உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g88 8/8 பக். 30-31
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1988
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வத்திக்கனை அசட்டை செய்யும் கத்தோலிக்கர்
  • அவற்றின் மதிப்புக்கும் அதிகமானவை
  • புறாக்களால் காப்பாற்றப்படுதல்
  • புகைபிடித்தலின் பேரில் தடையுத்தரவு
  • உயிரைக் காக்கும் தடுப்பு ஊசி
  • உலக வேகப் பதிவு
  • பிரசவத்திற்கு முன் கவனிப்பு
  • கோர உருவமுள்ள விளையாட்டுப் பொருட்கள்
  • இரத்தத்தின் பேரில் தடையுத்தரவு
  • புகைப்பிடிப்பவர்களைக் கண்டிப்புடன் நடத்துதல்
  • அபாயத்தில் இருப்பது யார்?
    விழித்தெழு!—1987
  • எய்ட்ஸ் நோய் வராமல் தடுப்பது எப்படி
    விழித்தெழு!—1989
  • விளையாட்டுச் சாமான்கள் அன்றும் இன்றும்
    விழித்தெழு!—2005
  • எய்ட்ஸ் நோய்க்கடத்திகள்—எத்தனை பேர் மரிக்கக்கூடும்?
    விழித்தெழு!—1989
மேலும் பார்க்க
விழித்தெழு!—1988
g88 8/8 பக். 30-31

உலகத்தைக் கவனித்தல்

வத்திக்கனை அசட்டை செய்யும் கத்தோலிக்கர்

வத்திக்கன் இந்த ஆண்டு பிரசுரித்திருக்கும் ஒரு புதிய பத்திரம் கத்தோலிக்க மற்றும் மருத்துவ வட்டாரங்களில் வாக்குவாதத்துக்குரிய ஒரு வழக்கை எழுப்பிவிட்டிருக்கிறது. அதன் தலைப்பு, “மனித உயிரின் ஆரம்பத்திற்கும் இனவிருத்தியின் மகத்துவத்திற்கும் மதிப்பு” என்பதாகும். உயிருள்ள உடலுக்கு புறம்பாகக் கருதரிக்கச்செய்யும் எல்லா வழிமுறைகளையும் அந்தப் பத்திரம் கண்டனம் செய்கிறது. சட்டப்படி மணம் செய்திருக்கும் தம்பதிகளிலிருந்து எடுக்கப்படும் முட்டையையும் விந்துவையும் இணைத்து தற்செயலாகக் கருதரிக்கும்படிச் செய்வதையும் அது கண்டனம் செய்தது. இந்தப் பிரச்னையின் பேரில் சர்ச் எடுத்திருக்கும் நிலைநிற்கையானது, பிள்ளையில்லாத் தம்பதிகளின் சார்பாக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை சிபாரிசு செய்துவந்திருக்கும் பல கத்தோலிக்கர்களுக்குக் கோபமூட்டியிருக்கிறது. வத்திக்கனின் புதிய பத்திரிகை ஏற்படுத்திய சங்கடமான நிலையின் மத்தியிலும், லில்லி, பிரான்ஸிலுள்ள கத்தோலிக்க மருத்துவமனையின் பிரதிநிதியாகிய மைக்கில் ஃபாலிஸ், ஏற்கெனவே துவங்கப்பட்ட செயற்கைக் கருதரிப்புகள் சர்ச்சின் இந்தப் புதிய நிலைநிற்கையின் காரணமாக நிறுத்தப்படாது என்று குறிப்பிட்டார். பெல்ஜியம், ஸ்பய்ன், ஹாலண்டு, இத்தாலி ஆகிய இடங்களிலும் இதே விதமாக கூறப்படுகிறது. ரோம் தினசரிப் பத்திரிகை, லா ரிப்பப்லிக்கா-வின் பிரகாரம், அவ்விடங்களில் “தற்சமயம் செய்யப்பட்டுவரும் செயற்கைக் கருதரிப்புகளில் 75% சர்ச் கண்டனம் செய்யும் அம்முறையாகும்.” மற்றும் இப்பேர்ப்பட்ட வித்திடுகையைப் பெறும் ஸ்திரீகளில் 70% பேர் கத்தோலிக்கராக இருக்கிறார்கள்.”

அவற்றின் மதிப்புக்கும் அதிகமானவை

யூ.எஸ். டாலரை நீங்கள் பின்வரும் விலைக்கு இப்போது வாங்கக்கூடும்: 4 ஒரு டாலர் நோட்டுகள் $7.50-க்கு, 16 $21.50-க்கு மற்றும் 32 $40.50-க்கு; 4 இரண்டு டாலர் நோட்டுகள் $12-க்கு, மற்றும் 16 $38.50-க்கு. ஏன் இந்த விலை கொடுக்க ஆட்கள் மனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்? நோட்டுகள் தனித்தனியாக வெட்டப்படுவதற்கு முன்பு அச்சிலிருந்து பெற்றுக்கொள்ளும் புதுமையின் காரணமாக. கடந்த ஆண்டு நோட்டுகளை அச்சிடும் இலாக்கா வெட்டப்படாத டாலர்களின் விற்பனையிலிருந்து $18,52,509 பெற்றது.

புறாக்களால் காப்பாற்றப்படுதல்

சமுத்திரத்தில் காணாமற்போய்விட்ட ஒருவருக்கு, புறாவினால் காப்பாற்றப்படும் சாத்தியம் வெகு சமீபத்தில் இருக்கிறது. சமுத்திரத்தில் தேடும் ஒரு உபாயம் என்றழைக்கப்படும் ஒரு செயல்நடவடிக்கையின் கீழ் புறாக்களுக்கு இப்பொழுது பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது என்பதாக ஆஸ்திரேலியாவின் தி சிட்னி மார்னிங் ஹெரல்ட் அறிக்கை செய்கிறது. மனிதரைக் காட்டிலும் மேன்மையான கண்பார்வையின் காரணமாகவும் ஒரே பொருளின் பேரில் சிந்தனையை ஊன்றவைக்கும் திறமையின் காரணமாகவும், புறாக்கள் ஒரு பொருளைக் கண்டுபிடிப்பதில் அதிக திறம்பட்டவையாக நிரூபித்திருக்கின்றன. மூன்று புறாக்கள் ஹெலிக்காப்டரின் கீழ் தொங்கவைக்கப்படும் ஒரு கூண்டில், ஒவ்வொரு பறவையும் வெவ்வேறு திசையில் பார்க்கும்படி அமர்த்தப்படும். மிதக்கச் செய்யும் சட்டைகள் மற்றும் தப்புவிப்பு சாதனங்கள் ஆகியவற்றின் வண்ணங்களைக் கண்டுபிடிக்கப் பயிற்றுவிக்கப்பட்டிருப்பதனால், நிறங்களடங்கிய பொருட்களைக் காணும்போது புறாக்கள் ஒரு திசைக்காட்டி கருவியைத் தங்கள் அலகினால் கொத்துகின்றன, அது விமான ஓட்டி அந்தத் திசையில் பறக்கும்படி வழிகாட்டுகிறது. மனிதருக்குச் சுமார் 2 மைல் (3 கி.மீ.) தூரத்திலுள்ள ஒரு பொருள் சமுத்திரத்தில் ஒரு புள்ளியைப் போல் தோன்றக்கூடும், ஆனால் கூர்மையான பார்வையுள்ள புறாவினால் அது சுலபமாகக் கண்டுபிடிக்கப்படக்கூடும். முன் பரிசோதனைகள் ஏற்கெனவே வெற்றியென நிரூபித்திருக்கின்றன. சமுத்திரத்தில் ஒரு பொருளைக் கண்டுபிடிப்பதில் மனிதரின் திறமை 40% மட்டுமே, ஆனால் புறாக்கள் தங்கள் காப்பாற்றும் வேலையில் 90% என்ற உயர்ந்த எண்ணை அடைந்தன.

புகைபிடித்தலின் பேரில் தடையுத்தரவு

“பெல்ஜியமில் செப்டம்பர் 1, 1987 முதற்கொண்டு பொதுவிடங்களில் புகைபிடிப்பதன் பேரில் தடையுத்தரவு போடப்படும்.” இன்டர்நேஷனல் ஹெரல்ட் ட்ரிப்யூன்-னின் பிரகாரம் அரசன் பெளடீன் “பள்ளிகளில் மருத்துவமனைகளில் விடுதிகளில் ரயில் நிலையங்களில் தங்குமிடங்களில் மற்றும் பொது விளையாட்டு மையங்களில் புகைபிடித்தலைத் தடைச்செய்யும்” ஒரு சட்டத்தில் கையொப்பமிட்டார். புகைபிடிக்கும் ஒவ்வொரு மூன்று ஆட்களுக்கும் ஒரு புகைபிடிக்காதவர் என்ற விகிதத்தை ஐரோப்பிய நாடுகளில் டென்மார்க் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது, பெல்ஜியம் இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. சட்டத்தை மீறுகிறவர்கள் மீது பெல்ஜியம் அதிகாரிகள் அமெரிக்க டாலர் 480 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

உயிரைக் காக்கும் தடுப்பு ஊசி

ஜெனீவா, சுவிட்ஸர்லாந்தில் உலக சுகாதார அமைப்பு (WHO) மாநாட்டில் டாக்டர் ரால்ப் ஹென்டர்சன் பேசுகையில், “தடுப்பு ஊசி மூலமாக விளையாட்டம்மை, கக்குவான் இருமல், டெட்டர்னஸ் போன்ற வியாதிகளின் மூலம் ஆண்டுதோறும் ஏற்படும் ஏறக்குறைய 10,00,000 மரணங்களை ஏற்கெனவே தடுக்க முடிந்திருக்கிறது” என்று கூறினார். ஆகிலும் தடுப்பு ஊசி உபயோகிக்காததனால் “லட்சக்கணக்கான பிள்ளைகள் ஆண்டுதோறும் தொடர்ந்து மரிக்கிறார்கள்” என்றார். இந்தப் பத்தாண்டின் முடிவுக்குள் உலகத்திலுள்ள எல்லாப் பிள்ளைகளையும் இந்த வியாதிகளிலிருந்து பாதுகாக்கும் இலக்குடன், மருத்துவ வேலையாட்கள், மலேரியா, குஷ்டரோகம் மற்றும் பற்களின் சீரழிவு போன்ற வியாதிகளுக்கு எதிராகத் தடுப்பு ஊசி கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். “தடுப்பு ஊசிகளின் உபயோகத்தின் காரணமாக, 2000-ம் ஆண்டுக்குள் கிருமிகளைக் கொல்லும் மருந்துகள அவசியமிராது” என்பதாக பாராட்டினாலும், WHO அமைப்பின் ஏய்ட்ஸ் நோய் ஆராய்ச்சி இசைவாளர், டாக்டர் ஜானத்தன் மான், ஏய்ட்ஸ் நோய்க்கு எதிராக வேலைசெய்யக்கூடிய ஒரு தடுப்பு ஊசி தயாரிப்பதற்கு அநேக ஆண்டுகள் எடுக்கும் என்று அறிக்கை செய்தார்.

உலக வேகப் பதிவு

உலகத்திலேயே அதிக விரைவில் மனிதனால் செலுத்தப்படக்கூடிய ரயிலின் உலக வேகப் பதிவு தற்போது ஒரு மணிக்கு 249 மைல் (மணிக்கு 400 கி.மீ.) ஜப்பானின் தேசிய ரயில்நிலையத்தால் சோதனைக்காக அனுப்பப்பட்ட “லீனியர் கார்” என்றழைக்கப்பட்ட ரயில் இந்தப் பதிவை எட்டியது. பழைய பதிவு ஜெர்மனியால் அடையப்பெற்றது. “லீனியர் கார்” ரயில்பாதைக்கு ஒருசில அங்குல உயரத்தில் ஒரு காந்த மெத்தையின் மேல் காந்த சக்தியினால் மிதக்கிறது. தண்டவாளங்களும் மின்சக்தி கம்பிகளும் அவசியமிராததால், இதைத் தயாரிப்பது பிரசித்திப்பெற்ற “புல்லட்” ரயிலைப் பார்க்கிலும் மலிவாக இருக்கும். சப்தம், அதிர்ச்சி ஆகியவற்றின் பாதிப்பும் நீக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. யோமியுரி ஷிம்புன் பிரகாரம், “லீனியர் கார்” அதன் படத்தை எடுப்பதற்காக ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்த செய்தித் துறையினரின் ஹெலிக்காப்டர்களைவிட வேகமாக விரைந்து சென்றது. ஓட்டுநர் இல்லாத ரயில்வண்டியைக் குறித்ததில், மணிக்கு 321 மைல் (மணிக்கு 517 கி.மீ.) என்ற உலகப்பதிவை ஜப்பானின் தேசிய ரயில்நிலையம் ஏற்கெனவே உடையதாயிருக்கிறது.

பிரசவத்திற்கு முன் கவனிப்பு

பிரசவத்தில் ஒரு பெண்ணின் சரீர நலத்தைக் கவனிப்பது போலவே அவளுடைய உணர்ச்சித் தேவைகளையும் கவனிப்பது, பிறவாத குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அத்தியாவசிமாக இருக்கிறது என்பதாக இங்கிலாந்திலுள்ள மிடில்செக்ஸ் மருத்துவமனையின் டாக்டர் மிஷெல் க்லெமென்ட் கூறுகிறார். தாயின் கர்ப்பத்தில் குழந்தையின் பிரதிபலிப்பைப் பதிவுச் செய்யும் கருவிகளை உபயோகித்து, போதைவஸ்துக்கள், சிகரெட்டுகள் மற்றும் மதுபானம் கருவில் குழந்தையின் செயல்நடவடிக்கையைத் தடைச் செய்கிறது என்றும், இதற்கு எதிர்மாறாக, அமைதலான இன்னிசை ஒரு திருப்தியுள்ள குழந்தையை உண்டுபண்ண உதவும் என்பதையும் ஆராய்ச்சி செய்பவர் காண்கிறார் என்று தி லண்டன் டைம்ஸ் கூறுகிறது. பிரான்ஸைச் சேர்ந்த தாய்மை மருத்துவ வல்லுநராகிய போராசிரியர் மைக்கல் ஓடென்ட், பிறவாத குழந்தைகளுக்கும்கூட தாலாட்டு பாடுவதன் முக்கியத்துவத்தைக் குறித்து மீண்டும் விழிப்பூட்டப்படுவதை சிபாரிசு செய்கிறார்.

கோர உருவமுள்ள விளையாட்டுப் பொருட்கள்

தற்போதுள்ள வாங்கும் போக்கைக் கவனிக்கையில், விளையாட்டுச் சாமான்களின் உலகம் கோர உருவமுள்ள பொம்மைகளால் நிரப்பப்பட்டிருக்கிறது. லி ஃபிகாரோ என்ற பிரெஞ்சு செய்தித்தாளின்படி, உற்பத்தியாளர்கள் மிக பயங்கரமான உருவங்களைக் கொண்ட பிலாஸ்டிக் பொம்மைகளைத் தயாரிப்பதில் ஒருவரோடொருவர் போட்டியிடுகின்றனர். “அவை பார்ப்பதற்கு எவ்வளவு பயங்கரமாக இருக்கின்றனவோ அவ்வளவு அதிகமாகப் பிள்ளைகள் அவற்றை விரும்புகிறார்கள்” என்பதாக விற்பனையாளர் கூறுகின்றனர். கடந்த குளிர்காலத்தில், அதிக விற்பனையான சாமான்களில், “கெட்ட, துன்மார்க்க குடும்பத்தைச் சேர்ந்த பூதங்களின் உருவங்கள், சுவரின்மேல் ஒட்டிக்கொள்ளும் அட்டைகள், கொரில்லா குரங்குக்கும் காட்டுப்பன்றிக்கும் இடையேயுள்ள உருவத்தைக் கொண்ட, மயிருள்ள போர் செய்யும் மிருகங்கள்” அடங்கியிருந்தன. இதற்கு விதிவிலக்கு எதுவும் இருந்ததா? விற்பனையின் பிரகாரம் இல்லை. கடந்த ஆண்டு, ஒரு பிரெஞ்சு கம்பெனி மட்டுமே 10,00,000-த்திற்கும் அதிகமான இத்தகைய கோர பொம்மைகளை விற்பனை செய்தது. “வரும் கிறிஸ்மஸின்போது கோர பொம்மைகளே அதிகப்படியாக விற்பனையாகும்” என்பதாக லி ஃபிகாரோ கூறுகிறது. இந்தப் பொருட்கள் எவ்வளவு அகோரமாகவும், உருகுலைந்தவையாகவும் இருக்கின்றனவோ, அவ்வளவு அதிகமாக அவை பிள்ளைகளை மகிழ்விக்கிறது என்ற காரியம் மனநோய் வல்லுநர்களை வியப்பூட்டுகிறது, பெற்றோரை விசனப்படுத்துகிறது.

இரத்தத்தின் பேரில் தடையுத்தரவு

மக்களிடையே மரணத்துக்கேதுவான ஏய்ட்ஸ் நோய் பரவும் பயத்தின் காரணமாக, மெக்ஸிக்கோ அரசாங்கம் கடந்த ஆண்டு ஏப்ரல் 21 அன்று, இரத்தம் மற்றும் இரத்தத்தைக் கொண்ட பொருட்கள் எல்லாவற்றின் விற்பனையின் பேரில் தடையுத்தரவு விதித்தது என்பதாக நியு யார்க் டைம்ஸ் அறிக்கை செய்தது. ஏய்ட்ஸ் கிருமிகள் பாலுறவு மூலமாக அல்லது இரத்ததின் மூலமாக பரவுகிறது. மற்ற நாடுகளைவிட மெக்ஸிக்கோவில் ஏய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும், நிலைமை மோசமாவதற்கு முன் “நாம் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கும்படி அந்த நோயின் தன்மை கட்டாயப்படுத்துகிறது” என்பதாக சுகாதார மந்திரி குல்லியர்மோ சோபிரான் கூறுகிறார். பணத்திற்காக இரத்தத்தைக் கொடுத்திருப்பவர்களின் இரத்தம் ஏய்ட்ஸ் கிருமிகளைக் கொண்டிருக்கும் அதிக சாத்தியம் இருக்கிறது. இரத்த சேமிப்பு வங்கிகள் செயற்படலாம், ஆனால் விற்கப்படாத, மனமுவந்து கொடுக்கப்படும் இரத்தத்தை மட்டுமே அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

புகைப்பிடிப்பவர்களைக் கண்டிப்புடன் நடத்துதல்

ஆஸ்திரேலியாவின் மருத்துவமனைகளில் பணமும் இடவசதியும் குறைவுபடுவதால், புகைபிடிப்பதுடன் சம்பந்தப்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆகிலும் தொடர்ந்து புகைபிடிக்கும் நோயாளிகளுக்கு ஒருநாள் மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்படும். தி மெடிக்கல் ஜெர்னல் ஆப் ஆஸ்திரேலியா-வில் தோன்றின ஒரு கட்டுரையில், ராயல் பிரின்ஸ் ஆல்ஃபிரெட் மருத்துவமனையின் மார்புக்கூடு சார்ந்த மருத்துவர் பீட்டர் கையநோட்ஸேஸ், “சமீப எதிர்காலத்தில், தொடர்ந்து புகைபிடிக்கும் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் படுக்கையை மறுக்க வேண்டிய சூழ்நிலை எழும்புவதைக் காணக்கூடியதாக இருப்பதாக” விளக்கினார். விடாப்பிடியுடன் புகைபிடிக்கும் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் அனுமதி கொடுப்பதானது பணத்தைத் தவறாக பயன்படுத்துவதையும், புதிதாக பிறந்த குழந்தைகளுக்குத் தேவையான நுட்ப கவனிப்பு வசதி கொடுக்கமுடியாத நிலையை ஏற்படுத்துவதையும் குறிக்கிறது என்று அவர் கூறினார். இந்த நோளிகளின் பேரில் செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சி, புகைபிடித்தலே தங்களுடைய நோயுக்குக் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டப் பின்பும் 22% பேர் தொடர்ந்து புகைபிடிப்பதாகக் காட்டுகிறது. (g87 8⁄8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்