உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 2/22 பக். 16-17
  • ஜான்ஸிபார்—“நறுமணப்பொருள் தீவு”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜான்ஸிபார்—“நறுமணப்பொருள் தீவு”
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கிராம்புகளும் அவற்றின் பயன்பாடுகளும்
  • அங்குள்ள மக்கள்
  • உலகளாவிய பைபிள் கல்வியை விரிவாக்குவதில் என் பங்கு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • உலகை உருவமைத்த சுவைகள்
    விழித்தெழு!—1993
  • ‘பாரடைஸ்’ மணல் தீவு
    விழித்தெழு!—2006
  • கோகோஸ் தீவு—அதன் புதையல்களைப் பற்றிய கதைகள்
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 2/22 பக். 16-17

ஜான்ஸிபார்—“நறுமணப்பொருள் தீவு”

கென்யாவிலுள்ள விழித்தெழு! நிருபர்

ஜான்ஸிபார் என்ற தீவு கிழக்கு-மத்திப ஆப்பிரிக்காவின் கரையோரப் பகுதிக்கு முப்பத்தைந்து கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது. இந்தியப் பெருங்கடலின் அனலான, நீலநிற தண்ணீர்களால் சூழப்பட்டதாக, வெள்ளைக் கடற்கரைகளாலும் அலையலையான மேடுபள்ளங்களையுடைய மலைகளாலும் அயனக் காற்றில் ஊசலாடும் பனை மரங்களாலும் வரிசைப்படுத்தப்பட்டதாக இருக்கிற ஜான்ஸிபார் கண்ணுக்கினிய தீவாகவே இருக்கிறது. ஓரளவு சிறியதாயிருந்தாலும்—85 கிலோமீட்டர் அதிகபட்ச நீளமும் 39 கிலோமீட்டர் அகலமும்—ஆப்பிரிக்காவின் சரித்திரத்தில் மிகப் பெரிய பங்கை அது வகித்திருக்கிறது.

பல நூற்றாண்டுகளாக, பெர்சியர்கள், அரபியர்கள், கிழக்கிந்தியர்கள், போர்த்துகீசியர்கள், பிரிட்டிஷ்காரர்கள், ஆசியர்கள், வட அமெரிக்கர்கள், மேலும் நிச்சயமாக தலைநிலப்பரப்பைச் சேர்ந்த ஆப்பிரிக்கர்களும் ஜான்ஸிபாரை விஜயம் செய்திருக்கின்றனர். அப்போது பிரதான கவர்ச்சி என்னவென்றால் பணவருமானம் கொண்ட நீக்ரோ அடிமை வியாபாரமாகும். அங்குத்தானே வியாபாரிகளும் புதிய நிலப்பகுதிகளைக் கண்டுபிடிப்பவர்களும் சப்ளைகளைப் பெற்றனர். உண்மையில், 19-ம் நூற்றாண்டிலிருந்த ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஐரோப்பிய ஆய்வுப்பயணிகளில் பெரும்பான்மையர் இந்தத் தீவு வழியாகக் கடந்து சென்றனர்! எனவே அது ஆப்பிரிக்காவிற்கான நுழைவாயில் என்றழைக்கப்படலானதில் ஆச்சரியமே இல்லை.

கிராம்புகளும் அவற்றின் பயன்பாடுகளும்

சையட் சாயிடு என்ற ஓமானின் சுல்தான் பாரசீக வளைகுடாவிலிருந்த தன்னுடைய தாய்நாட்டை விட்டுவந்து, 1800-களின் முற்பகுதியில் ஜான்ஸிபாரில் குடியேறினார். இந்தத் தீவின் ஆட்சியாளனாக, அரபு நாட்டுத் தோப்பின் உரிமையாளர்கள் தென்னைகள் வளர்ப்பதை நிறுத்தி, அதற்குப் பதிலாக மிக மிக லாபந்தரும் பயிராகிய கிராம்புகளை விளைவிக்கும்படி செய்தார். தன் வாழ்நாட் காலப்பகுதியின் முடிவிற்குள்ளாக, கிராம்பினால் கிடைத்த லாபங்கள், அடிமை மற்றும் யானைத்தந்த வியாபாரத்தின் மூலமாகத்தாமே மிகவும் அதிகரித்தன. ஆகவே அடிமை வியாபாரம் ஒழிக்கப்பட்டபோது, ஜான்ஸிபார் நறுமணப்பொருள் தீவு என்றழைக்கப்படலானது. இன்று அது உலகிலேயே பிரதான கிராம்பு உற்பத்தி மூலமாகத் திகழ்கிறது.

கிராம்புகள் வெப்பமண்டல பசுமைச்செடியின் உலர்ந்த பூ மொட்டுகளாக உண்மையில் இருக்கின்றன. அந்த மரத்தின் அறிவியல் பெயர் யூஜினியா கார்யோஃபைல்லட்டா. ஜான்ஸிபாரில், சாதாரணமாக அந்த மரம் சுமார் ஒன்பது மீட்டர் உயரம் வளரும். அதன் பூ மொட்டுகள் பொதுவாகச் சிவப்பும் பழுப்பும் கலந்த நிறத்திலும் சுமார் ஒன்றேகால் சென்டிமீட்டர் அளவாக இருக்கையிலும் அறுவடை செய்யப்படுகின்றன. ஆரோக்கியமுள்ள மரம் சுமார் 34 கிலோகிராம் மொட்டுகளைத் தரும். அறுவடை செய்யப்பட்ட பிறகு, அவை சூடான வெப்பமண்டல சூரியனில் உலரும்படி விடப்படுகின்றன.

அவற்றின் நறுமணத்தாலும் பலமான ருசியாலும் கிராம்புகள் பிரதானமாகச் சமையலில் உபயோகிக்கப்படுகின்றன. மாம்சத்தின் ருசியும் மரக்கறி பதார்த்தங்களின் ருசியும் அடிக்கடி கிராம்புகளால் மேலுமான சுவையூட்டப்படுகின்றன. அல்லது நான்கு, ஐந்து மொட்டுகளை லேசாகத் தட்டி கொதிநீரில் போட்டு வாசனையான தேநீரை நீங்கள் தயாரிக்கலாம்! மேலும் தணுப்பாயிருக்கும் குளிரான நாளில், சிவப்புநிற ஒயினைச் சூடுசெய்து அதில் ஒருசில கிராம்புகளைச் சேர்ப்பதன் மூலம் புத்துணர்ச்சியளிக்கும் பானமாக மாற்றலாம். சிலர், சுமார் 20 கிராம்புகளை ஆரஞ்சில் குத்தியிட்டு, ஒரு வாரம்போல் தொங்கவிடுவதன் மூலம் தங்கள் குளியலறையில் துர்நாற்றம் வராமல் தடுக்க உபயோகிக்கின்றனர். பல் வேதனையைப் போக்க குறிப்பிட்டவொரு இடத்தை மரக்கச் செய்வதற்கு கிராம்பு எண்ணெயைப் பல் மருத்துவர்கள் உபயோகித்திருக்கின்றனர். மேலும் கிராம்பு வாய் கழுவவும் சுகந்தவர்க்கங்களிலும் உபயோகிக்கப்படுகிறது. ஆச்சரியமில்லாமல், இந்தச் சிறு தீவு அதன் நறுமணப் பயிருக்குப் பேர்போனதாயிருக்கிறது!

அங்குள்ள மக்கள்

ஜான்ஸிபாரின் உண்மையான “நறுமணப்பொருள்” அவ்வூர் மக்களே ஆவர். அந்தத் தீவில் நீங்கள் கால் எடுத்து வைத்தவுடன், ஜான்ஸிபாரிலுள்ள ஆட்களால் அனலாக வரவழைக்கப்படுகிறீர்கள். அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் கவலையற்ற ஆட்களாக, ஒருவரோடொருவர் சாவகாசமாகப் பேசிக்கொள்வர். கலந்துரையாடும்போது, அவர்கள் ஒருவேளை பத்து நிமிட அவகாசத்தில் மூன்று, நான்கு முறைகள் மீண்டும் மீண்டும் கைகுலுக்குவார்கள். தமாஷாகச் சொல்லப்படும் எந்தவொரு காரியத்திற்கும் இப்படியாகத்தான் இயல்பாகப் பிரதிபலிப்பர்.

அவர்களுடைய வீட்டிற்கு விருந்தாளிகளாக நீங்கள் செல்வீர்களானால், நன்றாக உங்களை உபசரிப்பர். ஒரு விருந்தாளிக்கு எப்போதும் மிகச் சிறந்ததைச் செய்வர். உணவு அருந்தும்போது எதிர்பாராமல் ஒருவர் வந்துவிட்டால், அவரும் அவர்களோடு சேர்ந்து வயிறு நிரம்ப சாப்பிடவேண்டும் என்பதில் சந்தேகமேயில்லை. அத்தகைய உபசரிப்பு பைபிள் காலங்களை நினைவுபடுத்துகிறது.—ஆதியாகமம் 18:1-8-ஐ ஒப்பிடுக.

ஜான்ஸிபாரைச் சேர்ந்த ஆட்கள் நல்ல நிறமுள்ளவர்களாகவும் அசாதாரண தோற்றத்தை உடையவர்களாகவும் இருக்கின்றனர். பெண்கள் பூயிபூயி என்ற ஆடையை—தலையிலிருந்து கணுக்கால் வரை தங்களை மறைக்கும் கையற்ற தளர் மேற்சட்டை போன்ற கெளனை—வெளியில் அணிவர். இது மேற்கத்திய பாணி ஆடையை பின்பற்றுவதாயிருப்பது அக்கறையூட்டுவதாக இருக்கிறது. ஆண்களைப் பொருத்தமட்டில், அவர்கள் வெள்ளைநிற அல்லது நீலச்சாய அங்கியாகிய கான்ஸுவை அணிபவர்களாகக் காணப்படுவர். அவர்கள் பின்னப்பட்ட தொப்பியாகிய கோஃபீயாவை அணிவர்.

ஸ்டோன் டவுன் என்றழைக்கப்படுகிற ஜான்ஸிபார் நகரின் வரலாற்று சிறப்புமிக்க இடத்தின் வழியே நடந்து செல்கையில், பண்டைய காலத்திற்குத் திரும்ப சென்றுவிட்டதுபோல ஒரு நபர் உணருகிறார். தெருக்களின் சிக்கலான வழிபாதைகளிலும் சந்துகளிலும் ஓர நடைபாதைகள் இல்லை. தெருவை ஒட்டியே பல்வேறு கடைகளின் கதவுகள் திறக்கப்படுகின்றன! அடுத்து, இஞ்சி வாசனை கலந்த இனிப்பான அரபிய காப்பியாகிய கஹாவாவை விற்பனை செய்யும் ஆட்களைப் போன்ற தெரு விற்பனையாளர்கள் பலர் இருக்கின்றனர்.

என்றபோதிலும், ஜான்ஸிபாரின் அழகை சொற்களோ போட்டோக்களோ போதியளவு வருணிப்பது கிடையாது. “நறுமணப்பொருள் தீவு” என்ற அதன் பெயர் பல்வேறு கருத்துக்களில் அதிக தகுந்ததாயிருக்கிறது.

[பக்கம் 16-ன் வரைப்படம்]

(For fully formatted text, see publication)

ஜான்ஸிபார்

[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]

ஆப்பிரிக்காவும் எல்லைப்புற வரைபடமும்: ஆங்கிலத்தில், விளக்கப்படங்கள் நிறைந்த முழு என்ஸைக்ளோப்பீடியா/ஜெ. ஜி. ஹெக்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்