நீங்கள் ஆனந்த சத்தமிடக்கூடுமா?
நம்முடைய இயற்கைச் சூழலில் நீங்கள் ஓர் அன்பான சிருஷ்டிகரின் உதார குணத்தையும் ஆழ்ந்து சிந்தனையையும் காண முடிகிறதா? மேகங்களும், மரங்களும், ஆறுகளும், மலைகளும் வெறுமென அவற்றின் இன்பமூட்டும் அழகைக் காட்டிலும் மற்ற காரணங்களுக்காக இங்கு இருப்பினும், கண்களுக்குக் கவர்ச்சியூட்டும்வண்ணம் திருப்தியான விதத்தில் அவை படைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாக இல்லையா? இத்தகைய சுற்றுப்புறங்களில் உலாவுவதினால் உண்டாகும் அமைதியான, இளைப்பாறுதலூட்டும் அதே சமயத்தில் கிளர்ச்சியூட்டும் பாதிப்பை யார்தான் அனுபவிக்காமல் இருக்கிறார்கள்? இத்தோடு சுவாசிப்பதற்கான சுத்தமான காற்று, மலர்களின் நறுமணம், மற்றும் பறவைகளின் பாடல்கள் போன்ற ஆசீர்வாதங்களைக் கூட்டுகையில் இந்தக் கூற்றை ஒத்துக்கொள்வது கடினமல்ல: “உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன். யெகோவாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்.”—சங்கீதம் 92:4, 5, NW.
மனிதவர்க்கத்தின் சுயநலத்தினாலும் அபூரணத்தினாலும் இன்று அநேகர் இந்த எல்லா ஆசீர்வாதங்களையும் அனுபவிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள், உண்மைதான். ஆனால் கடவுளுடைய அரசாங்கம் எல்லா உயிர்வாழும் ஜீவன்களின் தேவைகளை நிறைவாக்கும் காலம் அண்மையிலிருக்கிறது.—சங்கீதம் 104; லூக்கா 21:7-36. (g88 11⁄8)