இயேசுவின் பிறப்பு—வெறும் புராணக் கதையா?
கிறிஸ்துவின் பிறப்பு! இது கிறிஸ்தவமண்டலத்தின் மிகப் பெரிய வருடாந்தர கொண்டாட்டத்திற்கு ஆதாரமென உரிமை பாராட்டப்படுகிறது. எனினும், எதிரிடையான கருத்துக்கொள்பவர்களாய்ப் பாதிரிமார்கள் பலர், இயேசுவின் பிறப்பைப்பற்றி சுவிசேஷ விவரப் பதிவுகளிலுள்ள பற்பல அம்சங்களை வெறும் புராணக் கதையாகப் புறக்கணித்துத் தள்ளுகின்றனர். உதாரணமாக, ஆங்கிலத்திலுள்ள தி இன்டெர்ப்ரிட்டர்ஸ் பைபிள், நட்சத்திரங் கணிப்பவர்கள், அல்லது “சாஸ்திரிகள்” வந்ததைப் பற்றிய மத்தேயுவின் விவரப் பதிவைக் குறித்துப் பின்வருமாறு சொல்லுகிறது: “இவ்வாறு, அது சுவைப் பெருக்குவதற்காகக் கற்பனைசெய்து இணைக்கப்பட்டதா, அல்லது சொல்லர்த்தமான நடைமுறை மெய்ம்மையாக உண்மையில் ‘நிகழ்ந்ததா’ என்பதை உறுதியாய் அறிய ஒரு வழியும் இல்லை. அந்தக் கதையின் மதிப்பும் முக்கியத்துவமும் அதன் திருத்தத்தின்பேரில் சார்ந்தில்லை; அதைப் பார்க்கிலும் இந்தக் கதை கலைத்திறன் அமைந்த வேலைப்பாடாக எண்ணப்பட வேண்டும்.”
குறைகாணும் இத்தகையோர், கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றிய சுவிசேஷ விவரப் பதிவுகள் சரித்திரப்பூர்வமானவையென கருதுவதற்கு நுட்பவிவரங்களில் மிகஅதிகம் குறைவுபடுகின்றனவென அடிக்கடி வாதிடுகின்றனர். ஆனால், மேசியாவான இயேசுவின் வாழ்க்கையும் காலங்களும் என்ற ஆங்கில புத்தகத்தில், ஆல்ஃபர்ட் எடெர்ஷீம் பின்வருமாறு கூறி இதைத் தவறென மெய்ப்பிக்கிறார்: “அத்தகைய ஒரு (புராணக் கதை) நிகழ்ச்சியின் போலியான அல்லது கட்டுக்கதையான கூற்று இத்தகைய மிகக் குறைவான நுட்பவிவரங்களுடையதாய், அல்லது அதைப் பார்க்கிலும், நுட்பவிவரங்களே இல்லாமல் அமைந்திராதென உறுதியுடன் சொல்லலாம். ஏனெனில், புராணக் கட்டுக்கதைக்கும் பாரம்பரியத்துக்கும் ஒன்றுபோல் இருக்கும் இரண்டு இன்றியமையாத அம்சங்களென்னவெனில், இவற்றில் தங்கள் வீரர்களைப் புகழ் ஒளிவட்டத்தால் சூழ்ந்திருக்கச் செய்ய எப்போதும் நாடுகின்றனர், மேலும் மற்றப்படி குறைவுபடும் நுட்பவிவரங்களைக் கொடுக்க முயற்சிசெய்கின்றனர்.”
எனினும், இயேசுவின் பிறப்பைக் குறித்து சுவிசேஷங்கள் ஏன் அவ்வளவு குறைத்த நுட்பவிவரங்களைக் கொடுக்கின்றன? முதன்மையான காரணமென்னவெனில், அவருடைய பிறப்பல்ல, அவருடைய மரணமே, பெரும் முக்கியத்துவமுடையது. (மத்தேயு 20:28) எடெர்ஷீம் பின்வருமாறு நம்மை மேலும் நினைப்பூட்டுகிறார்: “சுவிசேஷங்கள் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை, அல்லது அதற்கான மூலக்கூற்றுகளையுங்கூட கொடுக்கும்படி கருதப்படவில்லை; ஆனால் பின்வரும் இந்த இரட்டிப்பான நோக்கத்தை மட்டுமே கொண்டிருந்தது: அவற்றை வாசிப்போர் ‘இயேசுவே கடவுளுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நம்பவும்,’ அவ்வாறு நம்புவதனால் ‘அவரின் பெயரின்மூலம் ஜீவனடையவும்’ வேண்டுமென்பதே.” (w88 6⁄1)