அவரது உள்ளம் உருகியது
“எங்க வீட்டில நாங்க 13 பிள்ளைங்க,” குளோரியா ஆடாமி எழுதுகிறார், “4 பையன்களும் 9 பொண்ணுகளும். அது 1984. அப்பா மெக்ஸிகோவுக்கு வீடுதிரும்பியிருந்த சமயம்; அவர் வேலைக்காக ஐக்கிய மாகாணங்களுக்குப் போயிருந்தப்போ எங்க குடும்பம் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்திருந்தது அவருக்குத் தெரிந்துவிட்டது. அவருக்குக் கொஞ்சம்கூட பிடிக்கல; அதனால எங்கள எதிர்க்க ஆரம்பித்தார். நாள் ஆக ஆக, அவரோட இருதயம் கடினமாகிட்டே வந்ததுபோல தெரிந்தது.
“எங்க அப்பாமேல எங்களுக்கு ரொம்ப பிரியம்; எங்களுக்குக் கிடைச்சிட்டிருந்த உயிரளிக்கும் அறிவினால அவர் நன்மை அடையணும்னு நாங்க விரும்பினோம். நாள் தவறாம, நாங்க யெகோவாகிட்ட உருக்கமா ஜெபிச்சோம்; யெகோவாவின் நோக்கங்கள அப்பாவிடம் பேசுறதுக்கு வழி திறக்கும்படி அவரிடம் கெஞ்சி மன்றாடினோம். யெகோவா எங்க மன்றாட்டை கேட்டார்; ஏன்னா, ஒவ்வொரு நாள் சாயங்காலமும் ஹால்ல நாங்கல்லாம் ஒன்னா சேர்றதுக்கு எங்களுக்கு அவர் தைரியம் கொடுத்தார்; அங்கதான் அப்பா ஒவ்வொரு ராத்திரியும் டெலிவிஷன் பார்த்துட்டிருப்பார். அங்க, அம்மாவும் பொண்ணுங்களான நாங்களும் பைபிள் தினவாக்கியத்தை வாசிக்க ஒன்னுசேர்வோம்.
“அம்மாதான் அதை நடத்துவாங்க; கமெண்ட்ஸ் வாசிச்சப்புறம் ஒரு நாளுக்கு ஒருத்தர் என்ற டர்ன் போட்டு நாங்க ஜெபிப்போம். எங்க கடைசி தங்கச்சி மாரீக்கு அப்போ அஞ்சு வயசுதான்; அவ இப்படித்தான் உருக்கமா கேப்பா: ‘யெகோவா தேவனே, ப்ளீஸ், டாடி மனச கொஞ்சம் திறந்து, அவரையும் சாட்சியா மாத்துங்களேன்.’ அப்பா கவனிக்காததுபோலத்தான் தெரிஞ்சுது; ஏன்னா அப்ப பாத்து டிவி சத்தத்தைக் கூட்டி வைத்துவிடுவார். ஆனாக்கூட, கொஞ்ச நாளுக்கப்புறம், சத்தத்தைக் குறைக்க ஆரம்பித்தார்; ஒருநாள் அதை ஆஃபே செய்துவிட்டார்.
“அன்னைக்கு சாயங்காலம், எங்க வழக்கப்படியே, அந்த நாளின் தின வாக்கியத்த யார் வாசிக்கணும்னு அம்மா கேட்டாங்க. நாங்க கொஞ்சம்கூட எதிர்பாக்கவே இல்ல; அப்பா சொன்னாங்க: ‘இன்னிக்கு என்னோட டர்ன்.’ எங்களுக்கெல்லாம் ஆச்சர்யம், ஆனா ஒன்னும் பேசிக்கல. அம்மா தடுக்கவும் இல்ல, ஏன்னு கேள்வியும் கேக்கல; அவங்ககிட்ட இருந்த தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் என்ற புத்தகத்தை அப்பாகிட்டவே கொடுத்துட்டாங்க. பைபிள் வாக்கியத்தை அவர் நடத்தினதுக்கப்புறம், ஜெபிப்பது யாரோட டர்னுன்னு அம்மா கேட்டாங்க. ‘என்னோட டர்ன்’ என்று அப்பா சொன்னாங்க.
“எங்களுக்குன்னா ஆச்சர்யம் தாங்க முடியல. அந்த ஜெபத்தின் நடுவில, எங்களுக்கு அடக்கமுடியாத அழுகை. அப்பாவும் அழ ஆரம்பித்துட்டார்; யெகோவாவை பழிச்சதுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டார். எங்களை எதிர்த்திருப்பதுக்காக அம்மாவிடமும் மன்னிப்பு கேட்டார்.
“ஆக, 1986-ல் எங்க அப்பாகிட்டருந்து வந்த எதிர்ப்பு முடிந்துவிட்டது. 1990-ல் எங்க குடும்பம் ஐக்கிய மாகாணங்கள்ல இருக்கிற டெக்ஸஸுக்கு மாறிப் போனது. காலப்போக்கில், ஏழு சகோதரிகளாகிய நாங்க செஞ்சமாதிரியே அப்பாவும் தன் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தார்; தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அதை அடையாளப்படுத்தியும் காட்டினார். ஏப்ரல் 1997-ல், அப்பா ஒரு கிறிஸ்தவ மூப்பராக நியமிக்கப்பட்டார். இந்நாள் வரைக்கும், தினவாக்கியத்த குடும்பமா கலந்தாலோசிக்கிறது எங்களுக்கு ரொம்ப முக்கியம்; யெகோவாவிடம் ஜெபிப்பதோ, எங்க குடும்ப வாழ்க்கைக்கே ஓர் அஸ்திவாரம்.”
[பக்கம் 31-ன் படம்]
2. தங்களது குழந்தைகள் சிலருடன் ச்வானிட்டாவும் ஈஸாக் ஆடாமியும். குளோரியா வலது ஓரத்தில் இருக்கிறாள்
1. மெக்ஸிகோவில் பயனியராக இருக்கும் நான்கு மகள்கள். மாரீ முன்னால் இருக்கிறாள்