உலகத்தைக் கவனித்தல்
கொலை செய்வதற்காக அறிவு நுட்பத்தைப் பயன்படுத்துதல்
ஐந்து அடி நீள ஆப்பு வடிவ அணு ஏவுகணை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உண்டாக்கியிருக்கிறார்கள். இது வெடிப்பதற்கு முன்பு நிலத்தில் ஊடுறுவிச் சென்று நிலத்தடி அதிர்வு அலைகளை உண்டாக்குகிறது. இது, இதே வெடிகுண்டு வெளியிலே வெடிக்கப்படுமேயானால் உண்டாக்கும் பாதிப்பிற்கும் பத்து மடங்கு அதிகளவான பாதிப்பாக இருக்கிறது. இந்த விஞ்ஞான முன்னேற்றத்தின் மீதாக அறிக்கை செய்கையில், இங்கிலாந்து நாட்டின் லண்டனின் தி அப்சர்வர் பத்திரிகை சொல்கிறது: “ஓர் அணு ஆயுதப் போரிலிருந்து தப்பித்துக்கொள்ள நிலத்தடிக் கூடங்களில் சென்றுவிடலாம் என்று திட்டம்போடும் உலகத் தலைவர்களுக்கு இது அதிர்ச்சியூட்டுவதாயிருக்கிறது.” கடவுள் இந்தக் காரிய ஒழுங்கை அதனுடைய முடிவிற்குக் கொண்டு வந்து, ‘பூமியின் கடைமுனை மட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணும்’ வரை இவ்விதமாக தன்னுடைய உடன் மனிதனைக் கொலை செய்வதற்காக தன்னுடைய அறிவு நுட்பத்தை மனிதன் பயன்படுத்துவது தொடர்ந்திருக்கும்.—சங்கீதம் 46:9.
பிளாஸ்டிக் மின்கலன்கள்
சாதாரண பிளாஸ்டிக்குகள் பொதுவாக மின் கடத்தாப் பொருட்களாகச் செயல்படுகின்றன. ஆனால் அங்கக இரசாயன பொருட்களிலிருந்து செய்யப்பட்ட பாலிபைரோல்ஸ் (polypyrolles) என்றழைக்கப்படும் ஒரு புதிய பிளாஸ்டிக் மின் வேதியியல் தன்மைகளை இயற்கையாகவே கொண்டிருக்கிறது. செம்பு உலோகத்தைப் போன்று மின்சார மற்றும் உஷ்ணம் சம்பந்தப்பட்ட தன்மைகளைக் கொண்டிருக்கிறது. அத்தோடு எளிதில் வார்க்கப்படக்கூடிய மற்றும் அதனுடைய நீளத்தை இரட்டிக்கக்கூடிய கூடுதலான அனுகூலத்தையும் கொண்டிருக்கிறது. பி.எ.எஸ்.எஃப். (BASF) என்ற மேற்கு ஜெர்மனி நிறுவனத்தின் சோதனைக் கூடங்களில் இந்தப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு தபால் கார்டு அளவிலானதும், அதைக் காட்டிலும் வெறுமென மூன்று மடங்கு பருமன் உள்ளதுமான ஒரு மின்கலனை விற்பனை செய்ய இந்த நிறுவனம் ஏற்கெனவே திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. மின் கண்களாக செயல்படும் காமிரா உறைகளும் சுயவெப்ப அல்லது மின்சாரத்தினால் சூடேற்றப்படக்கூடிய உணவு பாத்திரங்களும் வரக்கூடிய உபயோகங்களில் உட்படுகின்றன. இந்தப் பிளாஸ்டிக் பல்வேறு வெப்ப நிலைகளில் செயல்புரியும் திறனைக் கொண்டிருக்கிறது. இது கம்ப்யூட்டர்களையும் மின்னணு சாதனங்களையும் இயக்க சாத்தியமற்றதாக காணப்படும் இன்றைய சூழ்நிலைமைகளையும் பிற்காலத்தில் மேற்கொள்ள முடியும் என்று லண்டனின் தி டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கை ஊகிக்கிறது.
சிலந்தி பயம்
“நான் தான் அந்த விபத்துக்குக் காரணமாயிருந்தேன் என்பதை நான் மறுப்பதில்லை” என்று இங்கிலாந்தின் பெர்க்சையரில் இருக்கும் ஓர் இளம் வியாபாரி ஒப்புக்கொண்டார். “அதற்குக் காரணம் சிலந்தியே. அது இல்லையென்றால் விபத்து சம்பவித்திருக்காது.” டெய்லி மெயில் தினசரியின் பிரகாரம், ஒரு பெரிய ரோமமுள்ள சிலந்தி அந்த வியாபாரியினுடைய காரின் கூரையிலிருந்து ஸ்டியரிங்கை நோக்கி இறங்கி வந்தது என்று அவர் சொன்னார். சிலந்தி பயத்தைத் தான் கொண்டிருப்பதாக சொன்ன ஓட்டுனர் அந்தச் சிலந்தியைத் தட்டிவிடுவதற்காக முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து எதிர்நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு வண்டியில் மோதினார். நீதிபதிகள் ஓரளவு அனுதாபத்தைக் காட்டியபோதிலும், கவனக்குறைவாக ஓட்டியமைக்காக அபராத தொகையாக 60 பவுண்டுகளை (ரூ.1,500) விதித்தார்கள்.
வெப்பமூட்டுதலும் பாரம்பரியமும்
மேற்கத்தியர் அநேகருக்குக் குளிர்காலத்தில் ஒரு வெப்பமூட்டியை உபயோகிப்பது சாதாரண ஒன்று. இருப்பினும், இது ஜப்பானில் இவ்விதமாக இல்லை. மிகக் குறைந்த ஜப்பானியர் தங்களுடைய வீடுகளில் வெப்பமூட்டும் சாதனங்களைக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், “60 விழுக்காட்டிற்கும் மேலான புதிய வீடுகள் வெப்பமூட்டும் சாதனங்களால் பொருத்தப்பட்டில்லை” என்று ஃபிரான்ஸ் நாட்டின் எல்’எக்ஸ்பிரஸ் பத்திரிகை அறிவிக்கிறது. காரணம்? “கலாச்சார பாரம்பரியங்கள் சகிப்புத் தன்மையை உயர்த்திக் காண்பிக்கின்றன.” இவ்விதமாக, மேற்கத்திய தேசங்களில் அறைகள் வெப்பமூட்டப்படுகின்றன, ஆனால் ஜப்பானில் உடலின் சில பாகங்கள் மட்டுமே வெப்பமூட்டப்படுகின்றன. (இருப்பினும், பொது இடங்களும் அலுவலகங்களும் வெப்பக் காற்றினால் வெப்பமூட்டும் முறைகளைக் கொண்டிருக்கின்றன.) உண்மையில் குளிராக உணருபவர்கள் மின்சாரத்தால் சூடேற்றப்பட்ட காலணிகளை அணிய நாடுகிறார்கள், அல்லது மின் விரிப்புகள் மீது அவர்கள் சுருண்டு படுக்கிறார்கள்.
நம்ப வைக்கும் ஏமாற்று வேலை
ஃபிரான்ஸ் நாட்டின் கான்னெஸ் என்னுமிடத்தில் 61 வயது மனிதன், சமீபத்தில் கைது செய்யப்பட்டு தன்னுடைய தேசத்தார் அநேகரை பணம் மோசடி செய்ததற்காக குற்றஞ்சாட்டப்பட்டான். உள்ளங்கை அளவு தங்க பிரமிடுகளை தபால் மூலம் விநியோகித்து 20,00,000 பவுண்டுகள் சம்பாதித்தான். அவன் சொன்னான்: “இவற்றிலிருந்து வெளியேறும் சக்தி உலகை ஆளும் காஸ்மிக் சக்தியோடு தொடர்பை ஏற்படுத்தும்.” அலாவுதீன் விளக்கு என்றழைக்கப்படும் அவனுடைய வேறு உற்பத்திப் பொருளை வாங்கினவர்கள், “இருளாக்கப்பட்ட அறையில் நின்று, தெற்கு முகமாக பார்த்துக்கொண்டு, ஈடிணையற்ற செல்வத்தை அடைய, அர்த்தமற்ற வார்த்தைகளைக் கூக்குரலிடும்”படி சொல்லப்பட்டார்கள் என்று லண்டனின் சண்டே டைம்ஸ் பத்திரிகை சொல்கிறது. காவல் துறையினரின் பிரகாரம், அந்தத் தங்க பிரமிட் உண்மையில் ஓர் உபயோகமற்ற உலோகத் துண்டாக இருந்தது.
பாஃக்கின் இசையைக் கேட்டல்
சிநேகபான்மையுடைய டால்ஃபின் மீன்கள் கர்நாடக சங்கீதத்தின் உதவியினால் அதிக சிநேகப்பான்மையுள்ளவையாக இருப்பதாக காட்டியிருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர் டான் வாக்னர் சொன்னார். பாஹாமாஸின் தெற்குப் பகுதியின் அட்லான்டிக் கடலின்கீழ் செலுத்தப்பட்ட ஒரு நீரடி ஒலிச் சாதனத்தை (hydrophone) உபயோகித்து, பெரிய டால்ஃபின் மீன்கள் ‘அவரிடம் நீந்தி வருகின்றன மற்றும் தங்கள் வயிற்றைத் தொட்டு விளையாட அனுமதிப்பதன்’ மூலம் இசைக்குப் பிரதிபலித்தன என்று வாக்னர் கண்டுபிடித்தார் என்பதாக நியு யார்க் போஸ்ட் அறிவிக்கிறது. மேலுமாக அவை வேறுவிதமான இசைக்கும் பிரதிபலித்தபோதிலும், “பாஃக்கின் இசைக்கும் மற்றும் [ஜீன் பியரே] ராம்பாலின் புல்லாங்குழல் இசைக்கும் அதிக விருப்பத்தைக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது” என்பதும் கவனிக்கப்பட்டது. “அதற்கு அவை தண்ணீருக்கு வெளியே குதிக்கும்” என்று வாக்னர் குறிப்பிடுகிறார்.
பார்வையற்றோருக்குப் “படங்கள்”
“சில ஆட்களுக்குப், பார்வையற்றோருக்குப் படங்களுடன்கூடிய புத்தகங்களை உண்டாக்குவது என்ற கருத்தானது செவிடர்களுக்காக இசை உருவாக்குவதுபோல் இருப்பதாக தோன்றலாம்” என்று ஃபுளோரிடாவின் அர்லாண்டோவிலுள்ள சென்டினெல் அறிவிக்கிறது. ஆனால் கலிஃபோர்னியாவிலுள்ள ஒரு பிரசுரிக்கும் ஸ்தபனம் சரியாகவே இதைத்தான் செய்துவருகிறது. “குழந்தைகளின் எல்லாப் புத்தகங்களும் விளக்கப்படங்களைக் கொண்டிருப்பதன் காரணமாக கண்பார்வையுள்ள குழந்தைகள் அவற்றை எதிர்பார்க்கிறார்கள்,” என நிறுவுனர் ஜீன் நாரிஸ் சொல்கிறார். “ஆனால் கண்பார்வையற்ற ஒரு குழந்தை பறவையைக் குறித்து ஒரு கதையைப் படித்துக் கொண்டிருக்குமேயானால், அந்தக் குழந்தை ஒருபோதும் பார்த்திராத ஒரு காரியத்தைக் கற்பனை செய்து பார்ப்பது எப்படி முடியும்?” இந்தப் பிரச்னையை மேற்கொள்ள, “அறிந்துகொள்ளும் ஆவலுள்ள இளம் விரல்களை மனதில் கொண்டு அமைக்கப்பட்ட பூமியின் மேற்பரப்பைக் காட்டும் பிளாஸ்டிக் உபாய வரைப்படங்களைப்போன்ற படங்களைக் கொண்டுள்ள புத்தகங்களை” நாரிஸினுடைய நிறுவனம் வெளியிடுகிறது. இதன் மூலமாக, மிருகங்கள் மற்றும் பொருட்களை வித்தியாசப்படுத்திக்காட்டும் அம்சங்களைக் கவனிக்க பார்வையற்ற குழந்தைகள் உதவப்படுகின்றன. அந்தப் படங்கள் என்ன என்று அவர்கள் அடையாளங் கண்டுகொள்ளும்போது, விளக்கப்படங்களிலிருந்து கண்பார்வையுள்ளவர்கள் எவ்வளவு சந்தோஷத்தை அடைகிறார்களோ அவ்வளவை இவர்களும் அடைகிறார்கள் என்பதாகச் சொல்லப்படுகிறது.
வீடியோ செல்லப் பிராணிகள்
உணவு கொடுக்கப்படாத, அதை வெளியே அழைத்துச் செல்லப்படாத, அல்லது சுத்தம் செய்யப்படாத ஒரு செல்லப் பிராணியை நாம் கொண்டிருக்கக்கூடுமா? இதைத்தான் இன்று ஒளிப்பதிவு நாடா தயாரிப்பாளர்கள் உறுதியளிப்பவர்களாக இருக்கிறார்கள். டைம் பத்திரிகையின் பிரகாரம், ஒரு நிறுவனம் ஒன்றுக்குச் சுமார் 20 டாலர்கள் வீதமாக அவற்றை விற்கிறது. “ஓர் உயிருள்ள பிராணியை வளர்ப்பதனால் ஏற்படும் அசுத்தம் மற்றும் அசெளகரியம் இல்லாமல் உங்களுடைய சொந்த பிராணியை வளர்ப்பதன் முழு அனுபவத்தை” இந்த நாடாக்கள் அளிக்கின்றன. சொந்தக்காரர் தன்னுடைய பிராணியை வெறுமென செயலற்ற விதத்தில் திரையில் காணவேண்டியதில்லை; அதற்குக் கட்டளைகளையும் கொடுக்கக்கூடும். ஒளிப்பதிவு நாடா உறையாடல் பாணியில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிராணி ஒரு சில கட்டளைகளுக்குப் ‘பிரதிபலிக்கிறது’ (முன்தீர்மானிக்கப்பட்ட முறையில் கொடுக்கப்படுமேயானால்).” அடுத்தது என்ன? “ஏற்கெனவே, ஒரு வீடியோ குழந்தை இருக்கிறது” என டைம் பத்திரிகை அறிவிக்கிறது.
‘நியு யார்க்கில் மட்டுமே’
“நியு யார்க்கில் மட்டுமே இது சம்பவிக்கக்கூடும்” என்று நியு யார்க் போஸ்ட் சொன்னது. “பாஸ்டனிலிருந்து வந்த ஒருவரை ஒரு ‘பெண்’ அணுகினாள்.” அவள் “அவனுடைய பாக்கெட்டினுள் கை விட்டு, அவனுடைய பணத்தை அபகரித்தாள்.” அதைத் தொடர்ந்து கைகலப்பு ஏற்பட்டது. “அவனுடைய ஆச்சரியத்திற்கேற்ப, அவனைத் தாக்கியவளுடைய தலை டோப்பா விழுந்துவிட்டது, மேக்கப்பும் காதணிகளும் இருந்தபோதிலும் ‘அவள்,’ ‘அவன்,’ என்பதை அவர் அறிந்து கொண்டார்.” ரேடியோ காரில் வந்த இரண்டு காவல் துறையினர் காரை நிறுத்தி, சந்தேகத்திற்குட்பட்டவனுக்குக் கைவிலங்கிட்டு, அவர்களுடைய காரின் பின்பக்கத்தில் அவனைக் கிடத்தினார்கள். அவன் துப்பிக்கொண்டும், சபித்துக்கொண்டும், சத்தமிட்டுக்கொண்டும், கதவைத் தானே பூட்டிக்கொண்டும் விட்டான். காவல் துறையினர் கதவைத் திறக்கையில் அவன் தான் ஏய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னான். அவர்களைக் கடித்துவிடுவதாக பயமுறுத்தினான். ஆகவே காவல் துறையினர் ஓர் இழுக்கும் வண்டியை வரவழைத்து, உட்புறத்திலிருக்கும் சந்தேகத்திற்குட்பட்டவனோடு காவல் துறை வண்டியை காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.
பழிவாங்கும் வளரிளமைப் பருவம்
இங்கிலீஷ் கால்வாயின் குயர்ன்செய் தீவில் குடியிருப்பவர்களில் அநேகர் பீதியடைந்திருக்கிறார்கள். சவுத் சைனா மார்னிங் போஸ்ட்-ன் ஓர் அறிக்கையின் பிரகாரம், ஏய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டிருந்த 18 வயதான பிரான்ஸ் நாட்டு பெண், தான் அந்த வைரஸால் தொற்றப்பட்டிருந்ததன் காரணமாக பழிவாங்கும் ஆத்திரத்தில் அநேக மனிதர்களோடு உடலுறவுக்குச் சம்மதித்ததாக ஒப்புக்கொண்டாள். அந்தப் பெண் தான் ஓர் ஏய்ட்ஸ் நோயாளி என்பதை வெளிப்படுத்தாமல், “சந்தேகிக்காத பள்ளிச் சிறுவர்களோடும், உள்ளூர் மீனவர்களோடும், விவாகமான மனிதர்களோடும்” உடலுறவு கொண்டிருந்தாள் என்று சொல்லப்படுகிறது. இந்தத் தீவின் 51,000 குடிமக்களில் நான்கு பேருக்கு இந்தக் கொல்லும் வியாதி ஏற்கெனவே தொற்றியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
தண்ணீர் சிறந்தது
உங்களுடைய கோடைக்கால தாகத்தைத் தணியச் செய்ய நீங்கள் எதை அருந்த வேண்டும்? தண்ணீர் சிறந்தது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். சர்க்கரையால் இனிப்பூட்டப்பட்ட பானங்களும் பழச் சாறுகளும் அவற்றில் சர்க்கரை உள்ளடங்கியிருப்பதன் காரணமாக (இயற்கையாகவோ அல்லது சேர்க்கப்பட்டோ), உடலின் தண்ணீருக்கான தேவையை அதிகரிக்கின்றன. பாலும் மற்ற பால் பண்ணைப் பொருட்களினாலான பானங்களும் உண்மையில் உணவு வகைகள்—பொதுவாக அதிகளவான சர்க்கரையையும், புரதச் சத்தையும், மற்றும் கொழுப்பையும் கொண்டிருக்கின்றன, ஆகவே அவை தாகம் தீர்க்க உதவாது. சாராயம் அல்லது காஃபெய்ன் அடங்கிய பானங்கள் சிறுநீர் அதிகம் சுரக்கத் தூண்டும் பொருட்களைக் கொண்டிருக்கின்றன. இது நம்முடைய உடல் நீரை இழப்பதில் விளைவடைகிறது. உங்களுடைய உடலுக்கு எப்போது தண்ணீர் தேவை என்பதை நீங்கள் எப்படிச் சொல்லக்கூடும்? உங்களுடைய சிறுநீரை நீங்கள் பரிசோதிக்கலாம். சில வகை உணவைச் சாப்பிட்டதனாலோ அல்லது சில வைட்டமின்களினாலோ அல்லது மருந்துகளினாலோ நிறமூட்டப்பட்டாலேயன்றி, அது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். ஆழ்ந்த நிறங்கள் அடர்த்தியையும், தண்ணீர் சேர்ப்பது மற்றும் அழுத்தத்திலிருந்து சிறுநீரகத்தை விடுவிப்பதன் தேவையையும் சுட்டிக் காட்டுகின்றன. (g88 8⁄8)