பைபிளின் கருத்து
யெகோவாவின் சாட்சிகள்—மற்ற மதங்களிலிருந்து வேறுபடுகிறார்கள்
“இதோ பாருங்கள், நான் வேலையாயிருக்கிறேன், அதுமட்டுமல்லாமல், யெகோவாவின் சாட்சிகளுடன் நான் ஒருபோதும் பேசுவதில்லை.” இது யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் கதவைத் தட்டினதற்கு அந்த வீட்டுக்காரர் கொடுத்தப் பதில்.
சந்திக்க வந்தவர்: “நீங்கள் வேலையாயிருப்பதாகச் சொன்னதைக் கேட்டேன். ஆனால் நீங்கள் எங்களுடன் பேசுவதில்லை என்று சொன்னதன் காரணத்தையாவது நான் கேட்கலாமா?” என்று தயவாய்க் கேட்டார். அந்தக் காரணங்கள் சாட்சிகள் நம்புவதையும் அனுசரிப்பதையும் பற்றிப் பிழைபடப் புரிந்துகொண்டவையேயென கண்டறியப்பட்டது. இவை விளக்கிக் காட்டப்பட்ட பின்பு அந்தச் சந்திப்பு சிறந்த உரையாடலில் முடிவுற்றது.
யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? மற்ற மதங்களிலிருந்து அவர்களை வேறுபடுத்துவதென்ன, அது உங்களுக்கு என்ன முக்கியத்துவமுடையது என்பவை உங்களுக்குத் தெரியுமா?
அவர்களுடைய நம்பிக்கைகள்
அவர்களுடைய நம்பிக்கைகள்—பாரம்பரியங்களோடோ, புறமத எண்ணங்களோடோ, அல்லது தேசீயக் கருத்துக்களோடோ கலந்தில்லை—அவை முழுமையாக பைபிளில் ஆதாரங் கொண்டிருக்கின்றன, பைபிள் தேவாவியால் ஏவப்பட்ட, சற்றேனும் பிழைபடாத, கடவுளுடைய வார்த்தையென அவர்கள் நம்புகிறார்கள். இது அடிப்படை நம்பிக்கைகளில் கவனிக்கத்தக்க வேறுபாடுகளை உண்டுபண்ணுகிறது.
தெய்வீகப் பெயரைப் பயன்படுத்துதல்: சிலர் யாவே என்று சொல்லும் யெகோவா என்ற பெயர், பலருக்குப் புதிதாகத் தொனிக்கலாம், எனினும் அது பைபிளில் 7,000-த்துக்கு மேற்பட்ட தடவைகள் பயன்படுத்தியிருப்பது, கடவுளுடைய வணக்கத்தார் அவருடைய சொந்தப் பெயரை அறியும்படியும் பயன்படுத்தும்படியும் எதிர்பார்க்கப்படுகிறார்களென விவாதிக்கிறது. (சங்கீதம் 83:17) கிறிஸ்தவர்கள் “தமது நாமத்திற்காக ஒரு ஜனம்” ஆதலால், தம்முடைய சீஷர்களுக்குக் கற்பிப்பதில் இயேசு அதைப் பயன்படுத்தினார். (அப்போஸ்தலர் 15:14; யோவன் 17:26) இதைக் கருதுகையில், இந்தப் பெயரைப் பயன்படுத்துவதனால் யெகோவாவின் சாட்சிகள் விசித்திரமானவர்கள் என்று எண்ணுவதைப் பார்க்கிலும், மற்ற மதங்கள் ஏன் அதை நிலையாய்ப் பயன்படுத்துகிறதில்லை என்று கேட்பது அதிகப் பொருத்தமாயிருக்குமல்லவா?—மல்கியா 3:16.
கடவுளுடைய ராஜ்யம்: உண்மையான அரசாங்கம்—பரலோக அரசாங்கமாயினும்—கிறிஸ்து இயேசுவை அரசராகக் கொண்டது. பூமியின்மேல் ஆட்சியைக் கொண்டுள்ளது. இது வெறுமென ‘இருதயத்திலுள்ள ஏதோவொன்றல்ல.’ “ராஜாதிகாரம் [அரசாங்கம், R.S.V.] அவர் [கிறிஸ்துவின்] தோள்மேலிருக்கும்.” (ஏசாயா 9:6, 7, தி.மொ.) இந்த அரசாங்கம், கடவுளுடைய நியாயமான அரசாட்சியின் நேர்மையை மெய்ப்பித்துக் காட்டும். “தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; . . . அது அந்த [மனித] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி,” ஒற்றுமையையும் உலக சமாதானத்தையும் என்றென்றுமாகத் திரும்ப நிலைநாட்டும்.
மனித ஆத்துமா: இது உடல் சாகையில் எவ்வாறோ பிழைத்திருக்கும் உடலற்றதும் சாவாமையுடையதுமான ஒன்றல்ல. ஆனால் அதைப்பார்க்கிலும் அது, அந்த ஆள்தானேயாகும் அல்லது அவன் அனுபவித்து மகிழும் உயிர்தானேயாகும். படைக்கப்பட்டபோது “மனுஷன் உயிருள்ள ஆத்துமாவானான்.” (ஆதியாகமம் 2:7, தி.மொ.; 1 கொரிந்தியர் 15:45) “ஆத்துமா அழியாமை கிரேக்க எண்ணமாகும். பூர்வ புதிரான மத வழிபாட்டுகளில் உருவாகி, தத்துவ சாஸ்திரி பிளேட்டோவால் விரிவுபடுத்தப்பட்டது.” (பிரெஸ்பிட்டேரியன் லைஃப், மே 1, 1970) ஆகவே மரித்தோர் உண்மையில் எங்கேயும் துன்பப்பட்டுக் கொண்டில்லை. அவர்கள் நித்திரையிலிருக்கிறார்கள். (பிரசங்கி 9:5, 10) மரித்தோருக்கு எதிர்கால வாழ்க்கைக்குரிய நம்பிக்கை, இயேசு கிறிஸ்து மீட்பின் கிரய பலியாக வகித்தப் பாகத்தின்மேல் அடிப்படை கொண்டிருக்கிறது. மேலும் உயிர்த்தெழுப்பப்படுவது கடவுளின் தயவைக் கொண்டிருப்பதன் பேரில் சார்ந்திருக்கிறது.—யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 17:31; 24:15; 1 கொரிந்தியர் 15:13, 14.
பூமியின் எதிர்காலம்: பூமி, கடவுளுடைய கைகளிலோ அல்லது அணுசக்தி பேரழிவினாலோ, உயிரற்ற, எரிந்த கரியாகாது. கடவுள் பூமியை ‘வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காக உருவேற்படுத்தினார்.’ (ஏசாயா 45:18; பிரசங்கி 1:4) அவருடைய “சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படு”ம்படி கடவுளுடைய ராஜ்யம் பார்த்துக்கொள்ளும். (மத்தேயு 6:10) அப்பொழுது, “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:29.
இத்தகைய நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறவர்கள் கடவுளிடமாகவும், வாழ்க்கையினிடமாகவும், உடன் மனிதனிடமாகவும் மாறிய மனப்பான்மையை அனுபவிக்கிறார்கள். வாழ்க்கை நோக்கத்தையும் அர்த்தத்தையுங் கொண்டிருக்கிறது.—ரோமர் 8:19-21.
அவர்களுடைய பழக்கமான செயல்கள்
இவையும் பைபிளில் ஆதாரங் கொண்டிருக்கின்றன. அவற்றில் சில விசித்திரமாகக் கருதப்படலாமென்றாலும், அதே பழக்கமான செயல்கள்தாமே உண்மையான வணக்கத்தை அடையாளங்காட்டும் தனிக் கவனிப்புக்குரிய குறிகளாக அமைகின்றன.
வெளி ஊழியம்: நடவடிக்கையிலும் அமைப்பிலும் இதுவே பெரிய வேறுபாடென பலர் குறிப்பிடுகின்றனர். எனினும், இந்த வேலையில் யெகோவாவின் சாட்சிகள், “போய் . . . சீஷராக்குங்கள்” என்ற இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள். ஊழியர்களாயிருக்கத் தகுதிபெற்றவர்கள் யாவரும், அப்போஸ்தலரின் முன்மாதிரியைப் பின்பற்றி, “பகிரங்கமாகவும் வீடுவீடாகவும்” கற்பிக்கலாம். (மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 20:20, தி.மொ.) சில சர்ச்சுகள் பாரம்பரிய, குருக்கள்—பாமர மக்கள் என்ற பிரிவினையைக் கொண்டிருக்கின்றன, ஆனால் “அந்தப் பிளவு-நிலை வேறுபாடு . . . சரியெனக் காட்டுவதற்குச் சிறிதேனும் நியாயக் காரணமில்லை,” என்று தியோலாஜி டுடே என்ற புத்தகம் சொல்லுகிறது. அதைப் பார்க்கிலும், என்ஸைக்ளோபீடியா கனேடியானா தெரிவிக்கிறபடி: “யெகோவாவின் சாட்சிகளின் ஊழியம், முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளின்போது இயேசுவும் அவருடைய சீஷர்களும் அனுசரித்த முதன் முதலிருந்த கிறிஸ்தவத்தின் புதுப்பிப்பும் திரும்ப நிலைநாட்டுதலுமாகும். . . . எல்லாரும் சகோதரர்கள்.”
கிறிஸ்தவ நடுநிலை வகிப்பு: இந்தக் காரியத்தில் மற்றவர்கள் அவர்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாவிடினும், யெகோவாவின் சாட்சிகள் அரசியலைக் குறித்ததிலும் மற்றும் தன் உடன் தோழனான மனிதனைப் பகைக்கும்படி அவசியப்படுத்தும் எல்லா வகை சண்டை சச்சரவுகளைக் குறித்ததிலும் நிலையாய் நடுநிலை வகிக்கிறார்கள். (யோவான் 18:36; ஏசாயா 2:2-4) தொடக்கக் கால கிறிஸ்தவர்களைப் பற்றி, சரித்திராசிரியர் எட்வர்ட் கிப்பன் பின்வருமாறு சொல்லுகிறார்: “உள்நாட்டு நடைமுறை ஆட்சியிலோ அல்லது பேரரசின் இராணுவ தற்காப்புப் படையிலோ எவ்வித செயல்முறை பங்கும் எடுக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.” ஆகவே, தீவிரப் போக்காக முதல் தோன்றக்கூடிய இது உண்மையில், ’உலகத்தின் பாகமாயிருக்கக் கூடாதவர்கள்,’ வகிக்கும் சாமாதானமான பாகமேயாகும்.—யோவான் 17:16.
ஜாதிபேத உணர்ச்சி: “ஜாதி வேறுபாடு காட்டுதல்—சில சர்ச்சுகளில் இன்னும் பிரச்னையாயிருக்கிறது—யெகோவாவின் சாட்சிகளுக்கு அந்தப் பிரச்னை இல்லை,” என்று ஐக்கிய மாகாணங்களின் தெற்குப் பகுதியில் ஒரு செய்தித்தாள் கூறியது. தங்கள் கிறிஸ்தவ சகோதரர் பேரில் கொண்டுள்ள உண்மையான அன்பு அவர்களை உலகளாவிய சகோதரத்துவத்தில் ஒன்றுபட இணைக்கிறது. மற்ற எவரையும்போல் அவர்கள் அபூரணராக இருக்கிறபோதிலும், இயேசுவின் பின்வரும் போதகத்தைத் தங்கள் மத்தியில் பொருத்திப் பிரயோகிக்க அவர்கள் கடினமாய்ப் பிரயாசப்படுகிறார்கள்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—யோவான் 13:35.
அவர்களை மேலும் நன்றாய்த் தெரிந்துகொள்ளுங்கள்
யெகோவாவின் சாட்சிகளை நன்மை பயக்கும் வண்ணம் வேறுபடுத்துகிற எல்லாக் காரியங்களும், நிச்சயமாகவே இங்கே விவாதிக்கப்படவில்லை. ஆகவே இந்தக் கிறிஸ்தவர்களை மேலும் நன்றாய் அறிந்துகொள்ள நீங்கள் அக்கறை எடுக்கலாமல்லவா? கடவுளுடைய தராதரங்களை நிறைவு செய்ய வேண்டுமென்றால் கட்டாயமாக வேறுபட வேண்டிய மதத்தைத் திருத்தமாய் அடையாளங் கண்டுகொள்வதில் உங்களுடைய தற்போதைய மற்றும் எதிர்கால சந்தோஷ வாழ்க்கைக்குரிய எதிர்பார்ப்புகள் சார்ந்திருக்கின்றன. (w87 2/8)