உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g89 11/8 பக். 3
  • பிள்ளைகள் ஏன் மரிக்கிறார்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிள்ளைகள் ஏன் மரிக்கிறார்கள்
  • விழித்தெழு!—1989
  • இதே தகவல்
  • பிள்ளைகள் உயிருடன் இருப்பதற்கு உதவுதல்!
    விழித்தெழு!—1989
  • பிள்ளைகளைக் காப்பாற்ற முயற்சிகள்
    விழித்தெழு!—1994
  • இக்கட்டிலிருக்கும் பிள்ளைகள்
    விழித்தெழு!—1993
  • உங்கள் உணவு எவ்வளவு ஊட்டச்சத்துள்ளது?
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1989
g89 11/8 பக். 3

பிள்ளைகள் ஏன் மரிக்கிறார்கள்

இந்த வாக்கியத்தை நீங்கள் வாசித்து முடிப்பதற்குள், அனாவசியமாக மூன்று பிள்ளைகள் மரித்திருப்பார்கள்.

ஒவ்வொரு இரண்டு வினாடிக்கு ஒரு பிள்ளை என்ற கணக்கில் பிள்ளைகளின் உயிரைப் பலிவாங்குவது வெள்ளமும் அல்ல, வறட்சியும் அல்ல. உலகின் நிலை 1986 (State of the World 1986) என்ற உவர்ல்டுவாட்ச் நிறுவனத்தின் அறிக்கையில் வில்லியம் U. சாண்டுலர் எழுதுகிறார்: “பஞ்சத்தினால் மரிப்பதைவிட உரிய சமயத்திற்கு முன்பாகவே பால்மறக்கச்செய்வதால்தானே பெரும்பாலான பிள்ளைகள் மரிக்கிறார்கள். கொள்ளை நோய்களில் மரிப்பதைவிட பெற்றோர் வயிற்றுப்போக்குக்குச் சிகிச்சை அறியாதிருப்பதால் அநேகர் மரிக்கின்றனர். . . . ஊட்டச்சத்துக் குறைவு, வயிற்றுப்போக்கு, மலேரியா, நுரையீரல் காய்ச்சல், விளையாட்டம்மை, கக்குவான் மற்றும் நரப்பிசிவுநோய் ஆகியவற்றின் பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டும் 1.7 கோடி பிள்ளைகள் மரிக்கிறார்கள் என்பதாக ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அநேகமாக இந்த எல்லா மரணங்களும் மூன்றாம் உலகில் ஏற்படுகின்றனவாக இருக்கின்றன.”

இப்படிப்பட்ட இழப்புகளின் வேதனை ஓர் எதிர் கருத்தால் உச்சக்கட்டத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. சாண்டுலர் தொடருகிறார்: “[இந்த மரணங்களில்] பாதி முதல் மூன்றில் ஒரு பங்கு சாதாரண படிகளை மேற்கொள்வதன் மூலம் தவிர்க்கப்படலாம்.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.) ஆம், வளரும் நாடுகளில் வாழும் பெற்றோர்கள் பிரமாண்டமான அரசாங்க திட்டங்களுக்காக அல்லது பெரிய அளவில் தீட்டப்படும் உடல்நல திட்டங்களுக்காகக் காத்திருக்கவேண்டியதில்லை. தங்களுடைய பிள்ளைகளின் உயிரைப் பாதுகாப்பது எப்படி என்பது ஏற்கெனவே அறியப்பட்டிருக்கிறது! தேவைப்படுவதெல்லாம் அவர்களுடைய பங்கில் கற்றுக்கொள்வதற்காக இருக்கும் மனவிருப்பமும் சில சாதாரண சிக்கனமான முறைகளை நடைமுறைப்படுத்துவதுமாகும். எனவே இரண்டு ஆப்பிரிக்க நாடுகளிலுள்ள விழித்தெழு! நிருபர்களின் அறிக்கைகளை வாசிக்கும்படி உங்களை அழைக்கிறோம். இந்தக் கட்டுரைகள் தகவல் தெரிவிப்பவையாக மட்டுமல்லாமல், உயிர்காப்பவையாகவும் நிரூபிக்கும் என்று நம்பப்படுகிறது. (g88 9⁄22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்