ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
“அவர்கள் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள்”
மத்திய அமெரிக்க தேசம் ஒன்றில், ஆயுதம் வைத்திருந்த 15 மனிதர், இரண்டு யெகோவாவின் சாட்சிகளை அவர்களுடைய வீடுகளிலிருந்து பலவந்தமாக அழைத்து வந்து, தடிகளையும் வெட்டுக்கத்திகளையும் ஆயுதங்களாக வைத்திருந்த 75 ஆட்களிடம் கொண்டு வந்தனர். ஆபாசமான விதத்தில் சாட்சிகளை அவர்கள் புண்படுத்தி, அவ்வாறே ஆயுதம் தரித்திருந்த 350 பேர்களிடம் கொண்டுவந்தார்கள். அந்த இரண்டு சகோதரர்களும் பயந்து, தங்களுடைய கிறிஸ்தவ நடுநிலைமையை விட்டுக்கொடுத்து சுற்றுக்காவலரோடு சேர்ந்துக்கொள்வார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். (ஏசாயா 2:4) ஆனால் சாட்சிகளோ தைரியமாக இருந்து, இராணுவ இயக்கத்தில் சேர்ந்துக்கொள்ள மறுத்தனர். எனவே அவர்கள் சிறைச்சாலையில் போடப்பட்டார்கள், ஆனால் சர்ச் அங்கத்தினரில் அநேகர் தங்கள் நடுநிலைமையை விட்டுக்கொடுத்து, மலைப் பிரதேசங்களுக்கு சென்று, அங்குள்ள சுற்றுக் காவலரோடு சேர்ந்துக் கொண்டனர்.
அதற்கு அடுத்த நாள் சகோதரர்கள் இன்னொரு பெரிய பட்டணத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அவர்கள் நடந்து செல்லும்போது, ‘இவர்கள் தங்கள் கொள்கையை கைவிடுமாறு வற்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்’ (‘மூளை கழுவப்பட்டுவிட்டிருக்கிறார்கள்’) என்று காவலாளிகள் கூறினார்கள். சகோதரர்கள் பின்வருமாறு சொன்னார்கள்: “நாங்கள் மூளை கழுவப்பட்டிருக்கிறோம் என்பது உண்மைதான்! அதன் காரணமாக நாங்கள் இப்பொழுது ஒருவருக்கும் கேடு செய்வதில்லை; நாங்கள் திருடர்களுமில்லை, குடிக்காரர்களுமில்லை, விபச்சாரக்காரருமில்லை.” அதிகாரி அவர்கள் சொன்னதை கேட்டப்போது, அவர் அவர்களிடம் இரக்கம் காட்டி, அவர்களை வாழ்த்தி, “எல்லோரும் உங்களை போன்றிருந்தால், காரியங்கள் வித்தியாசமாக இருக்கும் . . . உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை பாதுகாக்கட்டும்” என்றார். அவர்கள் அப்போது விடுதலை செய்யப்பட்டனர்.
கடவுளுடைய நீதியான சட்டத்திட்டங்களை கைக்கொள்ளும் தீங்கற்ற, சமாதானமுள்ள கிறிஸ்தவர்களுக்கு ஏன் இந்த துன்புறுத்தல்? ஏனென்றால் அவர்கள் “உலகத்தின் பாகமாகவும்” அதன் அரசியல் நடவடிக்கைகளில் பங்குகொள்ளதாவர்களாகவும் இருக்கிறார்கள். (யோவான் 17:16) சாத்தானும் அவனுடைய உலகமும் யெகோவாவின் ஊழியர்களுக்கெதிராக போராடியும், அவர்களை மேற்கொள்வதில்லை என்பது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! (எரேமியா 1:9) இந்த தேசத்தில் இது உண்மையாக நிரூபித்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய நடுநிலைமை ஸ்தானத்தை புரிந்துக்கொண்ட அந்த தலைமை அதிகாரி போற்றப்பட வேண்டும்.
◻யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை தடைசெய்யப்பட்டிருக்கும் ஒரு ஆப்பிரிக்க தேசத்தில் எரேமியாவின் வார்த்தைகள் மேலும் உண்மையாக நிருபித்திருக்கிறது. யெகோவாவின் அதிசயமான நோக்கங்களை மக்கள் அறிந்துக்கொள்ள உதவி செய்வதில் ஏற்படும் கஷ்டங்களை விவரித்த பிறகு, அறிக்கை மேலுமாக கூறுகிறது: “யெகோவாவின் ஜனங்களுடைய நடுநிலைமை ஸ்தானத்தின் காரணமாக, லட்சக்கணக்கான நம்முடைய சகோதரர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், அடிக்கடி அவர்கள் அதிகமாய் அடிக்கப்படுகிறார்கள், உதைக்கப்படுகிறார்கள், தங்களுடைய கிறிஸ்தவ மனச்சாட்சியை மீறும்படியான அழுத்தத்துக்குள்ளாகிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு சகோதரரை அநேக பயங்கரமான அடிகளுக்கு உட்படுத்தியும் அவருடைய உத்தமத்தை ஒருவராலும் முறிக்க முடியவில்லை, சில இராணுவ வீரர்கள் அவரை கொலை செய்ய சதி செய்தனர். இந்த சதியை ஒரு மேலதிகாரி அறிந்தபோது, அவர்தானே தனிப்பட்ட விதமாக அதில் தலையிட்டு, அவரை இரகசியமாக இன்னொரு பட்டணத்துக்கு மாற்றினார். இவ்விதமாக அவருடைய உயிரைக் காப்பாற்றினார்.”
இந்த துன்புறுத்தல்தானே யெகோவாவின் சாட்சிகளை கடவுள் கட்டளையிட்டிருக்கும் ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பதிலிருந்து நிறுத்திவிடவில்லை. (மத்தேயு 24:14) யெகோவா தம்முடைய ஆவியினால் அவர்களை பலப்படுத்துகிறார், அவர்களுடைய உண்மையான நிலைநிற்கையை ஆசீர்வதிக்கிறார். இந்த தேசத்திலிருந்து வரும் அறிக்கை மேலும் கூறுகிறது: “கடுமையான சரீர கஷ்டங்கள், பசி, வியாதி, ஒரு பயங்கரமான உள்ளுர் சண்டை மற்றும் துன்புறுத்தல் மத்தியிலும் பிரஸ்தாபிகளின் சராசரி எண்ணிக்கையில் 17 சதவீத அதிகரிப்பு இருந்திருக்கிறது. ஞாபகார்த்த நிகழ்ச்சிக்கு ஆஜரானவர்களின் எண்ணிக்கை 21 சதவீதம் அதிகரித்தது, பிரஸ்தாபிகளில் 21 சதவீதத்தினர் ஏப்ரல் 1984-ல் முழு-நேர ஊழியர்களாக சேவித்தனர்.”
எனவே நம்முடைய சகோதரர்கள் துன்புறுத்தப்பட்ட போதிலும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் யெகோவாவில் நம்பிக்கை வைத்தவர்களாய், எரேமியாவின் வார்த்தைகளை நினைவில் கொண்டிருக்கின்றனர்: “ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் [யெகோவா, NW] சொல்லுகிறார்.”—எரேமியா 1:19. (w86 1/1)
[பக்கம் 31-ன் படம்]
துன்புறுத்தப்படும் தமது ஊழியர்களை யெகோவா பலப்படுத்தி தாங்குகிறார்