பக்கம் இரண்டு
“அமைதலான அவசரநிலைகள்”
பிரபலப்படுத்தப்படாத மூன்றாம் உலக பிள்ளைகளின் மரணங்களை இப்படியாக விளக்கினார் யூனிசெப்பின் (UNICEF, ஐ.நா. குழந்தைகள் நிதி) செயல் இயக்குநர் ஜேம்ஸ் P. கிராண்ட். அதிகமாகப் பிரபலப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க பஞ்சத்தைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை, ஆனால் அமைதலான மரணங்களைக் குறிப்பிட்டார்; பசி பட்டினியால் அல்ல, ஆனால் போஷாக்குக் குறைவால் மரணங்கள்; தாகத்தினால் அல்ல, ஆனால் உடலில் நீர்ப்பற்றாக்குறைவால் மரணங்கள் வறட்சியினால் அல்ல, ஆனால் நோயினால் மரணங்கள்.
அப்படிப்பட்ட வேதனைமிகுந்த மரணங்கள் ஏன் தொடருகின்றன? அதிலிருந்து தங்களுடைய பிள்ளைகளை மீட்க பெற்றோர்கள் என்ன செய்யக்கூடும்? இந்தக் கேள்விகளின் பேரில் விழித்தெழு! ஒளியூட்டக்கூடியதும், ஒருவேளை கலக்கம் கொண்டதுமான ஒரு பார்வையைச் செலுத்துகிறது.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
WFP/FAO photo by B. Imevbore