‘வரலாற்றின் பெரிய நகைச்சுவைகளில் ஒன்று’
“பரிணாமக் கோட்பாடு, குறிப்பாக எந்த அளவுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதோ அது, வருங்கால வரலாற்றுப் புத்தகங்களில் பெரிய நகைச்சுவைகளில் ஒன்றாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதிலிருக்கும் நம்பத்தக்க சான்றுகளற்ற ஏமாளித்தனத்தோடு அவ்வளவு அதிக உறுதியற்றதாகவும் சந்தேகத்திற்குரியதாகவும் இருக்கும் ஒரு கோட்பாடு ஏற்கப்பட முடிந்ததைப்பற்றி வருங்கால சந்ததிகள் ஆச்சரியப்படுவார்கள்.” கனடாவிலுள்ள ஒன்டாரியோவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் ஆற்றிய விரிவுரைகளில் பிரிட்டிஷ் ஒலிபரப்பாளரும் எழுத்தாளருமான மால்கம் மகரிஜ்ஜின் (1903-90) வார்த்தைகள் அவை. அவர் மேலுமாகச் சொன்னார்: “வரலாற்றிலேயே எதையும் மிக எளிதில் நம்புகிற ஒரு யுகமாக நான் இதைப் பற்றி ஏற்கெனவே பேசினேன் என்று நினைக்கிறேன்; அதற்கு பரிணாமத்தை ஒரு உதாரணம் என்று சொல்லலாம்.”
அப்படியென்றால் ஏன் அத்தனை அநேக விஞ்ஞானிகள் பரிணாமத்தை ஏற்றுக்கொள்கின்றனர்? அந்தக் கேள்வியும் மற்றுமநேகமும் உயிர்—அது எப்படி வந்தது? பரிணாமத்தின் மூலமா படைப்பின் மூலமா? என்ற 254-பக்க புத்தகத்தில் விளக்கமாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை வாசிக்க விரும்பினால், உங்கள் பகுதியில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்புகொள்ளுங்கள் அல்லது பக்கம் 5-ல் பட்டியலிடப்பட்டுள்ள உங்களுக்கு மிக அருகாமையிலிருக்கும் விலாசத்திற்கு எழுதுங்கள்.
யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ கல்விபுகட்டும் வேலை மனமுவந்த நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது.