யுத்தங்கள் எப்போதுமே இருக்குமா?
1916 ஜூலை 1-ம் தேதி வட ஃபிரான்சிலுள்ள பிக்கார்டியின் இனிமையான விவசாய வளாகத்தில், சோமின் முதல் போர் ஆரம்பமானது. பேராற்றல் வாய்ந்த பீரங்கிப் படையின் தாக்குதலுக்கும் விண்ணிலிருந்து செய்யப்பட்ட தாக்குதலுக்கும் பிறகு பிரிட்டிஷ் மற்றும் ஃபிரெஞ்சுப் படைகள், அவர்களை எதிர்ப்பட்ட அகழியிலிருந்த ஜெர்மன் படைகளோடு முடிவாகத் தங்களது மேலதிகாரத்தை நிலைப்பெறச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் போரில் இறங்கின. ஆனால் அங்கு அவை தங்களது மேலதிகாரத்தை நிலைப்பெறச் செய்யவில்லை. மாறாக, முதல் நாளன்று 20,000 பிரிட்டிஷ் போர்வீரர்கள் கொல்லப்பட்டார்கள். வாரங்கள் சென்ற போது, போர் இன்னும் நடந்துகொண்டிருக்க, அதிகாரம் இன்னும் நிலைப்பெறச் செய்யப்படாமலே இருந்தது. அக்டோபர் மாதம் பெய்த அடைமழை, போர்களத்தை சேற்றின் கடலாக மாற்றியிருந்தது. நவம்பர் மாத நடுவிற்குள் நேச நாடுகள் வெறும் ஐந்து மைல்களே முன்னேறியிருந்தன. இதற்கிடையில், 4,50,000 ஜெர்மன் நாட்டவரும், 2,00,000 ஃபிரெஞ்சு நாட்டவரும், 4,20,000 பிரிட்டிஷ் நாட்டவரும் உயிரிழந்துவிட்டனர். பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், அவர்களில் பெரும்பாலானோர் இளம் மனிதர்கள் அந்தப் போரில் மாண்டனர்!
இது முதல் உலகப் போரில் வெறும் ஓர் இடைகதையாக மாத்திரமே இருந்தது. சரித்திரம் முழுவதிலும் நடை பெற்றிருக்கும் எண்ணற்றப் போர்களில் முதல் உலகப் போர் மாத்திரமே அதுவரை நடைபெற்றதில் மிக மோசமானப் போராகும். மனித உயிர் எத்தனை முட்டாள்தனமாக விரயமாயிற்று!
மனிதர்கள் இவ்வகையில் ஒருவரையொருவர் கொலை செய்வதில் ஏன் விடாப்பிடியாக இருக்கிறார்கள்? அநேக காரியங்கள் உட்பட்டிருக்கின்றன, சுயநலம், முன்னேற ஆசை, பேராசை, ஆட்சியையும் அந்தஸ்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற ஆவல் அவைகளில் சிலவாகும். போருக்கு மற்றொரு காரணம் தேசப்பற்றாக இருந்திருக்கிறது. ஆம், போர்கள் பைபிளில் காணப்படும் மனித சரித்திரத்தைப் பற்றிய கருத்தறிவிப்பு துல்லிபமாக இருப்பதைப் பிரதிபலிக்கின்றது: “ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்.”—பிரசங்கி 8:9.
மதம் அநேக சமயங்களில் போரை ஊக்குவித்திருக்கிறது. இடைநிலை காலத்து சிலுவைப் போர்கள் மதப்பற்றுள்ள தேசங்களால் வெளிப்படையாகவே மதசம்பந்தமான ஒரு நோக்கத்துக்காக செய்யப்பட்டன: கிறிஸ்தவமண்டலத்துக்குப் பலஸ்தீனாவை மீட்டு தருவதற்காகவே. இந்த நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களிலும், பல்வேறு பிரிவுகளிலுள்ள மதகுருமாரும் போர்வீரர்களை மறு பக்கத்திலுள்ள சமகாலத்தவரைக் கொலை செய்வதற்கு அதிக மனமுள்ளவர்களாகச் செய்வதற்காக மதசம்பந்தமான உணர்ச்சிகளை பயன்படுத்திக்கொள்ள முயன்றிருக்கின்றனர். தற்போது நடைபெற்றுவரும் போர்கள் சிலவற்றில் தீவிரமான மதசம்பந்தமான அம்சம் உட்பட்டிருக்கிறது.
நம்பிக்கையின் ஒளி
போர்கள் ஒரு நாள் ஓய்ந்துவிடும் என்பதற்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? ஆம், இருக்கிறது. இயேசு கிறிஸ்து “சமாதானப்பிரபு” என்றழைக்கப்படுகிறார். அவர் பூமிக்கு வந்தபோது, இந்தப் பெயருக்கு ஏற்ப வாழ்ந்து, தங்களைப் போலவே தங்கள் அயலாரையும் நேசிக்கும்படியாக ஜனங்களுக்குக் கற்பித்தார். அவர்களுடைய சத்துருக்களையும்கூட நேசிக்கும்படியாக அவர் அவர்களுக்குச் சொன்னார். (ஏசாயா 9:6; மத்தேயு 5:44; 22:39) இதன் விளைவாக முதல் நூற்றாண்டில் அவருடைய போதனைகளுக்குச் செவி கொடுத்தவர்கள் சமாதானமுள்ள சர்வதேசீய சகோதரத்துவத்தை உண்டுபண்ணினார்கள். ஒருவர் மீதொருவர் போர் தொடுப்பது அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக, இந்தப் பூர்வ கிறிஸ்தவர்களின் தூய்மையான விசுவாசம் பின்னால் கலப்படமானது. காலப்போக்கில் சர்ச்சுகள் அரசியலில் தலையிட, அவைகளின் கைகள், தேசங்களின் போர்களில் சிந்தப்பட்ட இரத்தத்தினால் நனைந்தன.
பின்னால் மாறுதல்களின் காற்று ஐரோப்பா மீது வீச ஆரம்பித்தது. இடையறாத போரினால் மனிதவர்க்கம் களைப்படைந்துவிட்டது போன்று தோன்றியது. 1899-லும் மறுபடியுமாக 1907-லும் நெதர்லாந்திலுள்ள ஹேக்கில், சர்வதேசீய மாநாடுகள் நடத்தப்பட்டன. 1899-ன் மாநாட்டின்போது “சர்வ தேசீய சச்சரவுகளின் பசிபிக் [சமாதான] தீர்வுக்காக” ஒப்பந்தமொன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆகவே 20-ம் நூற்றாண்டு துவங்கிய போது உலகமானது போர் தொடுப்பதற்கான அதன் மனச்சாய்வை படிப்படியாக நாளடைவில் விட்டொழித்துவிடும் என்பதாக அநேகர் நம்பினர். எனினும் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் முதல் உலகப் போரின் துப்பாக்கிகளால் சிதறடிக்கப்பட்டன. இது, சமாதானத்துக்கான மனிதவர்க்கத்தின் நம்பிக்கைகள் ஒருபோதும் நிறைவேற்றமடையாது என்பதை அர்த்தப்படுத்துகிறதா? (w88 11/1)