மழைக் காடுகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?
மக்கள் கூட்டம் ஒன்று உதை பந்தாட்ட போட்டியை கவனித்துக் கொண்டு கட்டுப்படுத்தமுடியாமல் ஆரவாரம் செய்துகொண்டிருக்கிறது. விளையாட்டு முடிவில்லாமல் தொடரவேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் ஆட்டக்காரர்களைத் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்கிய வண்ணமிருக்கின்றனர். ஒருவர் பின் ஒருவராக மரித்தவர்கள் களத்துக்கு அப்பால் தூக்கிச் செல்லப்படுகின்றனர். விளையாட்டின் வேகம் குறைகையில் மக்கள் கூட்டம் சீற்றமடைகிறது.
காடுகளை அழித்தலும் இதேவிதமாகவே இருக்கிறது. மனிதர்கள் காடுகளை அனுபவித்து மகிழ்கின்றனர், உண்மையில் அவைகளின் மீது சார்ந்திருக்கின்றனர். ஆனால் ஆட்டக்காரர்களுக்கு இணையாக இருக்கும் அவைகளை அழித்த வண்ணமே இருக்கின்றனர்: ஒவ்வொரு தனிப்பட்ட தாவர மற்றும் மிருக இனத்தின் சிக்கலான பின்னிய செயல்விளைவே காடுகளை உயிருள்ளதாக ஆக்குகிறது. ஆனால் இது விளையாட்டைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. காடுகளை அழித்தல் உங்களைப் பாதிக்கிறது. நீங்கள் ஒரு மழைக் காட்டை ஒருபோதும் பார்த்திராவிட்டாலும்கூட அது உங்கள் வாழ்க்கையின் தரத்தை பாதிக்கிறது.
விஞ்ஞானிகள் உயிர் வேற்றுமை என்பதாக அழைக்கும் உயிரினங்களின் பேரளவான பல்வகையே மழைக்காடுகளின் மிகப்பெரிய ஆஸ்தி என்பதாக சிலர் தர்க்கம் செய்கின்றனர். மலேசியா மழைக் காடுகளின் ஒரு சதுர மைலின் ஐந்தில் ஒரு பாகத்தில் சுமார் 835 வகையான மரங்கள் வளரக்கூடும். இது ஐக்கிய மாகாணங்களிலும் கானடாவிலும் சேர்ந்து இருப்பதைக் காட்டிலும் வேகமாக உள்ளது.
ஆனால், இந்த வளமைத் ததும்பிய உயிரின் பல்கூட்டுத் தொகுதி அழியத்தக்கதாக உள்ளது. விஞ்ஞானி ஒருவர் தனிப்பட்ட ஒவ்வொரு இனத்தையும் ஆகாய விமானத்திலுள்ள குடையாணிக்கு ஒப்பிட்டார். அதிகமான குடையாணிகள் கட்டவிழ்க்கப்படுகையில், அதிகமான மற்றவைகள் கூடுதலாக்கப்பட்ட அழுத்தத்தின் கீழ் ஆற்றல்கெடப் பெற ஆரம்பிக்கின்றன. அவ்விதமாக ஒப்பிடுதல் நியாயமானதாக இருந்தால், நம்முடைய கிரகம் தொந்தரவிலிருக்கும் ஒரு “விமானமாக” இருக்கிறது. மழைக் காடுகள் அளவில் சுருங்கும்போது, ஆண்டுதோறும் பத்தாயிரம் தாவர மற்றும் மிருக உயிரினங்கள் இழக்கப்படுவதாக சிலர் மதிப்பிடுகிறார்கள். இவை மறைந்துபோகும் விகிதம், இப்போது, கிரகத்தின் சரித்திரத்திலேயே ஒருபோதும் இருந்திராத அளவு 400 மடங்கு அதிகமாக இருக்கிறது.
விஞ்ஞானிகள், உயிர் வேற்றுமையின் வீழ்ச்சியின் விளைவாக வரும் அறிவின் இழப்பைக் குறித்தே புலம்பிக்கொண்டிருக்கின்றனர். அது ஒரு நூலகத்திலுள்ள புத்தகங்களை வாசிக்கும் முன்பே எரித்துவிடுவதற்கு ஒப்பாக இருப்பதாக அவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் இன்னும் அதிக நிச்சயமான இழப்புகளும்கூட உண்டு. உதாரணமாக ஐக்கிய மாகாணங்களில் மருத்துவர் எழுதிக்கொடுக்கும் மருந்துகளில் சுமார் 25 சதவீதத்துக்கும் அதிகம் வெப்பமண்டல மழைக் காடுகளிலுள்ள தாவரங்களிலிருந்து பெறப்படுகின்றன. குழந்தைப் பருவத்தில் வரும் குருதி வெள்ளை நுண்மப் பெருக்க கோளறுக்கான இப்படிப்பட்ட ஒரு மருந்து, வலிகுறைப்பு விகிதத்தை அதிகரித்திருக்கிறது. 1960-களில் 20 சதவீதமாக இருந்தது 1985-ல் 80 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. ஆகவே உலக வனவாழ்வு நிதித்துறையின் பிரகாரம், மழைக் காடுகள் “மாபெரும் மருந்தகத்தை பிரதிநிதித்துவம்” செய்கின்றது. மேலும் எண்ணற்றத் தாவரங்கள் அவற்றின் சாத்தியமான மருத்துவ உபயோகத்துக்காக ஆய்வு செய்யப்படாதிருப்பதை விட்டுவிட்டாலும் அவை இன்னும் கண்டுபிடிக்கப்படமலே இருக்கின்றன.
மேலுமாக, ஆரம்பத்தில் மழைக் காடுகளில் காணப்பட்ட தாவரங்களிலிருந்து பெரும்பாலான நம்முடைய உணவு பயிர்கள் பெறப்படுவதை நம்மில் வெகு சிலரே அறிந்தவர்களாக இருக்கிறோம். (பக்கம் 11-ல் உள்ள பெட்டியைப் பார்க்கவும்.) இன்றுவரையாக விஞ்ஞானிகள் ஆண்டுமுழுவதும் திறந்தவெளியில் வளரக்கூடிய காட்டிலுள்ள பல்வகை தாவரங்களின் ஜீன்களைச் சேர்த்து, அவற்றின் வலுவற்ற, அதன் வழித்தோன்றிய, வீட்டில் வளரும் பயிர்களில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த அவைகளை பயன்படுத்துகிறார்கள். விஞ்ஞானிகள் அந்த வகையில் பயிர் இழப்பில் கோடிக்கணக்கான பணத்தை மிச்சப்படுத்தியிருக்கிறார்கள்.
மேலுமாக இன்னும் என்ன மழைக் காடு உணவு பொருட்கள், உலகம் முழுவதிலும் விரும்பி உண்ணப்படும் உணவாக வெளிப்பட்டு தோன்றும் என்பது நமக்குத் தெரியாது. வெறும் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, தங்கள் முன்னோர், வாழைப்பழத்தை ஒரு விநோதமான, வேற்று நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு பழமாகக் கருதி, உறையில் தனித்தனியாக மூடிவைக்கப்பட்ட ஒரு வாழைப்பழத்துக்கு சுமார் 32 ரூபாய் கொடுத்தார்கள் என்பது பெரும்பாலான வட அமெரிக்க மக்களுக்குத் தெரியாது.
உலகெங்கும் நிலைமை
காடு அழிக்கப்படுகையில் மனிதன் தானே முடிவான பலியாளாக இருக்கிறான். முழு உலகளாவிய சுற்றுப்புறச்சூழலின் மீது பாதிப்புகள், அவை உலகைச் சுற்றி வளைத்துக்கொள்ளும்வரை வெளிநோக்கிய திசையில் பரவிச் செல்கின்றன. எவ்விதமாக? அசல் வெப்பமண்டல மழைக்காட்டை மற்றொரு முறை நாம் பார்க்கலாம். பெயர் குறிப்பிடும் வண்ணமே, மழைதானே அதன் முக்கிய அம்சமாகும். நாள் ஒன்றுக்கு 8 அங்குலமும் ஆண்டுக்கு 30 அடிக்கும் அதிகமான மழையும் பெய்யக்கூடும்! இந்த விசைமாரியாகப் பெய்யும் பெருமழையை சமாளிப்பதற்காகவே மழைக் காடுகள் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மழைத்துளிகள் மண்கட்டியை அடித்துக்கொண்டு செல்லாதபடிக்கு விதானம் அவற்றின் ஆற்றலை முறித்துவிடுகின்றன. அநேகமாக இலைகள், பலமான மழைத்துளியை தகர்த்துவிடும் நீண்டு ஒடுங்கிய நுனிகளை அல்லது சொட்டு சொட்டாக வடிகின்ற முனைகள் கொண்டவையாய் இருக்கின்றன. இவ்விதமாகக் கடுமையாகப் பெய்யும் மழை, சீராக சொட்டும்படி மாற்றப்பட்டு, இது கீழேயுள்ள நிலத்துக்கு மென்மையான வேகத்தோடு வந்துவிழுகிறது. நீராவி போக்குக்கு வேகமாகத் திரும்பி வளிமண்டலத்துக்கு ஈரத்தைத் திருப்பிவிடும் பொருட்டு நுனிகள் நீரை வேகமாக வடியவிடவும்கூட அனுமதிக்கிறது. வேர் அமைப்புகள், காடுகளின் தரையை வந்தடையும் தண்ணீரில் 95 சதவீதத்தை உறிஞ்சிக்கொள்கிறது. மொத்தத்தில், காடு மழையை ஒரு மாபெரும் துடைப்புப் பஞ்சைப் போல உறிஞ்சிக் கொண்டு பின்னர் மெதுமெதுவாக அதை வெளியிடுகிறது.
ஆனால் காடுகள் மறைய, மழை திறந்த வெளியாக்கப்பட்டிருக்கும் மண்ணின் மீது நேராகவும் கடுமையாகவும் பெய்து, டன்கள் கணக்கில் அவற்றை அடித்துச் சென்று விடுகின்றன. உதாரணமாக, மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள கோட் டி ஐவோரியில், இரண்டரை ஏக்கர்கள் சிறிதே சரிந்திருக்கும் வெப்பமண்டல மழைக் காடு, ஆண்டுக்கு சுமார் ஒரு டன்னில் மூன்னூறில் ஒரு பங்கு மாத்திரமே இழக்கிறது; அதே இரண்டரை ஏக்கர் நிலம், காடுகள் அழிக்கப்பட்டு பண்படுத்தப்பட்ட நிலமாக, ஆண்டுக்கு 90 டன்கள் மண்ணை இழக்கிறது. வெட்டவெளியாக்கப்பட்ட நிலமாக 138 டன்களை இழக்கிறது.
இப்படிப்பட்ட மண், விவசாயத்துக்கு அல்லது மேய்ச்சலுக்கு நிலத்தை பாழாக்கிவிடுவதைக் காட்டிலும் அதிகத்தைச் செய்கிறது. பேரளவில் காடுகளின் அழிவுக்குக் காரணமாக இருக்கும் அணைக்கட்டுகள், அவைகளினாலே நாசமாக்கப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஆறுகள் சுமந்துவரும் வண்டலை சமாளிக்க முடியாமல் உடனடியாக அவற்றின் இயக்கம் தடைபட இவை பயனற்றதாகிவிடுகின்றன. அளவுக்கு அதிகமான வண்டலினால் கடற்கரையோரப் பகுதிகளும் முட்டை அல்லது குஞ்சு பொரிக்கும் நிலப்பகுதிகளும் அழுக்கடைந்துவிடுகின்றன.
மழை மற்றும் வானிலை இயல்புகளின் மேல் பாதிப்புகள் இன்னுமதிக ஆபத்தானவையாக இருக்கின்றன. வெப்பமண்டல மழைக் காடுகளிலிருந்து வெளிப்பட்டு வரும் ஆறுகள் பொதுவாக வருடம் முழுவதுமாக நிரம்பியே இருக்கின்றன, ஆனால் ஆறுகளுக்குள் நீரோட்டத்தை ஒழுங்குபடுத்த காடு இல்லாதபோது, அவை திடீரென பெய்யும் மழைகளின்போது பொங்கி வழிந்தோடி பின்னர் வறண்டு ஓடுகின்றன. வெள்ளப்பெருக்கும் வறட்சியுமான ஒரு சுழற்சி தோன்றுகிறது. மழையில் இயல்புகள் சுற்றிலும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு பாதிக்கப்படக்கூடும், ஏனென்றால், மழைக் காடு நீராவி போக்கினால், உள்ளூர் வளிமண்டலத்தின் பாதி ஈரத்துக்கு காரணமாக இருக்கின்றது. இவ்விதமாக, இந்தக் கடந்த பத்தாண்டுகளின் போது அநேகரை உயிரிழக்கச் செய்த பங்ளாதேஷின் வெள்ளப்பெருக்குக்கும் எத்தியோப்பியாவின் வறட்சிக்கும் காடுகளின் அழிவே காரணமாக இருந்திருக்கக்கூடும்.
ஆனால் காடுகளை அழித்தல் முழு கிரகத்தின் சீதோஷண நிலையையும்கூட பாதிக்கக்கூடும். மழைக் காடுகள் பூமியின் பச்சை நுரையீரல் என்பதாக அழைக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால், அவை காற்றிலிருந்து கரியமில வாயுவை இழுத்துக்கொண்டு, அடிமரம், கிளைகள் மற்றும் மரப்பட்டையை உருவாக்க கரியத்தை பயன்படுத்திக் கொள்கின்றன. ஒரு காடு எரிக்கப்படுகையில், அந்த எல்லாக் கரியமும் வளிமண்டலத்துக்குள் விடுவிக்கப்படுகிறது. பிரச்னையானது, மனிதன் அவ்வளவு கரியமில வாயுவை வளிமண்டலத்துக்குள் விடுவிப்பதன் காரணமாக, (புதைப்படிவங்களை எரிப்பதன் மூலமும் காடுகளை அழிப்பதன் மூலமும்) அவன் ஏற்கெனவே உஷ்ண வீடு பாதிப்பு என்றழைக்கப்படும் அனைத்துலகையும் சூடுபடுத்தும் ஒரு போக்கைத் தொடங்கி வைத்திருக்கக்கூடும். இது கிரகத்தின் துருவத்திலுள்ள பனிமூடிய பகுதிகளை உருகச் செய்யும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது. இது, கடற்கரப் பகுதிகளை வழிந்தோடச் செய்து, கடல் மட்டங்களை உயர்த்திவிடும்.a
அப்படியென்றால், உலகம் முழுவதிலுமுள்ள ஆட்கள் இந்த நெருக்கடியில் உட்படுவது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர்கள் உதவி செய்கிறார்களா? ஏதாவது ஒரு பரிகாரம் இருக்கிறதா? இந்தத் துயரமான நிலைமையில் என்ன நம்பிக்கை இருக்கிறது? (g90 3/22)
[அடிக்குறிப்புகள்]
a செப்டம்பர் 8, 1989 ஆங்கில விழித்தெழு! பார்க்கவும்.
[பக்கம் 11-ன் பெட்டி]
மழைக்காடுகளிலிருந்து இயற்கைவளம்
இப்பொழுது உங்களுக்கு அருகாமையில் வெப்பமண்டல மழைக் காடு துண்டு நிலம் ஒன்று இருக்கிறதா? மழைக் காடுகளில் ஆரம்பத்தில் உலகம் முழுவதிலும் காணப்பட்ட ஒருசில உணவுப் பொருட்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்: அரிசி, மக்காச் சோளம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கூவைக் கிழங்கு அல்லது மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, வாழைப்பழங்கள், ஆரஞ்சுகள், காப்பி, தக்காளி, கொக்கோ விதை, அன்னாசிப் பழங்கள், பெரிய பேரிக்காய், வனிலா அவரைச் செடி, சிறந்த புளிச்சுவைப் பழம், பல்வேறு கொட்டைகள், நறுமணப் பொருட்கள் மற்றும் தேயிலை. முழுவதுமாக உலகின் உணவுப் பயிர்களில் பாதி, மழைக் காடுகளிலிருந்து வந்த தாவரங்களின் பேரில்தானே சார்ந்ததாயிருக்கிறது! அவை வெறுமென ஒருசில உணவுப் பொருட்கள்தானே.
மருந்துகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்: கொடி முந்திரியிலிருந்து எடுக்கப்பட்ட வெடியக் கலப்புடைய வேதியற் பொருட்கள் (Alkaloids), அறுவை மருத்துவத்துக்கு முன்பாக தசை நரம்புகளை தளர்த்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது; வீக்கத்தை எதிர்த்து போரடுவதற்குரிய மருந்தின் (Hydrocortisone) முக்கியமான கலவைக்கூறுகள், குளிர்க்காய்ச்சலை எதிர்த்துப் போரட கொயினா, மாரடைப்புக்கு சிகிச்சையளிக்க மருந்து (Digitalis), கருத்தடை மாத்திரைகள் (Diosgenin) மற்றும் வாந்தியை உண்டுபண்ணும் மருந்து (Ipecac) இவை அனைத்துமே மழைக் காடு தாவரங்களிலிருந்து வருகின்றன. மற்றத் தாவரங்கள், எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய், அதோடு வயிற்றுப் போக்கு, காய்ச்சல், பாம்புகடி, இமையிணைப் படலத்தின் அழற்சி இன்னும் மற்ற கண் கோளறுகளை எதிர்த்து போரடுவதில் நம்பிக்கையூட்டுவதாக இருந்திருக்கின்றன. வேறு என்ன நோய் நீக்கும் மருந்துகள் இன்னும் மறைந்திருக்கக்கூடும் என்பது அறியப்படவில்லை. ஒரு சதவீதத்துக்கும் குறைவான மழைக் காடு தாவர இனங்களையே, விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கின்றனர், தாவரயியல் வல்லுநர் ஒருவர் வருத்தத்தோடு சொன்னார்: “இருக்கிறது என்பதாகவும்கூட நாம் அறிந்திராத காரியங்களை நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம்.”
என்றபோதிலும் மறைந்துகொண்டிருக்கும் காடுகளிலிருந்து இன்னும் அதிகமானப் பொருட்கள் கிடைக்கின்றன: இரப்பர் மரப்பால், மரப்பிசின், மெழுகு, அமிலங்கள், சாராயம், நறுமணச்சுவையூட்டும் பொருட்கள், இனிப்பூட்டும் பொருட்கள், சாயங்கள், நீரில் மூழ்காமல் மிதக்க வைக்கும் சட்டைகளில் பயன்படுத்தப்படுவது போன்ற நார்ப்பொருட்கள், அதுக்கும் சவ்வு செய்ய பயன்படும் மரப்பிசின், மூங்கில் மற்றும் உலகெங்கிலுமுள்ள மாபெரும் தொழிற்சாலைக்கே அடிப்படையாக இருக்கும் பிரம்புபனை.
[பக்கம் 9-ன் படம்/வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
காடு வகிக்கும் பாகம்
விதானம் மண்ணைக் கடுமையாகப் பெய்யும் மழையிலிருந்து பாதுகாக்கிறது
காடுகள் வளிமண்டலத்துக்கு ஈரத்தையும் பிராண வாயுவையும் கூட்டுகின்றன
தாவரங்கள் கரியத்தை உறிஞ்சிக்கொண்டு சேமித்து வைக்கின்றன
வேர் அமைப்புகள் ஆறுகளுக்கு செல்லும் நீரோட்டத்தை ஒழுங்குபடுத்த உதவிசெய்கின்றன
[பக்கம் 10-ன் படம்]
காடுகளின் அழிவால் ஏற்படும் பாதிப்புகள்
வளிமண்டலத்தோடு ஒப்பிட ஈரத்தில் ஏற்படும் குறைவு வறட்சியை அர்த்தப்படுத்துகிறது
மழை பாதுகாக்கப்படாத மண்ணை அரித்தழித்துவிடுகிறது. வெள்ளப் பெருக்கு அதிகரிக்கிறது
மரங்களை அழிப்பது கரியத்தை விடுவித்து உஷ்ணவீடு பாதிப்பைக் கூட்டுகிறது