சாத்தான்—அவன் உண்மையிலேயே இருக்கிறானா?
சாத்தான் இருக்கிறான் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியானால், குறைந்து கொண்டே வரும் ஒரு சிறுபான்மையானோரின் பாகமாக நீங்கள் இருப்பதாகத் தெரிகிறது. “1980-க்குள், பழமைப்பற்றுள்ள கத்தோலிக்கர்கள், வரம் பெற்றவனாகக் கருதப்படும் குறிப்பிட்ட ஒரு மனிதனுக்குப் பின்னால் செல்லும் மக்கள், பழமைப்பற்றுள்ள புராட்டஸ்டன்டினர், கிழக்கித்திய ஆத்தடாக்ஸ் பிரிவினர், முகமதியர்—மாயமந்திரத்தில் நம்பிக்கையுள்ள ஒரு சிலரைத் தவிர, பிசாசை நம்புவது மறைந்துவிட்டிருக்கிறது.” இப்படியாக ஜெஃப்ரி பர்டன் ரஸல் எழுதிய சைத்தான்—நவீன உலகில் பிசாசு (Mephistopheles—The Devil in the Modern World) என்ற புத்தகம் சொல்கிறது.
ஆனால் அனைவருமே சாத்தான் உண்மையில் இருக்கிறான் என்பதை நம்புவதை நிறுத்திவிடவில்லை. “பிசாசு இன்னும் உயிருள்ளவனாகவும் உலகில் கிரியை செய்து கொண்டுமிருக்கிறான்” என்பதாக போப் ஜான் பால் II அண்மையில் இத்தாலியில் கொடுத்த ஒரு பேச்சில் குறிப்பிட்டார்.
போப் சொன்னது சரியா? அப்படியானால் சாத்தான் உலகில் என்ன செய்ய விரும்புகிறானோ அதைச் செய்வதற்கு அனுகூலமான நிலையில் இருக்கிறான். மக்கள் அவன் இருக்கிறான் என்பதை நம்பாவிட்டால், அவனை அவர்கள் எதிர்க்க மாட்டார்கள். கோட்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முதன்மை அதிகாரமுடையவரான கார்டினல் ராட்சிங்கர் பின்வருமாறு சொன்னது குறித்து ஆச்சரிப்படுவதற்கில்லை: “பிசாசு தான் மிகவும் விரும்புகின்ற பெயர் தெரியப்படாதத் தன்மையில் அடைக்கலம் கொள்கிறான்.”
சாத்தான் உண்மையிலேயே இருக்கிறானா? நாம் பைபிளை நம்புவோமேயானால் ஆம் என்று பதிலளிக்க வேண்டும்! ஆவியால் ஏவப்பட்ட அந்தப் பதிவில் அநேக தடவைகள் சாத்தான் பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கிறான். உதாரணமாக பைபிள் எழுத்தாளனாகிய பவுல், கிறிஸ்தவ சபையின் வரிசையில் “கள்ள அப்போஸ்தலர்கள்” “கபடமுள்ள வேலையாட்களைப்” பற்றி எச்சரிக்கையில் எழுதுவதாவது: “அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக் கொள்வானே.” சாத்தானைப் பவுல் புத்திக்கூர்மையுள்ள கபடமான ஓர் ஆளாகக் கருதினான்.—2 கொரிந்தியர் 11:13, 14.
அப்படியென்றால் சாத்தான் இருப்பது பற்றிய விஷயம் ஏன் அநேகரால் இன்று அற்பமாயிராத ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை? இது இக்காலத்தினுடைய ஆவியின் பிரதிபலிப்பாகவே இருக்க வேண்டும். கிறிஸ்தவ சகாப்தத்துக்குப் பிற்பட்ட காலம் என்பதாக அழைக்கப்படுகிறதில் நாம் வாழ்ந்து வருவதன் காரணமாக, பல சமுதாயங்களில் மதசம்பந்தமான நம்பிக்கைகளின் இடத்தை நாத்தீகமும் சிற்றின்ப நாட்டமும், பொருளாசையும் கம்யூனிஸமும் எடுத்துக் கொண்டுவிட்டிருக்கின்றன. இலட்சக்கணக்கான ஆட்கள் கடவுளை இனிமேலும் நம்புவதில்லை, அவர்களுடைய தனிப்பட்ட தத்துவங்களுக்கு அவர் தேவையற்றவர் என்பதாக அவர்கள் கருதுகிறார்கள். அவர்கள் கடவுளோடுகூட சாத்தானையும் வேண்டாமென்று ஒதுக்கிவிட்டிருக்கின்றனர். கிறிஸ்தவமண்டலத்திலுள்ள ஒரு சில மதப்பற்றுள்ள ஆட்கள் கடவுளை நம்புவதாக உரிமைப் பாராட்டினாலும் சாத்தானில் நம்பிக்கை இந்த 20-ம் நூற்றாண்டில் காலம் கடந்த ஒன்று என்பதாக நினைக்கிறார்கள்.
ஆனால் கடவுளைத் தள்ளிவிடுதல் எவ்வகையிலும் புதிய விஷயம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கதாகும். சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பாக எபிரெய கவியாகிய தாவீது எழுதியதாவது: “‘யெகோவா இல்லை’ என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்கிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்து வருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.” (சங்கீதம் 14:1; 53:1) மற்றொரு இடத்தில் அவன் சொன்னதாவது: “துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் ‘தேவன் இல்லை’யென்பதே.” (சங்கீதம் 10:4) அக்காலத்திலேயும்கூட கடவுள் இல்லை என்பது போல மக்கள் நடந்து கொண்டார்கள். கடவுள் இல்லையென்றால் சாத்தானுமிருக்கமுடியாது என்பதே நியாயமான முடிவாக இருந்திருக்க வேண்டும்.
சிலர் இன்னும் நம்புகிறார்கள்
ஆனால் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, சிலர் இன்னும் சொல்லர்த்தமான ஒரு பிசாசு இருப்பதை நம்புகிறார்கள். மேலுமாக, நன்மையும் தீமையும், கடவுளும் பிசாசும், அருகருகே எப்போதும் இருந்திருக்க வேண்டும் என்பதாகச் சொல்லும் துவைத பார்சி மதப் போதனையை நம்பும் ஆட்களும் இருக்கிறார்கள். மற்றவர்கள் நன்மையும் தீமையும் ஆகிய இரண்டுமே, தெய்வீகத்தன்மையின் அம்சங்கள் என்பதாகவும்கூடச் சொல்லுகிறார்கள். சாத்தான் இருப்பதை இன்னும் நம்பும் அநேகர் கிறிஸ்தவ மண்டலத்திலும் இஸ்லாமிய மதத்திலும் இருக்கிறார்கள். ஆம், இவர்களில் அநேகருக்கு அவன் இன்னும் கொம்புகளையும் வாலையுமுடையவனாய் “நரக அக்கினி”க்கு நியமிக்கப்பட்ட “சாவாமையுள்ள ஆத்துமாக்களின்” விலக்கமுடியாத முடிவை மேற்பார்வைச் செய்யும் செட்டைகளுள்ள ஓர் உயிரினமாகவே இருக்கிறான். பிரெஞ்சு தேசத்தைச் சார்ந்த பிரபல ஓவியர் கஸ்டேவ் டோரே வரைந்து காட்டப்பட்டுள்ளபடியே அவர்களுக்கு அவன் இருக்கிறான்.
சிலருக்குச் சாத்தானில் நம்பிக்கை இன்னும் மேலே செல்கிறது. அவர்கள்—பெயரின் மூலமாகவோ அல்லது சாத்தானிய அல்லது பேய்த்தனமான மதசடங்குகளின் மூலமாக—அவனை வணங்குகிறார்கள். பல ஆயிர வருடங்களாக, பில்லிசூனியமும் மாந்திரீகமும் சாத்தான் வணக்கத்தோடு அடையாளப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. நம்முடைய நவீன ஐயுறவு மனப்பான்மையுடைய சகாப்தத்திலும்கூட பேய் வணக்கம் இன்னும் தழைத்தோங்கி வருகிறது. ஆகவே, சாத்தானைப் பற்றி பைபிள்தானே என்ன சொல்லுகிறது என்பதை கலந்தாலோசிப்பதற்கு முன்பாக, நவீன சாத்தான் வணக்கத்தைப் பற்றிய சில உண்மைகளை நாம் சிந்திப்போமாக. (w88 9⁄1)
[பக்கம் 3-ன் படம்]
சாத்தானிய “நரகம்” பற்றிய ஒரு புத்தமத ஓவியம்