உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 3/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1997
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1997
  • “சுழற்சி நடனமாடும் மடில்டா”
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1998
  • பீதிக்குள்ளாக்கும் நோய்த்தாக்கங்களைச் சமாளித்தல்
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 3/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

ஆர்த்தடாக்ஸ் சர்ச் நான் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவளாக இருப்பதனால், “கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்—பிளவுற்ற ஒரு மதம்” என்ற உங்களது கட்டுரை (ஜனவரி 8, 1996) எனது ஆர்வத்தைத் தூண்டியது. அடுத்தமுறை நீங்கள் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சை பற்றி மதிப்புக்குறைவாக கூறும்போது, இஸ்லாமியர் துன்புறுத்தலின்போதும், சோவியத் ஆளுகையின்போதும் கிறிஸ்தவத்தை அது எப்படி பாதுகாத்தது போன்ற சேவைகளை கொஞ்சமாவது நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள். மேலும், சர்ச்சும், அரசாங்கமும் பிரிந்திருத்தல் வேதப்பூர்வமானதல்ல. தாவீது ராஜாவின் அல்லது சாலொமோனின் அரசாங்கங்கள் சர்ச்சிலிருந்து பிரிந்தா இருந்தன?

ம். எப்., ஐக்கிய மாகாணங்கள்

ஆர்த்தடாக்ஸ் சர்ச்சை இப்போது தாக்கிக்கொண்டிருக்கும் பிரச்சினையைப் பற்றி—கிரீஸில் செய்தி துறையால் பகிரங்கப்படுத்தப்படும் ஊரறிந்த விஷயத்துக்குத்தான்—நாங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தினோம். “உலகின் பாகம் அல்ல” என்றும், அரசியல் விவகாரத்தில் நடுநிலைமையோடு இருக்க வேண்டும் என்றும் இயேசு கொடுத்த கட்டளைக்குச் சர்ச்சு கீழ்ப்படிய தவறியதன் விளைவாக இந்தப் பிரச்சினை வந்தது. (யோவான் 17:16, NW)—ED.

பீதித் தாக்கங்கள் “பீதிக்குள்ளாக்கும் நோய்த்தாக்கங்களைச் சமாளித்தல்” (ஜூன் 8, 1996) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு மிக்க நன்றி. இத்தகைய தாக்கங்கள் எனக்கு 14 வருடங்களாக இருக்கின்றன; எனக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சினை இருப்பதாக நான் நினைத்துக்கொண்டிருந்தேன். சில நேரங்களில் ராஜ்ய மன்றத்தில் இருக்கும்போதுகூட பீதியின் உணர்வுகள் வரும். அநேகமாக என்னுடைய பிரச்சினை தீரப்போவதில்லை என்றாலும், இந்தக் கட்டுரை உண்மையில் எனக்கு உதவியது.

சி. சி., ஸ்பெய்ன்

என் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோட, பீதித் தாக்கங்கள் என்ற கட்டுரையை வாசித்தேன். இன்னொரு முறை பீதித் தாக்கம் வரும்போது, அதனை எதிர்த்துப்போராட இது எனக்கு உதவும். என்னுடைய ஜெபங்களுக்கான பதில்தான் இந்தக் கட்டுரை என்று நான் நினைக்கிறேன்.

எம். பி., ஸ்காட்லாந்து

சுமார் 30 வருடங்களாக என்னால் இரயில்களில் அல்லது பஸ்களில் பயணம் செய்ய முடிவதில்லை; என்னைச் சூழ்ந்து ஆட்கள் இருப்பதையும் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. ராஜ்ய மன்ற கூட்டங்களையும், மாநாடுகளையும் எனக்கு முன்பாக இருக்கும் மிகப்பெரிய சவால்களாக கருதுகிறேன். ஆகவே, எனக்குப் பெரும் ஊக்கத்தையும் ஆறுதலையும் அளிக்கும் ஒரு மூலமாக இந்தக் கட்டுரை அமைந்தது என்றால் அது மிகையாகாது. இந்த நோயைப் பற்றி ஊக்கம்தரும் விதத்திலும், ஆறுதல்தரும் விதத்திலும் எழுதியதற்காக உங்களுக்கு எனது உள்ளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒய். டி., ஜப்பான்

நான் ஒரு முழுநேர சுவிசேஷகன், 1994-லிருந்து எனக்கு இந்தப் பயங்கரமான தாக்கங்கள் வருகின்றன. என்னுடைய சந்தோஷத்தை இழந்துவிட்டேன், வீட்டைவிட்டு வெளியே வர எனக்குப் பிடிக்கவில்லை. விசுவாச குறைவினால்தான் இத்தகைய உணர்வுகள் வருகின்றன என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன்; ஆனால், இத்தகைய பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவள் நான் ஒருத்தி மாத்திரம் அல்ல, இன்னும் பலரும் உள்ளனர் என்று இப்போது தெரிந்துகொண்டேன்.

எஸ். ஏ., பிரேஸில்

சுழற்சி நடனமாடும் மடில்டா “சுழற்சி நடனமாடும் மடில்டா” என்ற பாடல், இனிய நினைவுகளிடமாக என்னை அழைத்து செல்கிறது. அப்பாடலின் பின்னணியை விவரித்த அந்தக் கட்டுரைக்காக (ஜூன் 8, 1996) உங்களுக்கு நன்றி. அதை வாசித்தபோது, விழித்தெழு!-வில் வந்த மற்ற எல்லா கட்டுரைகளையும் வாசிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை என்னில் கிளறிவிட்டது.

ஜே. எம்., ஜெர்மனி

தொலைபேசியில் பேசும் முறைகள் “நீங்கள் தொலைபேசியில் பேசும் முறை எவ்வாறுள்ளது?” (ஜூன் 8, 1996) என்ற உங்களது மிகச் சிறந்த கட்டுரைக்காக நன்றி. நான் வேலைசெய்யும் வங்கியில், வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் சேவைகள் அளிக்கப்படுகின்றன. நான் அந்தக் கட்டுரையை என்னுடைய மேல் அதிகாரியிடம் கொடுத்தேன், அதைப் படித்துப்பார்த்த அவர், பயனுள்ள, காலத்திற்கு ஏற்ற, நடைமுறையான கட்டுரையாக இருந்தது என்று என்னிடம் சொன்னார். அந்தக் கட்டுரையை டெலிபோன் ஆப்பரேட்டர்கள் 32 பேருக்கும் காண்பிக்கும்படி என்னிடம் கூறினார்.

என். ஜே. எஸ்., பிரேஸில்

கயவர்கள் குற்றம்புரியும் உள்நோக்கத்தோடு தொலைபேசியில் பேசிய அனுபவங்கள் எங்களுக்கு ஏற்கெனவே ஏற்பட்டிருந்தன. தொலைபேசி கம்பெனி எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தப்படி, மூன்று தடவை மரியாதையோடு கேட்டும் தொலைபேசியில் பேசுபவர் தன்னை அடையாளம் காட்ட மறுத்துவிட்டால், தொலைபேசியின் இணைப்பை துண்டித்துவிடுவோம். விளையாட்டாக சிலர் தன்னை யார் என்று கண்டுபிடிக்கும்படி கேட்கும்போது, அவ்வாறு தொலைபேசியைத் துண்டித்ததால், அநேக முறை பலரது உள்ளம் புண்பட்டது. அற்பமாக நினைக்கத் தோன்றும் இத்தகைய அம்சங்களிலும்கூட கனிவோடும், புரிந்துகொள்ளுதலோடும் இருக்க இப்படிப்பட்ட கட்டுரை ஊக்குவிக்கிறது.

ஜி. ஏ., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்