உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g90 9/8 பக். 20-21
  • முடமாக்கும் ஒரு பருப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • முடமாக்கும் ஒரு பருப்பு
  • விழித்தெழு!—1990
  • இதே தகவல்
  • இந்தியப் பெண்கள்—21-ம் நூற்றாண்டிற்கு செல்லுதல்
    விழித்தெழு!—1995
  • ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகள்
    விழித்தெழு!—2015
  • இந்தியாவில் அறுவடையில் களிகூருதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • நோயற்ற உலகம்
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1990
g90 9/8 பக். 20-21

முடமாக்கும் ஒரு பருப்பு

இந்தியாவின் விழித்தெழு! நிருபர்

ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் உறக்கத்திலிருந்து திடீரென வலியால் துடித்து எழுந்ததை ஒரு வாலிப இந்திய விவசாயத் தொழிலாளி ஏறக்குறைய மறந்து விட்டான். பல இரவுகளாக அவனுடைய பின் காலின் தசை நார்கள் கடினமான கட்டிகளாக இறுக்கிக் கொண்டிருந்தன, 10 முதல் 15 நிமிடங்கள் வரையான திடீர் வலித்துடிப்புகளால் அவதிப்பட்டான். ஆனால் இந்நாள் காலை விழித்தெழுந்து நிற்கும் பொழுது திடீரென தரையில் விழுந்து விடுகிறான். சில மணிநேரங்களுக்குள் அவனுடைய கால்கள் இறுக்கமாகவும் கனமாகவும் ஆகின்றன, மேலும் அவனுடைய காலடிகள் தடுமாற்றமாயும் பொருத்தமற்றதாயும் ஆகின்றன.

லாதிரிஸம் என்ற பக்கவாத நோயின் ஆரம்ப நிலையில் அவன் வேதனைப்படுகிறான் என்பதை இந்த வாலிபன் சிறிதேனும் நினைத்துப்பார்க்கவில்லை. தான் அன்றாடகம் உண்ணும் ஒரு குறிப்பிட்ட பருப்புதான் இதற்குக் காரணம் என்பதை அவன் சந்தேகிக்கவே மாட்டான். (ஆனால் மற்ற பருப்பு வகைகள் ஊட்டமளிப்பதாயும் ஆரோக்கியமானதாயும் இருக்கின்றன.)

பருப்பில் ஒரு விஷம் இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆட்களைப் பாதிக்கும் இந்தப் பருப்பு, லாதிரஸ் சட்டிவஸ் (Lathyrus sativus) என்ற ஒரு கடினமான பருப்பிலிருந்து அதன் பெயரைப் பெற்றுக்கொள்கிறது. இந்தியர்கள் பொதுவாக இதைக் கேசரி டால் என்ற பெயரால் அறிந்திருக்கின்றனர். ஆனால் அதற்கு வேறு அநேக உள்ளூர் பெயர்கள் உள்ளன. இது பொதுவாக மாவாக அரைக்கப்பட்டு, தட்டையான புளிப்பில்லா ரொட்டி போல் திரட்டப்பட்டு உபயோகிக்கப்படுகிறது. அடிக்கடி இதை வேக வைத்து கஞ்சியாக சாப்பிடுகின்றனர். என்றபோதிலும், இந்த இரண்டு விதமான தயாரிப்புகளும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஓர் ஆற்றல் மிக்க நஞ்சை நீக்காமல், குணமாக்க முடியாத லாதிரிஸம் என்ற நோயைக் கொண்டு வருகிறது.

வாலிப ஆண்கள் பொதுவாக அதிக பசியுள்ளவர்கள். விசேஷமாக இந்த நோய்க்கு ஆளாகிறார்கள். ஆனால் மறுபட்சத்தில், வெகு சில பெண்களே அதனால் வேதனையடைகிறார்கள், ஏனென்றால் பெண்களின் உட்சுரப்பு நீர் ஏதோ ஒரு பாதுகாப்பை அளிக்கிறது. வலியும், திடீர் தசை வலித்துடிப்பும் இந்த நோயின் ஆரம்ப கால அறிகுறிகளாகும். இந்நிலையில், உட்கொள்ளும் உணவு மாற்றப்பட்டால், அந்த நோய் நிறுத்தப்படலாம். இல்லாவிடில், அந்த ஆள் அடி எடுத்து வைக்கும்போது குதிங்கால் தரையில் பதியாமல், அவர் கால்விரல்களினால் நடக்கும்படிச் செய்து, மடங்கின முழங்கால்களையும், நீண்ட கணுக்கால்களையும் உருவாக்கும். இந்த வியாதி முற்றிய நிலையில் நடப்பதற்கான எல்லா முயற்சிகளையும் தடுக்கும், மேலும் அந்த நபர் தவழ்ந்து செல்ல வேண்டும் அல்லது தன்னுடைய கைகளினால் தன் உடலை தாங்கி நகர்ந்து செல்ல வேண்டும்.

இந்த நிலைக்கு அந்நோய் வரும்போது அதனுடைய பாதிப்புகள் ஒருவனை பாழ்க்கடிப்பதாய் இருக்கின்றன. ஒரு சமயத்தில் நல்ல ஊதியம் சம்பாதிப்பவரும், குடும்ப பராமரிப்பாளருமான இவர் தன் வாழ்நாளின் மீதிப்பகுதியை சமூக பாரமாக கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்கான காரணமும் தடுக்கும் முறையும் 200 ஆண்டுகளுக்கு முன்பு அறியப்பட்டதாயிருந்த போதிலுங்கூட இந்த நோய் ஏன் தொடர்ந்து ஆட்களை முடமாக்கிக் கொண்டுவருகிறது?

ஏன் இவ்வளவு பரவலாகக் காணப்படுகிறது? லாதிரிஸம் ஒரு சமூக பொருளாதார நோய். இந்தியாவின் தேசீய சத்துணவு நிறுவனத்தின்படி லாதிரிஸம் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 75 சதவீதத்தினர் நிலம் இல்லாத வேலையாட்கள், அதில் அநேகர் நில சொந்தக்காரருக்குக் கடன்பட்டிருக்கின்றனர். அப்பேர்ப்பட்ட வேலையாட்களுக்கு ஊதியம் பணமாக இன்றி உணவு தானியங்களாக அளிக்கப்பட்டது, அதில் லாதிரஸ் பருப்பும் உட்பட்டிருக்கும். அந்தப் பருப்பு எளிதாக வளருவதன் காரணமாகவும், அதன் தண்டுகளும் இலைகளும் கால்நடைகளுக்கு உணவாக அளிக்கப்படுவதாலும், நில சொந்தக்காரர்கள் அதை உபயோகிக்கின்றனர். தட்டுப்பாடு இருக்கும் சமயங்களில் வேலையாட்கள் வெறும் லாதிரஸ் பருப்பு மட்டும் ஊதியமாகப் பெறுகின்றனர்.

சிலர் அதனுடைய இனிப்பான நறுமணத்தை விரும்புவதால் அதை ஒழுங்காக சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக் கொள்கின்றனர். வேறு சிலர் அதை விற்க முடியாமல் அல்லது அந்தப் பருப்பை மாற்ற முடியாமல் அதைச் சாப்பிட்டு உயிர் பிழைக்கின்றனர். மற்ற உணவுப் பொருட்கள் பெற முடியாதவர் முடமாக்கும் பருப்பை அதிக அளவில் உட்கொள்கின்றனர். அன்றாடக உணவின் மூன்றில் இரண்டு பாகம் அல்லது அதற்கும் அதிகம் லாதிரஸ் பருப்பு சாப்பிட்டால், அது நோயை ஆரம்பிக்கக்கூடும்.

அநேக மாநிலங்கள் லாதிரஸ் பருப்பு விற்பனை செய்வதையும், ஊதியமாக அதன் உபயோகத்தையும் தடை செய்திருந்த போதிலும் இந்தியர்களின் உணவிலிருந்து இந்தப் பருப்பு சீக்கிரத்தில் மறைந்து போகும் என்று தெரியவில்லை. இந்தியாவின் விளைநிலத்தின் ஏறக்குறைய 25 இலட்சம் ஏக்கர் நிலத்தில் இன்னும் லாதிரஸ் பருப்பு விதைக்கப்பட்டிருக்கிறது. பேராசை மிக்க வியாபாரிகள் மற்ற தானியங்களோடு அதைக் கலப்படம் செய்து பட்டணத்தில் இருப்பவர்களிடம் விற்று விடுவதைத் தடுக்க எதுவும் இல்லை.

இதற்கு ஒரு தீர்வு இருக்கிறதா? இந்தப் பிரச்னையை எதிர்த்துப் போரடுவதற்கு லாதிரிஸம் பற்றி ஊக்கமான கல்வி புகட்டப்படவேண்டும் என்றும், நில சொந்தக்காரர்கள் மற்ற பயிர்களை வளர்ப்பதற்குத் தூண்டுதல் தேவை என்றும் அதிகாரிகள் நம்புகின்றனர். உதாரணமாக இந்தப் பருப்பைக் கொதிக்க வைத்த சுத்தமான நீரில் சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு ஊற வைத்து, பிறகு அதை வடிகட்டி, சுத்தமான நீரில் கழுவி விடுவதன் மூலம் 80–90 சதவிகித நஞ்சை நீக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். பிறகு பருப்பை வெயிலில் காய வைத்து உபயோகப்படுத்தலாம்.

அப்பேர்ப்பட்ட அறிவும் மேலும் மற்ற நிர்வகிப்பு முறைகளும் உதவி செய்யும். என்றாலும், மனிதனுடைய பேராசை நீக்கப்பட்டு ஜனங்கள் தங்கள் சொந்த இலாபத்திற்கு என்று பாராமல் மற்றவர்கள் நலனையும் தேடும் காலம் வரும் வரை லாதிரிஸம் இந்தியாவில் நிலைத்திருக்க எல்லா வாய்ப்புகளும் உண்டு. அதற்காக நாம் தற்போதைய அநீதியான ஒழுங்குமுறக்குப் பின்னால் கடவுளால் உருவாக்கப்படும் வாக்குப்பண்ணப்பட்ட நீதியான புதிய உலகிற்காக எதிர்நோக்க வேண்டும்.—2 பேதுரு 3:13. (g89 10⁄22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்