வீடியோ காட்சித்திரைக் கொண்ட அமைப்புமுறைகள் எந்தளவுக்குப் பாதுகாப்பானவை?
சொல்லமைப்புக்குப் பயன்படுத்தப்படுவதைப் போன்ற கம்ப்யூட்டர் வீடியோ காட்சித்திரைக் கொண்ட அமைப்புமுறைகள் (VDT, Video Display Terminals) அநேக வர்த்தக நிறுவனங்களில் தட்டச்சுகளின் இடத்தை வேகமாக நிறைவுசெய்துவருகின்றன. அந்த அமைப்புகள் பெரும்பாலும் தட்டச்சு விரற்கட்டையொத்த ஒரு பகுதியுடன் இணைக்கப்பட்ட தொலைக்காட்சித் திரை போன்று காணப்படுகின்றன. தொலைக்காட்சித் திரைகளைப் போன்றே அவை மின்செறிவற்ற தாழ்ந்த ஒளிக்கதிர்களை வெளியாக்குகிறது. இதன் விளைவாக, அவற்றின் பாதுகாப்பான தன்மை அடிக்கடி கேள்விக்குட்படுத்தப்படுகிறது, விசேஷமாக அதை உபயோகிப்பவர் அதற்கு அவ்வளவு அண்மையில் உட்காருவதன் காரணத்தால் கேள்வி எழுப்பப்படுகிறது.
கலிஃபோர்னியாவில் அண்மையில் 1,583 கர்ப்பிணிகள் உட்பட்டிருந்த சுற்றாய்வின் முடிவுகள் அநேகருடைய கவலையைக் கூட்டியிருக்கிறது. VDT-ஐ வாரத்துக்கு 20 மணி நேரத்துக்கும் அதிகமாக பயன்படுத்திய கர்ப்பிணிகள் மற்ற அலுவலக வேலை செய்யும் பெண்களுடன் ஒப்பிடப்படுகையில், கருச்சிதைவு எண்ணிக்கை இரண்டு மடங்கு கூடுதலாக இருந்தது. கூடுதல் கருச்சிதைவுகளுக்கு VDT-யிலிருந்து வெளியாகும் ஒளிக்கதிர்கள்தான் காரணம் என்று அந்த ஆய்வு நிரூபிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். உண்மையில், ஓர் அதிகாரி இப்படியாக சொன்னார்: “பிரச்னை அந்தக் கருவி அல்ல, ஆனால் VDT பயன்படுத்தும் அநேகர் தொழிற்சாலை போன்ற ஒரு சூழ்நிலையில் வேலை செய்வதாகும்.”
என்றபோதிலும், மற்ற அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். கலிஃபோர்னிய ஆய்வில் உட்பட்டிருந்த மைக்கெல் போலன் இவர்களில் ஒருவராவார். VDT-களிலிருந்து வெளியாகும் ஒளிக்கதிர் வகை கரு வளர்ச்சியைப் பாதித்தது என்று இதற்கு முன்னால் விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காண்பிக்கின்றன என்ற உண்மையை அவர் குறிப்பிட்டு காண்பித்தார்.
VDT செய்திகள் பதிப்பாசிரியர் கர்ப்பிணிகளை எச்சரித்ததில் ஒருவராவார். அவர் சொன்னார்: “கர்ப்பமான அல்லது அந்த வழியிலிருக்கும் எந்தப் பெண்ணும் தன்னை பாதுகாத்துக்கொள்பவளாய் ஒரு VDT-ல் வேலை செய்வதை நிறுத்திவிட வேண்டும் என்பது என்னுடைய கருத்து.” (g89 12⁄22)