பக்கம் இரண்டு
மனிதன் பூமியின் மழைக்காடுகளை சூறையாடிக்கொண்டிருக்கிறான் என்றபோதிலும் இந்தக் காடு இந்தக் கிரகத்தின் மீது உயிர்வாழ்வதற்கு அதிமுக்கியமானவையாகும். அவை, பிராணவாயு, உணவு எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட உயிர் பொருட்களை உற்பத்தி செய்யும் அமைதியான, அழகான தொழிற்சாலைகளாகும். எல்லாக்காடுகளுமே அழிக்கப்படுமேயானால், பூமியின் மீதுள்ள உயிரினங்கள் அளவிட முடியாத வகையில் துன்புறும். அவை வேகமாக மறைந்துகொண்டிருக்கின்றன! “கடவுளால் மாத்திரமே ஒரு மரத்தை உண்டுபண்ண முடியும்” என்று எழுதினான் ஒரு கவி. உண்மைதான். ஆனால் வேறு எதுவும் மனிதனைப் போல அவற்றை அழிப்பதில்லை.