உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w90 2/1 பக். 31-32
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • இதே தகவல்
  • ‘ராஜாக்களாகவும் குருமார்களாகவும்’ இருப்பீர்கள்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • புதிய உடன்படிக்கையின் மூலம் பெரிய ஆசீர்வாதங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • புதிய ஒப்பந்தத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை யெகோவா சொன்னார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • யெகோவா உடன்படிக்கைகளின் கடவுள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
w90 2/1 பக். 31-32

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

◼நியாயப்பிரமாண உடன்படிக்கை இயேசு கழுமரத்தில் மரித்தபோது முடிவுக்கு வந்ததா? அது எப்பொழுது புதிய உடன்படிக்கையால் மாற்றீடு செய்யப்பட்டது?

மூன்று சம்பவங்களை மனதில் கொண்டவர்களாய்ப் பலர் இந்தக் கேள்விகளைக் கேட்டிருக்கின்றனர்: பொ.ச. 33, நைசான் 14 அன்று பிற்பகல் இயேசு கழுமரத்தில் மரிப்பது, தம்முடைய ஜீவ இரத்தத்தின் கிரயத்தை பரலோகத்தில் அளிப்பது, மற்றும் பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளன்று தம்முடைய பரிசுத்த ஆவியை ஊற்றுவது. வேதவசனங்களின்படி பெந்தெகொஸ்தே அன்று நியாயப்பிரமாண உடன்படிக்கை முடிவுக்கு வந்தது. புதிய உடன்படிக்கையால் மாற்றீடு செய்யப்பட்டது. ஏன் அப்படி என்பதைப் பார்க்கலாம்.

யெகோவா தேவன் உரியகாலத்தில் ‘புதிய உடன்படிக்கையைக்’ கொண்டு நியாயப்பிரமாண உடன்படிக்கையை மாற்றீடு செய்வார் என்று முன்னறிவித்தார். இது பாவம் முழுவதுமாக மன்னிக்கப்படுவதை அனுமதித்தது. நியாயப்பிரமாணத்தின் கீழோ அந்தக் காரியம் கூடாததாயிருந்தது. (எரேமியா 31:31-34) அந்த மாற்றீடு எப்பொழுது நிகழும்?

பழைய உடன்படிக்கை, அதாவது நியாயப்பிரமாண உடன்படிக்கை அதன் நோக்கத்தை நிறைவேற்றியதாக வழியிலிருந்து நீக்கப்பட வேண்டும். (கலாத்தியர் 3:19, 24, 25) பவுல் அப்போஸ்தலன் பின்வருமாறு எழுதினான்: “[கடவுள்] அக்கிரமங்களெல்லாவற்றையும் மன்னித்து, நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து சிலுவையின்மேல் [கழுமரத்தின்மேல், NW] ஆணியடித்தார்.” (கொலோசெயர் 2:13, 14) அப்படியென்றால் இயேசு மரித்த அந்தச் சமயத்தில்தானே புதிய உடன்படிக்கையால் நியாயப்பிரமாண உடன்படிக்கை மாற்றீடு செய்யப்பட்டது என்று பொருள்படுமா?

இல்லை, ஏனென்றால் புதிய உடன்படிக்கை தகுதிவாய்ந்த பலியின் இரத்தத்தாலும் புதிய ஒரு தேசத்தால் அதாவது ஆவிக்குரிய இஸ்ரவேலராலும் தொடங்கிவைக்கப்பட வேண்டியதாயிருந்தது. (எபிரெயர் 8:5, 6; 9:15-22) இயேசு நைசான் 16-ம் தேதி உயிர்த்தெழுப்பப்பட்டார், 40 நாட்கள் கழித்து அவர் பரலோகத்துக்கு ஏறிச்சென்றார். (அப்போஸ்தலர் 1:3-9) அவர் பரலோகத்துக்குச் சென்று 10 நாட்கள் கழிந்த பின்னர் அல்லது பெந்தெகொஸ்தே நாளன்று, இயேசு தம்முடைய பிதாவிடமிருந்து பெற்ற ‘வாக்குத்தத்தத்தின்படியான பரிசுத்த ஆவியை’ ஊற்றினார், அப்பொழுது ஆவிக்குரிய இஸ்ரவேல் உண்டாயிற்று. (அப்போஸ்தலர் 2:33) மத்தியஸ்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம், கடவுள் ஆவிக்குரிய இஸ்ரவேலருடன் புதிய உடன்படிக்கை பண்ணுகிறார்.

ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்டிருக்கும் இந்தக் காரியங்களைப் பார்க்கும்போது, எந்தச் சமயத்தில் புதிய உடன்படிக்கையைக் கொண்டு நியாயப்பிரமாண உடன்படிக்கை மாற்றியமைக்கப்பட்டது?

இயேசுவின் மரணத்தோடு நியாயப்பிரமாணம் முடிவுற்றது என்று ஒருவர் சொல்லக்கூடாதவராயிருக்கிறார். இயேசு ஆவிக்குரிய ஜீவனடையத்தக்கதாக உயிர்த்தெழுப்பப்பட்டதற்குப் பின்பு அந்த 40 நாட்களின்போது, அவருடைய சீஷர்கள் இன்னும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு வந்தார்கள். மேலும், நியாயப்பிரமாணத்தின் ஒரு முக்கிய அம்சம் வருடத்துக்கு ஒருமுறை பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிப்பதாகும். அது இயேசு கிறிஸ்து பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்பட்டதை அடையாளப்படுத்துகிறது. அவர் அங்கு கடவுளுடைய சந்நிதானத்தில் புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக தம்முடைய மீட்கும் பலியின் கிரயத்தை அளிக்கக்கூடும். (எபிரெயர் 9:23, 24) இது புதிய உடன்படிக்கைக்கு வழியைத் திறந்தது, புதிய உடன்படிக்கை எரேமியா 31:31-34-ன் நிறைவேற்றமாக தொடங்கப்பெற்றது.

யெகோவா அவருடைய மீட்கும் பொருளாகிய பலியை ஏற்றுக்கொள்ள செயல்பட்டபோது புதிய உடன்படிக்கை அமலுக்கு வந்தது. இயேசுவின் உண்மையுள்ள சீஷர்கள் மீது தம்முடைய பரிசுத்த ஆவியை ஊற்றி, ராஜ்யத்துக்கான உடன்படிக்கையில் இருப்பவர்களாலான ஒரு புதிய தேசத்தை, ஆவிக்குரிய இஸ்ரவேலை அவர் தோற்றுவித்தார். (லூக்கா 22:29; அப்போஸ்தலர் 2:1-4) இதுதானே கடவுள் நியாயப்பிரமாணத்தை நீக்கிப்போட்டு இயேசு மரித்த கழுமரத்திலே அடையாள அர்த்தத்தில் அறைந்துவைத்தார் என்பதைக் காட்டுகிறது. எனவே பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாளன்று புதிய தேசத்தின், ஆவிக்குரிய இஸ்ரவேலின் பிறப்பின்போது புதிய உடன்படிக்கையின் தொடக்கத்தோடு நியாயப்பிரமாண உடன்படிக்கை முடிவுக்கு வந்தது.—எபிரெயர் 7:12; 8:1, 2.

இந்தக் கேள்விக்கான அந்த அடிப்படை பதிலைத் தவிர, பொ.ச. 33-ல் நியாயப்பிரமாண உடன்படிக்கை முடிந்தபோதிலும் புதிய உடன்படிக்கை தொடங்கியபோதிலும் கடவுள் மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலரை ஒதுக்கிவிடவில்லை. உதாரணமாக, ஆபிரகாமிய உடன்படிக்கையின்படி பொ.ச. 36-ல் முடிவடைந்த 70-வது “வாரத்தில்” யெகோவா யூதர்களிடமாகவும், யூதமதத்துக்கு மதம் மாறியவர்களிடமாகவும் சமாரியர்களிடமாகவும் விசேஷ தயவைக் காண்பித்தார். (ஆதியாகமம் 12:1-3; 15:18; 22:18; தானியேல் 9:27; அப்போஸ்தலர் 10:9-28, 44-48) பொ.ச. 33-க்குப் பின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்ற உண்மைக்குத் தங்களை அமைத்துக்கொள்வது என்பது அபிஷேகம்பண்ணப்பட்ட சில யூத கிறிஸ்தவர்களுக்கும் காலம் எடுத்தது; பொ.ச. 49-ல் ஆளும் குழுவிடம் கொண்டுவரப்பட்ட கேள்வியில் இதை நாம் காணமுடிகிறது. (அப்போஸ்தலர் 15:1, 2) பொ.ச. 70-ல் ஆலயமும் நியாயப்பிரமாணத்துடன் சம்பந்தப்பட்ட வம்சாவழிப் பதிவுகளும் ரோமர்களால் அழிக்கப்பட்டபோது நியாயப்பிரமாணம் முற்றிலுமாகக் கைவிடப்பட்ட காரியம் மறுக்கமுடியாதளவுக்கு நிரூபிக்கப்பட்டது.—மத்தேயு 23:38. (w89 2/1)

[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]

Pictorial Archive (Near Eastern History) Est.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்