உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 10/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1997
  • இதே தகவல்
  • மாகீயின் கொடிய அனுபவமும் என் ஆசீர்வாதமும்
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—2005
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 10/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

வரவு-செலவை சமாளித்தல் “நீங்கள் வரவு-செலவை எவ்வாறு சமாளிக்கலாம்?” (டிசம்பர் 22, 1996) என்ற தொடர்கட்டுரைகளுக்காக உங்களுக்கு மிக்க நன்றி. நான் பணத்தை எக்கச்சக்கமாக செலவழிப்பவளாகவும், அவ்வளவாக தன்னடக்கம் இல்லாமலும் இருந்தேன். இருந்தாலும், இந்தக் கட்டுரைகளைப் படித்த பிறகு, என்னுடைய செலவினங்களை நான் கட்டுப்படுத்த ஆரம்பித்தேன். இப்போது, ஒரு பொருளை வாங்க ஆசைப்பட்டால், அந்தப் பொருள் உண்மையிலேயே எனக்குத் தேவைப்படுகிறதா என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.

ஜே. பி., பிரேஸில்

என்னுடைய கணவர் ஐந்து மாதங்களாக வேலையில்லாமல் இருக்கிறார்; எங்களுடைய மூன்று பிள்ளைகளை நாங்கள் பராமரிக்கவேண்டும். எனவே, நான் அந்தக் கட்டுரைகளில் சொல்லப்பட்டிருந்த சில ஆலோசனைகளை பொருத்தத் தொடங்கினேன். நான் ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து, அதில் சில கட்டங்களை வரைந்து, பட்ஜெட் போட்டேன். இவ்வழியில் கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் எங்களுடைய பணத்தை கையாண்டு வருகிறோம்; எதிர்பாராத செலவுகளுக்காக கொஞ்சம் பணம் எங்களிடம் இன்னும் மீதி இருக்கிறது. பட்ஜெட் போடுவது உண்மையில் பயனுள்ளதாக இருக்கிறது!

எல். எஸ்., செக் குடியரசு

சோதனைகளைத் தாங்குதல் “வரவிருந்த சோதனைகளை தாங்கிக்கொள்ள பலப்படுத்தப்பட்டோம்” (டிசம்பர் 22, 1996) என்ற கட்டுரையைக் குறித்து போற்றுதல் தெரிவிக்க நான் தூண்டப்பட்டேன். எட்வர்ட் மிஹலெக் மிக கடினமான சூழ்நிலைமைகளின் மத்தியிலும் சகித்திருந்த விதத்தைப் பற்றி வாசித்தது என்னை நெகிழவைத்தது. யெகோவாவிடமும், உடன்மனிதரிடமும், சத்தியத்தினிடமும் அவர் கொண்டிருந்த அன்பு, அவருடைய உண்மையுள்ள நடத்தையின் மூலமாகவும் பொறுமையோடு சகித்திருந்ததன் மூலமாகவும் தெளிவாக வெளிக்காட்டப்பட்டன.

கே. பி., ஐக்கிய மாகாணங்கள்

மாகீயின் கொடிய அனுபவம் “மாகீயின் கொடிய அனுபவமும் என் ஆசீர்வாதமும்” (டிசம்பர் 22, 1996) என்ற கட்டுரையைப் பிரசுரித்ததற்காக உங்களுக்கு நன்றி. தன்னுடைய மகள் ஆரோக்கியமாக பிறக்கவேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையின் இறுதி நாட்களில் அந்தத் தாய் செய்த தியாகத்தை வாசித்தபோது என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தன்னுடைய மனைவியின் இழப்பைக் குறித்து பேசுவது தன்னுடைய வேதனையை சிறிதுசிறிதாக குறைத்தது என்று அவருடைய கணவர் சொன்னதை நான் போற்றுகிறேன். மரித்துப் போனவர்களைப் பற்றி அவர்களுடைய உறவினர்களோடு பேசுவதை, சாதாரணமாக நாம் தவிர்க்க முயற்சிப்போம். உயிர்த்தெழுதலுக்குப் பின்பு மாகீயை அதிகம் தெரிந்துகொள்வேன் என்று நான் நம்புகிறேன்.

எல். எஸ். கே., ஸ்பெய்ன்

சபையிலுள்ள நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உண்மையான அக்கறையை எவ்விதம் காட்டலாம் என்பதை இந்தக் கட்டுரை வெளிப்படுத்திக்காட்டுகிறது. உடன் கிறிஸ்தவர்கள் அநேக மாதங்களுக்கு மாகீயின் கணவருக்காக உணவை அளித்தனர்; அவருடைய குழந்தைக்காக உடையையும்கூட கொடுத்தனர். வெறுமனே ஒரு இரங்கல் அட்டை அனுப்புவதைவிட அல்லது தொலைபேசியில் பேசுவதைவிட அதிகத்தைச் செய்வதற்கு இது நமக்கு என்னே ஒரு பாடம்!

பி. எல்., ஐக்கிய மாகாணங்கள்

இந்தக் கட்டுரைக்காக நான் என்னுடைய இருதயப்பூர்வமான நன்றியை உங்களுக்கு தெரிவிக்கிறேன். மாகீ இறந்து மூன்று வாரங்களுக்கு பின்பு, எட்டு பிள்ளைகளை என்னிடம் விட்டுவிட்டு என் மனைவி ஒரு சாலை விபத்தில் மரித்துப் போனாள். லார்ன் வில்கின்ஸ் அனுபவித்த, இன்னும் அனுபவிக்கிற வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இப்படிப்பட்ட அனுபவங்களை எங்களுக்காக பிரசுரித்ததற்காக உங்களுக்கு நன்றி. இத்தகைய கொடிய அனுபவங்களை எதிர்ப்படும் ஒவ்வொருவருக்கும், இவை உண்மையில் ஆறுதல் அளிப்பவையாகவும் ஊக்கமளிப்பவையாகவும் இருக்கின்றன.

பி. பி., பிரான்ஸ்

ஆருயிர் நண்பர் பிரிந்துசெல்கிறார் “இளைஞர் கேட்கின்றனர்  . . என் ஆருயிர் நண்பர் ஏன் பிரிந்துசென்றார்?” (டிசம்பர் 22, 1996) என்ற கட்டுரைக்காக நான் என்னுடைய ஆழ்ந்த போற்றுதலை தெரிவிக்க விரும்புகிறேன். அது சரியான நேரத்தில் கிடைத்தது. சீக்கிரத்தில் என்னுடைய தோழிகளில் ஒருத்தி பிரிந்து செல்லவிருக்கிறாள்; பிரசங்கிப்பவர்களின் தேவை அதிகமாயுள்ள ஒரு சபையில் சேவிப்பதற்காக அவளும் அவளுடைய கணவரும் போகவிருக்கிறார்கள். அவளைக்குறித்து நான் அதிக சந்தோஷமாக இருக்கிறபோதிலும், அவளது பிரிவுத்துயர் அதிகமாக இருக்கும் என்று அறிவேன். உங்களுடைய சிறந்த ஆலோசனைகளுக்காக நன்றி.

ஆர். ஏ., இத்தாலி

எங்களுடைய பயண ஊழியரான வட்டாரக் கண்காணி, எங்களை விட்டு ஒரு புதிய பிராந்தியத்தில் சேவை செய்வதற்காக சென்றபோது, இந்தக் கட்டுரை எந்தளவுக்கு என் இருதயத்தை தொட்டது என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியாது. என்னுடைய ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சிப்பூர்வ தேவைகளுக்காக அவர் மிக அதிக அக்கறையுடன் செயல்பட்டிருக்கிறார். அந்தக் கட்டுரையிலிருந்த புகைப்படம் விளக்கியபடி, குட்-பை சொல்லுவது வேதனையுள்ள அனுபவமாக இருந்தது. தனிமையை மேற்கொள்ள உங்களுடைய ஆலோசனைகள் எவ்வளவு காலத்துக்கேற்றவையாக இருந்தன.

ஜே. டி., நைஜீரியா

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்