‘அதை மூடிவிட எனக்கு மனமில்லை’
செயின்ட் லூசியாவின் கரீபியன் தீவுத் தலைநகரில் கடைச் சொந்தக்காரி ஒருவள் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை வாங்கினாள். அதை யாரிடமிருந்து பெற்றாளோ அவள் பின்வருமாறு எழுதுகிறாள்:
“வாரம் கடந்துபோவதற்கு முன்பு, நான் அந்தப் பக்கமாக போகும்போது அவள் என்னை தன் கடைக்குள் வரும்படி அழைத்தாள். அந்தப் புத்தகத்தில் சில பகுதிகளை வாசித்திருந்தாள். எனவே நரகம், ஆத்துமா, மரியாள் கடவுளுடைய தாய் அல்ல போன்ற காரியங்களின் பேரில் கூடுதலான விளக்கம் கேட்டாள். அவளுக்கு கடையை கவனிப்பதில் அதிக வேலை இருந்தபோதிலும் மற்றும் வாசிக்கும் பழக்கம் இல்லாதவளாயிருந்தபோதிலும், அந்த புத்தகத்தை இரண்டு வராத்தில் வாசித்து முடித்தாள். அவள் சொன்னதாவது: ‘என் வாழ்க்கையில் நான் இவ்வளவு வாசித்ததில்லை. வாசிக்கும்போது எனக்கு தலைவலி ஏற்பட்ட சமயத்திலும் அதை மூடிவிட எனக்கு மனமில்லை.’”
இந்த பிரசுரம் கருத்து வேற்றுமைகளுக்குட்பட்ட எந்த பைபிள் போதனையையும் நடைமுறையான விதத்தில் சிந்திக்கிறது. அத்தாட்சிகளை சுருக்கமாக, புரிந்துகொள்ளும் வகையில் ஒன்று திரட்டி கொடுப்பதால் கேள்விகளின் விடைகள் வாசகருக்கு தெளிவாக இருக்கிறது.
தயவுசெய்து 256 பக்கங்களைக் கொண்டதும் உறுதியான அட்டையிடப்பட்டதுமான நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை அனுப்பவும். இத்துடன் ரூ.25-ம் பதிவுத்தபால் செலவுக்கு ரூ.2.75-ம் அனுப்பியுள்ளேன்.