“விழித்தெழு! வாசிக்க எனக்கு விருப்பம் இருந்ததில்லை”
கலிபோர்னியாவிலுள்ள, சான் அசே மாகாணப் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழியல் பயிலும் ஒரு மாணவியின் வார்த்தைகளே அவை. அவள் தொடர்ந்து சொல்வதாவது, “அந்தப் பத்திரிகை என்னிடம் ‘சர்ச்சுக்குப் போ’ அல்லது ‘ஒரு யெகோவாவின் சாட்சியாக மாறு’ என்று பிரசங்கிக்கும் என நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், (ஜனவரி 8, 1996, ‘அச்சுறுத்தப்படுகிற நம் கிரகம்—அதை பாதுகாக்க முடியுமா?’) இந்த இதழை படித்தபோது நான் ஆச்சரியப்படும் வண்ணம் அது மிகவும் யதார்த்தமாக இருந்தது! ‘உலகின் பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் சில’ என்ற தகவலடங்கிய படத்தையும் அந்தக் கட்டுரைகள் உள்ளடக்கின. இந்தப் படத்தில் காடுகள் அழிக்கப்படுதல், நச்சுக் கழிவுகள், வளிமண்டல தூய்மைக்கேடு, தண்ணீர் பற்றாக்குறை, இனங்கள் அருகிவருதல், நிலத்தின் சீரழிவு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இடங்கள் குறித்துக் காட்டப்பட்டிருந்தன.
“எனக்கு இன்னமும் குழந்தைகள் இல்லை, அப்படி இருந்திருந்தால் அவர்களுக்கு சுவாசிக்க சுத்தமான காற்றும், விளையாட பூங்காக்களும், அல்லது உயிர்வாழத் தண்ணீரும் கிடைக்குமா என்று நான் கவலைப்படுகிறேன். . . . இந்தக் கட்டுரைகளுக்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன்.”
விழித்தெழு! இப்போது 1.83 கோடிக்கும் அதிகமான பிரதிகள், 80 மொழிகளில் விநியோகிக்கப்படுகிறது; அவற்றுள் 56 மொழிகள் ஒரே சமயத்தில் அச்சிடப்படுகின்றன. இந்தப் பத்திரிகையை நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பினால், உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளை தொலைபேசி மூலமாகவோ, உள்ளூர் இராஜ்ய மன்றத்திலோ தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள் அல்லது பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள விலாசங்களில் உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஒன்றுக்கு எழுதுங்கள்.