உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g93 7/8 பக். 32
  • உலக நடப்புகளை அறிந்திருத்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலக நடப்புகளை அறிந்திருத்தல்
  • விழித்தெழு!—1993
விழித்தெழு!—1993
g93 7/8 பக். 32

உலக நடப்புகளை அறிந்திருத்தல்

யெகோவாவின் சாட்சிகளுடைய ஜெர்மானிய கிளைக் காரியாலயம் 77 வயதுள்ள ஒரு கத்தோலிக்க துறவியிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றது அவர் விவரித்தார்:

“என்னுடைய மடம் 25 வருடங்களுக்குமுன் மூடப்பட்டதிலிருந்து, நான் ஒரு முதியோர் இல்லத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். உங்களுடைய நம்பிக்கைகள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் இன்று நான் காவற்கோபுரம் (ஆங்கிலம்) பத்திரிக்கையில் வாசித்தது. நீங்கள் உலக நடப்புகளை அறிந்திருக்கிறீர்கள் என்று என்னை ஒப்புக்கொள்ள வைத்தது. ‘பைபிள் தீர்க்கதரிசனத்திற்கு நிறைவேற்றமாயிருந்துவரும் உலக சம்பவங்களின் பேரில் கவனம் செலுத்துகிறது,’என்று பக்கம் இரண்டு அளிக்கும் வாக்கை நிறைவேற்றுகிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே ஒரு காவற்கோபுரம்தான்.

“நீங்கள் 1 தெசலோனிக்கேயர் 5:3-ல் உள்ள ‘“சமாதானமும் சவுக்கியமும்” உண்டென்று அவர்கள் சொல்லும்போது அழிவுசடிதியாய் அவர்கள் மேல் வரும்,’ என்ற அப்போஸ்தலர் பவுலின் வார்த்தைகளைத் தைரியமாகவும் சரியாகவும் விளக்குகிறீர்கள். என்னுடைய சர்ச்சில் வேறு எங்கும் இத்தகைய விளக்கங்களை நான் கேட்கிறதேயில்லை. யெகோவாவின் சாட்சிகள்மேல் பரிசுத்த ஆவியின் கிரியைகள் உள்ளன என்பதை ஓர் ஆள் மறுக்கமுடியாது. . .உங்களுடைய பத்திரிகைகளை ஒழுங்காகப் படிக்க நான் மகிழ்ச்சியுள்ளவனாய் இருப்பேன்.”

இந்தக் கத்தோலிக்கத் துறவியின் முன்மாதிரியைப் பின்பற்றி, உலக சம்பவங்கள் எவ்வாறு பைபிள் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுகின்றன, மற்றும் கடவுளுடைய ராஜ்யம் எவ்வாறு விரைவில் துன்மார்க்கத்தை அழித்து ஓர் உலகளாவிய பரதீஸைப் படைக்கும் என்பதைப்பற்றி நீங்களும்கூட அதிகத்தை அறிந்துகொள்வோம். (g93 2/22)

[பக்கம் 32-ன் படம்]

THE WATCHTOWER

Peace and Security

The Bible’s view

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்