உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 3/8 பக். 31
  • ஓர் உள்ளக் குமுறல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஓர் உள்ளக் குமுறல்
  • விழித்தெழு!—1997
  • இதே தகவல்
  • தத்தெடுத்தல்—அது உங்களுக்குரியதா?
    விழித்தெழு!—1996
  • தத்தெடுத்தல்—ஏன் மற்றும் எப்படி?
    விழித்தெழு!—1996
  • குழந்தைகள் உங்கள் வாழ்க்கையை மாற்றுவது எப்படி?
    மணவாழ்வில் மகிழ்ச்சி மலர
  • எமதுவாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 3/8 பக். 31

ஓர் உள்ளக் குமுறல்

விழித்தெழு! மே 8, 1996-ம் இதழ் தத்தெடுத்தல் என்ற தலைப்பில் பல கட்டுரைகளைத் தாங்கி வந்தது. உலகெங்கிலும் வாசகரிடமிருந்து வந்த வரவேற்பை கண்டு எங்களுக்கோ ஓர் இன்ப அதிர்ச்சி. பின்வரும் கடிதம் விசேஷமாக உள்ளத்தை தொட்டது.

“பிள்ளைகளை தத்துக்கொடுத்த எங்களில் பலரும் உண்மையில் அவர்களை வைத்துக்கொள்ளவே விரும்பினோம் என்ற உண்மையைத் தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை நான் உணருகிறேன். அப்போது நான் திருமணம் ஆகாத ஒரு பருவப்பெண்ணாக, பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். நான் கர்ப்பமாக இருப்பது என் பெற்றோர்களுக்கு விரைவிலேயே தெரியவந்தது; என்னுடைய நலனைக்காட்டிலும் பிள்ளையின் நலனைத்தான் முன்வைக்கவேண்டும் என்று சொல்லி, பிள்ளையைத் தத்துக்கொடுத்துவிடும்படி அவர்கள் எனக்கு அறிவுரை கூறினார்கள். ‘ஒரு குழந்தைக்கு அப்பா, அம்மா என இரண்டுபேரும் தேவை’ என்று என்னிடம் சொன்னார்கள்; ஆனால், கொடுக்கும் நிலையில் நான் இல்லை. என் குழந்தையை என்னோடு வைத்துக்கொள்வதை என் பெற்றோர் விரும்பவில்லை; அப்படி வைத்துக்கொண்டால் அவர்களுடைய வீட்டில் எனக்கு இடமில்லை என்றார்கள். ஐயோ, நான் என்னதான் செய்வேன்? அவர்கள் வாதிட்டார்கள்: ‘உன் பிள்ளையே உனக்கு கால்கட்டாய் போய்விடும், அதுக்காக நீ பின்னால் வருந்த போற பார்.’

“விரைவில் எனது வயிறு வெளியே தெரிய ஆரம்பித்தது, என்னை பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்திவிட்டு, உறவினரோடு இருக்கும்படி அனுப்பிவைத்தனர். எனக்குப் பேறுகாலம் முடிந்து, குழந்தையைக் கொடுத்துவிட்டு வரும்வரை வீட்டிற்குள் காலெடுத்து வைக்க முடியாது என்பது வீட்டிலிருந்து புறப்படும்போது எனக்கு நல்லாவே தெரியும்.

“திருமணம் ஆகாத அன்னையர் இல்லத்திற்கு நான் அனுப்பி வைக்கப்பட்டேன். குழந்தையை தத்துக்கொடுக்கவேண்டும் என்ற எனது தீர்மானத்தில் நான் உறுதியாக இருக்கிறேனா என்ற கேள்வியை அந்தச் சமூக சேவகி என்னிடத்தில் கேட்டபோது, அதைவிட்டால், எனக்கு வேறுவழி இல்லை என்பது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என் குழந்தையை என்னோடு வைத்துக்கொள்ள துடித்தேன்! அவன் சிரிப்பதையும், சந்தோஷமாக இருப்பதையும் பார்க்கவேண்டும் என்று எப்போதும் நான் ஏங்கினேன். தாய்மை அடைந்த பலரும் என்னைப்போலவே உணருவார்கள் என்று உங்களுடைய வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

“என் விருப்பப்படி செய்யும் வாய்ப்பே எனக்கு தரப்படவில்லை. ஆகவே, குழந்தையின் ‘மிகச் சிறந்த நலனுக்காக’ என்று என்னிடம் சொன்னதையே செய்தேன். அன்றைய தினத்திலிருந்து உணர்ச்சி ரீதியில் ஏற்பட்ட ஆழமான புண்ணோடுதான் வாழ்ந்து வருகிறேன். எனக்கு மகனைப் பற்றிய அக்கறை ஒருபோதும் இருந்ததில்லை என்றோ, அவனை வெறுத்து ஒதுக்கினேன் என்றோ என் மகன் என்னைப் பற்றி நினைத்துவிடுவானோ என்ற கவலை என்னை வாட்டுகிறது.

“இப்போது, ஒரு கிறிஸ்தவளாக, கடவுளுடைய வார்த்தையை நம் வாழ்க்கையில் பொருத்த தவறுவதன் விளைவாக நம்மீது நாமாகவே வருவித்துக்கொள்ளும் அதிக இக்கட்டான நிலைமைகளைப்பற்றி பைபிள் தரும் ஆலோசனையை நான் எப்போதும் போற்றுகிறேன். உலகப்பிரகாரமான ஆலோசனை எத்தனை வேதனை அளிக்கிறது மற்றும் நீண்ட காலத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது என்பதையே இது காட்டுகிறது. ஆனால், வெறுமனே தத்துக்கொடுக்கப்பட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்கள் வேண்டப்படாதவர்களாக ஒதுக்கப்பட்டார்கள் என்று புரிந்துகொள்ளக்கூடாது என்பதை தத்தெடுக்கப்பட்டவர்கள் அறியவேண்டியது அவசியம். தயவுசெய்து அவர்கள் அறிந்துகொள்ளட்டும்!”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்