சீரழிந்துகொண்டிருக்கும் சுற்றுப்புறச்சூழல்
‘சீக்கிரத்தில் ஏதாவது செய்யப்படாவிட்டால், நாம் எங்கும்பரவிய பொருளாதார வீழ்ச்சியையும் சமுதாயக் குழப்பத்தையுமே எதிர்பார்க்கலாம்’
அதுதான் ஒரு சுற்றுப்புறச்சூழல் ஆய்வு நிறுவனமாகிய உவர்ல்டுவாட்ச் இன்ஸ்டிடியூட் தலைவர் லெஸ்டர் புரெளனின் செய்தி. அவர் “உலக நிலை” ஆண்டு அறிக்கையில் இப்படியாகச் சொன்னார்.
பூமியின் சுற்றுப்புறச்சூழல் தொடர்ந்து மோசமடைந்துகொண்டிருக்கிறது என்று புரெளன் சொன்னார். ஓசோன் பாதிப்பு, வறட்சி, காடுகள் அழிக்கப்படுதல், மண்ணறிப்பு, மற்றும் மக்கள்தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டாலொழிய, “பொருளாதார வீழ்ச்சி தவிர்க்கமுடியாததாகக்கூடும்.” 1984 முதல் உலக உணவு உற்பத்தி நபருக்கு 14 சதவீதமாகக் குறைந்துவிட்டிருக்கிறது, மற்றும் தானிய இருப்பு கடந்த 15 ஆண்டுகளாக மிகவும் தாழ்ந்த நிலையை எட்டியிருக்கிறது.
புரெளன் மேலும் கூறினார்: “காலம் நம்முடைய பக்கத்தில் இல்லை. . . . அதை நாம் 1990-களில் செய்யவேண்டும். அதற்கும் பிறகு என்பது மிகவும் பிந்தியாகிவிடும். . . . நம்மை எது அதிர்ச்சியுடன் விழிக்கச்செய்யும் என்றால், மற்றொரு வறட்சியை அறுவடை செய்வதுதான். அப்பொழுது நமக்கு ஏற்றுமதி செய்வதற்கு தானியம் இல்லாதிருப்பதையும், தானிய விலை இரட்டிப்பும் மும்மடங்கும் ஆவதையும் காண்போம். பொருளாதார அதிர்ச்சியலை எண்ணெய்த் தட்டுப்பாடுகளை ஓர் உல்லாசப்பயணமாகத் தோன்றச்செய்யும்.” அவர் மேலும் குறிப்பிட்டதாவது: “இது சில ஆப்பிரிக்க தேசங்களுக்கு ஏற்கெனவே மிகவும் பிந்திவிட்டது. . . . அங்கே காரியங்களைத் திருப்பிட எந்த வழியும் இல்லை. . . . அநேகமாக அடுத்தது லத்தீன் அமெரிக்காவாக இருக்கும்.”
இப்படிப்பட்ட போக்குகள் பஞ்சம், கொள்ளைநோய், யுத்தம், மரணம், நம்முடைய காலத்தில் மனிதன் “பூமியைக் கெடுக்கிற” காரியம் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் பைபிள் தீர்க்கதரிசனங்களுக்கு இசைவாக இருக்கிறது. இது “உலகமுண்டானது முதல் இதுவரக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவத்”தில் முடிவுறும் என்பதாக இயேசு முன்னறிவித்தார். அது கடவுள் அமைத்திடும் ஒரு புதிய உலகத்திற்கு வழிவகுக்கும், இந்தத் தற்போதைய ஒழுங்குமுறைக்கு முடிவைக் குறிக்கும்.—வெளிப்படுத்துதல் 6:1–8; 11:18; மத்தேயு 24:21; 2 பேதுரு 3:10–13. (g90 2/8)