உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 8/22 பக். 32
  • “என்னே அருமையான தகவல்!”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “என்னே அருமையான தகவல்!”
  • விழித்தெழு!—1999
விழித்தெழு!—1999
g99 8/22 பக். 32

“என்னே அருமையான தகவல்!”

வாழ்க்கையின் நோக்கத்தை இளைஞர்கள் எப்படி கண்டுபிடிக்கலாம், எப்படி தங்களைத் தாங்களே புரிந்துகொள்ளலாம், அல்லது தங்கள் பெற்றோரோடு ஒத்துப்போக எப்படி கற்றுக்கொள்ளலாம்? சமீபத்தில், ஸ்பெய்னில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. அதன் ஒரு பகுதி இதோ:

“இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் போன்ற அற்புதமான புத்தகங்களை பிரசுரிக்கும் உங்கள் நல்ல வேலையை மனதார பாராட்டுவதற்கே இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். என்னே அருமையான தகவல்! ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை நனவாக்கிய இதன் எழுத்தாளர்களுக்கும் பிரசுரிப்பாளர்களுக்கும் என் பாராட்டை தெரிவிக்கிறேன்.

“நான் 21 வயது பெண். நான் ஏற்கெனவே பைபிளின் உதவியை நாடி அதை படித்திருக்கிறேன். . . . தற்செயலாக, ஒரு நண்பர்மூலம் இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் என்ற இந்தப் புத்தகம் என் கையில் கிடைத்தது.

“இது எனக்கு எந்தவிதத்திலும் பிரயோஜனப்படாது என்றே முதலில் நினைத்தேன். ஆனால், அதைப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. நான் எப்படி வாழவேண்டும் என்பது போன்ற நிறைய விஷயங்களை யோசிக்கும்படி இது செய்தது. என்னுடைய கேள்விகளுக்கெல்லாம் படிப்படியாக பதில் கிடைக்க ஆரம்பித்தது. இந்த அரிய பொக்கிஷத்தின்மூலம், என்னுடைய பெற்றோரை நான் எப்படி புரிந்துகொள்வது, மன்னிப்பது எப்படி, ஒரு பெண்ணாக எப்படி நடந்துகொள்வது என்றெல்லாம் கற்றுக்கொண்டேன்.”

இளைஞர் கேட்கும் கேள்விகள் என்ற புத்தகத்தில் இருக்கும் தகவல்களில் இருந்து நன்மையடைய நீங்கள் விரும்பினால், இதன் பிரதி ஒன்றை நீங்களும் பெற்றுக்கொள்ள முடியும். பின்வரும் கூப்பனை பூர்த்தி செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கோ அல்லது இந்தப் பத்திரிகையின் 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ அனுப்புங்கள்.

□ இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்தை எனக்கு அனுப்புங்கள். எந்த மொழி.

□ இலவசமாக பைபிளைக் கற்றுக்கொடுக்க தயவுசெய்து என்னை தொடர்புகொள்ளுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்