குஸ்தி போடுவதை நிறுத்த அது அவர்களுக்கு உதவியது
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் வாழும் 11 வயது சிறுவன், புரூக்ளின், நியூ யார்க்கிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கு எழுதின கடிதமாவது:
“உங்கள் புத்தகங்களை வாசிக்க எனக்கு ரொம்ப இஷ்டம்; குறிப்பாக குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகம். எங்கள் கைக்கு அந்தப் புத்தகம் வருவதற்கு முன்பெல்லாம், நானும் என் அக்காவும் குஸ்தி போடுவதை நிறுத்தவே முடியவில்லை. ஒருநாள் அந்தப் புத்தகத்தை வாசிக்க நாங்கள் தீர்மானித்தோம்; அப்புறம்தான், அடடா, கடவுள் விரும்பினதை நாங்கள் செய்யவில்லையே என்று உணர்ந்தோம்.
“இந்தப் புத்தகம் எங்களுக்கு பெருமளவில் உதவியது. என் மனமார்ந்த நன்றி. இந்தப் புத்தகம் அபாரமா இருக்கு. எனவே, மற்ற குடும்பங்களும் இதை வாசிக்க நான் உற்சாகப்படுத்துகிறேன். இது எங்கள் வீட்டில் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் காண எங்கள் குடும்பத்திற்கு உதவியும் வருகிறது.”
குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகம் 192 பக்கங்கள் கொண்டது. “உங்கள் குடும்பத்தை தீங்கு விளைவிக்கும் செல்வாக்குகளிலிருந்து பாதுகாத்திடுங்கள்,” “உங்கள் குடும்பத்தில் சமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள்,” “குடும்பத்தை சேதப்படுத்தும் பிரச்சினைகளை நீங்கள் மேற்கொள்ளலாம்” போன்ற பயனுள்ள முக்கிய தலைப்புகளைக் கொண்டது.
இலவச வீட்டு பைபிள் படிப்பு ஒன்றை எவரேனும் உங்களுக்கு நடத்த நீங்கள் விரும்பினால், Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India என்ற விலாசத்திற்கோ அல்லது பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் பொருத்தமான விலாசத்திற்கோ எழுதுங்கள்.