நீங்கள் “அந்நியரை உபசரிக்க நாடுகிறீர்களா?”
அது அதிக உஷ்ணமான ஒரு நாளாக இருந்தது. இளைஞரும் முதியோரும் அடங்கிய யெகோவாவின் சாட்சி தொகுதியினர் ராஜ்யமன்றத்தை புதுப்பிக்கும் ஒரு திட்டத்தின்போது சுத்தம் செய்தல். வர்ணம் பூசுதல். மற்றும் பல்வேறு பணிகளான கடின வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகலுக்குள்ளாக அவர்கள் களைப்படைந்து விட்டனர். ஒரு சிலர் சிறிது ஓய்வுக்காக அமர்ந்தனர்.
சரியாக அச்சமயத்தில் தானே அவர்களுடைய மூன்று சாட்சி சகோதிரிகள் ரொட்டி, இனிப்பு கேக்கு, காபி. தேனீர் மற்றும் பல பானங்களையும் கொண்டு வந்தனர்: அந்த களைப்படைந்த ஆட்களுக்கு என்னே ஒரு பூரிப்புதரும் ஆச்சரியம். இந்த மூன்று சகோதரிகள் காண்பித்த புறதூண்டுதலற்ற உபசரிப்பும் அன்பும் அந்த வேளையாட்களுக்கு சரீரப்பிரகாரமான புத்துயிரளித்ததோடுகூட அன்று பிற்பகல் இருந்த சகோதர சகோதரிகளடங்கிய அந்த முழு கூட்டத்தார் மத்தியிலும் அனலும் அன்பும் நிறைந்த ஆவி நிலவுவதற்கு வழி செய்தது.
உண்மைகிறிஸ்தவத்தின் ஒரு அடை.யாளக்குறி
உபசரிக்கும் அன்பும் இப்படிப்பட்ட விசேஷநிகழ்ச்சிகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதல்ல, தம்மை உண்மையுடன் பின்பற்றுகிறவர்களை குறித்து உண்மை கிறிஸ்தவத்தின் ஸ்தாபகரான இயேசுகிறிஸ்து சுட்டிகாட்டியதாவது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள் என்றார்.” அதே போன்று தன் உடன் கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் அறிவுரை கூறியதாவது: “அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.” (யோவான் 13:35; ரோமர் 12:13) வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் மற்றவர்களுக்காக சுயநலமற்ற அன்பினால் உந்துவிக்கப்பட்ட உபசரிப்பு செயல் உண்மை கிறிஸ்தவர்களுக்கு ஒரு வாழக்கை முறையாக இருந்தது.
என்றபோதிலும் இப்படிப்பட்ட பண்புகள், ஒருவன் கிறிஸ்தவனாக ஆகிவிடும்போது தானாகவே வந்து விடுகிறதில்லை, மாறாக அவற்றை விருத்தி செய்வதற்கு ஒருவர் கடினமாக உழைக்க வேண்டும். பைபிள் முன்னறிவித்தபடி பெரும்பாலான மக்களுடைய அன்பு குளிர்ந்துபோன இன்றைய உலகத்தில் இது அதிக முக்கியமாக இருக்கிறது (மத்தேயு 20:12) ஆனால் அப்படிப்பட்ட பண்புகள் நிலவக்கூடிய இடத்தில் என்னே ஒரு வித்தியாசம்! அதிக நெருக்கமாக பிணைக்கப்பட்ட குடும்பங்களில் குடும்ப அங்கத்தினர்கள், கூட்டங்களிலும், வெளிஊழியத்திலும் மற்ற சந்தர்ப்பங்களிலும் ஒழுங்காக கூட்டுறவு கொள்ளும்போது அவர்கள் உண்மையில் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொள்கின்றனர். அவர்கள் உண்மையான நண்பர்களாக ஆகின்றனர். சில சமயங்களில் குடும்ப அங்கத்தினர்களை காட்டிலும் அதிக நெருங்கியவர்களாக ஆகிவிடுகின்றனர். (நீதிமொழிகள் 18:24) யெகோவாவின் உடன் சாட்சிகள் மத்தியிலிருக்கும் இப்படிப்பட்ட ஐக்கியப்பட்டு இந்த உலகத்தின் ஆரோக்கியமற்ற செல்வாக்குகளுக்கு எதிராக பலத்த பாதுகாப்பு வேலையாக சேவிக்கிறது.
கிறிஸ்தவ பெண்ணின் பாகம்
எல்லா கிறிஸ்தவர்களும் ‘உபசரிக்க நாடும்படி’ புத்தி சொல்லப்பட்டபோதிலும் இவ்விஷயத்தில் கிறிஸ்தவ பெண்கள் மிக முக்கியமான பாகத்தை வகிக்கின்றனர். மெய்யாகவே வழக்கமாக பெண்கள் அல்ல முக்கியமாய் மனைவிமார்களே உபசரிப்பு காண்பிக்கும் சம்பந்தப்பட்ட பெரும்பாலான அந்த வேலைகளை செய்கின்றனர் அல்லவா? கணவன் சபையில் உள்ள ஒரு சிலரை கிறிஸ்தவ கூட்டுறவுக்காக வீட்டிற்கு அழைக்கையில் வீட்டை சுத்தம் செய்வதும், உணவையும் பானங்களையும் தயார் செய்வதும் அதன் பின்பு சுத்தம் செய்யும் வேலையை செய்வதும் மனைவிதானல்லவா? கணவனும் பிள்ளைகளும் உதவிசெய்யக்கூடிய நிலையிலும் மற்றும் அதற்கு மனமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டுமென்றாலும் எல்லா சீரான முறையில் நடந்தேறுவதற்குரிய பளுவை மனைவி சுமக்க வேண்டியது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
பாராட்டத்தக்க அநேக கிறிஸ்தவ மனைவிமார் தங்களுடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுக்கு உண்மையான உபசரிப்பை காட்டுவதற்காக மனப்பூர்வமாய் பிரயாசப் படுகிறார்கள். உதாரணமாக ஹாங்காங்கில் முழுநேரபயனியர் ஊழியராக பணியாற்றும் டிப் ஹி என்ற பெண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். அங்குள்ள ஒரு சபையில் அவளுடைய கணவன் ஒரு மூப்பராக இருக்கிறார். அங்குள்ள சகோதர சகோதரிகளை சில சமயங்களில் ஒரு முழு புத்தகப்படிப்பு தொகுதியினரையும் வீட்டுக்கு வரும்படி அழைப்பது அவளுக்கு அதிக வேலையை உட்படுத்தினபோதிலும் அவள் மகிழ்ச்சியுடன் உபசரிப்பை காட்டுகிறாள். ‘எளிய உணவு முறைகளை வைத்துக் கொள்ளுகிறோம்’ என்று அவள் சொல்லுகிறாள் சகோதரர்கள் அவ்வளவாய் கூட்டுறவை அனுபவித்து மகிழ்வதையும் அதனால் கட்டியெழுப்பப்படுவதையும் காண்பது நன்றாக இருக்கிறது. உண்மையாகவே, தங்களுடைய உபசரிப்பு மூலமாக கிறிஸ்தவ பெண்கள் சபையின் அனலான ஆவியை கட்டியெழுப்புவதில் பெரும்பாகங்களை வகிக்கின்றனர்.
உபசரிப்பு காட்டுவதில் உட்பட்டிருக்கும் இந்த காரியங்களனைத்தையும் எண்ணிப்பார்க்கையில் கிறிஸ்தவ பெண்களுடைய பங்கில் நிச்சயமாகவே இது சுறுசுறுப்பையும் தன்னலமற்ற தியாகத்தையும் தேவைப்படுத்துகிறது. ஆனால் தங்களுடைய உழைப்பு தங்கள் கணவன் மார்களாலும் நன்றியுணர்ச்சியுள்ள விருந்தினராலும் வெகுவாக போற்றப்படுகிறது என்பதை குறித்து அவர்கள் நிச்சயமாயிருக்கலாம். என்றபோதிலும் சில வேளைகளில் ஒரு சிலர் தங்களுக்கு செய்யப்படும் காரியங்களுக்கு சரியான போற்றுதலைகாட்டாமலிருக்கக்கூடும். ஆனால் அந்த காரியம் உற்சாகமிழந்து விடுவதற்கோ மனக்கசப்படைந்து விடுவதற்கோ உண்மையில் எவ்வித காரணமுமில்லை. மற்றவர்களிடமிருந்து நன்றிக்குரிய சொற்களை கேட்பதும் மேலும் நம்முடைய முயற்சிகள் பாராட்டப்படுகிறது என்பதை உணருவதும் ஆறுதலளிப்பதாயிருக்கிறது. என்றாலும் உபசரிப்பை காட்டுவது செய்யப்படவேண்டிய சரியான மற்றும் அன்பார்ந்த ஒரு காரியமாகவும் இருப்பதனால் நாம் அதை காண்பிக்க விரும்புகிறோம் என்பதை நினைவிற் கொள்ளுங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அது யெகோவா தேவனை பிரியப்படுத்துகிறது.
சமநிலையான ஒரு நோக்கை கொண்டிருத்தல்
இந்த நாட்களில் விலைவாசி உயர்ந்துகொண்டே போவதால், தங்களால் இயலாது என்பதால் சிலர் உபசரிப்பை காட்ட தயங்கக்கூடும். இவ்விடத்தில் தானே இந்த காரியத்தின் பேரில் சமசீரான ஒரு நோக்குநிலையை நாம் கொண்டிருப்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. சாப்பிடுவதற்கும் பருகுவதற்கும் ஏதாவதொரு விசேஷ காரியங்களை கொண்டிருப்பது நிகழ்ச்சிக்கு மகிழ்ச்சியை கூட்டுவதாக இருந்த போதிலும் அதுதானே முக்கியமானதோர் அம்சமாக இல்லை. கடவுளுடைய வார்த்தை இதை வெகு ஞானமாக சுட்டிக்காட்டுகிறது: “பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும். சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.” (நீதிமொழிகள் 15:17) நாம் எதை கொண்டிருக்கிறோமோ அல்லது எதை கொடுக்கிறோமோ அது முக்கியமான காரியமல்ல. முக்கியமானதும் போற்றப்பட வேண்டியதும் எதுவெனில் பரஸ்பர கட்டியெழுப்பும் கூட்டுறவும் நாம் காட்டக்கூடிய அந்த அன்பின் ஆவியுமேயாகும்.
ஃபங் ஹிங் என்ற ஒரு சதோதரியின் காரியத்தை கவனியுங்கள் அவளுக்கு வயது 40 எதிர்ப்பு தெரிவிக்கும் கணவனை கொண்டிருக்கிறாள். ஹாங்காங்கில் ஒரு மிகப்பெரிய பொதுநல வீட்டுவசதி வாரிய கட்டிடத்தின் அதிக சிறியதோர் அறையில் வசிக்கிறாள். அவள் பணவசதியுள்ளவள் அல்ல குடும்ப வருமானம் போதாமையால் அவள் சில பகுதி நேர வேலையையும் செய்ய வேண்டியதாக இருக்கிறது. என்ற போதிலும் தனக்கு இருப்பவற்றை கொண்டும்கூட அவள் தாராள மனதுடையவளாக இருக்கிறாள். சபையிலுள்ளவர்கள் அவளுடைய வீட்டுக்கு அருகில் வீட்டுக்கு வீடு பிரசங்கவேலை செய்வதற்காக வரும்போது அவள் அவர்களை சிறிது சிற்றுண்டிக்காக தன் வீட்டிற்கு அழைக்கிறாள். இப்படிப்பட்ட அன்பார்ந்த செயல் அவளுடைய உடன் கிறிஸ்தவர்களால் போற்றப்படுவது மட்டுமல்லாமல் உண்மையான உபசரிப்பை காண்பிக்க ஒருவர் பணவசதியுள்ளவராக இருக்க வேண்டியதில்லை, என்பதை காட்டுவதற்கும் உதவியாக இருக்கிறது.
நமது உபசரிப்பு காரியங்களில் எந்தளவுக்குமிதமாக இருக்க நாம் முயற்சித்தபோதிலும் உபசரிப்பு காட்டுவதற்கு நாம் சில காரியங்களை விட்டுக்கொடுக்கவேண்டிய அவசியத்தை நாம் இன்னமும் காணக்கூடும். அது பிரயோஜனமுள்ளதா? உண்மையான கிறிஸ்தவ அன்பினால் நாம் தூண்டப்பட்டவர்களாக இருந்தோமானால் நிச்சயமாகவே, அது பிரயோஜனமுள்ளது. தியாகம் இல்லாவிட்டால் அது என்ன அன்பாக இருக்கமுடியும்? யெகோவாவும் இயேசுகிறிஸ்துவும் ஆகிய இருவரும் பெரிய தியாகங்களை—யெகோவா தமது குமாரனை அளிப்பது மற்றும் இயேசு தம்முடைய சொந்த பரிபூரண ஜீவனை அளிப்பது—மூலம் மனிதவர்க்கத்துக்காக தங்கள் அன்பை காண்பித்தார்கள்.—யோவான் 3:16;15:13.
ஆரம்பகால கிறிஸ்தவர்களும்கூட இந்த அன்பார்ந்த போக்கை பின்பற்றினார்கள், மக்கதோனியாவிலிருந்த சகோதரர்களின் சம்பந்தமாக, அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினதாவது: “அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க்கொடுத்தார்கள். மேலும் அவர்கள் தங்கள் திராணிக்கு தக்கதாகவும், தாங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன். தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்கு செய்யப்படும் தர்மஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்.” (2 கொரிந்தியர் 8:2-4) அவர்களுடைய “கொடிய தரித்திரமும்” மற்றும் அவர்கள் தங்களுடைய “திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க” மனமுள்ளவர்களாக இருந்ததும் தானே அவர்களுடைய தாராளமனதை மிக அதிக உண்மையுள்ளதாகவும் மனதை தொடுவதாகவும் ஆக்கிற்று.
எனவே ஒருவர் ஏழையாக இருந்தாலும் அல்லது போதி பணவசதியுள்ளவராக இருந்தாலும் மேலும் நவீனகால வசதிகள் இருந்தபோதிலும் உபசரிப்பைகாட்டுவதற்கு இது நேரத்தையும் சக்தியையும் மற்றும் வளங்களையும் தேவைப்படுத்துகிறது. அப்படியானால் அடிப்படையாகவே, கேள்வி என்னவெனில்: மற்றவர்கள், கிறிஸ்தவ கூட்டுறவையும் ஆசீர்வாதங்களையும் அனுபவித்து மகிழ்வதற்காக மும்முரமாய் பிரயாசப்படுவதற்கு நாம் மனமுள்ளவர்களாக இருக்கிறோமா? “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்” என்று பைபிள் நீதிமொழிசொல்வதை நினைவிற்கொள்ளுங்கள். மேலும் “எவன் தண்ணீர் பாய்ச்சிகிறானோ அவனுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும்,” யெகோவா வெளிப்படுத்தியிருக்கும் கட்டளைக்கு கீழ்படிகிறவர்களாயும் அவருடைய மகத்தான முன்மாதிரியை பின்பற்றுகிறவர்களாயும் நாம் உபசரிக்கும் தன்மையை காட்டுகையில் இதன் பலனாக நாம் “யெகோவாவுக்கு கடன் கொடுக்கிறோம்” என்ற கருத்தில் ஆறுதலடையலாம்.—நீதிமொழிகள் 11:25; 19:17.
யாரை அழைப்பது?
“நீ பகல் விருந்தாவது இரா விருந்தாவது பண்ணும்போது” இயேசு ஒரு சமயம் சொன்னதாவது: “உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரை யாகிலும் உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்க வேண்டாம்.” ஏன் அப்படி? “அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள் அப்பொழுது உனக்கு பதிலுக்கு பதில் செய்ததாகும்.” இங்கே இயேசு சொன்னகுறிப்பின்படி நமது நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ உணவிற்கு அழைக்கக்கூடாது என்பது அல்ல. அவர் தாமே சில வேளைகளில் தமது நண்பரோடு—அதாவது மார்த்தாள் மரியாள் ஆகியோருடைய வீட்டில் உணவு உண்டு மகிழ்ந்தார். இங்கே அதன் கருத்து என்ன வெனில் நமது உபசரிப்பின் வெளிக்காட்டானது பதில் நன்மையை திரும்பபெறும் உள்நோக்கத்தோடு இருக்கக்கூடாது என்பதே.
இயேசு தொடர்ந்து சொன்னபிரகாரம் அழைப்பு கொடுக்கும்போது நாம் முதலில் கவனத்தில் கொள்ளவேண்டிய ஆட்கள், நமது கூட்டுறவினால் மிகுதியான நன்மையடைவர்களாக இருக்கவேண்டும். (லூக்கா 14:13) அவர்கள் ஒருவேளை உற்சாகம் தேவைப்பட்ட நிலையிலுள்ளவர்கள், சத்தியத்திற்கு புதிதாக வந்தவர்கள், பயந்த சுபாவமுள்ளவர்கள் அல்லது ஒதுங்கியிருக்கும் மனப்போக்குள்ளவர்கள் மற்றும் வயதானவர்களாக இருக்கக்கூடும். இப்படிப்பட்ட கூட்டுறவுகள் எந்தளவுக்கு கட்டி யெழுப்பும் பலனை கொண்டிருக்கக்கூடும் என்பதை ஒய்யுக் என்ற ஒரு வயதான சகோதரியின் குறிப்புகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அவள் ஒரு சகோதரி. ஆனால் உடல்நல குறைவினால் சிரமப்படுகிறாள். அவள் சொல்வதாவது: “சகோதரர்கள் தங்களுடைய தோழமை கூட்டங்களில் என்னை அடிக்கடி அழைப்பதுண்டு, பல்வேறு வகைகளில் எனக்கு தயவு காட்டுவார்கள். ஒரு பெரிய குடும்பத்தின் பாகமாக இருப்பது என்னை வெகுவாக மகிழ்விக்கிறது.”
தெளிவாகவே இப்படிப்பட்ட கூட்டுறவுகளின் நோக்கமானது வெறுமென ஒருவரோடொருவர் பழகிக்கொள்வதற்கும் அதிகமாக செல்கிறது. இது ஒருவரையொருவர் கட்டியெழுப்புவதற்கும் யெகோவாவின் உடன் வணக்கத்தாரிடையே அன்பை பலப்படுத்துவதற்குமாக இருக்கிறது, ஆகையால், செழுமையான உணவு மற்றும் பானங்கள் ஆகியவற்றிற்கு மாறாக, கட்டியெழுப்பக்கூடிய சூழ்நிலைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். அதேவிதமாக, இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களின்போது செய்யப்படும் செயல்களுக்கு மற்றும் உரையாடல்களுக்கும் சிறிய சிந்தனை செலுத்தப்படவேண்டும். எல்லா நடவடிக்கைகளும் பைபிளை சுற்றியே அல்லது எல்லா சம்பாஷணைகளும் பைபிள் தலைப்புகளிலேயே இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லாதபோதிலும் அதை எப்பொழுதுமே கட்டியெழுப்பக்கூடியதாயும் மற்றும் உற்சாகமூட்டக்கூடியதாயும் வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். போட்டி மனப்பான்மையுள்ள விளையாட்டுகள் வீணான புறங்கூறுதல்கள் அல்லது இழிவுபடுத்தும் குறிப்புகள் நிச்சயமாகவே தவிர்கப்படவேண்டும்.—எபேசியர் 4:29,31.
உபசரிக்கும் பண்புள்ளவர்களுக்கு அபரிமிதமான ஆசீர்வாதங்கள் காத்திருக்கிறது
திரும்ப பெறவேண்டும் என்ற எண்ணத்தோடு ஒருவர் தன் உபசரிப்பை காட்டக்கூடாது என்றாலும், உபசரிக்கும் பண்புள்ள ஒரு ஆளுக்கு எந்த பலனும் கிடைக்காது என்பதை இது குறிக்கிறதில்லை. மறுபட்சத்தில் பலனை நாடாதபோதிலும் உண்மையான உபசரிப்பை காண்பிப்பதானது அநேக பலன்களை கொண்டுவருகிறது. அது ஒருவர் புதிய நண்பர்களை பெற உதவுகிறது, பழைய நட்புறவுகளை பலப்படுத்துகிறது. மற்றவர்கள் உதாரணகுணத்தையும் மற்றும் உபசரிக்கும் ஆவியையும் விருத்திசெய்வதற்கு ஏவுதல் அளிக்கிறது. (லூக்கா 6:38; நீதிமொழிகள் 11:25) எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த பிரபஞ்சத்தின் மிக மிக தாராள மனப்போக்குள்ள நபர் ஒன்றுமில்லாத நிலைக்கு செல்லும்படி ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். ஏனெனில் தம்மை போன்று “உபசரிக்க நாடுகிறவர்களை” அவர் போற்றுகிறார்.—W86 1/15