பைபிள் துண்டுப்பிரதிகள் சாதிக்கக்கூடியவை
ரஷ்யாவிலுள்ள மாஸ்கோவுக்கு அருகிலிருக்கும் நகரமாகிய காலிட்ஸினாவில், குழந்தையை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள் என்ற துண்டுப்பிரதியை கொடுத்தார். பிறகு அவர் நடக்க ஆரம்பித்துவிட்டார்; ஆனால் சிறிது நேரத்திலேயே அந்தப் பெண்ணின் குரல் இவருக்குக் கேட்டது. அந்தப் பெண் தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டே அவரிடம் ஓடிவந்துகொண்டிருந்தாள்.
இன்னும் அதிகத்தை கற்றுக்கொள்ள ஆர்வமிருப்பதாக அந்தப் பெண் கூறினாள்; ஆகவே பைபிள் விஷயங்களடங்கிய வேறு இரண்டு துண்டுப்பிரதிகளையும் அந்த சாட்சி அவளுக்கு கொடுத்தார். பிறகு தன்னோடு தொடர்பு கொள்வதற்காக தொலைபேசி எண்ணையும் அந்தப் பெண்ணுக்கு கொடுத்தார். அன்று சாயங்காலமே அந்தப் பெண் ஃபோன் செய்தாள்; ஒரு வாராந்திர வீட்டு பைபிள் படிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஏழே மாதங்களுக்குள் அந்தப் பெண்ணும் அவளுடைய தங்கையும் கடவுளை சேவிக்க தங்களை ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்டனர்.
குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள், மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல், நிஜமாக உலகத்தை ஆளுவது யார்?, சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை போன்ற பைபிள் துண்டுப்பிரதிகளை நீங்கள் வாசிக்க விரும்பினால், தயவுசெய்து Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, என்ற விலாசத்திற்கோ பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் விலாசங்களில் உங்களுக்கு அருகிலிருக்கும் ஒன்றிற்கோ எழுதுங்கள்.