பக்கம் இரண்டு
உலகமுழுவதிலும் இலட்சக்கணக்கான பெற்றோர் ஒரு பிள்ளையை மரணத்தில் இழந்தவர்களாக இருக்கின்றனர். நோய், பஞ்சம், போர், கொலை, தற்கொலை, விபத்து, தொட்டிலில் சாவு, கருவிலேயே சிதைவுறுதல், இறந்து பிறத்தல்—கரணம் என்னவாக இருந்தாலும் ஒரு பெற்றோர் எப்பொழுதுமே துக்கிக்கின்றனர்.
பிள்ளையின் வயது என்னவாக இருந்தாலும், வேதனை எப்பொழுதுமே இருக்கிறது. அந்தத் துக்கத்தை எப்படி சகித்துக்கொள்வது? வாழ்க்கையை எப்படி தொடருவது? இந்தப் புத்தகத்தில் ஒரு குடும்பம் தாங்கள் மரணத்தில் இழந்த பிள்ளையை மீண்டும் வரவேற்கும் காட்சி வெறும் ஒரு கற்பனையா, அல்லது கூடிய சீக்கிரம் உண்மையாகப் போகும் ஒன்றா?
ஒரு பிள்ளையின் மரணம் ஏற்படுத்தியிருக்கும் கடுமையான துக்கத்தைக் கடந்துவாழும் ஆட்களின் உண்மை விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டிருக்க இவை, இந்தக் கேள்விகளில் சிலவற்றுக்குப் பதில் கூறும் ஒவ்வொரு சம்பவத்தின் பலன் என்னவாயிருந்தது என்பதைக் காண, துக்கத்தின் பேரிலான இக்கட்டுரைகளைத் தயவுசெய்து வாசியுங்கள். இவற்றிலிருந்து நீங்கள் ஆறுதலும் நம்பிக்கையும் பெறுவீர்கள் என நம்புகிறோம்.