பயங்கரவாதம்—பாதிக்கப்படுகிறவர்கள் யார்?
விழித்தெழு! அரசியலில் எந்த வித ஈடுபாடும் கொள்வதில்லை. இந்த உலகத்தின் அரசியல் தகராறுகள் குறித்ததில் இது நடுநிலைமை வகிக்கிறது. என்றபோதிலும் இதன் நோக்கத்திற்கிசைவாக, காரியங்களை இது மேலோட்டமாய் பார்க்காமல், அதன் ஆழத்திற்குச் சென்று, தற்போதைய விவகாரங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான அர்த்தத்தைக் குறிப்பிட்டுக் காண்பிக்கிறது. இதன் காரணத்தினிமித்தமே, விழித்தெழு!, நிபுணர்கள் காண்கிறபடி, பயங்கரவாதத்திற்குப் பின்னாலிருக்கும் ஆழ்ந்த உள்நோக்கங்களை ஆராய்கிறது. எமது வாசகர்கள் தங்களுடைய சொந்த முடிவுக்கு வர விட்டடுவிடுகிறோம்.
“சிறிய சிறிய பயங்கரவாதத் தொகுதியினரும் தனிப்பட்ட கொலைக்காரர்களும் அரசியல் இலட்சியங்களை அடைவதற்குப் பிரயாசப்படுவதால், இன்று உலகின் பெரிய நகரங்களின் தெருக்களும், அவற்றின் விமான நிலையங்களும் இராணுவத் தளங்களும் போர்த் தளங்களாக மாறிவருகின்றன.”
“1973 முதல் 1984 முடிய உலகமுழுவதும் 5,000 பயங்கரவாத சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவை 4,000 பேருடைய உயிரை பலிவாங்கியிருக்கிறது, அதைவிட இரு மடங்கு ஆட்களைக் காயப்படுத்தியிருக்கிறது.
“கடந்த பதினைந்து ஆண்டுகளின்போது, 128 வித்தியாசமான தேசங்களில் நிகழும் பயங்கரவாதச் செயல்களுக்கு 113 நாடுகளின் அரசியல் பிரமுகர்கள் குறியாக இருந்துவந்திருக்கின்றனர்.”-எதிர்த்து மறு போர் தொடுத்தல்-பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றிபெறுதல், ஆங்கிலம்.
பயங்கரவாதத்தால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்களா? பயங்கரவாதிகளின் பயத்தால் 1987-ல் உங்கள் பயணத்திட்டத்தை ரத்து செய்தீர்களா அல்லது அதில் ஏதாவது மாற்றம் செய்தீர்களா? பயங்கரவாதம் இன்று அநேகருடைய வாழ்க்கையின் உள்ளுணர்ச்சியில் அழுத்தத்தை ஏற்படுத்தும் அம்சமாக இருக்கிறது. இஸ்ரவேலின் பாதுகாப்பு மந்திரி இட்ஷாக் ரபீன் பின்வருமாறு எழுதினார்: “வன்முறை பயம் உலக முழுவதும் அநேக மக்களின் சாதாரண வாழ்க்கை முறையாகிவிட்டிருக்கிறது”. வன்முறையின் விளைவால் ஏற்படும் செலவுகளை ஈடுகட்டுவதற்கு நீங்களும் உதவுகிறீர்கள் என்பது மிகையாகாது. எப்படி? பயங்கரவாத மிரட்டுதலுக்கு எதிராக மேன்மையான பாதுகாப்பு அளிப்பதற்கும் தயார் நிலையிலிருப்பதற்கும் அநேக அரசாங்கங்கள் மேற்கொள்ளும் அதிகப்படியான செலவுக்காக நீங்கள் செலுத்தும் வரியின் ஒரு பாகம் பயன்படுத்தப்படக்கூடும்
வடக்கு அயர்லாந்தும் மத்திய கிழக்கும் பல பத்தாண்டுகளாக பயங்கரவாதச் இருந்துவருகிறது. அண்மை ஆண்டுகளில் பயங்கரவாதம் அதன் அடையாளத்தை அநேக ஐரோப்பிய நாடுகளிலும் மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் விட்டுச்சென்றிருக்கிறது. தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்தித்தாள்களின் மூலம் பயங்கரவாதிகளின் வன்முறைச் செயல்களைக் குறித்து அறியவந்திருக்கிறோம். அது நம்முடைய அனுதின வாழ்க்கையின் பாகமாகிவிட்டிருக்கிறது,. பயங்கரவாதிகளின் அணுகுண்டுகள், கொலைகள் மற்றும் கடத்தல்கள் சர்வசாதாரணமாயிருந்த, நாம் ஒருவேளை மரித்துப் போயிருப்பேன். இதன் விளைவுதான், அசாதாரணங்களுக்குரியது சாதாரணமானதாகவும், நினைத்துப் பக்கத்தவே அளிக்கப்படவேண்டியதாகவும், லெபனான் போன்ற சில நாடுகளில் பெறுகைக்கூடாத காரியங்கள் பெருகப்பண்ணினீர் சகிக்கப்பட்டும் வருகிறது.
ஆம், பயங்கரவாதம் ஒரு வாழ்க்கை உண்மை-பயங்கரவாதிகளின் தலைவர்களை மற்றும் தொகுதிகளை வீட்டுப் பெயர்களாக மாற்றியிருக்கும் செய்தி மூலங்களின் ஒரு பாகமாகிவிட்டிருக்கிறது. பயங்கரவாதம் இப்பொழுது ஓர் உலக வாதையாக ஆகிவிட்டிருக்கிறது.
பயங்கரவாதம் என்பது என்ன?
ஒரு பயங்கரவாதியை விவரிப்பது எளிதாகத் தோன்றலாம். ஆனால் அது பிரச்னையின் எந்தப் பக்கத்தில் உங்களைக் காண்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. எல் சால்வடாரில் தலைமறைவாய் அழிக்கும் பணியில் ஈடுபடும் ஆட்கள் பயங்கரவாதிகளா அல்லது ‘மக்களின் தேசிய விடுதலை இயக்கமா’? நிக்கராகுவாவிலுள்ள எதிர்வாதிகள் பயங்கரவாதிகளா அல்லது “விடுதலைப் போராளிகளா?” அழகு எப்படியோ பயங்கரவாதமும் பார்வையாளர்களின் பார்வையைப் பொருத்தது. அரசியலின் தூண்டுதல் ஒரு விளக்கத்தைத் தெளிவற்றதாக்கிவிடக்கூடும்.
ஐக்கிய நாடுகளின் இஸ்ரேலி தூதர் பென்ஜமின் நெட்டன்யாஹூ பயங்கரவாதத்திற்குப் பின்வரும் விளக்கத்தை அளிக்கிறார்: அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக பயத்தை ஊட்டுவதற்கு அப்பாவிகளை வேணுமென்றும் முறைப்படியும் கொலைசெய்தல், ஊனப்படுத்துதல் மற்றும் அச்சுறுத்துதல்.” (பயங்கரவாதம்-மேற்கு அதை எப்படி வெற்றிகரமாக மேற்கொள்ளலாம்) சிக்காகோவின் லயோலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சாம் சர்கேசியன், அதை “சாதாரணமான கொலை, கடத்திச்செல்லுதல், திட்டமிட்ட கொலை முயற்சி மற்றும் மூன்றாவது நபரைப் பாதிப்பதற்காக ’அப்பாவி” ஆட்களைப் பயன்படுத்துதல் போன்ற வித்தியாசமான தந்திர செயல்களாலானது“ என்று விளக்குகிறார், சுருங்கச்சொன்னால், வன்முறை என்பது தற்போது இருக்கும் முறையை பயங்கரவாதிகளின் கோரிக்கைகளுக்கு அல்லது இலட்சியங்களுக்குச் சாதகமாக பிரதிபலிக்க வற்புறுத்துவதற்காக மக்கள் மத்தியில் பயத்தை உண்டாக்குதலாகும்,“_ Hydra of Carnage (ஹைட்ரஸின் ஆப் கட்சியினர்)
மறுபட்சத்தில் இறைமையியலின் கத்தோலிக்கப் பேராசிரியர் ஜேம்ஸ் பொக்கிஷங் பின்வருமாறு எழுதுகிறார்: பயங்கரவாதம் நடுக்கந்தருவதின்படி. . .[அது] எப்பொழுதுமே தங்களை அனுகூலமற்ற நிலையிலிருப்பதாக உணரும் ஆட்களின் செயல்.”_ Fighting Back (எதிர்த்து மறுபோராட்டம் செய்தல்).
அதை நீங்கள் எப்படி நோக்கினாலும், பயங்கரவாதம் பெரும்பாலும் குற்றமற்ற அப்பாவி மக்களுக்கு வன்முறையையும் மரணத்தையுமே குறிக்கிறது. ஜன்ஷ்ரிபர் கடைசி ஆயுதம் என்ற தனது புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: “ஓர் இராணுவ சேனையைப்போல, பயங்கரவாதிகளின் தொகுதி மனிதத் தன்மையற்ற விதத்தில் செயல்படுகிறது, இப்படியாகக் கொடுமைகளை அனுதின வாழ்க்கையின் பலனாக ஆக்கியிருக்கிறது.”
புதியதோர் நிகழ்வு அல்ல
பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாயிருப்பினும், பயங்கரவாதம் அரசியல் நோக்கங்களைச் சாதிக்கும் ஒரு முறையாகவே சில பத்தாண்டுகளைச் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1945-ல், பிரிட்டிஷ் தொழிலாளர் அரசு பலஸ்தீனாவை யூதருக்கு ஒப்படைப்பதாயில்லை என்பது தெளிவானபோது பயங்கரவாத தொகுதிகள் தலைதூக்க ஆரம்பித்தன. இவற்றில் இர்கன் ஸ்வாய்லூமி (எட்ஸல் என்றழைக்கப்பட்ட தேசிய இராணுவ அமைப்பு). மற்றும் ரோஹாமி ஹிரட் இஸ்ரேல் (இஸ்ரேல் விடுதலைக்குப் போராடுபவர்கள்) [லஹி அல்லது ஸ்டர்ன் கூட்டம் என்னும் அறியப்பட்டது] ஆகியவை உட்பட்டிருந்தது—[இவர்கள்] பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டனர். ஜீலை 22 அன்று எட்ஸல் எருசலேமிலுள்ள கிங் டேவிட் ஹோட்டலின் ஒரு பகுதியை தகர்த்தது. இதில் அரசுநிர்வாகம் செயல்பட்டுக்கொண்டிருந்தது. ஏறக்குறைய 100 யூதர்களும். பிரிட்டன் மக்களும் அரபியரும் கொல்லப்பட்டனர்.“—The jews in their Land, by David Ben-Gurion (டேவிட் பென் குரியன் எழுதிய தங்கள் தேசத்தில் யூதர்கள்).
1960 முதற்கொண்டு பயங்கரவாதம் பிரித்துவேறாக்குமல்விட்டது, விசேஷமாக இஸ்ரவேல், பலமுனை அகதிகள் மற்றும் அரபு மாநிலங்களின் பிரச்னைகள் சம்பந்தமாக அப்படி இருந்தது.
பயங்கரவாதம் வடக்கு அயர்லாந்து மற்றும் மத்திய கிழக்கு மட்டும் சேர்ந்ததாயில்லை, ஸ்பேய்ன் பாஸ்க் ETA பயங்கரவாதிகளைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தனிநாடு கேட்கும் சீக் தொகுதியினர் உண்டு: தமிழ் விடுதலைப் பலிகளால் இலங்கையில் துயர்நிலை பெரூ மாவோயினரான சென்டரோலூமினோசோ (வெளிச்சமான பாதை) போராளிகளைக் கொண்டிருக்கிறது. குடியரசு உலகம் என்னப்பட்ட உலகில் இந்தப் பட்டியலுக்கு முடிவில்லை.
ஆனால் குடியரசு நாடுகள் ஏன் இந்தளவுக்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன? பயங்கரவாதிகள், நீதியும் நன்னிலையும் நாடும் ஒடுக்கப்பட்ட தொகுதிகளா? அல்லது இன்னமும் அதிகம் இருக்கிறதா? பயங்கரவாதம் இன்னும் தொடர்ந்து இருக்குமா? இந்தக் கேள்விகளையும் மற்ற கேள்விகளையும் தொடர்ந்து வரும் கட்டுரைகளில் ஆராய்வோம். (g871/8)
[பக்கம் 5-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
அண்மையில் பயங்கரவாதச் செய்தியில் இடம் பெற்ற சில நாடுகள்
அ.ஐ.மா இங்கிலாந்து
மே. அயர்லாந்து
ஜெர்மனி
பிரான்ஸ்
ஸ்பேன்
இத்தாலி
துருக்கி
லெபனோன்
இஸ்ரேல்
ஆப்கானிஸ்தான்
பங்லாதேஷ்
இந்தியா
ஸ்ரீலங்கா
ஜப்பான்
தென்கொரியா
பிலிப்பைன்ஸ்
அங்கோலா
தென் மேற்கு ஆப்ரிக்கா
தென் ஆப்ரிக்கா
தென். மே. அமெரிக்கா
என் சல்வடார்
நிக்கராகுவா
பனாமா
வெனுஜூவெல்லா
கொலம்பியா
பெரூ
அர்ஜெண்டினா