உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g90 9/8 பக். 22
  • உண்மையில் தீயோர் யாவர்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உண்மையில் தீயோர் யாவர்?
  • விழித்தெழு!—1990
  • இதே தகவல்
  • போதை மருந்துகள் ஏதேனும் நம்பிக்கை உண்டா?
    விழித்தெழு!—1989
  • பரதீஸ்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
  • கொள்ளையடிக்கும் கள்ளப்போதை
    விழித்தெழு!—1999
விழித்தெழு!—1990
g90 9/8 பக். 22

உண்மையில் தீயோர் யாவர்?

பொய்கள் சாத்தானின் அதிகார முத்திரையாக இருக்கிறது என்று பைபிள் கூறுகிறது. இயேசுவின் நாட்களில் யூத குருமார் அவருக்கு விரோதமாகப் பொய்களைப் பரப்பினர். காலங்கள் மாறிவிடவில்லை.—யோவான் 8:44.

யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலையை எதிர்த்து தடை செய்ய முயலுவதற்கு சாட்சிகளின் விரோதிகள் தொடர்ந்து பொய்களையும் சூழ்ச்சிகளையும் பயன்படுத்துகின்றனர். சோஷியலிச நாடுகளில் பொய் என்னவென்றால், சாட்சிகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் CIA-யின் கள்ளப் பிரதிநிதிகள் என்பது! ஒரு கத்தோலிக்க சன்டினிஸ்டா ஆதரவாளர் லண்டனில் இருந்து நியு யார்க் வரை விமானத்தில் செல்கையில் தன் அருகில் அமர்ந்திருந்த விழித்தெழு! நிருபரிடம் அந்த ஆதாரமற்றக் குற்றச்சாட்டை சொல்லி எரிந்து விழுந்தார். இருந்தபோதிலும், சாட்சிகள் அரசியலில் முழுமையாக நடுநிலைமை வகிக்கின்றனர் என்று தகவல் அறிந்த ஒவ்வொரு ஆளும் அறிந்திருக்கிறார்.—யோவான் 17:16; 18:36.

மறுபட்சத்தில், கத்தோலிக்க நாடுகளில் சாட்சிகளின் நற்பெயரைக் கெடுக்க மற்ற பொய்கள் உபயோகிக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் அவர்கள் கள்ள கம்யூனிஸ்ட் ஏஜன்டுகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றனர். அண்மையில் வெனிஸுலாவில் கேரகாஸ் என்ற இடத்தில் சில சாட்சிகளுக்கு விரோதமாக வரம்புக்கு மீறி மிகைப்படுத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஒரு சாத்தானிய சடங்கில் ஒரு சாட்சி மற்ற மூன்று சாட்சிகளால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அல்டிமஸ் நோடிசியாஸ் (Ultimas Noticias) என்ற செய்தித்தாளில் தவறாக அறிவிக்கப்பட்டது! ஒரு பாதிரி அந்தப் பழிச்சொல்லைக் குறித்து தன் சபையின் மற்ற அங்கத்தினர்களிடம், ‘இந்த யெகோவாவின் சாட்சிகள் என்ன வகையான ஆட்கள் என்பதை இது உங்களுக்குக் காட்டுகிறது,’ என்று சொல்வதன் மூலம் எரிகிற நெருப்புக்கு எண்ணெய் வார்த்தார். அதன் உண்மை என்னவாக இருந்தது?

விவாதிக்கப்படும் இந்தப் பெண் மூளைக் கசிவினால் மரித்திருக்கிறாள். எதிராளிகளோ கற்பழிப்புக் கதையை உருவாக்கியிருக்கின்றனர். பின்னர், அதே செய்தித்தாளில் ஒரு பேட்டியும் ஏற்கெனவே வெளியிடப்பட்ட செய்தி பொய் என முழுமையாக ஒத்துக்கொள்ளப்பட்ட தகவலும் பிரசுரிக்கப்பட்டது.

இந்தப் பொய்யைத் தன்னலத்துக்காகப் பயன்படுத்திய பாதிரிக்கு என்ன ஏற்பட்டது? அதைக் குறித்த மறுப்பு பிரசுரிக்கப்பட்ட அதே நாளில் அவர் தொலைக்காட்சியில் கேள்வி கேட்கப்பட்டார். எந்த விஷயத்தின் பேரில்? 46 பவுண்டு கோகேன் என்ற போதை மருந்தை ஸ்பெய்னுக்குக் கடத்திச் செல்ல முயன்ற பொழுது, அவர் பிடிப்பட்டார். அது அவருடைய முதல் குற்றச் செயல் அல்ல. போதை மருந்து கடத்தல்காரராகிய ஒரு முன்னாள் பாதிரியோடு தொடர்புகள் கொண்டு முதலில் 1984-ல் போதை மருந்துகள் கடத்துவதில் தான் உட்பட்டார் என்பதை ஒப்புக் கொண்டார். ஆட்டென்டிக்கோ (Autentico) என்ற பத்திரிகையில் வந்த அறிக்கை சொன்னது என்னவென்றால், தேசத்தைவிட்டு ஓடி, “போதை மருந்து பணத்தினால் மியாமி (ஃப்ளாரிடா, அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள்) என்ற இடத்தில் வாங்கிய வீட்டிற்கு தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்ட” அந்த மற்ற பாதிரியைப் போல இவரும் விடுவிக்கப்படுவாரோ என்று போலீசார் பயந்தனர்.

கேரகாஸில் உள்ள தலைமைக் குரு கார்டினல் லெப்ரன் குற்றவாளியான இந்தப் பாதிரியைக் குறித்து என்ன சொன்னார்? “தந்தை ஜோஸ் லூயிஸ் கில் ஒரு தீயோர் அல்லர் என்பதைத் தெரிவிப்பது என் கடமை.” இருந்த போதிலும், ஒரு தீயோனைக் குறித்த சட்டத்தின் விளக்கம் தலைமைக் குரு சொல்வதிலிருந்து வித்தியாசமாக இருக்கிறது, பாதிரிக்கு 20 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தீயோரைக் குறித்து பைபிளும் தெளிவான விளக்கம் கொடுக்கிறது: “அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வேசிமார்க்கத்தாரும், . . . திருடரும், பொருளாசைக்காரரும் . . . கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” “ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைப்பாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, . . . பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.”—1 கொரிந்தியர் 6:9, 10; 1 பேதுரு 4:15.

ஒரு பாதிரி குற்றம் செய்யும் போது, பொதுவாக அவர் இன்னொரு வட்டாரத்திற்கு மாற்றப்படுகிறார். அண்மைக் காலங்களில் ஐக்கிய மாகாணங்களில் பிள்ளைகளைத் துர்ப்பிரயோகம் செய்த பாதிரிகளின் விஷயத்தில் இது நடந்திருக்கிறது. மனந்திரும்பாத, மாறாத ஒழுக்கயீனமான ஆட்களை தொடர்பறுப்பது அல்லது சபை நீக்கம் செய்தலே பைபிளின் சட்டம். இம்முறையின் மூலம் மட்டுமே கிறிஸ்தவ சபை வேண்டுமென்றே தீயோர்களாய் நடப்பவர்களுக்கு விலகியிருக்க முடியும்.—1 கொரிந்தியர் 5:11, 12. (g89 7/8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்