கேட்டார்கள். ஆனால் 1976-ல் இராணுவம் அரசாங்கத்தை கவிழ்த்து, ஜனாதிபதி ஜீன்-பாப்டிஸ்ட் பாகாஸா என்பவரை பதவியில் ஏற்றியது. அவர் மதச் சுயாதீனத்தை வாக்களித்தார். ஆகிலும், மார்ச் 1977-ல் யெகோவாவின் சாட்சிகள் மீது சட்டப்படி தடையுத்தரவு போடப்பட்டது! பாகாஸாவின் அரசாங்கத்தின் அங்கத்தினருக்கு உலகமெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் காரியங்களைத் தெளிவுபடுத்த முயற்சி செய்தார்கள், ஆனால் கடிதங்கள், பிரான்ஸிலுள்ள பொரூண்டி தூதுவர் அலுவலகத்தை சந்தித்தல், மற்றும் பொரூண்டியில் அரசாங்க அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கூட்டங்கள், இவை யாவுமே பயனற்றவையாக இருந்தன. 1987-ல் பொரூண்டியில் ஆண்களும் பெண்களும் அடங்கிய சுமார் 80 சாட்சிகள் பல மாதங்களாக சிறையில் போடப்பட்டனர். அங்கே இருக்கையில் ஒரு சாட்சி மாண்டுபோனார்.
பின்பு 1987-ல் ஏற்பட்ட ஒரு திடீர் புரட்சியானது மேஜர் பியேர் புயோயாவை பதவிக்கு உயர்த்தியது. கத்தோலிக்கரும் புராட்டஸ்டான்டினரும் அவருடைய மதச் சகிப்புத்தன்மையிலிருந்து நன்மையடைந்தார்கள்—ஆனால் யெகோவாவின் சாட்சிகள் அல்ல.
மதத் துன்புறுத்தலின் துவக்கம்
பிப்ரவரி 16, 1989-ல் பியேர் புயோயா நாட்டின் கவர்னர்களோடு ஒரு கூட்டம் நடத்தினதற்குப் பிறகு, பொரூண்டி எதிர்ப்படவேண்டிய ஒரு பெரிய பிரச்னை யெகோவாவின் சாட்சிகளின் வளர்ச்சி என்பதாக வானொலி மூலம் அறிவிக்கப்பட்டது. அறிகுறியின் பேரில் செயற்படுவதுபோல், உள்நாட்டு கவர்னர்கள் யாவரும் துன்புறுத்தலின் ஓர் அலையை துவக்கிவைத்தனர். நுட்ப விவரங்கள் இன்னும் அவ்வளவு தெளிவாக இல்லாத போதிலும், பின்வரும் அறிக்கைகள் அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது:
கிட்டேகா மாகாணம்: கவர்னர் யூவ்ஸ் மினானி யெகோவாவின் சாட்சிகள் யாவரையும் கைது செய்வதற்கு காவல் துறையினரும் குடிமக்களும் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார். மார்ச் 22, 1989 சாயங்காலம், பாதுகாப்பு காவல் துறையின் தூதுவர்கள், விசேஷ முழுநேர பயனியர் பிரசங்கியாகிய நிடிபாடாமாபி எட்மன்டின் வீட்டை உடைத்து நுழைந்து அவரைக் கைது செய்தார்கள். அவர் சிறையிலடைக்கப்பட்ட போது அவருக்கு உணவு கொடுக்கப்படவில்லை. பல தடவைகள் அவர் பசியின் காரணமாக மயக்கம் அடைத்து விழுந்தார். யெகோவாவின் சாட்சிகள் மனித இரத்தத்தை சாப்பிடுகிறார்கள் என்ற வதந்தி—பயங்கர பொய் வதந்தி!—உண்மை என்று அவரைச் சொல்லவைக்க எடுக்கப்பட்ட முயற்சியில் அவர் சித்திரவதைக்கும் உட்படுத்தப்பட்டார்.
எட்மன்டின் கைதுக்குப் பிறகு, யெகோவாவின் சாட்சிகளாகிய நிடிகாராஹெரா ஆரோன் மற்றும் நிடிம்பிரான்கெஸா பிரைம் என்பவர்களும் கைது செய்யப்பட்டு கிட்டேகாவிலுள்ள சிறைச்சாலையில் வைக்கப்பட்டனர். இவர்களும் அதேவிதமாக மிருகத்தனமாக நடத்தப்பட்டார்கள்.
நிஜிம்பெரி ஷார்லட், ஒரு வட்டாரக் கண்காணியின்—பல சபைகளைச் சந்திக்கும் பயணக்கண்காணியின்—மனைவி தன் கிறிஸ்தவ சகோதரர்களின் நிலைமையைப் பற்றி அறியவந்தாள். அவள் சிறைச்சாலைக்கு உணவு எடுத்துச்செல்ல முயற்சி செய்தாள், ஆனால் மார்ச் 16, 1989 அன்று அவள் கைதுசெய்யப்பட்டு, அவளுடைய கணவன் பேரில் எப்படியாவது கைவைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அதிகாரிகள் அவளை பிணைக்கைதியாக நிறுத்திவைத்தார்கள்.
முராம்வியா மாகாணம்: கவர்னர் ஆன்டோனி பாஸா எல்லாச் சாட்சிகளும் தன்னை வந்து சந்திக்கும்படியும் கேள்விகளுக்கு விடையளிக்கவேண்டும் என்றும் கட்டளையிட்டு அழைத்தார். மார்ச் 4 அன்று ஒரு தொகுதி அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க கூடினார்கள். அவர்கள் மரியாதையுடம் அவருடைய கேள்விகளுக்கு பதிலளித்தபோதிலும், அரசியல் போராட்ட ஊக்கொலிகளை கத்த அவர்கள் மறுத்தார்கள்.
இதற்கு பிரதிபலிப்பாக, கவர்னர் உள்ளூர் ஜனங்களை தூண்டி யெகோவாவின் சாட்சிகளைத் தாக்கும்படிச் செய்தார். மார்ச் 16-ம் தேதி காவல் துறையினர் அறியப்பட்ட சாட்சிகளின் வீடுகளுக்குள் நுழைந்து, அரசியல் போராட்ட ஊக்கொலிகளை கத்த மறுத்த ஆண்கள், பெண்கள் எல்லாரையும் அடித்தார்கள். ஒரு சாட்சியின் கடையைக் கைப்பற்றி அதை மூடிப்போட்டார்கள்—குடும்பத்தினர் வருமானம் இல்லாமல் தவிக்கும்படிச் செய்தார்கள்.
மார்ச் 17-ம் தேதி தங்கள் விசுவாசத்தை மறுதலிக்க மறுத்ததன் காரணமாக நான்கு பெண்கள் அடிக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருத்தி 20-நாட்கள் வயதுள்ள குழந்தையின் ஒரு தாயாக இருந்தபோதிலும் காற்றுவசதியுங்கூட இல்லாத ஒரு சிறு சிறை அறைக்குள் அவர்கள் போடப்பட்டார்கள்.
மார்ச் 20-ம் தேதி அன்று தடிகளையும் விளக்குகளையும் உடையவர்களாய் இருந்த ஒரு கூட்டம் சாட்சிகளாயிருந்த சில பெண்களுடைய வீடுகளுக்குள் நுழைந்து, அவர்களை அடித்து, வீடுகளைவிட்டு ஓடும்படி துரத்தினார்கள். தாக்கப்பட்டவர்களில் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படித்துக்கொண்டிருந்த 75 வயது ஸ்திரீ ஒருவளும், 14 வயதுக்கும் கீழ்ப்பட்ட பிள்ளைகள் அநேகரும் இருந்தனர்!
நியாபிஹான்கா என்னும் சிறுவர் பள்ளியின் மேலதிகாரி பியர் கிபினா-கான்வா, நாட்டின் கொடியை சாட்சிகளின் பிள்ளைகள் வணங்கும்படி வற்புறுத்த முயற்சி செய்தார். அப்படி செய்ய வைக்க முடியாமல், அவர் பிள்ளைகளை பள்ளியிலிருந்து விலக்கினார். அந்தப் பட்டணத்திலிருந்து இருபத்திரெண்டு சாட்சிகள் தங்களுக்குச் சொந்தமான யாவற்றையும் விட்டு ஓட வற்புறுத்தப்பட்டனர். நிடைசென்கா லியோனிடயஸ், கான்யாம்போ லினார்ட், நிடாஹார்வாமாமியி அபெத்நெகோ, பான்க்யன்குமுரின்டி P., காஷி கிரகோரி மற்றும் மிபானிஹான்குயி தாடீ ஆகியோர் கைதுசெய்யப்பட்டவர்களில் சிலர் ஆவர்.
புஜும்புரா மாகாணம்: முஹுட்டா நகராட்சி மன்றத்தின் நிர்வாகி, நாஹிமனா மாக்கயர் என்பவர், காவுனோ வின்சென்ட், நிடாபாஸானியி சில்வெஸ்டர் மற்றும் நிடிஸ்வி-நிஸானியி—இவர்கள் யாவரும் சாட்சிகள்—ஆகியோரை ஒரு கூட்டத்துக்கு வரும்படி கட்டளையிட்டார். ஆகஸ்ட் 1988-ல் நடந்த மரபு சண்டை ஒன்றில் அவர்கள் ஈடுபட்டதாக அவர்களைக் குற்றச்சாட்டினார். யெகோவாவின் சாட்சிகள் அதில் தெளிவாகவே ஈடுபடவில்லையென்றாலும், அவர்களை அடித்து அதைத் தொடர்ந்து கைது செய்தார்கள்.
புபான்ஸா மாகாணம்: வெறுமென பைபிள் பிரசுரங்களை கையில் வைத்திருந்ததன் காரணமாக இரண்டு சாட்சிகள் கைது செய்யப்பட்டார்கள். கட்சிக்குரிய வணக்கச்செயலை கொடுக்க அவர்கள் மறுத்தபோது கவர்னர் கிம்புஸா பெல்தஸார் அவர்களை ஓர் இராணுவ முகாமுக்கு அனுப்பினார். அங்கே அவர்களுடைய விரல்களை நெருக்குவதன் மூலம் சித்திரவதைக்குக் கீழ்ப்படுத்தப்பட்டார்கள்.
நீங்கள் என்ன செய்யக்கூடும்
இந்தத் தவறான செயல்களில் பெரும்பான்மை நாட்டின் தூர உள்பிரதேசங்களில், வெளிநாட்டு பார்வையாளர்களின் கண்களுக்கு மறைவாக நடந்திருக்கின்றன. ஆகிலும் இந்தக் கட்டுரையின் 130 கோடிக்கும் அதிகமான பிரதிகள் உலகமெங்கும் 105 மொழிகளில் விநியோகிக்கப்படும். பொரூண்டியின் கொடுஞ் செயல்கள் இனிமேலும் இரகசியமாக இராது. சுயாதீனத்தை நேசிக்கும் ஆட்கள், மனித உரிமையை மதியாமல் இவ்வாறு படுமோசமான மீறுதலைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள்—இந்த உரிமைகளுக்காகவே ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர் போராடியிருக்கின்றனர்.
மதச் சுயாதீனத்தை அளிப்பதாக தாங்கள் கொடுத்த வாக்கை மதிக்காததற்கு பொரூண்டி அதிகத்தை இழக்கும் ஆபத்திலிருக்கிறது. அவ்வளவு கடினமாக உழைத்து ஸ்தாபித்திருக்கும் முன்னேற்றமுள்ள, கடின உழைப்பையுடைய ஒரு நாடு என்ற பெயரைக் கெடுத்துக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது. மூடத்தனமான மதத் துன்புறுத்தவாதிகளைக் கொண்ட நாடு என்பதாக கருதப்பட பொரூண்டி விரும்புகிறதா? அவ்வாறு விரும்பவில்லையென்று நாங்கள் எண்ணுகிறோம். ஜனாதிபதி புயோயாவின் ஆலோசகர்கள் அவருக்குக் காரியங்களை திருத்தமாக கூறாமல் தப்பபிப்பிராயத்தை உண்டுபண்ணியிருக்கின்றனர் என்றுதான் நாங்கள் நினைக்க வேண்டியதாயிருக்கிறது.
யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றங்கள் முரண்பாடான உணர்ச்சிகளைத் தூண்டும்படி வகுக்கப்பட்ட பொருத்தமற்ற பொய்களாகும். பொரூண்டியின் அரசாங்கத்தின் பாதுகாப்புக்காகிலும் அல்லது வேறு எந்தத் தேசத்தின் பாதுகாப்புக்காகிலும் யெகோவாவின் சாட்சிகள் ஆபத்தானவர்களாக இல்லை. அவர்கள் சமாதானத்தை நாடும், சட்டப்படி நடக்கும், தேசீய சின்னங்களுக்கு மரியாதைக் காட்டும் பிரஜைகள். வதந்திகளுக்கு மாறாக, எந்த முறையிலாவது—அவர்கள் உயிர் ஆபத்திலிருக்கையிலுங்கூட—இரத்தத்தை உட்கொள்ள மறுக்கிறார்கள்.—அப்போஸ்தலர் 15:28, 29.
ஆகையால், உலகமெங்குமுள்ள மெய்க் கிறிஸ்தவர்கள் பொரூண்டியிலுள்ள தங்களுடைய சகோதரர்களுக்காக ஐக்கியப்பட்டு விண்ணப்பம் செய்வார்கள். (1 தீமோத்தேயு 2:1, 2) வாசகரில் அநேகர் ஜனாதிபதி பியேர் புயோயாவுக்கு நேரடியாக எழுதி, மதத் துன்புறுத்தலை நிறுத்தவும், யெகோவாவின் சாட்சிகள் ஸ்தாபிக்கப்பட்ட மதமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் பெறவும் மரியாதையுடன் வேண்டிக்கொள்ள விரும்புவார்கள். உலகத்தின் கண்களில் பொரூண்டி தன் பெயரைக் காத்துக்கொள்ள வேண்டுமானால், நியாயத்துக்குக் கட்டாயம் பிரதிபலிக்க வேண்டும். (w89 8⁄15)
His Excellency Major Pierre Buyoya
President of the Republic of Burundi
Bujumbura
REPUBLIC OF BURUNDI
[பக்கம் 8-ன் வரைப்படம்
(For fully formatted text, see publication)
ஸயர்
டான்ஸானிய
ருவாண்டா
பொரூண்டி
டாங்கனீக்கா ஏரி