உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w86 10/1 பக். 30-31
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1986
  • இதே தகவல்
  • மலடி மகிழ்கிறாள்
    ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
  • மெய் வணக்கம் உலகளாவ விஸ்தரிக்கிறது
    ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
  • பரலோகக் குடியுரிமையுடைய கிறிஸ்தவ சாட்சிகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • கடவுளுடைய அமைப்பில் பாதுகாப்பாய் இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1986
w86 10/1 பக். 30-31

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

பூமியிலிருக்கும் கர்த்தருடைய அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானவர்கள், யெகோவாவின் பரலோக மனைவிபோன்ற அமைப்பின், மேலான ஒரு எருசலேமின்” பாகமானவர்களா?

பூமியிலிருக்கும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களை கடவுளுடைய அமைப்பின், புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகளடங்கிய அவருடைய சர்வலோக குடும்பத்தின் காணக்கூடிய பாகமாணவர்களாகக் குறிப்பிடலாம்.

“மறுபடியும் பிறந்த” நபர்களாக அவர்கள் யெகோவாவுக்கு ஆவிக்குரிய குமாரர்களாக ஆகிறார்கள். (யோவான் 3:3, 5; ரோமர் 8:15-17) யெகோவா அவர்களுடைய தகப்பன் என்றபோதிலும் அவர்களுக்கு ஒரு தாயும்” உண்டு, ஏனென்றால், “மேலான எருசலேமோ. . .நம்மெல்லாருக்கும் தாயானவள்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினான். இது யெகோவா அடையாள அர்த்தத்தில் “மனைவியாகக் கருதும் உண்மையுள்ள ஆவியின் சிருஷ்டிகள் அடங்கிய பரலோக அமைப்பைக் குறிப்பிடுவதாயிக்க வேண்டும். (கலாத்தியர் 4:26) அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்களுக்குரிய பரம பரிசைப் பெறும்போது அவர்கள் உண்மையில் அந்தப் பரலோக அமைப்பில் தங்கள் இடத்தை அடைகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 4:4; 14:1-5.

பூமியிலிருந்து அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானவர்கள் சொல்லர்த்தமாக இன்னும் “மேலான எருசலேமின்” பாகமாக ஆகவில்லை, ஆனால் பரலோக வாழ்க்கையின் எதிர்பார்ப்புடைய தனித்தன்மைவாய்ந்த நிலையாலும் கடவுளுடைய பரலோக “மனைவி”யைப் பிரதிநிதித்துவம் செய்வதாலும். யெகோவாதேவன் சில சமயங்களில் பரலோகத்திலுள்ள தனது மனைவிபோன்ற அமைப்புக்கு ஆணை பிறப்பிக்கும்போதும், தீர்க்கதரிசனங்களைக் கொடுக்கும்போதும் ஆறுதலான வார்த்தைகளை மொழியும்போதும் அவர்களைப் பிரதிநித்துவ முறையில் உட்படுத்துகிறார்.

பூர்வ இஸ்ரவேலை உட்படுத்திய வார்த்தைகளின் மூலம் இதை விளக்கலாம். ஏசாயாவின் மூலமாக யெகோவா சிறைப்பட்ட தூசியிலிருந்த, எழும்பி பிரகாசிக்க வேண்டிய ஒரு ஸ்திரீயை விவரிக்கிறார். (ஏசாயா 51:9, 14; 52:1, 2; 60:1) இப்படிப்பட்ட நிலைமைகள் யெகோவாவின் உண்மையுள்ள ஆவியின் குமாரர்களடங்கிய அவருடைய பரலோக “ஸ்திரீ”யிடம் காணப்படவில்லை. என்றபோதிலும் அவை இஸ்ரவேல் தேசத்தில் இருந்த நிலைமைகள். பாபிலோன் சிறையிருப்பிலிருந்த இஸ்ரவேலர் பொ.ச.மு 537-ல் விடுவிக்கப்பட்டபோது, அவர்கள் விழித்தெழுந்து, தூசியிலிருந்து எழும்பி, யெகோவாவின் வெளிச்சத்தைப் பிரகாசிக்க ஆரம்பித்தனர். திரும்பக் கட்டப்பட்ட (தேசத்தைப் பிரதிநித்துவம் செய்யும்) எருசலேம், ஒரு சமயத்தில் கைவிடப்பட்ட ஆனால் இப்பொழுது சேர்க்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட தேசத்தின் யூதர்களாகிய பிள்ளைகளைப் பிறப்பிக்கும் ஒரு மனைவிபோன்று இருந்தது. (ஏசாயா 54:1-8; 60:1-22; 66:7-14 எனவே (யெகோவாவை “நாயகராகக்” கொண்ட) அந்த “ஸ்திரீ”யின் நிலைப்பற்றிய ஏசாயாவின் வார்த்தைகள் அவளைப் பிரதிநித்துவம் செய்யும் பூமிக்குரிய தேசத்தைப் உள்ளடக்கியது.

இப்பொழுது நாம், கடவுள் (மற்றும் அவருடைய பரலோக (“ஸ்திரீ”) மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலை பயன்படுத்துவதை நிறுத்தினபிறகு அவரால் ஏற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய தேசத்திடமாக நம் கவனத்தைத் திருப்புவோம். (கலாத்தியர் 6:16) பல நூற்றாண்டுகளாக “மலடியாக” இருந்த பின்பு “மேலான எருசலேம்” ஆவிக்குரிய குமாரர்களைப் பிறப்பிக்க ஆரம்பித்தது. முதலாவதாகப் பிறப்பிக்கப்பட்டது பொ.ச 29-ல் இயேசு, இவரைப் பின்தொடர்ந்து அப்போஸ்தலர்களுடன் ஆரம்பமாகி நம்முடைய காலம் வரை 1,44,00 பேர் (கலாத்தியர் 4:21-31) இந்த நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் ஒரு சிறிய காலப்பகுதிக்கு ஆவிக்குரிய இஸ்ரவேலரின் மீதியானவர்கள் அழுத்தங்களுக்கு இடம்கொடுத்தார்கள், குறைப்பட்டது போன்ற நிலைக்குள்ளானார்கள். பின்பு 1919-ல் ஓர் ஆவிக்குரிய பிரதேசத்தில் புதிதாய்ப் பிறந்த தேசமாக பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டனர். இப்படியாக, பூர்வ எருசலேமைப் பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் பூமியிலிருக்கும் ஆவிக்குரிய இஸ்ரவேலுக்கு இணையாக இருப்பதைக் காண்கிறோம்.

வெளிப்படுத்தின விசேஷம் 12:1-17-ஐயும் கவனியுங்கள், 1914-ல் புறஜாதியின் காலங்கள் முடிவில் கடவுளுடைய பரலோக “ஸ்திரீ” ராஜ்ய ஆட்சியை ஒரு ஆண் பிள்ளை”யாகப் பிறப்பித்தாள். தாழ்த்தப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட சாத்தான் “ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டது.” ஆனால் அவருடைய தாக்குதல்களை தான் இனி மேலும் போகமுடியாத அல்லது தொடர்புகொள்ள முடியாத பரலோகத்திலுள்ள கடவுளுடைய மனைவிபோன்ற அமைப்புக்கு நேரெதிராக இருக்கவில்லை. மாறாக, அவளைப் பூமியில் பிரதிநிதித்துவம் செய்யும் “அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே [மீதியானவர்களுடனே, NW] சாத்தான் போர் புரிந்தான்.

இப்படியாக கடந்த காலங்களில் பூமிக்குரிய இஸ்ரவேலின் விஷயத்திலும் இருக்கிறது. “மேலான எருசலேமின்” நிலை பூமியிலிருக்கும் அவளுடைய பிள்ளைகளில் பிரதிபலிக்கப்படுகிறது. நடைமுறையான கருத்தில், யெகோவாவின் பரலோக ஸ்திரீக்கு சொல்லப்பட்ட கட்டளைகளும் சீர்திருத்தங்களும், முதலிடத்தில் அவளை பூமியில் பிரதிநித்துவம் செய்கிறவர்களையும். கடவுளுடைய பரலோக அமைப்பின் பாகமாக இருக்கும் எதிர்பார்ப்புடையவர்ளையும் பாதிக்கிறது.

திரள் கூட்டத் “தினர் யெகோவாவின் சர்வலோக அமைப்பின் பாகமாக ஆகிறார்களா?

இப்பொழுது “மிகுந்த உபத்திரவத்திற்கு முன்பு யெகோவாவின் சாட்சிகள் எல்லாருமே சந்தோஷமாக, தேவனை ஐக்கியமாக சேவிக்கிறார்கள். ஒரு சிறு எண்ணிக்கையான ஆட்கள் ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாக பரலோகத்திற்கு செல்லும் எதிர்பார்ப்பையுடையவர்களாயிருக்கிறார்கள், பெரும்பான்மையினர் பூமிக்குரிய பரதீஸில் நித்திய ஜீவனைப் பெரும் நம்பிக்கையுடனிருக்கிறார்கள் என்ற உண்மையின்பேரில் எந்தவித பிரிவினையும் கிடையாது. இயேசு குறிப்பிட்டதுபோல் “ஆடுகளும்” “வேறே ஆடுகளும்” “ஒரே மந்தையில்” ஐக்கியமாகிறார்கள். (யோவான் 10:11, 16) இப்படியாக யெகோவாவின் தற்போதைய அமைப்பு இரண்டு வகை எதிர்கால வாழ்க்கைகளைக் கொண்ட தொகுதி ஊழியர்களாலானது

தன்னுடைய ஸ்தீரி இப்படிப்பட்ட செழிப்பை அனுபவிப்பாள் என்பதை யெகோவா முன்னறிவித்தார். ஆட்கள் எல்லா தேசங்களிலிருந்தும், ஆவிக்குரிய இஸ்ரவேலரல்லாதவர்களும் பெரும் எண்ணிக்கையில் கூடிச் சேர்க்கப்படுவார்கள் என்பதை அவர் குறிப்பிட்டிருந்தார். (ஏசாயா 60:1-22; 61:5-9) வெளிப்படுத்தின விசேஷம் “சகலஜாதிகளிலும், கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள். . .சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும்” நிற்பதை விவரிக்கிறது. இவர்கள் பூமிக்குரிய நம்பிக்கையை உடையவர்கள். இவர்கள் இன்று யெகோவாவின் சர்வலோக அமைப்பைக் குறிப்பதாக பிரதிநிதித்துவம் செய்யும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாலான ஆவிக்குரிய தேசத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அப்படி இருந்தபோதிலும் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்திலே தோய்த்து வெளுத்த அங்கிகளைத் தரித்தவர்களாக “திரள் கூட்டத்தினர்” தேவனுடைய சிங்காசனத்துக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முன்பாக நிற்கிறார்கள். இப்பொழுதேயுங்கூட அவர்கள் என்னே அருமையான நிலைநிற்கையை உடையவர்களாயிருக்கின்றனர்!—வெளிப்படுத்துதல் 7:9-17.

“திரள் கூட்டத்தின்” பாகமான இவர்களுடைய உத்தமத்தன்மையும் சோதிக்கப்படுகிறது. இப்பொழுதும், ஆயிர வருட ஆட்சியினுடேயும் கடைசி சோதனையிலும் அவர்கள் தொடர்ந்து உண்மையுடனிருத்தலின் பலன், இயேசுவின் “வேறே ஆடுகளின்” பாகமாகும் உயிர்த்தெழுப்பப்பட்டவர்களுடன் கூட இவர்களை யெகோவா தேவன் பரிபூரண மானிடராக நீதியுள்ளவர்களாக அறிக்கை செய்வார். இப்படியாக “அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு” இவர்கள் “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை” அனுபவிப்பார்கள். (ரோமர் 8:21) அப்பொழுது அவர்கள் ஆதாம் ஏவாள் ஆரம்பத்தில் இருந்ததுபோல யெகோவாவின் சர்வலோக அமைப்பின் காணக்கூடிய பாகமாக இருப்பார்கள். அவர்கள் யெகோவாவுக்கும் அவருடைய மனைவிபோன்ற பரலோக அமைப்புக்கும் பரிபூரண, புத்திக்கூர்மையுள்ள பிள்ளைகளாக இருப்பார்கள். (w85 10/15)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்