குதிரைவீரர் குறித்த அந்த மறைபொருளுக்கு விளக்கம் காணுதல்
திருவெளிப்பாட்டின் குதிரைவீரர் குறித்த மறைபொருளுக்கு யார் விளக்கம் கூறக்கூடும்? பைபிளில் தானியேல் 2:47-ல் யெகோவா தேவன் “மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர்” என்றழைக்கப்பட்டிருக்கிறார். இந்த குதிரை வீரருடைய தரிசனம் உட்பட பைபிளை எழுதுவதற்கு அவர்தாமே பரிசுத்த ஆவியினால் ஏவினபடியால் நமக்கு தேவையான விடையை அவர் அளிக்கக்கூடும். ஆகையால் தகவலுக்காக அவருடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள வார்த்தையை தேடி ஆராய்வதன் மூலம் பல்வேறு நிறமுள்ள அந்த குதிரைகள் மற்றும் அதன் மீது சவாரி செய்பவர்களைப் பற்றிய அர்த்தத்தை நாம் விடுவிக்க முடியும்.—ஆமோஸ் 3:7; 2 தீமோத்தேயு 3:16; 2 பேதுரு 1:21.
வெளிப்படுத்துதல் அல்லது திருவெளிப்பாட்டிலுள்ள முதல் மூன்று ஆரம்ப வசனங்கள் மறைபொருளை வெளிவிடுவதற்கு உதவக்கூடிய சாவியை நமக்கு கொடுக்கிறது. இந்த தொடர்ச்சியான தரிசனங்கள் எதிர்கால நிகழ்ச்சியுடன் அதாவது இந்த எல்லா காரியங்களையும் அப்போஸ்தலனாகிய யோவான் கண்டு எழுதி வைத்த பொ.ச. 96-ம் ஆண்டிற்கும் அப்பால் எதிர்காலத்தில் நிகழும் நிகழ்ச்சியுடன் சம்பந்தப்பட்டவை என்று அவை காட்டுகின்றன. இது வெளிப்படுத்தின விசேஷம் 1:10-ல் உள்ள அவனுடைய வார்த்தைகளுக்கு ஒத்திருக்கிறது. அதாவது தரிசனத்தில் காணப்பட்ட காரியங்கள் “கர்த்தருடைய நாள்” ஆரம்பித்த பிற்பாடு நிகழ வேண்டியவையாக இருந்தன.—1 கொரிந்தியர் 1:8; 5:5-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்.
இதை மனதில் கொண்டவர்களாய் குதிரைகளையும் அவற்றின் மீது சவாரி செய்பவர்களையும் பற்றி நாம் ஆராய்வோமாக. தொடக்கத்திலேயே வெள்ளைக் குதிரைப்பற்றியும் அவற்றின் மீது சவாரி செய்பவன் பற்றியும் சரியாக விளங்கிக் கொள்வது இன்றியமையாததாக இருக்கிறது. அப்பொழுது மற்ற குதிரை வீரரின் அர்த்தம் அதனிடத்தில் பொருந்தும்.
கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களை ஆராய்தல்
முந்தின கட்டுரையில் நாம் கவனித்த ஒரு விளக்கமானது வெள்ளைக்குதிரை மற்றும் அதன் மீது சவாரி செய்பவன் ‘சுவிசேஷ சம்பந்தமான வெற்றியை அல்லது அதன் ஆதிக்கம் சம்பந்தமான வெற்றியை குறிக்கக்கூடும்’ என்பது. ஆனால் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அந்த சுவிசேஷம் (நற்செய்தி) மற்றும் அவற்றை சூழ்ந்துள்ள கடவுளுடைய நோக்கங்கள் ஆகியவற்றினிடமாக இந்த உலகம் மாற்றப்படவில்லை. எனவே அதன் ஆதிக்கம் நிச்சயமாகவே வெற்றிகளிப்புடன் சவாரி செய்திடவில்லை. மாறாக அது இந்த நூற்றாண்டில் நொறுங்கிவிழுகின்றன, பல துண்டுகளாக ஆகின்றன.
இந்த வெள்ளைக்குதிரை முதல் நூற்றாண்டில் சுவிசேஷத்தின் வெற்றியையும் மற்றும் விசுவாசத்தின் தூய்மையையும் பிரதிநிதித்துவம் செய்கிறது என்ற விளக்கத்தைப்பற்றியதென்ன? இது, அந்த தரிசனம் எதிர்காலத்தில் வரவிருந்த காரியங்களை பற்றிய தரிசனம் என்ற உண்மையை அலட்சியம் செய்கிறது. நமது பொ.ச. 96-ம் ஆண்டில் பத்மு தீவிலே சிறைக் கைதியாக இருந்த சமயத்தில் யோவான் இதை எழுதினதன் காரணமாக முதல் நூற்றாண்டுடன் சம்பந்தப்பட்ட எந்த ஒரு காரியத்தையும் பிரதிநிதித்துவம் செய்வது கூடாத காரியம்.
மற்றொரு விளக்கம் இந்த வெள்ளைக்குதிரை கிறிஸ்துவை அறிமுகப்படுத்துவதற்கு மாறாக, அந்த செயல்நோக்கத்தை அறிமுகப்படுத்துகிறது. மேலும் அவருடைய அந்த ராஜ்யம் நம் மத்தியில் இருக்கிறது, அதாவது நம்முடைய இருதயத்திலிருக்கிறது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் மற்றும் கிறிஸ்தவத்தின் அந்த செயல் நோக்கம், வெளிப்படுத்துதல் புத்தகம் எழுதப்பட்ட ஏதோ ஒரு எதிர்காலத்தில் துவங்கவில்லை. மாறாக, இந்த யோவான் எழுதுவதற்கு முன்பே முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்கனவே அந்த செயல்நோக்கம் பெருமளவில் செயலாற்றிக் கொண்டிருந்தது.
அதோடுகூட, இயேசு “கடவுளுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே” என்று சொன்னபோது அவர் மாய்மாலக்காரரான பரிசேயரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் இதை சொன்னார். இயேசு அச்சமயத்தில் அவர் தம்மை உண்மையுடன் பின்பற்றியவர்களிடம் பேசிக்கொண்டில்லை. அவர் அவர்களிடம் ‘கடவுளுடைய ராஜ்யம் அவர்களுக்குள்’ அதாவது அவர்களுடைய இருதயத்தில் இருக்கும் ஒரு காரியம் என்ற கருத்தில் பேசிக்கொண்டில்லை. மாறாக, அவநம்பிக்கையுள்ள பரிசேயர்களிடம் எதிர்கால கடவுளுடைய ராஜ்யத்தின் பிரதிநிதியாக தாம் அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் மத்தியில் இருக்கிறார் என்பதை இயேசு சொல்லிக் கொண்டிருந்தார்.—லூக்கா 17:21; ஜெருசலேம் பைபிள் மற்றும் தி நியு இங்கிலிஷ் பைபிள் ஆகியவற்றையும் பாருங்கள்.
வெள்ளைக்குதிரை மீது சவாரி செய்பவர் அந்திக்கிறிஸ்து என்ற கருத்தைப் பற்றியதென்ன? வெள்ளைக்குதிரை வீரனைப் பற்றி சொல்லும்போது, “அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் [முழுமையான ஜெயத்தை அடைபவனாகவும், NW] புறப்பட்டான்” என்று சொல்லப்பட்டிருக்கையில், அந்திக்கிறிஸ்து இப்படிப்பட்டதோர் படையெடுப்பை செய்வான் என்று பைபிள் எந்த இடத்திலும் சொல்லவில்லை. (வெளிப்படுத்தின விசேஷம் 6:2) வெள்ளைக்குதிரையின் மீது யார் அமர்ந்து இருக்கிறானோ அவன் முழுமையான ஜெயம் பெறுபவனாக சவாரி செய்வான் என்பது தெளிவாக இருக்கிறது. அவனுடைய ஜெயம் தவறிப்போகாது. அவனுடைய சத்துருக்கள் அனைவரும் அழிக்கப்படுவர்.
பைபிளின் வழிகாட்டும் குறிப்புகள் அடையாளங் கண்டுகொள்ள உதவுகிறது
வெள்ளைக்குதிரை மீது சவாரி செய்பவனை பிழையற்ற விதத்தில் அடையாளங் காணும் குறிப்பு, “மறை பொருள்களை வெளிப்படுத்துகிறவரால்” பிற்பாடு தரிசனங்களின் அதே தொடரில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் 19:11-16-ல் மறுபடியுமாக ஒரு வெள்ளைக் குதிரை காணப்படுகிறது. இந்த முறை அதன் மீது சவாரி செய்பவனைப்பற்றி தெளிவான அடையாளக்குறி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த தீர்க்கதரிசன காட்சிகளில் ஒரு வெள்ளைக் குதிரை இருமுறை காணப்பட்ட உண்மையானது அதே குதிரைதான் என்பதை சுட்டிக் காட்டுகிறது. மற்றும் அந்த குதிரை வீரரின் பல்வேறு கடமைகளும் செயல்களும் சித்தரித்துக் காட்டப்பட்டிருக்கிறது. காட்சியின் பிற்பட்ட பகுதியில் குதிரை வீரன் பெயரிடப்பட்டிருக்கிறான். அவர் “உண்மையும் சத்தியமுள்ளவர்” “தேவனுடைய வார்த்தை” மற்றும் “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா” என்றழைக்கப்படுகிறார்.
வெள்ளைக்குதிரை மீது சவாரி செய்பவன் யார் என்பதை குறித்ததில் இந்தச் சிறப்புப் பெயர்கள் எவ்வித சந்தேகத்தையும் விட்டு வைக்கவில்லை. அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தவிர வேறு எவருமில்லை! (வெளிப்படுத்தின விசேஷம் 17:14-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்) ஆனால் அவருடைய வாழ்க்கையின் எந்த காலப்பகுதியில் இது நிகழ்கிறது? வெளிப்படுத்தின விசேஷம் கொடுக்கப்பட்ட அந்த முதல் நூற்றாண்டின் முடிவிற்கு பிற்பட்ட ஒரு காலத்தில் அது இருக்க வேண்டும். கவனிக்க வேண்டிய மற்றொரு காரியம் அவனுக்கு ராஜரீக கிரீடம் கொடுக்கப்பட்டது. எனவே, ஏதோ ஒரு எதிர்காலத்தில் இயேசு கிறிஸ்து ராஜாவாக அல்லது அரசராக ஒரு விசேஷ பாகத்தை ஆரம்பிக்க வேண்டியதாக இருந்தது. மேலும் அந்த ஒரு ஸ்தானத்தில் அவர் ஒரு போர் வீரனாக ஒரு வில்லை பிடித்தவராக, “ஜெயிப்பவனாகவும் முழுமையான ஜெயத்தை அடைவதற்கு” செல்பவனாகவும் சித்தரித்துக் காட்டப்பட்டிருக்கிறார்.
அதோடு, இது எதிர்காலத்தில் நிகழ வேண்டியதாக இருந்தது என்பதை காட்டுவதற்கு பின்வரும் உண்மை இருக்கிறது. இயேசு தம் பூமிக்குரிய வாழ்க்கையை முடித்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டு பரலோகத்துக்கு ஏறிச் சென்றதிலிருந்து இந்த திருவெளிப்பாட்டு தரிசனம் கிடைத்த காலப்பகுதிக்குள்ளாக 60-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் கடந்துவிட்டிருந்தன. அவர் பரலோகத்துக்கு திரும்பிச் சென்றபோது அந்த குறிப்பிட்ட எதிர்காலம் வரும்வரையாக கடவுளுடைய வலது பாரிசத்தில் உட்காரும்படியாக இயேசு சொல்லப்பட்டார். அப்பொழுது அவருடைய “சத்துருக்கள் அவருக்கு பாதபடியாக்கப்படுவார்கள்.”—எபிரெயர் 10:12, 13.
அந்த குதிரைவீரர் சவாரியை துவங்குகிறார்
எனவே அந்த வெள்ளைக்குதிரை மீது செய்யப்படும் சவாரியானது ஏதோ ஒரு எதிர்காலத்தில், இயேசு கிறிஸ்து கடவுளுடைய ராஜ்யத்தின் பரலோக அரசராக பதவியிலமர்த்தப்படுகையில் துவங்கவேண்டியதாக இருந்தது. அந்த சமயத்தில் கடவுள் அவரை பின்வரும் கட்டளையிட்டு அனுப்புவார்: “நீ உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகை செய்யும்” (சங்கீதம் 110:2) ஆனால் இது எப்பொழுது நிகழ்ந்தது?
பரலோக அரசராக இயேசு கிறிஸ்து முடிசூட்டப்படும் காரியமானது சங்கீதம் 45:3-7-ல் விவரிக்கப்பட்டிருக்கிறது. பின்பு இந்த சங்கீதத்திலிருந்து எபிரெயர் 1:8, 9-ல் அப்போஸ்தலனாகிய பவுல் மேற்கோள் காட்டி அதிலுள்ள 6-ம் மற்றும் 7-ம் வசனங்களை கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு பொருத்திக் காண்பிக்கிறான். யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட விவரமான தகவல்களும் மற்றும் வேதவசன அத்தாட்சிகளும் இயேசு கிறிஸ்துவுக்கு முடிசூட்டுதல் பரலோகத்தில் புறஜாதியாரின் காலங்களின் முடிவில் “தேசங்களுக்கு நியமிக்கப்பட்ட காலங்களின் முடிவில்” 1914-ம் ஆண்டில் நிகழ்ந்ததென்று காட்டுகிறது.—லூக்கா 21:24.
எனவே இந்த குதிரை வீரரின் சவாரியை 1914-ம் ஆண்டிற்கு முன்பாக விவரிக்கக்கூடிய எந்த ஒரு விளக்கமும் சரியானதாக இருக்கமுடியாது. அதோடு, வெள்ளைக் குதிரைமீது சவாரி செய்பவர்தானே முன்சென்றதன் காரணமாக அவரை பின்தொடரும் மற்ற குதிரைகளும் குதிரைவீரரும், அவர் சவாரியை துவங்கின பின்பு உடனடியாகவும் அல்லது சிலகாலம் கழித்தும் நிகழும் காரியங்களை பிரதிநிதித்துவம் செய்கிறது. ஆகையால் இந்த நான்கு குதிரை வீரரின் சவாரி 1914-ன் “முடிவு காலம்” ஆரம்பித்தது முதற்கொண்டும் மற்றும் அதற்கு பிற்பாடும் நிகழவேண்டும். அதுமுதற்கொண்டே இந்த “கடைசி நாட்களின்” அத்தாட்சிகள் காணப்பட்டு வருகின்றன.—தானியேல் 12:4; 2 தீமோத்தேயு 3:1-5, 13.
மற்ற குதிரைகளும் மற்றும் குதிரை வீரரும்
இரண்டாம் குதிரை “பிரகாசிக்கும் சிவப்பு” அல்லது “அக்கினி நிறம்.” (வெளிப்படுத்தின விசேஷம் 6:3, 4, An American Translation) அதன் மீது சவாரி செய்பவனுக்கு “பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யத்தக்கதாக சமாதானத்தை பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது.” “ஒரு பெரிய பட்டயம்” கொடுக்கப்பட்டது. மனித சரித்திரத்தில் நிகழாத படுமோசமான யுத்தத்தின், ஒரு பூகோள யுத்தத்தின் ஆரம்பத்தை 1914-ம் ஆண்டு கண்டபோது, இது உண்மையாக நிரூபித்தது. அச்சமயத்தில் இது மகா யுத்தம் என்றழைக்கப்பட்டது. வெறும் 21-ஆண்டுகள் கழித்து இரண்டாம் உலகப் போர் மூண்டது. அது முதலாம் உலகப் போரை காட்டிலும் அதிக சேதத்தை ஏற்படுத்தியது. அதுமுதற்கொண்டு, தொடர்ச்சியான போர்கள் இருந்து கொண்டிருக்கின்றன. மொத்தமாக 1914 முதற்கொண்டு போர்கள் சுமார் பத்து கோடி உயிர்களை சேதப்படுத்தியிருக்கின்றன.
மூன்றாம் குதிரை கறுப்பு நிறமுள்ளது. அதன் மீது சவாரி செய்பவன் தன் கைகளில் தராசைப் பிடித்திருந்தான். (வெளிப்படுத்தின விசேஷம் 6:5, 6) வெறும் ஒருபடி கோதுமையை வாங்குவதற்கு அல்லது 3 படி மலிவான வாற்கோதுமையை வாங்குவதற்கு ஒரு முழு நாள் ஊதியம் தேவைப்படும் என்று ஒரு சப்தம் உண்டாயிற்று. இது பொருத்தமாகவே எக்காலத்திலும் இருந்ததைக் காட்டிலும் பெரிய அளவில் ஏற்படும் உணவு பஞ்சத்தை விவரிக்கிறது. இது 1914 முதற்கொண்டு உண்மையாக இருந்திருக்கிறது. முதல் உலக போர் ஏற்பட்டதிலிருந்து உணவு பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. லட்சக்கணக்கானோர் உணவின்றி மாண்டிருக்கின்றனர். உணவு பஞ்சம் விடாமற் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது சுமார் 45 கோடி மக்கள் வறுமையால் சாகும் அளவுக்கு பட்டினியால் வாடுவதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது, மேலும் ஏறக்குறைய நூறு கோடி மக்கள் சாப்பிடுவதற்குப் போதுமானது இல்லாமலிருக்கின்றனர். மற்றும் எத்தியோப்பியாவில் சமீப ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பஞ்சங்களாலும், அறிக்கை செய்யப்பட்டிருக்கும் மிதமிஞ்சிய உயிரிழப்புகளாலும் இத்தகைய அகோர காட்சி அடிக்கடி வலியுறுத்திக் காட்டப்படுகிறது.
நான்காம் குதிரை பற்றியதில் அது “மங்கலான” நோய்பட்ட தோற்றமுடியதாயிருப்பதை நாம் காண்கிறோம். அதன்மீது சவாரி செய்பவனின் பெயர் ‘மரணம்.‘ (வெளிப்படுத்தின விசேஷம் 6:7, 8) இது 1914-முதற்கொண்டு இயற்கைக்கு மாறான காரணங்களால் அதாவது உணவு பற்றாக்குறைகள் மற்றும் பஞ்சங்கள், யுத்தங்கள், மற்றும் வன்முறை, கொள்ளைநோய், பிணி ஆகியவற்றால் ஏற்பட்ட மிகத்திரளான மரணங்களை நன்கு அடையாளப்படுத்திக் காட்டுகிறது. முதல் உலக போரின் முடிவில் உலக முழுவதிலும் ஏற்பட்ட தி ஸ்பானிஷ் இன்புளுயென்ஸா நோய் 2 கோடிக்கு மேற்பட்ட மரணங்களை உண்டுபண்ணியது. இப்பொழுது இருதய நோய் புற்று நோய் மற்றும் அநேக பல நோய்கள் அகால மரணங்களால் லட்சக்கணக்கான ஆட்களின் உயிர்களை பறித்துக் கொள்கின்றன.
இந்த குதிரைகளாலும் குதிரைவீரராலும் அடையாளப்படுத்திக் காட்டப்பட்ட நிகழ்ச்சிகள் நம்முடைய காலத்தை குறித்து இயேசு கொடுத்த ஒரு இணையான தீர்க்கதரிசனத்திலும் காணப்படுகின்றன. நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் “இந்த ஒழுங்குமுறையின் முடிவு” காலத்திலே, ‘தேசங்களுக்கு எதிராக தேசங்கள் மற்றும் ராஜ்யத்துக்கு எதிராக ராஜ்யம்’ எழும்புகையில், ஒரு பூகோள யுத்தம் இருக்கும் என்று அவர் சொன்னார். “அக்கிரமம் [சட்ட விரோதமான செயல்கள்] மிகுதியாகும்” மற்றும் “இங்குமங்கும் கொள்ளை நோய்களும் உணவு பற்றாக்குறைகளும்” ஏற்படும் என்று முன்னறிவித்தார்.—மத்தேயு 24:3-12; லூக்கா 21:10, 11.
ஒரு ஐந்தாம் குதிரை இருந்ததா?
வெளிப்படுத்தின விசேஷம் 6:8 வாசிப்பதாவது: “நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது.” இதன் அடிப்படையிலே முந்தின முதல் நான்கு விவரிப்புகளும் குதிரைகள் மீது சவாரி செய்வதாக சொல்லப்பட்டிருப்பதன் காரணமாக ஐந்தாவதும்கூட குதிரைமீது ஏறிய சவாரியாக இருக்குமல்லவா?
பைபிள் அதை சொல்வது இல்லை. வெளிப்படுத்தின விசேஷம் 6:8-ல் பாதாளம் [ஹேடீஸ், NW] என்ற வார்த்தையோடுகூட இந்த “குதிரை” என்ற வார்த்தை மூல கிரேக்க மொழி வசனத்தில் காணப்படவில்லை. எனவே, அநேக பைபிள் மொழிபெயர்ப்புகள் இதை ஐந்தாம் விவரிப்போடுகூட “குதிரை” என்ற இந்த வார்த்தையை இணைப்பது இல்லை. ஆகவே, அந்தப் பாதாளம், மனிதவர்க்கத்தின் பொது பிரேதக்குழி, முந்தின மூன்று குதிரைகள் மற்றும் குதிரைவீரரை பின்தொடர்ந்து சென்று அவர்களுக்கு இறையான ஆட்களை தனக்குள் வாரிக்கொள்ளுகிறது என்பது கவனிப்பதற்கு போதுமானதாயிருக்கிறது.
அந்த தரிசனம் உங்களை எவ்வாறு பாதிக்கிறது
திருவெளிப்பாட்டின் நான்கு குதிரைவீரரின் சவாரி பற்றிய இந்த தரிசனம் அதன் தத்ரூபமான நிறைவேற்றத்தை கொண்டிருக்கும் காலப்பகுதியில் வாழ்வது நிச்சயமாகவே கிளர்ச்சியூட்டும் ஒரு அனுபவமாக இருக்கிறது. ஆனால் இது சுய-பரிசோதனை செய்து பார்க்கும்படி கேட்கக்கூடிய பெரும் பொறுப்புணர்ச்சிமிக்க ஒரு காலப்பகுதியாகவும் இருக்கிறது. இது ஏன் அப்படி? ஏனெனில் இந்த அடையாள அர்த்தமுடைய சவாரியினால் பூமியின் மீதுள்ள ஒவ்வொரு நபரும் பாதிக்கப்படுகிறான். ஆம், நீங்களும் உங்கள் அன்பார்ந்தவர்களும் இதில் உட்பட்டிருக்கின்றனர். எப்படி?
இந்த கேள்வி விடையளிக்கப்பட வேண்டிய தொடர்ச்சியான அம்சங்களடங்கிய காரியங்களை எழுப்புகிறது. இது அடுத்துவரும் காவற்கோபுரம் இதழில் பதிலளிக்கப்படும்: “அவர்களுடைய சவாரி உங்களை எவ்வாறு பாதிக்கிறது?” கருத்தை கவரும் விடையை தவறவிடாதீர்கள். (w86 1/1)
[பக்கம் 5-ன் படம்]
1914—“ராஜாதி ராஜா” தனது வெள்ளைக்குதிரையில் சவாரி செய்கிறார்
[பக்கம் 7-ன் படம்]
1914 முதற்கொண்டு, யுத்தம், பஞ்சம், மற்றும் கொள்ளை நோயின் குதிரைவீரர்களைப் பின்தொடர்ந்திருக்கும் ஹேடீஸ் கடுமையான அறுவடையைச் செய்திருக்கிறது