நினைவுகூர வேண்டிய இரவு
ஞாயிறு, மார்ச் 23, 1997
இயேசு கிறிஸ்து, தாம் இறப்பதற்கு முந்திய இரவு அப்போஸ்தலரோடு தம் மரண நினைவு ஆசரிப்பை துவக்கி வைத்தார். திராட்சரசத்தையும் புளிப்பில்லாத அப்பத்தையும் சின்னங்களாக அவர் பயன்படுத்திய ஓர் எளிய போஜனத்தின்போது, இயேசு இவ்வாறு கட்டளையிட்டார்: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.”—லூக்கா 22:19.
இந்த வருடாந்தர நினைவு ஆசரிப்பில் தங்களோடு கலந்துகொள்ளும்படி யெகோவாவின் சாட்சிகள் உங்களை உள்ளன்போடு வரவேற்கிறார்கள். இந்த வருடம் அது மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை, சூரிய மறைவிற்குப் பின்பு அனுசரிக்கப்படும்; இது, பைபிளின் சந்திர நாட்காட்டியில் நிசான் 14-க்கு ஒத்த தேதியாகும். சரியான இடத்தையும் நேரத்தையும் உள்ளூரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளிடம் தயவுசெய்து கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.