மெய்யான மதிப்பீடுகளின் ஊற்றுமூலம்
நல்லொழுக்க சட்டத் தொகுப்பு எல்லா மனித சமுதாயங்களிலுமிருக்கிறது. அவர்கள் அதை ஒப்புக்கொண்டாலும் அல்லது ஒப்புக்கொள்ளாவிட்டாலும் எல்லா மனிதர்களும் தங்களுக்கு மேற்பட்டும் அப்பாற்பட்டுமிருக்கும் வழிகாட்டும் ஒரு சக்திக்கான தேவையை உணருகிறார்கள். அவர்கள் இயல்பான அகத்தூண்டுதலால் வணங்க அல்லது சேவிக்க ஓர் உயரிய சக்தியின் மீது சார்ந்திருக்கிறார்கள். அது சூரியனாக, சந்திரனாக, ஒரு நட்சத்திரமாக, ஒரு மலையாக, ஓர் ஆறாக, ஒரு மிருகமாக, ஒரு மனிதனாக அல்லது ஓர் அமைப்பாகவும் இருக்கலாம். அவர்களுடைய நல்லொழுக்கச் சட்டத்தொகுப்பு, பல்வேறு கலாச்சாரங்களிலுள்ள அநேக பரிசுத்த எழுத்துக்கள் ஒன்றில் விரித்துரைக்கப்பட்டிருக்கலாம். இந்தத் தேவை எல்லா இடங்களிலுமுள்ள ஆட்களில் காணப்படுகிறது. அது மனிதனில் இயல்பாக அமைந்துள்ளது.
“மதம்” என்பது “மனிதனுக்கே உரிய இயல்புணர்ச்சியின் மனநிலையாக இருந்து, மனித சரித்திரம் முழுவதிலும் வெளிப்பட்டு வந்திருப்பதையும் பார்க்க முடிகிறது,” என்பது பிரபல மனோ தத்துவர் C. G. ஜூங்கின் கருத்தாகும். நன்கு அறியப்பட்டிருக்கும் விஞ்ஞானி ஃபிரெட் ஹாய்லி “அனைத்து மனித சமுதாயங்களிலுமிருக்கும் நல்லொழுக்கச் சட்டத் தொகுப்பை”ப் பற்றி எழுதிவிட்டு மேலுமாகச் சொன்னதாவது: “நல்லொழுக்க உணர்வுக்கு எதிராக இடையறாது செயல்படும் எல்லாச் சோதனைகளின் [மற்றும் துன்புறுத்தல்களின்] மத்தியிலும் மனிதனில் நல்லொழுக்க உணர்வு தொடர்ந்து இருந்து வருவதைக் காண்பிப்பதற்கு கணிசமான ஆதாரத்தை உறுதி செய்வது எளிதாக இருக்கும்.”
எல்லாப் பரிசுத்த எழுத்துக்களிலும் மிகப் பிரபலமானதும் வெகு விரிவாக விநியோகிக்கப்பட்டிருப்பதுமான பைபிள், மனிதனில் இந்த இயல்பான ஒழுக்க உணர்வு இருப்பதை ஒப்புக் கொள்கிறது. ரோமர்
2:14, 15-ல் அது சொல்வதாவது: “நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாய் இருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.”
ஹாய்லி, பரிணாமத்தை “சமயத்துக்கு ஏற்ற எந்த நடத்தைக்கும் வெளிப்படையான உரிமை” பத்திரமாகக் கருதி, அவர் மேலுமாகச் சொல்கிறார்: உண்மையில் உயிரின தோற்றத்தின் ஆரம்பம் பிரசுரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்விமான்கள் என்றழைக்கப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்ள தெரிந்து கொண்டிருக்கும், ஒழுக்கத்துறையில் நடைமுறைக் கோட்பாட்டை மறுக்கும் கொள்கை, மனிதவர்க்கத்தை சுய அழிவுப் பாதையில் சிக்க வைத்துவிட்டிருக்கிறது என்று ஓயாது எனக்குத் தோன்றுகிறது. அப்போது தீர்ப்புநாள் இயந்திரம் ஒன்று செயல்பட துவக்கி வைக்கப்பட்டது . . . இப்பொழுதெல்லாம் சமுதாயத்தில் அடிப்படையில் ஏதோ ஒன்று தவறாக இருப்பதாக உணரும் ஆட்களின் எண்ணிக்கை குறைவாக இல்லை, ஆனால் அவர்கள் பொருத்தமற்ற விஷயங்களை ஒன்றன் பின் ஒன்றாக எதிர்ப்பதில் தங்கள் சக்திகளை வீணாக்குவது வருந்துவதற்குரிய ஒன்றாகும்.”
உயிரின் ஆரம்பத்துக்குப் பின்னாலிருக்கும் புத்திக்கூர்மை
பின்னர் கணக்குத் தவறாத துல்லியத்தோடு, ஹாய்லி, பூமியில் உயிர் தற்செயலாக தோன்றியிருப்பதற்கான சாத்தியங்கள் சூனியம் என்பதைத் தொடர்ந்து காண்பிக்கிறார். “கடந்த காலத்தின் மதசம்பந்தமான வரம்பு மீறியச் செயல்களே” வைதீக விஞ்ஞானிகளை சிருஷ்டிப்பு சக்தியின் கருத்திலிருந்து விலகிச் செல்லும்படியாகச் செய்திருக்கிறது என்பதாக அவர் சொல்லுகிறார். ஆனால் உயிர் பிரபஞ்சத்தின் விண்வெளியிலுள்ள ஏதோ ஒரு புத்திக்கூர்மையுள்ள சக்தியால் சிருஷ்டிக்கப்பட்டது என்பதாக ஹாய்லி நம்புகிறார். பூமியில் சாத்தியமற்றதாக இருந்தது விண்வெளியில் சாத்தியமாக இருந்ததாக அவர் நம்புகிறார்—ஆனால் அங்கேயும்கூட ஏதோ ஒரு வகையான புத்திக்கூர்மை செயல்பட்டிருக்கிறது. மிகவும் எளிமையான ஓர் உயிர் வகையான நுண்ணுயிரிகளும்கூட வியப்பூட்டும் வகையில் அத்தனை சிக்கலானதாக இருப்பதால், அதன் சிருஷ்டிப்பில் புத்திக்கூர்மை உட்படுத்தப்படவேண்டியதாயிருக்கும். ஆனால் அவர் அந்தப் புத்திக்கூர்மையைக் கடவுள் என்றழைக்கக்கூடாதவராக இருந்தார்.
“சமுதாயத்தில் அடிப்படையில் ஏதோ ஒன்று தவறாக இருப்பதாக உணரும்” மற்றவர்கள், அவ்விதமாகச் செய்வதற்கு அத்தனை தயக்கமுடையவர்களாயில்லை. இப்படிப்பட்டவர்களில் ஒருவர், முன்னால் மேற்கோள்காண்பிக்கப்பட்ட மனோதத்துவ நிபுணர் ஜூங்: “கடவுளைப் பற்றிக்கொண்டில்லாத ஒரு நபர் உலகின் சரீர மற்றும் ஒழுக்கச் சம்பந்தமான தூண்டுதல்களுக்குத் தன்னுடைய சொந்த பெலத்தினால் எந்த ஓர் எதிர்ப்பையும் அளிக்கமுடியாது. இதற்காக, மற்றபடி தவிர்க்கமுடியாத வகையில் மொத்தத்தில் அமிழ்ந்துவிடுவதிலிருந்து அவனைப் பாதுகாக்கக்கூடிய உள்மனதின் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட அனுபவத்தின் ஆதாரம் அவசியமாயிருக்கிறது.”
மேல்வழக்கு மன்றப் பிரிவின் நடத்தும் நீதிபதி ஃபிரான்சிஸ் T. மர்பி, நவீன மனிதன் “தன் வாழ்க்கையின் முடிவான பொருளை அறியாதவனாயும் வாழ்க்கைக்கு அர்த்தமுண்டு என்பதை சந்தேகிப்பவனாயும் இருக்கிறான். ஒழுக்க சம்பந்தமாக அவனுடைய பொய்த் தோற்றம் எதுவாக இருப்பினும், அவன் உண்மையில் கடவுளை வாழ்க்கையிலிருந்தும், தன் அலுவலகத்திலிருந்தும், தன் வீட்டிலிருந்தும் வெளியே துரத்திவிட்டிருக்கிறான். ஆகவே அவன் ஓர் ஒழுக்க மையத்தில் குறைவுபடுகிறான்.” விளையாட்டுவீரர்களின் போத வஸ்து துர்ப்பிரயோகப் பிரச்னைப் பற்றி கலந்து பேசுகையில். ஹொவார்ட் காஸ்வெல் இதே கருத்தையே வெளியிட்டார். அவர் சொன்னார்: “அமெரிக்காவில் இனிமேலும் தொகுத்துரைக்கப்படக்கூடிய நல்லொழுக்க மையம் இல்லை . . . அதுவே முழு கலாச்சாரத்திற்கும் பிரச்னையாக உள்ளது.”
“கடவுளில் விசுவாசமில்லாமல், ஒழுக்கமுள்ள ஒரு சமுதாயத்தை அல்லது தேசத்தைக் கொண்டிருப்பது கூடாதக் காரியமாகும். ஏனென்றால் அனைத்துமே வேகமாக, ‘தான்’ என்பதற்கு இறங்கிவிடுகிறது. ‘தான்’ மட்டுமே என்பது அர்த்தமற்றதாக இருக்கிறது . . . கடவுள், சர்ச், குடும்பம், சமுதாய மற்றும் குடியுரிமை சம்பந்தமாக மனித நடத்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்களை தியாகம் செய்து எல்லாக் காரியங்களிலும் ‘தான்’ என்பதே அளவுகோலாகிவிடும் போது நாம் தொந்தரவில் இருக்கிறோம்” என்பதாக பத்திரிகை எழுத்தாளர் ஜார்ஜி ஆன் கேயர் சொல்லுகிறார்.
20-வது நூற்றாண்டின் முக்கிய பண்பை ஒரு சில வார்த்தைகளில் அடையாளம் காண்பிக்கும்படியாக கேட்கப்பட்டால், “மனிதர் கடவுளை மறந்துவிட்டனர்” என்றே நான் சொல்லக்கூடும் என்று அலக்சாண்டர் சோழனிட்சின் சொன்னார். அவர் தொடர்ந்து சொல்வது: “முழுமையாக இருபதாம் நூற்றாண்டு, நாத்தீகம் மற்றும் சுய அழிவு புயல் காற்றினுள் சிக்கிக் கொண்டிருக்கிறது . . . நாம் நம்முடைய மனசாட்சியை மனந்திரும்புதலோடு எல்லாவற்றையும் சிருஷ்டித்தவரிடமாக திருப்பினாலன்றி இன்றைய உலகின் நெருக்கடி நிலையிலிருந்து வெளியேறச் செய்யப்படும் முயற்சிகள் அனைத்தும் வீணானதே: இது இல்லாவிடில் எந்த வெளியேறுதலும் ஒளிப்பெற்றதாகாது, நாம் வீணாகவே அதைத் தேடிக் கொண்டிருப்போம்.”
ஆறாயிரம் ஆண்டுகளாக மனிதன் எது சரி எது தவறு என்பதைத் தீர்மானித்து தன்னுடைய வழியில் அதை முயற்சி செய்து பார்த்திருக்கிறான். இப்பொழுது நவீனப் போக்கு, உங்களுடைய சொந்த காரியத்தைச் செய்வதாகும்—சரி என்றும் தவறு என்றும் எதுவுமில்லை. இவ்விரண்டு வழிகளினாலும் ஏற்பட்டிருக்கும் பயங்கரமான விளைவுகளைச் சரித்திரம் பதிவு செய்து வைத்திருக்கிறது. மனிதன் தன்னுடைய வழிகளை நடத்துவதற்கில்லை என்பதை இது நிரூபித்துவிட்டிருக்கிறது. “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.” (நீதிமொழிகள் 14:12; எரேமியா 10:23) யெகோவா தேவன் மனிதனை உண்டாக்கினார், அவனை உள்ளும் புறமும் அறிந்தவராக, மகிழ்ச்சிக்கு வழிநடத்தும் விவரங்களை அளித்திருக்கிறார்: “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” (சங்கீதம் 119:105) அவருடைய வார்த்தையாகிய பைபிள் மனிதனுடைய ஆசீர்வாதத்துக்காக மெய்யான மதிப்பீடுகளை அடையாளங் காண்பிக்கிறது. இணைந்து வரும் பெட்டி, செய்ய வேண்டியவற்றையும் செய்யக்கூடாதவற்றையும் பட்டியல் போட்டுக் காண்பிக்கிறது. (g89 3/22)
[பக்கம் 7-ன் பெட்டி]
வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய மதிப்பீடுகள்
▸ யெகோவா தேவனை உன் முழு இருதயத்தோடும், மனதோடும், ஆத்துமாவோடும் பெலத்தோடும் அன்புகூருவாயாக.
▸ உன்னைப் போல் உன் அயலானை நேசி.
▸ மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்குச் செய்.
▸ உன்னுடைய முன்மாதிரியாக இயேசுவைப் பின்பற்று.
▸ நீ மன்னிக்கப்பட விரும்புவது போல மற்றவர்களை மன்னித்துவிடு.
▸ உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணு.
▸ மற்றவர்களை கனம் பண்ணுவதில் முந்திக்கொள்.
▸ உன் எல்லாச் செயல்தொடர்புகளிலும் உண்மையுள்ளவனாயிரு.
▸ எல்லாரோடும் சமாதானத்தை நாடு.
▸ சாந்தம், தயவு, இச்சையடக்கத்தை நாடு.
▸ ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைச் செய்யாதே.
▸ தீமையை நன்மையினால் வெல்லு.
▸ பொய் தேவர்களை வணங்காதே.
▸ விக்கிரகங்களை நமஸ்கரியாதே.
▸ கொலை செய்யாதே.
▸ திருடாதே.
▸ பொய்ச் சாட்சி சொல்லாதே.
▸ கடவுளுடையப் பெயரை வீணிலே வழங்காதே.
▸ உன் அயலானின் உடைமைகளை இச்சியாதே.
▸ சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்பாக உன் எரிச்சல் தணியக்கடவது.