எல்லா இடத்திலும் தண்ணீர் தண்ணீர் . . .
பொழுது விடிகிறது. வீடுகளில் அமைதியான மற்றொரு இரவு நித்திரையிலிருந்து ஆட்கள் எழுந்திருக்க ஆரம்பிக்கிறார்கள். குளிப்பதற்குத் தண்ணீர் வேண்டும். தூக்கக் கலக்கத்திலிருப்பவர்களின் கண்ணில் தண்ணீர் தெளித்து எழுப்பியாக வேண்டும். தாடியை சவரம் செய்ய வேண்டும். சிலருக்கு கட்டாயமாக தேவைப்படும் முதல் குவளை தேனீர் அல்லது காப்பிக்குத் தண்ணீர் வேண்டும். அழுக்கான பாத்திரங்களும் உடைகளும் சுத்தமான தண்ணீரில் கழுவப்பட வேண்டும்.
காலை வெயில் படிப்படியாக ஏறும்போது, தொழிற்சாலையின் சக்கரங்கள் சுழல ஆரம்பிக்கின்றன. சூடாக்குவதற்கும், குளிர வைப்பதற்கும் மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கும் இரசாயனங்களை முறைப்படுத்தவும், இன்னும் அநேக மற்ற காரியங்களுக்கும் அத்தனை அவசியமாக இருக்கும் தண்ணீர் பல மைல்கள் குழாய்களின் வழியாக விரைந்தோட அடைப்பிதழ்கள் திறக்கப்படுகின்றன.
மின்சார அடைப்புக் கட்டு பிடுங்கப்பட்டால் ஏற்படுவது போலவே நிச்சயமாக தண்ணீர் இல்லாவிட்டால் தொழிற்சாலையின் சக்கரங்கள் சுழல்வது நின்று விடும். உதாரணமாக உங்கள் மோட்டார் வண்டியிலுள்ள 1000 கிலோ கிராம் இரும்பை உற்பத்தி செய்ய 2,28,000 லிட்டர்கள் தண்ணீர் பதப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனுடைய டாங்கிலுள்ள ஒவ்வொரு காலன் எரிபொருளையும் பதப்படுத்த 15.2 லிட்டர்கள் தண்ணீர் தேவையாக இருந்திருக்கிறது. சிற்றுண்டிச் சாலைகளும் அருந்தகங்களும் மற்றொரு சுறுசுறுப்பான நாளுக்காக தயாராகையில் தண்ணீர் மீட்டரின் முள் வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக வறட்சியான பகுதிகளில், மைல்கள் கணக்கில் குழாய்களும் எண்ணற்ற தெளிப்பு முகப்புகளும் வயல்களுக்கு நீர்பாய்ச்ச இலட்சக்கணக்கான சதுர அடிகள் விலைமதிப்புள்ள தண்ணீரை கொண்டு செல்கின்றன. இங்கிருந்து தானே நகரங்களுக்கு மொத்த உணவும் வருகிறது.
எல்லா இடத்திலும் தண்ணீர் எடுக்க எடுக்க குறையாத அளவு தண்ணீர் இருப்பது போல தெரிகிறது. பெரும்பாலான ஆட்களின் மனங்களில் இந்த எண்ணம் வேறூன்றி விட்டிருப்பதால் அது துர்பிரயோகம் செய்யப்படுகிறது. தவறாக பயன்படுத்தப்படுகிறது. வீணாக்கப்படுகிறது. ஏனோதானோ என எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதன் ஊற்று மூலத்தைக் குறித்து சிந்திக்கப்படுவது கிடையாது. அது எளிதில் கிடைப்பதாக இருப்பதால், நகரங்களில் வாழும் அத்தனை பணக்காரர்களாக இல்லாதவர்களும் கூட, இந்த விஷயத்தில் சகல கீர்த்தியோடும் வாழ்ந்து வந்த முற்காலத்திய ராஜாக்களை விட அதிக வசதியாக வாழ்கிறார்கள். அடுக்களையில் அல்லது குளியலறையில் ஒரு குமிழை திருகிவிட, அவர்களுக்கு வெந்நீர் அல்லது தண்ணீர், எது வேண்டுமானாலும் கிடைக்கிறது. (உதாரணமாக ஐக்கிய மாகாணங்களில் ஒரு நபர் ஒரு நாளில் சராசரியாக 3306 லிட்டர்கள் தண்ணீர் பயன்படுத்துகிறார்.)
தண்ணீர் உயிருள்ள அனைத்துக்கும் இன்றியமையாததாக உள்ளது. காற்றுக்கு அடுத்ததாக மனிதன் உயிர் வாழ இது இன்றியமையாததாக இருக்கிறது. உணவின்றி மனிதன் ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழலாம். தண்ணீர் அல்லது நீருள்ள உணவு அல்லது பானமின்றி அவன் ஒரு வாரத்துக்குள் மரித்து விடுவான். அவனுடைய உடலில் இயல்புள்ள தண்ணீரில் 20 சதவிகிதத்துக்கும் அதிகத்தை இழந்து விடுவானேயாகில் அவன் வேதனையான ஒரு மரணத்தை அடைகிறான்.
மனித சரித்திரம் முழுவதிலுமாக தண்ணீருக்காக மனிதன் ஒரு வித வெறியோடு தேடி அலைந்திருக்கிறான். அதைக் கட்டுப்படுத்துவதற்காக போர்களைச் செய்திருக்கிறான் பாலைவனத்திலுள்ள கலங்கிய ஒரு பசுந்திடலில் தண்ணீருக்காக மனிதர்கள் ஒருவரையொருவர் கொலை செய்திருக்கிறார்கள். தண்ணீர் மிகுதியாக இருந்த இடங்களில் பட்டணங்களும், நகரங்களும், சாம்ராஜ்யங்களும் எழும்பியிருக்கின்றன. தண்ணீர் வற்றிய போது, ஜனங்கள் இவ்விடங்களைக் காலி செய்து இடம் மாறி போயிருக்கிறார்கள். மனிதர்கள் தண்ணீருக்காக உருவங்களைச் செய்து அவற்றை கடவுட்களாக வணங்கி வந்திருக்கிறார்கள். சடங்குகளோடும் பலிகளோடும் தண்ணீருக்காக மனிதன் வேண்டுதல்கள் செய்து அவை கிடைத்தபோது அவைகளுக்கு அதன் மதிப்பை கொடுத்திருக்கிறான்.
தண்ணீர் நெருக்கடி —வரப்போகிறதா அல்லது இருக்கிறதா?
மக்கள் தொகை பூமியின் மீது வெடிக்கும் போது, தண்ணீருக்கான தேவை வெகுவாக அதிகரித்து விட்டிருக்கிறது. உலகம் முழுவதிலுமுள்ள செய்தித் தாள் பத்திகள், அதிகமான தண்ணீருக்கான தேவையைக் குறித்து தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருக்கின்றன. நிபுணர்களில் சிலர், “வரப்போகும் தண்ணீர் நெருக்கடி” மற்றும் “அடுத்த வள குறைபாடு” என்றும் குறிப்பிடுகிறார்கள். என்ற போதிலும் மற்றவர்கள் அதிக அச்சுறுத்தலான குறிப்பை சேர்த்துக் கொள்கிறார்கள். “இப்பொழுதே நம்முடைய தேசத்தில் தண்ணீர் நெருக்கடி ஏற்பட்டு விட்டது” என்பதாக ஐக்கிய மாகாணங்களில் சட்ட மாமன்ற மேலவை உறுப்பினர் குறிப்பிட்டார். “வரப் போகிற ஒரு நெருக்கடி என்று ஆட்கள் சொல்கிறார்கள். இப்பொழுதே அது ஒரு நெருக்கடியாக இருக்கிறது” என்பதாக வீட்டு தண்ணீர் வள துணைக் குழுவின் அக்கிராசினர் எழுதினார். “அமெரிக்காவின் மிகவும் விலையேறப் பெற்ற வள ஆதாரத்துக்கு ஆபத்து.” என்கிறது மார்ச் 1985ன் ஐக்கிய மாகாணங்களின் செய்திகள் மற்றும் உலக அறிக்கை. “உள்நாட்டை பொறுத்த வரையில் 1990 ஆண்டுகளின் நெருக்கடி, வீட்டு உபயோகத்துக்குத் தண்ணீர் இல்லாமையாக இருக்கும்” என்பதாக அப்போது ஐக்கிய மாகாணங்களின் உள்துறை செயலராக இருந்தவர் சொன்னார். “சமுதாயத்தினுடைய தண்ணீர் தேவைகளை நம்மால் நிறைவு செய்ய முடிந்தாலொழிய வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் அபிவிருத்தி செய்யவும் வேளாண்மை செழுமையை அதிகரிக்கவும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்து நம்முடைய நகரங்களைப் புதுப்பிக்கவும் செய்யப்படும் முயற்சிகள் அனைத்தும் அர்த்தமற்றவையாக இருக்கும்” என்பதாக அவர் எச்சரித்தார்.
துர் அதிஷ்டவசமாக, தண்ணீர் நெருக்கடி அமெரிக்க நாட்டு பிரச்னையாக மட்டுமில்லை. ஆனால் இது முழு உலகையும் பாதிக்கும் பிரச்னையாகும். “உலகின் தண்ணீர் நெருக்கடி எண்ணெய் நெருக்கடியைக் காட்டிலும் அதிக கவலைக்குரியதாகும்” என்றார் ஒரு எழுத்தாளர் “அடுத்த இருபது ஆண்டுகளில் முப்பதுக்கும் மேற்பட்ட தேசங்கள், மிக மோசமான குறைபாட்டை எதிர்படும். மக்கள் தொகை அதிகரித்து, தண்ணீர் பற்றாக் குறை ஏற்படும் போது, தேசங்கள் அதற்காக போரில் இறங்குவதற்கு சாத்தியமிருக்கிறது” என்றார். எல்லா அறிகுறிகளின்படியும் தண்ணீர் எதிர்காலம் நிச்சயமாகவே பயங்கர கொடியதாக இருக்கும் என்பதே உலகிலுள்ள நிபுணர்கள் மற்றும் திட்டமிடுகிறவர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.
உலகம் முழுவதிலும் ஏன் தண்ணீரைக் குறித்து கவலை ஏற்பட்டுள்ளது, பூமியில் ஏராளமாக அது இருக்கிறது. 70 சதவிகிதத்துக்கும் மேல் பூமியின் மேற்பரப்பை மூடிக் கொண்டிருப்பது தண்ணீராகும். இந்த ஏராளமான திரவத்தின் மொத்த அளவை சரியாக கணிக்க, சற்று மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும். உதாரணமாக ஒரு மைல் நீளமும், ஒருமைல் அகலமும் ஒரு மைல் ஆழமுமுள்ள—ஒரு சதுர மைல் அளவுள்ள—ஒரு குழியை கற்பனை செய்து பாருங்கள். இந்தச் சதுரத்தைத் தண்ணீரால் நிரப்ப இலட்சத்து கோடி காலன்களுக்கும் அதிகமான தண்ணீர் தேவையாக இருக்கும். இப்பொழுது இந்த மொத்த அளவை இது போன்ற 32 கோடியே 60 இலட்சம் சதுர மைல்களால் பெருக்கினால், பூமியிலுள்ள தண்ணீரின் அளவை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். சமுத்திரங்கள், ஏரிகள், ஓடைகளிலிருந்து தண்ணீர்கள் சூரிய வெப்பத்தினால் வளிமண்டலத்துக்குள் சென்று மீண்டும் மழை அல்லது பனியின் வடிவில் திரும்ப பெய்கிறது.—பிரசங்கி 1:7.
மனிதனின் சிருஷ்டிப்பு முதல் நித்தியத்துக்குமாக சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தி செய்வதற்கும் அதிகமான தண்ணீர் பூமியில் இருக்கிறது என்பதை உண்மைகள் சுட்டிக் காண்பிக்கின்றன. (சங்கீதம் 145:16) அப்படியென்றால் ஏன் தண்ணீர் நெருக்கடி? (g86 11/22)