உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g88 5/8 பக். 30-31
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1988
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏய்ட்ஸ் குறித்து முன்னறிவிப்பு
  • எச்சரிப்புத் துணுக்குகள்
  • அச்சுறுத்த போலிமுறை
  • சூப் ஆபத்திலிருக்கிறது
  • “இளமை ஊற்று”
  • “இரகசிய” உருண்டைகள்
  • கூருணர்வுடைய பென்குவின் பறவைகள்
  • வலிக்காத ஊசிகள்
  • குண்டு குழந்தைகள்—தடித்த ஆட்கள்?
  • வேலைக்குச் செல்லும் தாய்ப்பால் கொடுக்கிற தாய்மார்கள்
  • கூடுதல் பிறப்புகள்—குறைந்த விவாகங்கள்
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1995
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1990
  • இயல்புணர்வு—பிறப்பிற்கு முன்பே திட்டமிடப்பட்ட ஞானம்
    உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1987
மேலும் பார்க்க
விழித்தெழு!—1988
g88 5/8 பக். 30-31

உலகத்தைக் கவனித்தல்

ஏய்ட்ஸ் குறித்து முன்னறிவிப்பு

இந்த நூற்றாண்டின் முடிவுக்குள் வெகுவாக மரணத்துக்கேதுவான இந்த ஏய்ட்ஸ் நோய்க்கு ஐக்கிய மாகாணங்களில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஆட்கள் பலியாவார்கள் என்று லூயிஸ் ஹாரிஸும் அவருடைய கூட்டாளிகளும் பேட்டி கண்ட மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உயிரியல் தொழில் நுட்பம், புற்றுநோய் மற்றும் தொத்துநோய் ஆகியவற்றில் நிபுணர்களாகிய மருத்துவ விஞ்ஞானிகளின் மத்தியில் கருத்தாய்வு நடைபெற்றது. 2,000 ஆண்டை எட்டுவதற்கு முன்பு “ஏய்ட்ஸ்” நோய்க்குச் சிறந்ததோர் பரிகாரம்” கண்டுபிடிக்கப்படும் என்று 28 சதவிகிதத்தினர்தான் நம்பிக்கை தெரிவித்தனர். இப்படியாக, ஐக்கிய மாகாணங்களில் ஏய்ட்ஸ் நோய் 32,000 மக்களைப் பாதித்திருக்கிறது, இந்த எண்ணிக்கை இந்நோயால் ஏற்கெனவே மரித்துவிட்டிருப்பவர்களின் எண்ணிக்கையைவிட பாதி மடங்கு அதிகம்.

எச்சரிப்புத் துணுக்குகள்

ஒரு நபர் தன்னுடைய வாழ்நாட் காலத்தில் வன்மையான குற்றச்செயலால் பாதிக்கப்படும் வாய்ப்பு குறித்து ஐக்கிய மாகாணங்களின் நீதித்துறை முதல் முறையாக கணக்கிட்டிருக்கிறது. 12 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஆட்களை உட்படுத்திய ஒரு பத்தாண்டு சுற்றாய்வு நடத்தப்பட்டது. தி நியு யார்க் டைம்ஸ் பத்திரிக, 83 சதவிகிதத்தினர் “தங்கள் வாழ்நாட்காலத்தில் ஒரு முறையாவது வன்மையான குற்றச்செயலின் பாதிப்புக்குள்ளாவார்கள்,” என்றும் 52 சதவிகிதத்தினர் ஒரு முறைக்கு மேலாக பாதிக்கப்பட்டவர்களாயிருப்பார்கள் என்றும் காண்பிக்கிறது.

அச்சுறுத்த போலிமுறை

ஆஸ்திரேலியாவில் மெல்பர்னைச் சேர்ந்த ஒரு மனிதன் ஒரு அல்சேஷன் நாயின் குறைப்பைப்போன்ற போலி ஒலி எழுப்பும் ஓர் இயந்திர நாயை அமைத்திருக்கிறான். வெஸ்ட் ஆஸ்திரேலியன் என்ற தினசரியின்படி, தனிமையாக வாழும் ஆட்களுக்குத் தன்னுடைய கண்டுபிடிப்பு அதிக உதவியாக இருக்கும் என்று நம்புகின்றனர். 16 அடி (5 மீ) தூரம் வரையான அசைவுகளைக் கணித்திடும் ஒரு ரேடார் முறையை இந்த எலக்ட்ரானிக் நாய் கொண்டிருக்கிறது. படிப்படியாக அதிகரித்துக் கொண்டுபோகும் பயங்கரமான குறைப்பு ஒலியையும் இது பதிவுசெய்து வைத்திருக்கிறது. 12 வோல்ட் பாட்ரியில் இயங்கும் இந்த இயந்திர “நாய்க்குட்டியைப்” பராமரிக்க ஓர் ஆண்டுக்கு என்ன செலவு ஆகும்? ஏறக்குறைய ஆஸ்திரேலிய டாலர் கணக்கில் $84 (ரூ.?) ஆகிறது—ஒரு நாய்க்கு ஓர் ஆண்டுக்குச் செலவாகும் உணவுக்குரிய விலை.

சூப் ஆபத்திலிருக்கிறது

சீன உலகில் பல நூற்றாண்டுகளாக விசேஷ உணவு வகை என்று கருதப்பட்டு வரும் பறவைக்கூண்டு சூப் இப்பொழுது ஆபத்திலிருக்கிறது என்று சில பறவைக் கூண்டு சூப் பிரியர் கூறுகின்றனர். பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வரும் கூண்டுகள் கிடைப்பதற்குரியவையாகிவிட்டிருக்கின்றன, உயர்தர கூண்டுகளின் விலை ஒரு பவுண்டு ஏறக்குறைய ரூ.13,000 ($1,000) என்று உயர்ந்துவிட்டிருக்கிறது என்பதாக தி நியு யார்க் டைம்ஸ் பத்திரிகை அறிக்கை செய்கிறது. ஏன் இந்த பற்றாக்குறை? பறவைகள் குடிகொள்ளும் இடங்கள் இன்று பட்டணங்களாகவும் பண்ணைகளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது, இது பறவைகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டிருக்கிறது என்று ஒரு நிபுணர் கூறுகிறார். நிலம், நீர், காற்று நச்சுப்படுத்துவதுதானே மலைச் சரிவுகளில் பறவை வாழ்வை பாதித்திருக்கிறது, மற்றும் பறவைக் கூண்டுகளை சேகரிப்பவர்கள் “அந்தக் கூண்டுகள் கட்டப்பட்ட உடனேயே அல்லது முட்டைகள் இருக்கும் கூண்டுகளைக்கூட பறிமுதல் செய்துவிடுகின்றனர்.” பாறைச் சரிவுகளிலுள்ள பறவைக் கூண்டுகளை எடுப்பதற்கு இளைஞர்களும் குரங்குகளும் செங்குத்தான பாறைகளில் ஏறுவதற்குப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தக் கூண்டுகள் இந்தோனீசியா, தாய்லாந்து, வியட்னாம், சீனா, அல்லது மலேசியாவிலிருந்து வருகிறது. அவை சிமென்ட் இழைகள் போன்று உறதியாக ஆகிவிட்டிருக்கும் பறவையின் எச்சியிலிருந்து செய்யப்படுகிறது. ஒரு கோப்பை சூப்பின் விலை ரூ200 முதல் ரூ500 அதாவது $14 முதல் $38!

“இளமை ஊற்று”

அளவாக செய்யப்படும் உடற்பயிற்சி—தங்களுடைய 80-களில் இருப்பவர்களுக்குங்கூட—வயோதிபத்தின் பல பாதிப்புகளைத் திருப்பிவிடுகிறது, என்று டொரான்டோ பல்கலைக்கழக முன்னணி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “இளமை ஊற்றாக உடற்பயிற்சியைப் போன்ற ஒரு நல்ல காரியத்தைக் கண்டு பிடிப்பது கடினம்,” என்றார் டாக்ட்ர் ராய் J. ஷெப்பர்டு. இவர் இந்த ஆய்வுக்குழுவின் ஓர் அங்கத்தினர் என்று தி நியு யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. “நல்ல பலன்களைக் காண நீங்கள் நெடுந்தூர ஓட்டத்தை மேற்கொள்ள வேண்டியதில்லை. வயது முதிர்ந்தவர்கள் வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முறைகள் 30 நிமிட நடையை மேற்கொள்வார்களானால். அது 10 ஆண்டு இளமை திரும்பிய நிலையை ஏற்படுத்தக்கூடும்.” இதில் உட்பட்டிருக்கும் நன்மைகளில் சில, இருதயம் மற்றும் சுவாச உறுப்புகள் நல்ல விதத்தில் செயல்படுவது, இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் குறைவாக வைப்பது, தசைகளுக்குக் கூடுதல் பலம், எலும்புகளுக்கு உறுதி மற்றும் சிந்தனையில் தெளிவு.

“இரகசிய” உருண்டைகள்

தென் ஆப்பிரிக்கா க்லெர்க்ஸ்டார்ப் அரும்பொருட்காட்சி சாலையில் கருத்த பழுப்புவண்ண உலோக உருண்டை ஒன்று இருக்கிறது. இது ஒரு வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை சுற்றுகிறது—எந்த விதமான உதவியுமில்லாமல்! அது ஒரு சிறிய கோழி முட்டையின் அளவுதான். அதன் மத்தியில் மூன்று கோடுகளைக் கொண்டிருக்கிறது. ‘அந்த உருண்டை எல்லோருக்கும் ஆச்சரியமாயிருக்கிறது,” என்று அந்த அரும்பொருட்காட்சி சாலையின் பொறுப்பாளர் ஜோஹானஸ்பர்க் சண்டே டைம்ஸ் பத்திரிகை நிருபரிடம் சொன்னார். “அது மனிதனால் செய்யப்பட்ட வார்ப்பு போன்ற ஒன்று.” இந்த உருண்டையும் அதுபோன்ற நூற்றுக்கணக்கான மற்ற உருண்டைகளும் தென் ஆப்பிரிக்காவில் ஓண்டர் ஸ்டான் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்டன. அது உயர்ந்த நாகரீகத்தை சுட்டிக்காட்டுகிறது என்று ஓர் ஆய்வாளர் கூறுகிறார். இது “ஜலப்பிரளயத்துக்கு முற்பட்டது,” என்கிறார். என்றபோதிலும் இந்த உருண்டைகள் எப்படி உருவாயின என்பது “ஒரு முழு இரகசியம்,” என்கிறார் அந்தப் பொறுப்பாளர்.

கூருணர்வுடைய பென்குவின் பறவைகள்

மேற்கு பெர்லின் பகுதிகளில் ஜனவரியில் புகைப்பனி மூட்ட எச்சரிப்பு ஒலி பலமுறை ஏழுப்பப்பட்டன. என்றபோதிலும் அங்கு விலங்குக்காட்சிசாலை, நகரிலுள்ள 31 புகைப்பனிமூட மானிகளின் எச்சரிப்பைக் காட்டிலும் முன்னதாகவே எச்சரிப்பு கொடுக்க தங்களிடம் ஒரு முறை இருப்பதாக உரிமைபாராட்டினர்—தங்களிடமிருந்த பொன்குவின் பறவைகள். இந்தத் தென்துருவ பறவைகள் எப்பொழுதெல்லாம் வேகமாக சுவாசிக்க துவங்குகின்றனவோ, பனிப்புகை அளவு அதிகமாகிவிட்டிருக்கிறது, அவற்றை குளிர்சாதனம் பொறுத்தப்பட்ட அறைகளில் வைக்கவேண்டிய சமயம் வந்துவிட்டது என்பதை அந்த மிருகக் காட்சி சாலை உரிமையாளர்கள் அறிந்துகொள்கிறார்கள். காற்றில் நச்சுக்கலப்புக்கு பென்குவின் பறவைகளுக்கிருக்கும் கூருணர்ச்சி குறித்து நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று ஜெர்மன் செய்தித்தாள் ஃப்ராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜமீன் ஜீடங் கூறுகிறது. ஏனென்றால், இந்தப் பறவைகளின் தாயகமாகிய தென்துருவப் பிரதேசத்தில் “காற்று அநேகமாய்க் கிருமிகள் நீங்கி முழு அளவில் சுத்தமாயிருக்கிறது.”

வலிக்காத ஊசிகள்

ஊசி போட்டுக்கொள்வதன் வலிக்குப் பயப்படுகிறீர்களா? சூரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பு மண்டல அமைப்பாய்வு நிபுணர் ஹாரல்டு ஹிப்மன் அந்தக் கவலையை சற்று போக்குவதற்கு நடைமுறையான ஓர் ஆலோசனை கொடுக்கிறார். ஊசி போடுவதற்கு முன்பு 15 வினாடிகளுக்கு அந்தப் பாகத்தில் ஐஸ் கட்டி ஒன்றை வைத்து அழுத்திப் பிடியுங்கள். அந்தப் பகுதியை இரண்டு நிமிடங்களுக்கு மறுக்கச் செய்யும். இந்த நேரம் தோலுக்குக் கீழ் அல்லது தசையில் வலியில்லாமல் ஊசிபோட்டுக் கொள்ளுமளவுக்குப் போதுமானது. (இந்த முறையை குருதி நாளங்களில் ஊசிபோடுவதற்குப் பின்பற்றாதீர்க்ள, ஏனென்றால் இது தசைசுரப்பு ஏற்படுவதற்குக் காரணமாயிருந்து ஊசி மிக எளிதாகக் குத்தப்படுவதைத் தடைசெய்துவிடும்.) இலண்டனின் தி இண்டிபெண்டன்ட் பத்திரிகையின்படி, முதலாவதாக டாக்டர் ஹில்மன் திரும்பத்திரும்ப ஊசிபோட்டுக்கொள்ள வேண்டிய சர்க்கரை வியாதி கண்ட எட்டு வயது சிறுமிக்கு உதவும் வகையில் இந்த ஐஸ் வலி நிவாரணியை கண்டுபிடித்தார்.

குண்டு குழந்தைகள்—தடித்த ஆட்கள்?

தங்களுடைய குழந்தைகளை அளவுக்கு மிஞ்சி போஷித்த பெற்றோர்கள், அவர்கள் தடித்த ஆட்களாவார்கள் என்பதை உறுதிபடுத்துகிறார்கள் என்கிறார் டெக்ஸாஸில் சான் அன்டோனியோவில் உயிர்நூல் மருத்துவ ஆய்வு நடத்தும் தென் மேற்குக் கழகத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி டக்லஸ் S. லூயிஸ். அமெரிக்க இருதய ஆய்வுக் கழகத்திற்குத் தான் சமர்ப்பித்த அறிக்கையில், அப்படிப்பட்ட பருமன் அல்லது தடித்திருத்தல் உடனடியாகத் தென்படுவதில்லை. குரங்குகளில் தான் மேற்கொண்ட ஐந்து ஆண்டு பரிசோதனையில் தனக்குக் கிடைத்த பலன்கள் பேரில் தன் குறிப்புகளைக் கொடுத்தார். அந்தக் குரங்குகள் பிறந்து முதல் நான்கு மாதங்களுக்கு அளவுக்கு மிஞ்சி ஊட்டமளிக்கப்பட்டது. இந்த நான்கு மாதங்கள் மனிதருடைய வயதுக்கு ஒரு வயதாகும். சாதாரணமாக போஷிக்கப்பட்ட குரங்குகளுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தபோது, அந்தக் குரங்குகள் தங்களுடைய மூன்றாவது நான்காவது ஆண்டுகளில் எடைகூட ஆரம்பித்தன. அவை வயதுக்கு வருவதற்குள், அதாவது ஐந்து வயதில் 39 சதவிகிதம் எடை மிஞ்சி காணப்பட்டன!

வேலைக்குச் செல்லும் தாய்ப்பால் கொடுக்கிற தாய்மார்கள்

ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தங்களுக்குப் பால் குறைந்துவிடும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கவேண்டியதில்லை என்று ஜர்னல் ஆப் ஆப்ஸ்டரிக், கைனகாலஜிக், ஆண்டு நியோநாட்டல் நர்சிங் என்ற பத்திரிகை குறிப்பு ஒன்று கூறுகிறது. தாய்மார்களில் பால் உற்பத்திக்கு அவர்கள் அடிக்கடி பால் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. உண்மை என்னவெனில், வேலை செய்யும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்பாலை சீக்கிரத்தில் நிறுத்திவிடும் எண்ணங்கொண்டவர்களாயிருப்பதால், குறைவாக தாய்ப்பாலூட்டுதல் தாய்-சேய் உறவில் சாதகமான ஒரு பாதிப்பையுடையதாயிருக்கிறது. என்றபோதிலும் அடிக்கடி தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், அடிக்கடி பாலூட்டாததால் தாய்ப்பாலிலிருக்கும் சத்துப்பொருட்களில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா அல்லது குழந்தை அதே அளவான நோய்த்தடுப்பை அல்லது பாதுகாப்பைப் பெறுகிறதா என்பது இன்னும் அறியப்படவில்லை என்பதையும் அந்த அறிக்கை ஒப்புக்கொள்ளுகிறது

கூடுதல் பிறப்புகள்—குறைந்த விவாகங்கள்

ஜனவரி 1, 1987-ல் பிரான்ஸின் மக்கட் தொக பதிவு 5,55,06,000. பிரெஞ்சு கத்தோலிக்க செய்தித்தாளாகிய லா க்ராய்ஷ் பிறப்பு எண்ணிக்கையில் ஒரு சிறிய உயர்வைக் குறிப்பிடுகிறது. அது குறிப்பிடுவதாவது: “என்றபோதிலும் சட்ட முறையான பிறப்புகள் குறைந்துகொண்டே போகிறது, ஆக பிறப்பு எண்ணிக்கையில் உயர்வு, விவாகத்துக்குப் புறம்பாக பிறந்த பிள்ளைகளின் எண்ணிக்கையில் உயர்வின் விளைவாகும். இது 1985-ன் அனைத்து பிறப்புகளிலும் 20 சதவிகிதத்தைக் குறிக்கிறது.” INSEE (மக்கள் தொக ஆய்வுப் புள்ளி விவரங்கள் சம்பந்தமான பிரெஞ்சு தேசிய நிறுவனம்) அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி விவாகங்களின் எண்ணிக்கையில் சரிவு காணப்படுகிறது. (1986-ல் 2,66,000 விவாகங்கள்) விவாகரத்தின் எண்ணிக்கையில் உயர்வு காணப்படுகிறது. விவாகரத்துக்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் மும்மடங்காக உயர்ந்துவிட்டது. (g87 6/22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்