உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 10/8 பக். 31
  • பெற்றோர் யார்? பிள்ளை யார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பெற்றோர் யார்? பிள்ளை யார்?
  • விழித்தெழு!—1997
  • இதே தகவல்
  • சிசுப்பருவத்திலிருந்தே உங்கள் பிள்ளையை பயிற்றுவியுங்கள்
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
  • பெற்றோரே—உங்கள் பிள்ளைகளை அன்புடன் பயிற்றுவியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • அன்பால் சிட்சிப்பதன் உயர் மதிப்பு
    குடும்ப வாழ்க்கை
  • பண்பற்ற உலகில் பிள்ளைகளை வளர்த்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 10/8 பக். 31

பெற்றோர் யார்? பிள்ளை யார்?

சமீப ஆண்டுகளில் பெற்றோரின் அதிகாரப்பிடி தளர்ந்து வருகிற அளவைக் குறித்து அ.ஐ.மா., கலிபோர்னியாவிலுள்ள மனோதத்துவ மருத்துவர் ஒருவர் வருத்தம் தெரிவிக்கிறார். அவர் எழுதுகிறார்: “என்னுடைய அலுவலகத்தில் பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்பட்ட எத்தனையோ விவாதங்களை நான் பார்த்திருக்கிறேன்; ஆனால் அவை பெற்றோர், பிள்ளை என்பதைப்போல் இல்லாமல் இரண்டு பெரியவர்களுக்கு மத்தியில் ஏற்படுவதைப்போல இருந்தன. பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் அவசியமான பேச்சுவார்த்தைகளைப்போல, படுக்கச்செல்லும் நேரம், கைச்செலவுக்காக கொடுக்கப்படும் பணம், வீட்டு வேலைகள் என ஒவ்வொன்றைப் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. சில சமயங்களில் பெற்றோர் யார், பிள்ளை யார் என்பதை அறிவதே கடினமாக இருக்கும்.”

பைபிள், பெற்றோருக்கு சமநிலையான ஆலோசனையை அளிக்கிறது. பிள்ளைகளை எரிச்சல்படுத்துமளவுக்கு மிகவும் கண்டிப்பாக இருப்பதன் ஆபத்தைக் குறித்து அது அவர்களுக்கு எச்சரிக்கிறது; ஒருவேளை இது பிள்ளையை மனச்சோர்வடையவும், மனந்தளர்ந்து போகவும் செய்கிறது. (கொலோசெயர் 3:21) ஆனால், பெற்றோர் மறு எல்லைக்கும் சென்றுவிடக்கூடாது; அதாவது அளவுக்குமீறி விட்டுக்கொடுப்பவர்களாக, தங்களுடைய அதிகாரத்தை துறந்துவிடுபவர்களாக இருக்கக்கூடாது என்றும் அது எச்சரிக்கிறது. நீதிமொழிகள் 29:15 சொல்கிறது: “தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.” மற்றொரு பைபிள் நீதிமொழி சொல்லுகிறது: “ஒருவன் தன் அடிமையைச் சிறுபிராயமுதல் செல்லமாக நடத்தினால், பிற்காலத்தில் அவன் நன்றிகெட்டவனாகக்கூட மாறிவிடுவான்.” (நீதிமொழிகள் 29:21, NW) இந்த வசனம் குறிப்பாக அடிமையைப்பற்றி சொன்னாலும், இதிலுள்ள நியமம் பிள்ளைகளுக்கும்கூட சரியாகவே பொருந்துகிறது.

தங்களுடைய பிள்ளைகளுக்கு தேவையான வழிநடத்துதலும் சிட்சையும் கொடுக்கத் தவறும் பெற்றோர் கடைசியில் அதற்காக பெரிதும் வருந்தவேண்டியுள்ளது; அதாவது குடும்பம் கட்டுப்பாட்டை மீறிவிடும். பைபிளின் ஆலோசனையைப் பொருத்துவது எவ்வளவு சிறந்தது! இவ்விதம் செய்வது முயற்சியைத் தேவைப்படுத்துகிறதென்பது உண்மைதான்; ஆனால் அது நீண்டகால நன்மைகளைக் கொண்டுவரக்கூடும். பைபிள் சொல்கிறது: “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.”—நீதிமொழிகள் 22:6.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்