நவீன நாளைய ஒரு நல்ல சமாரியன்
கனடாவில் உள்ள ஒரு பெண் ஒரு வாகன விபத்துக்குள்ளானார். நவீன நாளைய நல்ல சமாரியன் ஒருவர் அந்தப் பெண்ணுக்கு உதவிபுரிந்தார். (லூக்கா 10:29-37) அவருடைய தயவினால் மனம் நெகிழ்ந்து, அந்தப் பெண் தி ஜார்ஜ்டவுன் இன்டிபென்டன்ட் செய்தித்தாளுக்கு கீழ்க்கண்டவாறு எழுதினார்:
‘அன்பார்ந்த ஆசிரியருக்கு:
‘நான் இரண்டு காரணங்களுக்காக எழுதுகிறேன். முதலாவதாக, கடந்த வார இறுதியில் என்னுடைய கார் கட்டுப்பாடிழந்து ஒரு சாக்கடையில் முட்டி மோதியபோது எனக்கு உதவிபுரிந்த ஜார்ஜ்டவுன் உள்ளூர்வாசி ஒருவருக்கு நன்றி செலுத்த விழைகிறேன்.
‘என்னோடு ஓட்டிக்கொண்டு வந்த Mr. ஜான் ஸான்டர்ஸ் தன்னுடைய காரை நிறுத்தினார். அவர் எனக்கு முதலுதவி கொடுக்கத் தொடங்கினார், அது அதிக நம்பிக்கையளிப்பதாய் இருந்தது. ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் போலீஸும் வரும்வரை அவர் என்னுடனேயே இருந்தார். Mr. ஸான்டர்ஸைப் போன்ற ஒரு நல்ல சமாரியன் உங்கள் சமுதாயத்தில் வாழ்ந்திருப்பதற்கு உங்கள் சமுதாயம் ஆசீர்வதிக்கப்பட்டதாய் இருக்கிறது.
‘Mr. ஸான்டர்ஸ் என் கணவரையும் என்னையும் பார்த்து, நான் நன்றாக இருக்கிறேனா என்று அறிந்துகொள்ள மருத்துவமனைக்கு வந்தார். Mr. ஸான்டர்ஸ் ஜார்ஜ்டவுனில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமைக் காரியாலயத்தில் பணிபுரிகிறார் என்று அறிந்து நான் அதிர்ச்சியுற்றேன். அவர்கள் மருத்துவத்தில் விசுவாசம் வைப்பதுகிடையாது என்று நான் எப்போதும் நினைத்திருந்தேன். இதோ, இங்கே அவர்களில் ஒருவர் என் சார்பாக முதலுதவி மருத்துவ பயிற்சியை உபயோகித்திருக்கிறார். நான் எழுதுவதற்கான இரண்டாவது காரணத்திற்கு இது என்னைக் கொண்டுவருகிறது.
‘என் வீட்டுக்கு யெகோவாவின் சாட்சிகள் வந்திருந்தபோது நான் அவர்களிடம் காண்பித்த முரட்டுத்தனத்திற்காக நான் அவர்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கோர விரும்புகிறேன். நீங்கள் வெறிபிடித்தவர்கள் என்று நான் எப்போதும் கருதியிருந்திருக்கிறேன். என்னுடைய இந்தப் பயங்கரமான கற்பனை தவறு என்று Mr. ஸான்டர்ஸ் நிரூபித்துவிட்டார். நீங்கள் எல்லாரும் சரியானது என்று நினைப்பதைச் செய்ய முயற்சிக்கும் சாதாரண மக்கள்தான்.
‘மீண்டும் நன்றி Mr. ஸான்டர்ஸ், உங்கள் விசுவாசத்தில் தொடர்ந்து நிலைத்திருங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
‘T. M., டொரன்டோ’
‘உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூரவேண்டும்’ என்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகின்றனர். (லூக்கா 10:27) யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினாலோ அல்லது உங்களுக்கு ஒரு இலவச பைபிள் படிப்பு நடத்தப்படும்படி விரும்பினாலோ தயவுசெய்து Watchtower, H-58, Old Khandala Road, Lonavla 410 401. Mah., என்ற விலாசத்துக்கோ பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்துக்கோ எழுதுங்கள்.