ஏன் கடவுளை நம்பவில்லை அவர்?
முன்னாள் சோவியத் யூனியன் குடியரசை சேர்ந்த ஜார்ஜியாவில் ரஸ்டாவி என்னும் இடம் உள்ளது. இவ்விடத்தை சேர்ந்தவர்தான் இளம் பெண் ஆலிஸியா. அவரை சந்திக்க இரண்டுபேர் சென்றனர். வந்திருந்தவர்களிடம் அவர் தன்னுடைய பெற்றோரின் போட்டோவை காட்டி, இவ்வாறு உணர்ச்சி மேலிட கேட்டார்: “நீங்களே சொல்லுங்க, கடவுள் உண்மையில் இருந்திருந்தா, எங்க அப்பா அம்மாவை இவ்வளவு சின்ன வயசுலே சாக அனுமதிச்சிருப்பாரா!” அதற்குள் ஆலிஸியாவின் கணவர் டாமாஸி வீட்டிற்கு வந்துவிட்டார். வந்திருந்த இருவரும், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! மற்றும் “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” என்ற தலைப்புகளில் இரண்டு சிற்றேடுகளை ஆலிஸியாவிடம் கொடுத்துவிட்டு விடைபெற்றனர்.
இந்த இரண்டுபேரும் மறுபடியும் அந்தத் தம்பதியை சந்திக்க போனார்கள். “இதோ!” என்ற சிற்றேட்டை ஆலிஸியா ஏற்கெனவே படித்து முடித்துவிட்டார். தான் பைபிளை படிக்க விரும்புவதாகவும் சொன்னார். சிற்றேட்டில் படித்த விஷயம் அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதன்பிறகு எல்லாரும் சேர்ந்து கலந்துரையாடினர். ஆலிஸியா கலந்துரையாடலின்போது உடனே சிற்றேட்டை திறந்து, தான் கோடிட்டு வைத்திருந்த பகுதிகளை வாசித்தார். அதில் அடங்கியிருந்த நியாயமான விவாதங்கள் அவர் மனதை கவர்ந்திருந்தன.
எடுத்துக்காட்டாக, அந்தச் சிற்றேடு இவ்வாறு சொல்கிறது: “நம்மிடையே நம்மை வியப்பில் சொக்கவைக்கும் அழகே உருவான பூக்களும், பறவைகளும், மிருகங்களும் உள்ளன. படைப்பிலேயே மிக சிறந்த படைப்பு மனிதனே. உயிர், பிறப்பு என்பன உண்மையில் அற்புதங்கள். இவற்றை எல்லாம் கண்ணுக்குத் தெரியாத மாபெரும் அறிவுஜீவி ஒருவர் படைத்திருக்கிறார் என்பது ஊர்ஜிதம் ஆகிறது. (ரோமர் 1:20) மூளை இருந்தால்தான் அறிவு இருக்க முடியும். மூளை இருக்கிறது என்றால் நிச்சயம் ஒரு நபர் இருக்க வேண்டும். எனவே இப்படி பிரமாண்டமான அறிவை வைத்திருப்பவர் உண்மையில் மாபெரும் நபராகத்தான் இருக்க முடியும். அவரே எல்லாவற்றையும் படைத்தவர். அவரே உயிரை உண்டாக்கியவர். (சங்கீதம் 36:9) அப்படியென்றால், நிச்சயம் படைத்தவருக்குத்தான் எல்லா புகழும் வழிபாடும் சேரவேண்டும்.”—சங்கீதம் 104:24; வெளிப்படுத்துதல் 4:11.
இறந்தவர்களுக்கு மறுபடியும் உயிர் அளிக்கப்போவதாக கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார். இந்த வாக்குறுதிதான் தன்னை பைபிள் படிக்க தூண்டியதாக பிறகு ஆலிஸியாவே கூறினார். நம்பிக்கையை பலப்படுத்தும் விஷயங்கள் இந்தச் சிற்றேடுகளில் உள்ளன. அவற்றிலிருந்து நீங்களும் நன்மை அடையலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! மற்றும் “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” என்ற சிற்றேடுகளின் தனி பிரதிகளை பெற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால் அல்லது இலவசமாக பைபிளைக் கற்றுக்கொடுக்க எவராவது உங்கள் வீட்டிற்கு வரவேண்டுமென விரும்பினால், Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, என்ற விலாசத்திற்கோ பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் பொருத்தமான விலாசத்திற்கோ தயவுசெய்து எழுதுங்கள்.