“நமது எல்லாப் பிரச்னைகளுக்கும் பரிகாரம்”
போர்ட்டோ ரீக்கோவைச் சேர்ந்த ஓர் இளைஞன் உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் என்ற புத்தகத்தில் இது தான் காணப்படுகிறது என்று சொல்கிறான். அவன் எழுதுகிறான்:
“அண்மையில்தானே, எனக்கிருக்கும் ஒரு பிரச்னையைக் குறித்து, தற்புணர்ச்சி பழக்கத்தைக் குறித்து, உங்களுக்கு எழுதி, உங்கள் பத்திரிகையில் தகவலை அளிப்பதன் மூலம் எனக்கு அறிவுரை வழங்கி எனக்கு வழிகாட்டும்படி கேட்டிருந்தேன். ஆம், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக இருக்கும் என் நண்பன், உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் புத்தகத்தை வாசிப்பதற்கு எனக்குக் கொடுத்தான். இது ஒரு மாதத்துக்கு முன்பாக சம்பவித்தது. இந்தப் புத்தகத்தின் 5-வது அதிகாரத்தை நான் வாசித்தது முதற்கொண்டு, இந்தப் பழக்கத்தை மீண்டுமாக நான் செய்யவில்லை என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்த நான் விரும்புகிறேன். தற்புணர்ச்சி என்பது உண்மையில் ஒருவருக்கு தேவைப்படும் ஒன்றல்ல என்பதை நான் புரிந்து கொண்டுவிட்டேன் . . .
“ஒருவன் எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருப்பினும், ஒவ்வொரு இளைஞனும் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எல்லா இளைஞர்களுக்கும் ஒரேவிதமான பிரச்னைகளே இருக்கின்றன. இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம் போல இருக்கிறது, ஏனென்றால் இது நமது எல்லாப் பிரச்னைகளுக்கும் பரிகாரத்தைக் கொண்டிருக்கிறது. . . . நீங்கள் இளைஞர்களுக்காக தொடர்ந்து புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் போதைப் பொருட்களும், ஒழுக்கயீனமும் நிறைந்துள்ள ஓர் உலகில், இந்தப் புத்தகம், மிகவும் குளிர்ச்சியான, புத்துயிரளிக்கும் ஒரு குவளைத் தண்ணீரைப் போல இருக்கிறது.”
தற்புணர்ச்சியையும் ஓரினபுணர்ச்சியையும் பற்றி கலந்தாலோசிப்பதைத் தவிர, இந்தப் புத்தகம், இளைஞர்களைப் பாதிக்கும் போதைப் பொருட்கள் மற்றும் வெறியச் சத்துள்ள பானங்களின் உபயோகம், விளையாட்டு, இசை, நடனம், காதல் சந்திப்பு, காதலீடுபாடு இன்னும் மற்ற அநேக விஷயங்களைப் பற்றியும் பேசுகிறது. ரூபாய் 10 நன்கொடையுடன் கீழ்காணும் கூப்பனைப் பூர்த்தி செய்து தபாலில் அனுப்பி வைத்து பிரதி ஒன்றை பெற்றுக் கொள்ளவும்.
தயவுசெய்து 192 பக்கங்களடங்கிய உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் என்ற புத்தகத்தை அனுப்பவும். இத்துடன் ரூ10 அனுப்பியுள்ளேன்.