பிள்ளைகளுக்குப் பிள்ளைகள் பிறக்கும்போது
“வன தெய்வங்களைப் பற்றிய கற்பனைக் கதைகளில் வரும் ஒருவரைப் போல அவன் எனக்குத் தெரிந்தான்,” என்பதாக நாம் ஷாரன் என்றழைக்கும் இந்த இளம் பெண் மனக்கசப்போடு நினைவுகூருகிறாள். “என்னை அவன் நேசித்ததாகவும் அவனுடைய காதலி எப்போதாவது கர்ப்பமாகிவிட்டால், அவன் அவளை ஒருபோதும் கைவிடமாட்டான் என்றும் என்னிடம் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பான்.”
ஒரு நாள் ஷாரன் தனக்குக் குடல்முளை அழற்சி ஏற்பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டு அதற்காக தன்னுடைய மருத்துவரிடம் சென்றாள்; அவள் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. “நான் உடனடியாக என் காதலனுடன் தொடர்பு கொண்டேன்,” என்கிறாள் ஷாரன். அவனுடைய பிரதிபலிப்பு? “நீ கட்டாயமாக கருச்சிதைவு செய்துகொள்ள வேண்டும்! அதை அழித்துவிடு!” வனதெய்வங்களைப் பற்றியக் கற்பனைக் கதை கொடுங் கனவாகிவிட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய மாகாணங்களில் மாத்திரமே சுமார் 10 இலட்சம் பருவ வயதுப் பெண்கள் கர்ப்பிணியாகிறார்கள். தொழில் துறையில் வளர்ச்சியடைந்துள்ள தேசங்களின் மத்தியில் பருவ வயது கர்ப்ப விகிதத்தை உச்ச அளவுகளில் கொண்டிருப்பதில் ஐக்கிய மாகாணங்கள் கேள்விக்குரிய தனித்தன்மைப் பெற்றிருக்கிறது. அண்மை ஆண்டுகளில் விகிதம் அதிகரித்திருக்கும் ஒரே தேசமாக இது இருக்கின்றது. என்றபோதிலும் ஆலன் கட்மச்சர் நிறுவனம் 37 தேசங்களை வைத்து நடத்திய ஆராய்ச்சி, விவாகமாகாத பருவ வயதினரின் மத்தியில் கருத்தரித்தல் என்பது ஓர் உலகளாவிய பிரச்னையாகும் என்பதை வெளிப்படுத்துகிறது.
வளரிளமைப் பருவம் (Adolescence) என்ற பத்திரிகையில் ஆராய்ச்சியாளர்கள் ப்ளாக்கும் டிபிளாஸியும் எழுதியதாவது: “கர்ப்பிணிகளாகிவிடும் பள்ளி வயதுப் பெண்கள் எல்லா சமுதாய பொருளாதார வகுப்பினரிலிருந்தும் வருகிறார்கள், இவர்கள் அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலுமிருந்து வருகிறார்கள். அனைத்து இனங்களும், அனைத்து விசுவாசத்திலுள்ளவர்களும் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களிலுமுள்ள தேசத்தின் எல்லாப் பகுதிகளிலுள்ளவர்களும் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.” ஏழ்மையிலும் சிறுபான்மையான வகுப்பைச் சேர்ந்த குடும்பங்களிலிருந்தும் வரும் பெண்கள் மத்தியில் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்குக் காரணத்தைக் குறித்து விவாகம் மற்றும் குடும்பம் பத்திரிகை சொல்வதாவது: “வெள்ளையரும், உயர்ந்த சமுதாய பொருளாதார அந்தஸ்திலிருக்கும் பெண்களும் அநேகமான கருச்சிதைவை செய்துகொள்வார்கள்.”
ஐக்கிய மாகாணங்களில் சட்டப்படி செய்யப்படும் மொத்த கருச்சிதைவுகளில் மூன்றில் ஒரு பங்கு 20 வயதுக்கும் உட்பட்ட பெண்களாலே செய்துகொள்ளப்படுகிறது. ஒழுக்க சம்பந்தமாக அதன் முக்கியத்துவத்தை ஒரு புறம் ஒதுக்கி வைத்தாலும், கருச்சிதைவு செய்துகொள்ள தீர்மானித்து, அதன் பிறகு வாழ்வது கடினமாக உள்ளது. “என்னை நம்புங்கள்” என்பதாக பருவ வயதிலிருந்தபோது கருச்சிதைவை செய்துகொண்டதை நினைவுப்படுத்தி ஒரு பெண் சொல்கிறாள். “ஒரு கொலைக்கு நான் காரணமாயிருந்திருக்கிறேன் என்பதையும் இதில் பலியான நபர், இதற்காக நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை ஒருபோதும் அறியமாட்டார் என்பதையும் நினைக்கையில் அது மனவேதனையளிப்பதாக இருக்கிறது.”
பரிகாரத்தை தேடிச் செல்லுதல்
சமுதாயக் கறை, ஸ்திரமில்லா விவாகங்கள், வறுமை—இவையே பருவ வயது கர்ப்பத்தின் பொதுவான பின்விளைவுகளாக இருக்கின்றன. கல்வித்துறையிலிருப்பவர்களுக்கும், மருத்துவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெற்றோருக்கும் இது கவலைக்குரிய விஷயமாகிவிட்டிருப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. சிலர் பாலின கல்வித் திட்டங்களை வற்புறுத்துகிறவர்களாக, கருத்தடைகளும் கருச் சிதைவு சேவைகளும் எளிதில் வாலிபர்களுக்குக் கிடைக்கும்படிச் செய்யவேண்டும் என்றும் கூட வற்புறுத்துகிறவர்களாக இருக்கிறார்கள்.
என்றபோதிலும் சில வாலிபர்களுக்குப் பாலின கல்வியால் திருப்தி செய்யமுடியாத உணர்ச்சிப்பூர்வமானத் தேவைகள் இருக்கின்றன. உதாரணமாக, சில பெண்கள் உண்மையில் கர்ப்பிணிகளாக விரும்பியிருக்கிறார்கள்! ஓர் இளம் பெண் சொல்வது: “என் பெற்றோரின் கவனத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நான் தொந்தரவுக்குள்ளாக முயற்சி செய்தேன். இது [குழந்தை] என்னுடையதாக இருக்கும்—எவரும் இதை எடுத்துக் கொள்ள முடியாது. என்னில் ஒரு பகுதியாக இது இருக்க, இது உயிர்வாழ்வதற்கு ஒரு காரணத்தை எனக்குத் தருவதாக இருக்கும்.”
மேலுமாக பாலின கல்வி திட்டங்கள் இளைஞர்களுக்கு ஒழுக்க சம்பந்தமான வழிநடத்துதலைத் தருவதில்லை. இப்படிப்பட்ட கல்வி எளிதில் கிடைப்பதாக இருக்கும் ஸ்வீடன், நெதர்லாந்து போன்ற தேசங்களில் பருவ வயதில் கருதரித்தல் வெகு குறைவாக இருக்கலாம். ஆனால் பலருடன் பாலுறவில் ஈடுபடுவது அதிகமாக இருக்கிறது. கர்ப்பமாவதோடுக்கூட பலருடன் பாலுறவுக் கொள்ளும்போது மோசமாக உணர்ச்சி சம்பந்தமாகவும் ஒழுக்கம் சம்பந்தமாகவும் ஆவிக்குரிய வகையிலும் இழப்புக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறதா? அப்படியானால் கருத்தடையை அல்ல, கற்பையே ஊக்குவிக்க நியாயமான காரணம் இருக்கிறதா? பதிலைக் கண்டுபிடிக்க மிகப் பழமையான புத்தகமாக இருந்துவரும் பைபிள் இதைக்குறித்து என்ன சொல்லவிருக்கிறது என்பதைப் பார்ப்போமாக.
(w88 4⁄15)
[பக்கம் 26-ன் சிறு குறிப்பு]
கர்ப்பிணிகளாகிவிடும் பள்ளி வயதுப் பெண்கள் எல்லா சமுதாய பொருளாதார வகுப்பினரிலிருந்தும் வருகிறார்கள், அவர்கள் அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலுமிருந்தும் வருகிறார்கள். அனைத்து இனங்களும் அனைத்து விசுவாசத்திலுள்ளவர்களும் நகர்புற மற்றும் கிராமப்புறங்களிலுமுள்ள தேசத்தின் எல்லா பகுதிகளிலுள்ளவர்களும் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.”—வளரிளமைப் பருவம் (Adolescence) பத்திரிகை.