மர்ம ஒளி—எங்கிருந்து?
வட துருவ மற்றும் தென்துருவ புவிஈர்ப்புக் காந்த புலங்களுக்கு அருகில் வாழும் மக்களுக்கு, வட ஒளி, தென் ஒளி அல்லது துருவ மின்னொளிகள், ஆச்சரியத்திற்கான ஒரு காரணமாக இருந்துவந்திருக்கின்றன. பூமியின் உள்ளே, உருகிய உலோகத்தின் தூண்களாய்ப் பூமி சுழலும்போது உயர்ந்தும் தாழ்ந்தும் முறுக்கப்படுகின்றன என்பதாக இப்பொழுது நம்பப்படுகிறது. இது பூமி சுழலும் அச்சின் கோட்டோடு நேர்ப்படுத்தப்பட்ட வகையில் காந்த புலங்களை உண்டாக்கக்கூடிய மின்னலைகளை உற்பத்தி செய்கிறது. இந்தக் காந்த புலங்களின் காரணமாக சூரியனிலிருந்து பூமியை வந்தடையும் ஒளிவீசும் துகள்கள் ஒரு காணப்படக்கூடிய விளைவை உண்டாக்குகின்றன. சூரிய களங்கங்களோடு சேர்ந்து சூரியனில் திடீர்சக்தி வெளிப்படுகையில் பூமியை வந்தடையும் துகள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இந்த விளைவும் அதிகரிக்கப்படுகிறது. பூமியின் காந்த புலங்கள் இந்தத் துகள்களில் அநேகத்தைப் பிடித்து வைத்துக்கொள்கின்றன. இந்தக் காந்த துருவங்களைச் சுற்றிக் காணப்படும் பாகத்திலுள்ள நம்முடைய வளிமண்டலத்திலுள்ள அணுக்கள் சக்தியூட்டப்படுகின்றன, அப்பொழுது அவை காணக்கூடிய ஒளிகளைப் பல நிறங்களில் உற்பத்தி செய்கின்றன. ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் அணுக்கள் சூரியனிலிருந்து வரும் இந்தச் சக்தியினால் சக்தியூட்டப்படும்போது நிறங்கள் உண்டாக்கப்படுகின்றன. இது காணக்கூடிய ஒளியைச் சிகப்பு/பச்சை/ஊதா அலை நீளங்களில் உற்பத்திசெய்கின்றன. பெரும்பாலான துருவ மின்னொளி சிறிதளவு சிகப்பு மற்றும் ஊதா பகுதிகள் கலந்த பச்சை நிறத்திலிருக்கின்றன. பூமியின் வடபாகத்தில், இந்த ஒளி வடதுருவ விண்ணொளி (லத்தீன், வடதுருவ வைகறை) என்றும் தென்பாகத்தில் தென்துருவ விண்ணொளி (தென்துருவ வைகறை) என்றும் அழைக்கப்படுகிறது.
“வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது,” என்று பூர்வகால சங்கீதக்காரன் சொல்கிறார். (சங்கீதம் 19:1) வானங்களின் சிருஷ்டிகரைப்பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள நீங்கள் விரும்பினால், உங்கள் பகுதியிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகளோடு தயக்கமின்றி தொடர்புகொள்ளுங்கள் அல்லது இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்போருக்கு எழுதுங்கள்.—பக்கம் 5-ஐ பார்க்கவும். (g92 11/8)