திருவெளிப்பாட்டின் அந்தமறைபொருளான குதிரைவீரர்
நீங்கள் வியப்பார்வத்தால் பார்த்துக் கொண்டிருக்கையில் பிடரிமயிரும் வாலும் பறக்க, நாசித்துவாரங்கள் மின்ன, பாறையின் சரிவில் அந்த குதிரை பாய்ந்தோடி வருகிறது. கடுகடுப்பான அந்த குதிரை வீரன் தனக்கு அதிகாரமளிக்கப்பட்ட வேலையின்மீது கண்ணோட்டமுள்ளவனாக துடிப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் குதிரை மாம்சத்தின் பாகமாகிவிட்டதைப் போல் தோன்றுகிறது.
ஒரு உயர்நாட்டு ஆஸ்திரேலிய கால்நடை களத்திற்கு விஜயம் செய்தாலுஞ்சரி அல்லது பாதி உலகிற்கு அப்பால் ஓர் அமெரிக்க கால்நடை வளர்ப்பு பண்ணையின் சமவெளிக்கு விஜயம் செய்தாலுஞ்சரி உண்மையிலே குதிரை சவாரியை அறிந்த ஒரு குதிரை வீரனின் காட்சி மெய்யாகவே கவர்ச்சியூட்டும் ஒன்று. மிக உன்னத பயிற்சியளிக்கப்பட்ட குதிரைகள் மற்றும் குதிரை வீரருடைய அணிவகுப்பின் சிறப்பும்கூட அதற்கு இணையாகவே கண்ணைக்கவரும் ஒரு காட்சி.
இப்படிப்பட்ட குதிரைவீரர் மற்றும் அவர்களுடைய சவாரி நம் மனதில் நன்கு பதிந்துவிடுகின்றன. என்றபோதிலும் வெளிப்படுத்துதல் (திருவெளிப்பாடு) புத்தக எழுத்தாளர் கண்ட குதிரைகளையும் அதன் சவாரியாளரையும் கவனிப்பது கிளர்ச்சியூட்டுவதாயிருக்கிறது! அவை மறை பொருளுள்ளவையாகவும் அதே சமயத்தில் அச்சமூட்டுவதாயுமிருக்கிறது. இந்த குதிரைவீரர் திருவெளிப்பாட்டின் குதிரைவீரர் என்று பரவலாக அறியப்பட்டிருக்கின்றனர்.
நான்கு திறமை வாய்ந்த குதிரை வீரர்கள் உங்களை நோக்கி இடிமுழக்க ஓசையுடன் வருவதாக இப்பொழுது கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒருவன் சுழற்றும் பட்டயத்தையும் கொண்டிருக்கிறான். அவர்களுடைய குதிரைகளின் நிறங்களை கவனியுங்கள், ஒவ்வொன்றும் வித்தியாசமானது. ஒரு குதிரை வெள்ளை, ஒன்று சிவப்பு, ஒன்று கருப்பு மேலும் ஒன்று மங்கின நிறம் (வெளறிய நிறம்). அவை மெய்யாகவே, விநோதமும் புதிருமான ஒரு காட்சியை அளித்தன.
பைபிள் எழுத்தாளன் அப்போஸ்தலனாகிய யோவான் கண்ட விறுவிறுப்பான பதிவை தொடர்ந்து கவனியுங்கள். அவன் சொல்வதாவது: “நான் பார்த்தபோது, இதோ ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின் மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான் . . . சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. . . . நான் பார்த்தபோது ஒரு கறுப்புக் குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்போதுமையென்றும், உண்டான சத்தத்தைக் கேட்டேன் . . . நான் பார்த்தபோது இதோ மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன் பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்கு கொடுக்கப்பட்டது.”—வெளிப்படுத்தின விசேஷம் 6:2-8.
இந்த தரிசனம் முதலில் எழுதப்பட்டதன் காரணமாக, எண்ணிறைந்த வாசகர்களை அதன் அர்த்தம் திகைக்க வைத்திருக்கிறது. இந்த மறைபொருளான குதிரைகளும் அதன் மீது சவாரி செய்பவர்களும் எதை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்? அவர்களுடைய சவாரி எப்பொழுது துவங்கியது? அவர்களுடைய சவாரி இன்று நம் வாழ்க்கையின் எந்த விதத்திலாவது நம்மீது பாதிப்பை கொண்டிருக்கிறதா? இந்த குதிரைகளும் அதன் மீது சவாரி செய்பவர்களும் யாரை பிரதிநிதித்துவம் செய்யக்கூடும் மற்றும் அவர்களுடைய சவாரி உண்மையில் எப்பொழுது ஆரம்பித்தது என்பதை பற்றி பல்வேறு வகையான விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
மிகப்பெரிய வேறுபாடுகளானது இந்த வெள்ளைக்குதிரை மற்றும் அதன் மீது சவாரி செய்பவன் பற்றிய விளக்கங்களில் காணப்படுகின்றன. உதாரணமாக, தி நியு கத்தோலிக் என்சைக்ளோபீடியா ‘அது சுவிசேஷம் அல்லது அதன் ஆதிக்கம் சம்பந்தமான வெற்றியைக் குறிக்கக்கூடும்’ என்று விவரிக்கிறது.
தானியேலும் வெளிப்படுத்தின விசேஷமும் என்ற புத்தகத்தில் உரியா ஸ்மித் என்பவர் பின்வரும் விளக்கத்தை கொடுக்கிறார்: “ஒரு வெள்ளைக்குதிரை . . . முதல் நூற்றாண்டில் சுவிசேஷத்தின் வெற்றிக்கு பொருத்தமானதோர் சின்னம் . . . குதிரையின் வெள்ளைநிறம் அந்த சகாப்தத்தில் விசுவாசத்தின் தூய்மையை குறிக்கிறது.”
தி எக்ஸ்போஸிட்டர் பைபிள் சொல்வதாவது: “முதல் குதிரை சவாரி செய்பவனின் கீழ் அதனுடைய வெற்றிகரமான முன்னேற்றத்தின் ஆரம்ப கட்டங்களில் கிறிஸ்துவைப்பற்றி சொல்லுவதற்கு மாறாக அந்த செயல் நோக்கம் தானே நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது, மற்றும் அத்துடன் எதிர்கால வெற்றி கோலத்தின் வாக்குறுதியும் எடுத்துரைக்கப்படுகிறது. . . . இந்த செயல்நோக்கம் உலகத்திலிருக்கின்றன என்பதை நாம் அறிகிறோம். அதாவது இந்த ராஜ்யம் நம் மத்தியிலிருக்கிறது, மேலும் யார் இதனை எதிர்க்கிறார்களோ அவர்கள் தோல்வியினால் மூழ்க்கடிக்கப்படுவார்கள்,” என்றபோதிலும் கிறிஸ்தவ யூத அஸ்திவாரத்தைச் சேர்ந்த உவுட்ரோ க்ரோல் என்பவர் வெள்ளைக்குதிரை மீது சவாரி செய்பவன் அந்திக் கிறிஸ்து என்று நினைக்கிறான்.
அங்கே வெறும் நான்கு அல்ல, ஐந்து குதிரைகளும் மற்றும் குதிரைவீரரும் இருக்கின்றனர் என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். எனவே அநேக விளக்கங்களில் எது சரியானது என்பதை நாம் எப்படி அறிந்துகொள்வது? ஒரு சரியான விளக்கம் இருக்கிறது என்பதை குறித்து நாம் எப்படி நிச்சயமாயிருக்கக்கூடும்? இந்த திருவெளிப்பாட்டின் மறைபொருளான இந்த குதிரைவீரர் யார், மேலும் எப்பொழுது அவர்களுடைய சவாரி துவங்கியது? (w86 1/1)