உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g91 10/8 பக். 26-27
  • அவ்வழகிய கொஃபு படிகக்கற்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அவ்வழகிய கொஃபு படிகக்கற்கள்
  • விழித்தெழு!—1991
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • படிகக்கற்கள் என்பவை யாவை?
  • தாதுப்பொருளிலிருந்து தலைசிறந்த படைப்புக்கு
  • உறைந்த வெண்பனி—அதன் கலையழகிற்குப் பின்னிருப்பது யார்?
    விழித்தெழு!—1994
  • வழக்கத்திற்கு மாறான ஒரு புதையல் வேட்டை
    விழித்தெழு!—1993
  • அக அழகு
    விழித்தெழு!—1990
விழித்தெழு!—1991
g91 10/8 பக். 26-27

அவ்வழகிய கொஃபு படிகக்கற்கள்

ஜப்பானிலுள்ள விழித்தெழு! நிருபர்

நீங்கள் எப்போதேனும் படிகக்கல் ஆபரணங்கள் அல்லது சிற்பங்களின் அழகினால் ஈர்க்கப்பட்டிருக்கிறீர்களா? பெரும்பாலும் கவர்ந்திழுக்கப்பட்டிருப்பீர்கள். ஆனால் நம்மில் பலரைப் போன்று, அவை எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதை நீங்கள் அறியாமலிருக்கலாம். இதைப் பற்றிய அதிக விவரங்களுக்கு நாம் ஜப்பானின் பிரசித்தி பெற்ற ஃப்யூஜி மலைக்கு வடமேற்கில் அமைந்துள்ள கொஃபு நகரத்திற்குச் செல்வோம். அது உலகின் இரத்தனக்கற்கள் தயாரிக்கும் மிகப்பெரிய மையங்களில் ஒன்று.

முதலில் நாம் லேப்பிடரி ஆராய்ச்சி நிறுவனத்தை விஜயம் செய்யலாம். முற்காலத்தில் ஜப்பானிய போர்வீரர் படிகக்கற்களைத் தங்கள் அம்புகளின் கூர்முனையாகப் பயன்படுத்தியதைத் தொல்பொருள் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் காட்டுவதை அதன் பணியாளர் நமக்கு அறிவிக்கின்றனர். சில அம்புகளின் கூர்முனைகள் கிறிஸ்துவின் காலப் பகுதியில் இருந்தவகையாக இருக்கலாம். நாம் மேலும், மதத்தில் படிகக்கற்கள் வகித்த பங்கைப் பற்றிக் கற்றுக் கொள்கிறோம். ஷின்டோ மதம் இயற்கையில் காணப்படுகின்ற சூரியன், மலைகள், மரங்கள், பாறைகள் போன்றவற்றை மையமாகக் கொண்டுள்ளது. அசாதாரணமான எதுவும் வணக்கத்துக்குரிய பொருளாக இருந்தது. எனவே, அசாதாரண படிகக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவை அவ்வட்டாரத்தில் அமைந்த கோயில்களில் வைத்துக் காக்கப்பட்டன.

ஜப்பானின் நிலப்பண்ணை முறை சகாப்தத்தில், படிகக்கற்கள் வாங்குவதோ, விற்பதோ அரிதாயிருந்தது. ஆனால் 1867-ல் பேரரசர் மெய்ஜி மன்னர் அரசாளத் தொடங்கினார். அதன்பின் விரைவிலேயே நிலப்பண்ணை முறை ஒரு முடிவுக்கு வந்தது. இந்த மாறுதலோடு மக்கள் இப்போது படிகக்கற்களைத் தாராளமாக அகழ்ந்தெடுத்து விற்றனர். கொஃபுவின் படிகக்கல் தொழில் தோன்றியது.

படிகக்கற்கள் என்பவை யாவை?

யமானாஷி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கென்ரோ ட்ஸுனோடா பதிலுரைக்கிறார்: “படிகம் என்னும் சொல், சீரான, மீண்டும் மீண்டும் தோன்றும் அணுக்களின் அமைப்புடைய எவ்வொரு திடப்பொருளையும் குறிக்கக்கூடும். வைரங்கள், வெண்பனித்திவலை மற்றும் சாதாரண மேசை உப்புங்கூட படிக அமைப்புடையவை.”

படிகக்கற்கள் எங்கிருந்து வந்தன? பேராசிரியர் ஸுனோடா பதிலளிக்கிறார்: “குவார்ட்ஸ் (Quartz) படிகக்கற்கள் பூமியின் மேற்பரப்பில் மிக அதிகமாக உள்ள தனிமங்களாகிய சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றால் அமைந்தது. பூமி படைக்கப்பட்டதற்குப்பின், அது குளிர்ந்து, லேசான வேதியல் பொருட்கள் மேற்பரப்பிற்கு வந்தன. அவை இறுகியபோது, மெல்லியதோர் பாறை ஓடு உண்டாக்கப்பட்டது. எனினும், பூமியின் உள்ளிருந்து சூடான கருங்கல் எரிமலைக் குழம்பு சில நேரங்களில் இந்த ஓட்டை உடைத்து வெளிவருகிறது. விளைவு: ஓர் எரிமலை. வேறு சமயத்தில் பூமியின் மேல் ஓட்டின் கீழ் ஒரு திட்டை ஏற்படுத்தும் அளவுக்கு மட்டும் இந்த எரிமலைக் குழம்பு வெளிவரும்.” நூற்றாண்டுகளினூடே, இந்தச் சூடான குழம்பு உயர்வதும், மெதுவாகக் குளிர்வதும் தெளிவான குவார்ட்ஸ் படிவங்களை உருவாக்க, சரியான தனிமங்கள், வெப்பங்கள் மற்றும் அழுத்தங்களைக் கொண்ட ஒரு கலவையை விளைவித்தது.

“அவற்றின் அளவும் வடிவும் எவ்வாறிருப்பினும், இந்தப் படிகக்கற்கள் எப்போதும் ஆறு பக்கங்களைக் கொண்டவை” எனத் தொடருகிறார் பேராசிரியர். “அவற்றின் வழவழப்பான, தட்டையான மேற்பரப்புகள் 60 டிகிரி கோணத்தில் சந்தித்தன, மேலே ஒரு புள்ளி முனைக்கு வருகின்றன. நிச்சயமாகவே அவை இன்னும் மிக அதிக வெப்ப அழுத்தங்களின் கீழ் உருவாகும் வைரங்களை ஒத்த உறுதி அற்றவை. மோவின் அளவுகோலில், நிலக்கற்கள், சிவப்புக்கற்களின் அளவாகிய ஒன்பதோடு ஒப்பிடுகையில் படிகக்கற்களின் கடினத்தன்மை ஏழாகும். மேலும் அவை மிக பெரிதாக இருக்கக்கூடும்.”

தாதுப்பொருளிலிருந்து தலைசிறந்த படைப்புக்கு

கொஃபுவின் பெரிய பட்டறைகள் ஒன்றின் உரிமையாளர் திரு. மோமாஸ், படிகக்கற்கள் எவ்வாறு அதன் திருந்தாநிலையில் பெறப்பட்டு அழகிய இரத்தனங்களாக உருவாக்கப்படுகின்றன என்பதை நமக்குக் காண்பித்திட தயவுடன் இசைந்துள்ளார். திரு. மோமாஸ் கூறுகிறார்: “கடந்த வருடங்களில் இங்கு கையாளப்பட்ட அதிகமான படிகக்கற்கள் ஜப்பானில் அகழ்ந்தெடுக்கப்பட்டவை. பொருளாதார காரணங்களுக்காக, இயங்கும் சுரங்கங்கள் இப்போது ஜப்பானில் எதுவுமில்லை. ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 480 டன் படிகக்கற்கள் அதிகமாக பிரேஸிலிலிருந்தும், சில கற்கள் ஆப்பிரிக்கா, மேற்கு ஜெர்மனி மற்றும் ஐக்கிய மாகாணங்களிலிருந்தும் இறக்குமதியாகின்றன.”

இந்தக் கற்கள், ரொட்டியை நீங்கள் வெட்டுவது போன்று, தோகக்கல் (கார்பொரன்டம்) வெட்டுவாயால் சீவப்படுகின்றன. பின்பு ஒரு மேஸ்திரி அந்தக் கல்லில் அவர் வெட்டப்போகும் ஒவ்வொரு இடத்தையும் குறியிடுகிறார். வெட்டுவதற்கு எளிதாக கைவினைஞர் அந்த இரத்தினங்களை ஒரு நீண்ட கோலில் ஒட்டுகிறார். பின்பு ஒரு சுற்றும் மேஜை முன் அமர்ந்து கையால் திறமையாக பரப்புகளுக்குப் பட்டை தீட்டுகிறார். அவர் நீள் உருண்டை, வைரம், மரகதம் அல்லது பிற அழகிய வெட்டுக்களைப் பயன்படுத்தலாம். அடுத்து, அந்தக் கற்கள் ஒரு சுழலும் மேஜையில் மெருகிடப்படுகின்றன. ஒவ்வொரு கல்லும் ஒரு தலைசிறந்த படைப்பாக மாற்றப்பட்டுவிட்டன!

இந்தக் கற்கள் நேர்த்தியான சுற்றணைவில் ஓர் அணிகலன் செய்பவரால் வைக்கப்படும்போது, அவற்றின் மதிப்பும் அழகும் அதிகரிக்கின்றன. ஓர் உள்ளூர் அணிகலன் செய்பவரை சந்தித்து ஒரு பளபளக்கும் இரத்தினங்களின் காட்சித்தொகுப்பைக் காண்கிறோம். பலவிதப் பொருட்கள் படிகக்கற்களிலிருந்து செய்யப்படமுடியும் என்பதைக் கவனிக்கிறோம்: உடை ஊசிகள், சட்டைக் கை-பின்கள், காகிதப்பளுக்கள், டை பின்கள், பதக்கங்கள். மேலும், சுவரில் ஃப்யூஜி மலை, வண்ணப் பறவைகள், பிரபல ஜப்பானியக் கெண்டை மீன் ஆகியவற்றின் மனதில் ஆழ்ந்து பதியத்தக்க காட்சித்தொகுப்புகள்.

அணிகலன் செய்பவர்கள், இரத்தினங்களின் இயல்பான அழகை எடுத்துக்காட்டும் வண்ணம் பொன், விழுப்பொன், வெண்தங்கம், அல்லது வெள்ளியை வரையரைக் காணா விதங்களில் பயன்படுத்துகிறார்கள். படிகக்கற்களை விலைமதிப்புமிக்க கற்களாகிய வைரங்கள் போன்றவற்றோடு இணைத்துருவாக்குவது அவற்றின் சீர்மையையும் மதிப்பையும் மிகவும் அதிகரிக்கின்றது. ஆனால், சிறிய குவார்ட்ஸ் படிகக்கற்கள் கவர்ச்சி குறைந்த சுற்றமைவில் இப்போது கடிகாரங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிப்பெட்டிகள், இன்னும் பிற மின்னணு கருவிகளில் மின்காந்த அலைகள் சம்பந்தமாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், அவற்றிற்கு வேறென்ன வருங்கால பயன் கண்டுபிடிக்கப்படும் என்பது யாருக்குத் தெரியும்? இருப்பினும், இவ்விடைக்காலத்தில் நாம் அவற்றின் ஒளிரும் அழகில் மயங்கியவர்களாகப் பார்த்துக்கொண்டிருப்பதில் மனநிறைவு கொள்கிறோம். (g90 4/8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்