உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g89 10/8 பக். 31
  • விளையாடும் நேரம் வளரும் காலம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விளையாடும் நேரம் வளரும் காலம்
  • விழித்தெழு!—1989
  • இதே தகவல்
  • அறிந்துகொள்ள ஆவலுள்ள ஒரு மனம் உங்களுக்கு இருக்கிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • யோசிக்கும் திறனை வளர்க்கும் விளையாட்டின் நன்மை
    குடும்ப ஸ்பெஷல்
  • உருவாகும் வருடங்கள்—நீங்கள் இப்பொழுது விதைப்பதையே பின்னர் அறுப்பீர்கள்
    விழித்தெழு!—1993
  • உங்கள் அன்புச் செல்வத்தை விபத்தினின்று காத்திடுங்கள்
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1989
g89 10/8 பக். 31

விளையாடும் நேரம் வளரும் காலம்

தத்தி தத்தி நடக்கும் இந்தப் பாப்பாவுக்கு இது புத்தாய்வு செய்யும் ஒரு காலமாகும். சுறுசுறுப்பான, அறிய ஆர்வமுள்ள இயல்பினால் சக்தியைப் பெற்றுக் கொண்டு அவள் வீட்டிலுள்ள அனைத்தையும் பற்றி பிடித்து இழுத்துப் போடுகிறாள். வீடு குழந்தையின் கடுஞ்சோதனைக்குத் தடைகாப்புள்ளதாக அமைந்திராவிட்டால், அம்மா, “கூடாது–கூடாது” என்பதாக புலம்பிக் கொண்டு, சின்னஞ்சிறு கைகளை ஓயாது அடித்துக் கொண்டிருப்பாள். இவ்விதமாகச் செய்கையில் அவள் அறிய ஆர்வமுள்ள அந்த இயல்பை—ஒரு பிள்ளையை பள்ளியிலும் பின்னால் வாழ்க்கையிலும் வெற்றிப் பெறச் செய்யும் அதே ஆர்வத்தை—அழித்துக் கொண்டிருப்பாள். பாதுகாப்பு செய்கிறவர்களாக இருங்கள். ஆனால் அளவுக்கு அதிகமாக அவ்விதமாகச் செய்யாதிருங்கள். பூங்காவில் திறந்த வெளியிலுள்ள ஒரு குழாய், மலை அல்லது குகையின் உள்ளே செல்லும் குகைப்பாதையாகவும் அம்மா கரடியும் பாப்பா கரடியும் வாழ்வதற்குரிய இடமாகவும் அமையலாம்.

ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்பு கற்பனை தழைத்தோங்குகிறது. ஒரு கட்டுமான பெட்டி, விளையாட்டு வீடாகவும், ஒரு நாற்காலி காரினுடைய ஓட்டுநரின் இருக்கையாகவும், ஒரு துடைப்பம் எவராவது ஒருவரைக் காப்பாற்ற வேகமாகச் செல்வதற்கு அடங்கா துடிப்புள்ள போர்க்குதிரையாகவும் மாறிவிடுகிறது. மணல்தூவு பெட்டி, பானைகளும் சட்டிகளும், ஒரு வாளித் தண்ணீர் ஆகியவை முடிவில்லா வாய்ப்புகளை அளிக்கின்றன. விளையாட்டு பெற்றோரின் மேற்பார்வையை தேவைப்படுத்தினாலும், அது எப்போதும் முறைப்படியாக அல்லது ஒழுங்கமைக்கப்பட்டதாக இல்லாமல் அது அந்நேரத்தின் மனவிருப்பத்துக்கு ஏற்பவும் அமையலாம். மனகிளர்ச்சியில், சிறு பிள்ளைகள் கால்நடைகளை மேய்ப்பவர்களாக, உயர பறக்கும் விமானங்களாக, மருத்துவர்களாக, செவிலியர்களாக, அம்மாக்களாக, அப்பாக்களாக, விண்வெளி வீரர்களாக, முழக்கம் செய்கின்ற நிலச்சமன் பொறியாக மாறிவிடுகிறார்கள்—அனைத்தும் ஓர் அரை மணி நேர அவகாசத்தில்.

பிள்ளைகளின் வளர்ச்சிக்கு விளையாட்டு இன்றியமையாததாகும். சரியான விளையாட்டு நேரத்தையும் அதற்குரிய பொருட்களையும் பறித்துவிடுவது, அவனுடைய மனதின், உடலின், உணர்ச்சிகளின் மற்றும் ஆவியின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாக இருக்கும். (g88 9⁄22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்