இது உண்மையில் ஒரு ஃபின்ச்குருவியா?
ஃபின்ச்குருவிகள் உலகெங்கும் அறியப்பட்டிருக்கின்றன. அவை கடுங்குளிரான அன்டார்ட்டிக்காவைத்தவிர எல்லா கண்டங்களிலும் வாழ்கின்றன. பல சமுத்திர தீவுகள்கூட தங்கள் ஃபின்ச்குருவி கூட்டத்தைக் கொண்டிருக்கின்றன. அவை பொதுவாக மிக அழகாக இருக்கின்றன. உதாரணமாக அமெரிக்க பொன் ஃபின்ச்குருவியை (Carduelis tristis) எடுத்துக்கொள்ளுங்கள். அவை “மஞ்சளும் கறுப்புமான பகட்டான வண்ணங்களுடன், . . . காற்றுவெளியின் காணக்கூடாத குன்றுகள், பள்ளத்தாக்குகளின் மீது அவை திடீர் திருப்பங்களுடன் பறப்பதும் அவற்றின் இனிய ஜஸ்ட்-லுக்-அட்-மி என்று சொல்வது போன்ற இச்-இச் ஒலிகளும், பரந்த திறந்தவெளி நாட்டுப்புறத்திற்கு விசேஷித்த கிளர்ச்சியூட்டுகிறது!—வட அமெரிக்க பறவைகள் பற்றிய புத்தகம் (Book of North American Birds).
என்றபோதிலும், கொள்ளை கொள்ளும் அழகுக்குக் குறிப்பிடத்தக்க ஒரு ஃபின்ச்குருவி இருக்கிறது—வடக்கு ஆஸ்திரேலியாவில், குறிப்பாக யூக்கலிப்டஸ் சவானாக்களில் காணப்படும் பதின்மூன்று சென்டிமீட்டர் நீளமான கூல்டியன் வீவர்ஃபின்ச்குருவி (Chloebia gouldiae). உங்களுடைய நாட்டிலும் அவற்றில் சில, பறவைக் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். ஒரு என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது: “சமீப வருடங்களில், இதன் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க விதத்தில் குறைவதற்கு இது காரணமாக இருந்திருக்கிறது.”
விதைகளைப் பிடிப்பதற்கும், அவற்றின் ஓடுகளை அகற்றுவதற்கும் உட்புறம்நோக்கி அமைக்கப்பட்ட அலகுகளை ஃபின்ச்குருவிகள் கொண்டிருக்கின்றன. “ஒவ்வொரு விதையையும், மேல்வாயின் பக்கமாக அமைந்துள்ள ஒரு விசேஷித்த பள்ளத்தில் செருகி வைக்கப்பட்டு, கீழ்த்தாடையை அதனிடமாக உயர்த்துவதன்மூலம் நொறுக்கப்படுகிறது. நாக்கின் உதவியால் அதன் புற ஓடு நீக்கப்படுகிறது; அவ்வாறு அதனுள்ளிருக்கும் பருப்பு வெளியே கொண்டுவரப்பட்டு, விழுங்கப்படுகிறது.” (பறவைகள்: அவற்றின் வாழ்க்கை, அவற்றின் செயல்முறைகள், அவற்றின் உலகம் [Birds: Their Life, Their Ways, Their World]) என்றபோதிலும், கூல்டியன் ஃபின்ச்குருவியைப் பொறுத்தவரையில், “[அந்த விதைகளை] தரையிலிருந்து பொறுக்கி எடுப்பதற்குப் பதிலாக, விதைகளுக்குரிய இடத்திலிருந்தே அவற்றைக் குட்டிக்கரணமடித்துப் பறந்து கொத்திச்செல்கிறது அல்லது பக்கத்திலுள்ள சிறுகிளையில் பற்றிக்கொண்டு விதைகளைக் கொத்தி எடுத்துக்கொள்கிறது.”—தி இல்லஸ்ட்ரேட்டட் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் பர்ட்ஸ்.
கூல்டியன் ஃபின்ச்குருவியை நீங்கள் எப்போதாவது பார்த்தால், ஒரு சிறிய பறவையில் அவ்வளவு வண்ணமிக்க ஒரு படைப்பைக் காணக் கொடுத்துவைத்ததற்காக ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் உணருங்கள்.
[பக்கம் 31-ன் படம்]
அமெரிக்க பொன் ஃபின்ச்குருவி
[பக்கம் 31-ன் படம்]
கூல்டியன் ஃபின்ச்குருவி